Search
  • Follow NativePlanet
Share
» »இமாச்சல பிரதேசத்தில் இருக்கும் இந்த மீன்பிடி தளங்களைத் தெரியுமா?

இமாச்சல பிரதேசத்தில் இருக்கும் இந்த மீன்பிடி தளங்களைத் தெரியுமா?

இமாச்சல பிரதேசத்தின் சுற்றுலாத் துறை மாநிலத்தை நான்கு வெவ்வேறு பகுதிகளாக பிரித்துள்ளது. அவை சட்லெஜ் செர்க்யூட், பீஸ் செர்க்யூட் , தௌலாதர் செர்க்யூட் மற்றும் டிரைபல் செர்க்யூட் என்று அறியப்படுகின்றன.

By Udhaya

இமாச்சல பிரதேசத்தில் மொத்தம் உள்ள 12 மாவட்டங்களில் டிரெக்கிங் பகுதிகள், மீன்பிடி பகுதிகள், படகுப் பயணம், பனிச்சறுக்கு, பாராகிளைடிங், கோல்ஃப் என்று எண்ணற்ற சுற்றுலா அம்சங்கள் கொட்டிக்கிடக்கின்றன.இம்மாநிலத்தின் பீர், மணாலி, பிலாஸ்பூர், ரொஹ்ரு உள்ளிட்ட பகுதிகள் பாராகிளைடிங் போன்ற வான சாகச விளையாட்டுக்களுக்காக வெகுப்பிரபலம்.

இமாச்சல பிரதேசத்தின் சுற்றுலாத் துறை மாநிலத்தை நான்கு வெவ்வேறு பகுதிகளாக பிரித்துள்ளது. அவை சட்லெஜ் செர்க்யூட், பீஸ் செர்க்யூட் , தௌலாதர் செர்க்யூட் மற்றும் டிரைபல் செர்க்யூட் என்று அறியப்படுகின்றன.

இதில் பீஸ் செர்க்யூட்டில் குலு மணாலி பள்ளத்தாக்கின் வழி பாயும் பீஸ் நதி மிகவும் பிரபலமான சுற்றுலாப் பகுதியாகும். இந்த பீஸ் செர்க்யூட்டில் தேவதாரு மரங்கள், பாறை சரிவுகள், பசும் புல்வெளிகள், வண்ண மலர்கள், பழத்தோட்டங்கள் ஆகியவற்றுக்கு மத்தியில் நீங்கள் ஒரு நிமிட நேரம் அமர்ந்திருந்தாலே போதும் உங்கள் பிறவிக் கடனை அடைந்து விடுவீர்கள். இமாச்சல பிரதேசத்தில் சுற்றுலா செய்பவர்கள் முக்கியமாக இந்த விசயத்தை மறந்துவிடக்கூடாது. இந்தந்த இடங்களுக்கு செல்லும்போது, மீன்பிடி பொழுதுபோக்கில் ஈடுபட மறக்காதீர்கள். அவை எந்த இடங்கள் என்று இந்த பதிவில் காண்போமா?

பரோட்

பரோட்

மண்டி பிரதேசத்தில் உள்ள இந்த பரோட் எனும் இடம் அடர்ந்த தேவதாரு மரக்காடுகளால் சூழப்பட்டுள்ளது. 2600மீ உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஜோகீந்தர் நகர் ஹைடல் பவர் புராஜெக்ட் இந்த ஸ்தலத்தில்தான் அமைந்துள்ளது.

‘ட்ரௌட்' வகை மீன்கள் வளர்க்கப்படும் இடமாக உள்ளதால் பயணிகளுக்கு மீன்பிடிக்கும் அனுபவமும் இப்பகுதியில் காத்திருக்கிறது. டிரெக்கிங் எனப்படும் மலையேற்ற சாகசப்பயணங்களுக்கும் இப்பகுதி பிரசித்தமாக அறியப்படுகிறது.

மேலும், மண்டி அரசர்கள் பயன்படுத்திய கோடை வாச மாளிகை மற்றும் பிக்னிக் பயணங்களுக்கேற்ற நர்கு காட்டுயிர் சரணாலயம் போன்றவையும் இந்த ஸ்தலத்திற்கு அருகிலேயே அமைந்துள்ளன.

எப்படி செல்வது?

சிம்லாவிலிருந்து 206கிமீ தூரத்தில் அமைந்துள்ளது இந்த இடம். நெடுஞ்சாலை எண் 154ஐ பின்தொடர்ந்து சென்றால் 6 முதல் 7 மணி நேரத்தில் சென்றடையலாம். இந்த வழித்தடத்தில் கானஹட்டி, தாமி, தர்லாகட், நமோலி, கங்காஸ், பர்மானா, ஜரோல், தோடார், சுந்தர்நகர், கனைட் போன்ற பகுதிகளைத் தாண்டி பயணிக்கவேண்டும்.

Shalabh

 நக்கர்

நக்கர்

நக்கர் சுற்றுலாத்தலமானது தூண்டிலில் மீன் பிடிக்கும் பொழுது போக்குக்கு ஏற்ற ரம்மியமான ஸ்தலமாக புகழ் பெற்றுள்ளது. இங்கு தீர்த்தன் மற்றும் பியாஸ் ஆறுகள் மீன் பிடிப்புக்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளன.

