» »வட இந்தியாவில் கட்டாயம் பார்க்க வேண்டிய அற்புத மலைவாழ்தலங்கள்!!

வட இந்தியாவில் கட்டாயம் பார்க்க வேண்டிய அற்புத மலைவாழ்தலங்கள்!!

Written By: Balakarthik Balasubramanian

'கோடைக் காலம் வாட வைக்கும்' என்பது அனைவரது மனதில் பதிந்திருக்கும் ஒன்றே.... இந்த கோடை காலத்தில் வீட்டை விட்டு வெளியில் சென்று விளையாடுவது என்பதற்கு நம் மனம் சம்மதம் தெரிவித்தாலும், நம் நலன் கருதி பெற்றோர்கள் கையை விரிப்பது வாடிக்கையாக நடக்கும் ஒன்றே. சிலர் வீட்டில் இருப்பது வேதனை என்று முடிவெடுத்து கோடை சுற்றுலா என்னும் நோக்கத்துடனும் பிரம்மாண்டமான திட்டங்களை தீட்டி குடும்பத்துடன் செல்வதும் உண்டு. அதிலும் இந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களை கடந்துவிட்டால்...இமயமலையையே எட்டியதோர் உணர்வை கொள்வோரும் நிறையவே இங்கு... உண்மைதானே நான் சொல்வது? அதில் எந்த மாற்று கருத்தும் இல்லையல்லவா?

வட இந்திய பகுதிகள் தான் மலை வசஸ்தங்களுக்கு மிகவும் பெயர் பெற்றது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. அப்பேற்பட்ட பகுதியை பற்றி யோசிக்க, நம் கண் முன் வந்து நிற்பது உத்தரகண்ட் மாநிலமும், ஹிமாச்சல பிரதேசமும் தான். 'கோடை விடுமுறையின் சொர்க்கம்' என்றழைக்கப்படும் இந்த இரண்டு நகரங்களும் காட்சிகளால் கண்களை அழகுபடுத்தி ஆச்சரியத்தில் உறைய வைக்கிறது. அதேபோல், ஜம்மு & காஷ்மிரும் மலைகளை தாங்கியபடி அழகிய காட்சிகளை கண்களுக்கு விருந்தாக்கி நம் மனதை இதமூட்டுக்கிறது.

இந்தியாவின் வட-கிழக்கு பகுதிகள், மலைகள் அதிகம் நிறைந்த மிகவும் பிரசித்திபெற்ற பகுதிகளாகும். அவற்றுள் அருணாச்சல பிரதேசம், மேகாலயா, மற்றும் அசாமும் அடங்கும். இயற்கை அன்னை காட்சிகளை கண்களுக்கு தர...நாட்கள் குளுமை நீங்கா தன்மையுடன் ஈரப்பதம் மற்றும் வியர்வை அற்று, அழகாக அமைய...அந்த நாட்களில் ஆவி பறக்க தேனீரை பருகி நம் மனம் புத்துணர்ச்சியுடன் செல்கிறது. அ

சரி, இந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில்...தோழர்களுடனும் குடும்பத்துடனும் குதூகலிக்க, அப்படி என்ன தான் இந்த வட இந்தியாவில் நம்மால் பார்க்க முடிகிறது. கீழ்க்காணும் பத்தியின் மூலம் நாம் அதனை தெரிந்து கொள்ளலாமா? வாருங்கள்...

Read more about: travel, tour, north india