Search
  • Follow NativePlanet
Share
» »ஆசியாவிலேயே மிக உயரமான பாலம் பற்றி தெரியுமா?

ஆசியாவிலேயே மிக உயரமான பாலம் பற்றி தெரியுமா?

சிங்ஷோர் பாலம் பெல்லிங் என்ற இடத்திலிருந்து 5 கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது. சிக்கிம் மாநிலத்திலேயே இந்த பாலம் மிக உயரமான பாலம் என்று அழைக்கப்படுகிறது. மேலும் ஆசியாவிலேயே மிக உயரமான பாலங்களில் இரண்டா

By Udhaya

சிங்ஷோர் பாலம் பெல்லிங் என்ற இடத்திலிருந்து 5 கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது. சிக்கிம் மாநிலத்திலேயே இந்த பாலம் மிக உயரமான பாலம் என்று அழைக்கப்படுகிறது. மேலும் ஆசியாவிலேயே மிக உயரமான பாலங்களில் இரண்டாவது பாலமாக இருந்து வருகிறது. இந்த பாலம் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் ஒரு முக்கிய இடமாக இருக்கிறது. ஏனெனில் இந்த பாலம் இரண்டு மிக உயரமான மலைகளை இணைக்கிறது. அதனால் இந்த பாலத்தை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் பார்த்து செல்கின்றனர். வாருங்கள் நாமும் இதை காணச் செல்வோம்

 அமைப்பு

அமைப்பு

பெல்லிங்கிலிருந்து 5 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த பாலமானது 100மீ உயரமும் 240 மீ நீளமும் கொண்டதாகும். இது சிக்கிமின் மிக உயரமான மற்றும் ஆசியாவின் இரண்டாவது உயரமான பாலமாகும். இது மனித கரங்களால் கடின உழைப்பால் உருவான பாலம் என்பது கூடுதல் தகவல்.

Pankaj.biswas

பச்சை பசுமை

பச்சை பசுமை


சமதளத்திலிருந்து மலை முழுவதும் மரங்கள் நிறைந்து பச்சை பசேலென காட்சியளிக்கிறது இந்த இடம். மிகவும் அழகான இடமாக கருதப்படும் இந்த பாலத்தில் புகைப்படம் எடுக்கவே பலர் இங்கு வருகை தருகின்றனர். இந்த பாலத்தில் செல்லும் போது உங்களுடைய மனது மிகவும் வித்தியாசமாக உணரும்.

Arihant652

திரில் அனுபவம்

திரில் அனுபவம்


திரில் அனுபவத்துக்காக இந்த பாலத்தில் நிறைய பேர் வருகின்றனர். இந்த பாலத்தின் மத்தியில் நீங்கள் நின்று கொண்டிருந்தால் உங்களுக்கு ஒரு புத்துணர்ச்சி வரும். அது திரில் நிறைந்ததாக இருக்கும். அங்கிருந்து கீழே பார்த்தால் மேலே பறப்பது போன்ற ஒரு அனுபவம் கிடைக்கும்.

Pankaj.biswas

இசையாய் கேட்கும் சத்தம்

இசையாய் கேட்கும் சத்தம்


இங்கு ஆறாய் ஓடும் அருவியின் சத்தம் நமக்குள் ஒரு சிந்தனையைத் தூண்டிவிடும். அது சீராய் ஓடும் ஒரு இசையைப் போல நம் ஆழ் மனதிற்குள் பிறக்கும். இரண்டு மலைகளை இணைக்கும் பழைய பாலம் என்பதால், இந்த பாலத்தில் செல்பவர்கள் சற்று கவனத்துடனே இருக்கவேண்டும். ஆனால் அந்த அளவுக்கு விபத்துக்கான வாய்ப்பு என்பது இல்லை.
wiki

 செவ்யாபாங் கணவாய்

செவ்யாபாங் கணவாய்

சிக்கிம் மாநிலத்தின் வாயில் என்று செவ்யாபாங் கணவாய் அழைக்கப்படுகின்றது. இந்த கணவாயானது, உத்தரேயிலிருந்து கிட்டத்தட்ட 10 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த கணவாய்க்கு ஆண்டு முழுவதும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த கணவாய்க்கு அருகில் மிக அழகிய மெயின்பஸ் என்ற நீழ்வீழ்ச்சி பார்ப்போரின் உள்ளங்களைக் கொள்ளை கொள்ளும் வகையில் ஆர்ப்பரித்து மலையிலிருந்து பள்ளத்தாக்கில் விழுகிறது.

 கக்யு மடம்

கக்யு மடம்

உத்தரே பகுதியில் இருக்கும் கக்யு மடம், மிகவும் புனிதமான இடமாக கருதப்படுகிறது. இந்த மடம் இயற்கை அழகை அள்ளித் தெளிக்கும் மிக முக்கிய இடமாக விளங்குகிறது. இந்த இடத்திலிருந்து டென்டாம் பூங்கா மற்றும் அதன் அருகில் பாய்ந்தோடும் அழகிய ஆறு ஆகியவற்றின் காட்சியை மிகத் தெளிவாகப் பார்க்க முடியும். மேலும் இந்த மடத்தில் ஏராளமான சுவர் சித்திரங்கள் உள்ளன. இந்த சித்திரங்கள் பார்ப்போரின் மனங்கள் மற்றும் கருத்துக்களைக் கவரும் வகையில் இருக்கின்றன.

JHILIK

Read more about: travel hills sikkim
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X