கத்ரய்ன், ரய்சன், கசோல் போன்றவை இங்குள்ள முக்கியமான மீன்பிடிப்பு ஸ்தலங்களாகும். தீர்த்தன் ஆறு இங்குள்ள சைனி பள்ளத்தாக்கில் ஓடுவதோடு அருகிலேயே பல மலையேற்ற பாதைகளையும் கொண்டுள்ளது. குர்கல் மீன், கூக்லி மீன், நட்வா மீன், பிரவுன் டிரௌட் மற்றும் ரெயின்போ டிரௌட் போன்ற மீன்கள் பியாஸ் ஆற்றில் கிடைக்கின்றன.

எப்படி செல்வது

பரோட் அருகிலேயே இருக்கும் இந்த இடத்துக்கு செல்வது அவ்வளவு சுலபம் அல்ல. ஏனென்றால் இது மிகவும் பனிப்பிரதேசம். இதனால் இங்கு பயணிக்க விரும்புவோர்கள், பரோட்டிலிருந்து திரும்ப கீழே வந்து, மண்டியை அடைந்து, அங்கிருந்து 100 கிமீ வரை மீண்டும் பயணிக்கவேண்டும். தேநெஎ 154லில் பின்னோக்கி வந்து, பின் 3ம் எண் கொண்ட நெடுஞ்சாலையில் பயணிக்க நக்கர் பகுதியை அடைந்துவிடலாம்.

AthulBiju94

நதௌன்

நதௌன்

நதௌன் சுற்றுலாத்தலத்திற்கு பயணம் செய்யும் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் மீன்பிடிக்கும் பொழுதுபோக்கு பெரிதும் விரும்பப்படுகிறது. இங்கு பியாஸ் ஆற்றில் ‘மஹாசீயர்' எனப்படும் பெரிய வகை சீலா மீன் வகையை தூண்டில் மூலம் பிடிக்கலாம். தூண்டில் மீன்பிடிப்பில் ஈடுபடும் பயணிகளுக்காக கூடார வசதிகளும் இப்பகுதியில் செய்யப்பட்டிருக்கின்றன.

எப்படி செல்வது

லூதியானாவிலிருந்து ஹோசியார்பூர் வழியாக பயணித்தால் 3 மணி நேரத்தில் விரைவில் இந்த இடத்தை அடைந்துவிடமுடியும். முதலில் தேநெஎ 44 வழியாகவும், பின் அந்த சாலையுடன் இணையும் 344B சாலையில் பயணித்தால் சற்றேறக்குறைய 4 மணி நேரத்தில் உறுதியாக இந்த இடத்தை அடைந்துவிடலாம்.

Kprateek88

 சீமா

சீமா

இமாச்சல் பிரதேஷ் மாநிலத்தில் பப்பர் ஆற்றங்கரையில் சீமா எனும் இந்த ரம்மியமான சுற்றுலாத்தலம் அமைந்துள்ளது. இந்த ஸ்தலத்தில் எராளமான தூண்டில் மீன்பிடிப்பு தளங்கள் உள்ளன. ரோஹ்ரு எனும் நகரத்துக்கருகில் இந்த சீமா ஸ்தலம் அமைந்திருப்பதால் அருகிலுள்ள நகரங்களிலிருந்து சுலபமாக இங்கு வருகை தரலாம். பிரவுன் டிரௌட் எனும் மீன் வகைக்கும், வானவில் எழிற்காட்சிகளுக்கும் இந்த பப்பர் ஆற்றுப்பகுதி மிகவும் பிரசித்தமாக அறியப்படுகிறது.

dainismatisons

பக்கா தலாப் குளம்

பக்கா தலாப் குளம்

மீன்பிடிப்பு என்பது நஹனில் சுற்றுப்பயணம் செய்பவர்களுக்கேற்ற சிறந்த பொழுது போக்காகும். இங்கிருக்கும் ஏரிகள் மற்றும் குளங்கள் பழுப்பு ட்ரௌட், ரெயின்போ ட்ரௌட் மற்றும் மகாஷீயர் ஆகிய வகையிலான வித்தியாசமான மீன் வகைகளை பிடிக்க ஏற்ற இடங்களாக இருக்கின்றன.

பக்கா தலாப் குளம் மீன்பிடிப்பிற்காக புகழ் பெற்ற சுற்றுலாத் தலமாகும். இந்த மீன்பிடிப்பிற்றகாக சுற்றுலாப் பயணிகள் ரூ.100/-ஐ கட்டணமாக அதிகாரிகளுக்கு செலுத்த வேண்டியிருக்கும்.

Harvinder Chandigarh

தீர்த்தன் பள்ளத்தாக்கு

தீர்த்தன் பள்ளத்தாக்கு

தீர்த்தன் வேலி எனப்படும் இந்த பள்ளத்தாக்கு பகுதி ஷோஜா நகரத்திற்கு அருகில் உள்ளது. கிரேட் ஹிமாலயன் நேஷனல் பார்க் எனும் காட்டுயிர் சரணாலயத்திற்காக இப்பள்ளத்தாக்குப்பகுதி பிரசித்தி பெற்றுள்ளது. பல்லுயிர்ச்சூழல் நிலவும் இயற்கைப்பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள இப்பிரதேசத்தினை சுற்றுப்புற மாசிலிருந்து பாதுகாப்பதற்கான முயற்சிகள் துவங்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் பயணிகள் ஆற்றில் மீன் பிடிக்கும் பொழுதுபோக்கில் ஈடுபட்டு மகிழலாம்.

Achiwiki356

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X