கும்பகோணத்திலும் அதனைச் சுற்றிலும் உள்ள ஏராளமான கோவில்களின் காரணமாக இந்நகரம் கோவில்களின் நகரம் என அழைக்கப்படுகிறது. கும்பகோணம் நகராட்சிக்குட்பட்ட பகுதிக்குள் 188 கோவில்கள் உள்ளதாக சொல்லப்படுகிறது.
கும்பகோணத்தை ஆண்ட பல்வேறு அரசர்களும், தமது ஆட்சிக்காலத்தில், இங்கு பல கோவில்களை கட்டுவதில் ஆர்வமாக இருந்துள்ளனர்.
எனினும் கும்பகோணத்தை தமது தலைநகரமாக கொண்டு இரண்டு நூற்றாண்டுகள் ஆட்சி செய்த இடைக்காலச் சோழர்கள்தான் இங்கு கோவில்களை அமைப்பதில் பெரும் பங்காற்றியுள்ளனர்.
ஸ்ரீ கும்பேஸ்வரர் கோவிலானது, இடைக்காலச் சோழர்களின் காலத்தில், கி.பி.7ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. சிவன் கோவிலான இதுதான் இங்குள்ள கோவில்களிலேயே மிகப் பழமையானது ஆகும்.

ஸ்ரீ கும்பேஸ்வரர் ஆலயம், கும்பகோணம்
கும்பகோணத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கும்பேஸ்வரர் ஆலயம் ஒரு சிவாலயமாகும். இக்கோவிலில் தான் ஆண்டுதோறும் மாசிமக விழாவும், 12 ஆண்டுகளுக்கொருமுறை மகாமகப் பெருவிழாவும் கொண்டாடப்படுகின்றன. இக்கோவில் 1300 ஆண்டுகள் பழமையானதென நம்பப்படுகிறது. இடைக்காலச் சோழர்கள் இந்நகரத்தை ஆண்டபொழுதிலிருந்து இக்கோவில் உள்ளது. இக்கோவிலில் சிவபெருமான் ஆதி கும்பேஸ்வரர் என்னும் பெயருடன் வழிபடப்படுகிறார்.
படம் : Ssriram mt

ஸ்ரீ கம்பஹரேஸ்வரர் ஆலயம், கும்பகோணம்
கும்பகோணத்திற்கு அருகில் உள்ள திருபுவனம் என்னும் கிராமத்தில் ஸ்ரீ கம்பஹரேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. 13-ஆம் நூற்றாண்டில் ஆட்சிசெய்த மன்னன் குலோத்துங்கனால் இக்கோவிலின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. அவருக்குப் பிறகு வந்த சேர, சோழ, பாண்டிய வம்சத்தைச் சேர்ந்த மன்னர்கள் அப்பணியைத்தொடர்ந்து கட்டி முடித்தனர். சோழர்களால் புதுப்பிக்கப்பட்ட கடைசிக்கோவில் இதுவென வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர்.
படம் : Rsmn

சோமேஸ்வரர் ஆலயம், கும்பகோணம்
சோமேஸ்வரர் ஆலயம் கும்பகோணத்தில் அமைந்துள்ள ஒரு சிவாலயமாகும். இந்தக் கோயிலின் கட்டிட வடிவமைப்பை பார்க்கும் பொழுது 13-ஆம் நூற்றாண்டு திராவிடக் கட்டிடக் கலை உடனடியாக நினைவுக்கு வருகிறது. இக்காலத்தில்தான் பிற்காலச் சோழர்கள் கும்பகோணத்தை ஆண்டு வந்தனர். உண்மையில் இக்கோவில் சிவபெருமானையும் பார்வதிதேவியையும் வழிபட்டுவந்த சோழர்களால் அடிப்படையில் கட்டப்பட்டது. பிறகு வந்த மன்னர்கள் இக்கோவிலின் கட்டுமானத்தில் வெவ்வேறு வடிவமைப்பை சேர்த்துக் கொண்டனர். ஆயினும் அடிப்படை வடிவமைப்பு சோழர் கட்டிடக் கலையே ஆகும்.
படம் : Krishna Kumar

பட்டீசுவரம் துர்கையம்மன் ஆலயம்
பட்டீசுவரம் துர்கையம்மன் ஆலயமானது கும்பகோணத்திலிருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பட்டீசுவரம் என்னும் ஊரில் உள்ளது. இந்தக் கோயிலில் ராவணனனைக் கொன்றதனால், அப்பாவம் நீங்க சிவனைநோக்கி தவம் இருந்த ராமபிரானால் வழிபடப்பட்ட சிவலிங்கம் ஒன்று உள்ளதாக நம்பப்படுகிறது. இக்கோவிலில் மிகவும் பிரம்மனடமாக காட்சிதரும் 5 கோபுரங்கள் உள்ளன.
படம் : VasuVR

ஸ்ரீ ராமசுவாமி ஆலயம், கும்பகோணம்
ஸ்ரீ ராமசுவாமி ஆலயம் நாயக்க மன்னர்களின் பிரதம மந்திரியாக இருந்த கோவிந்த தீட்சிதரின் முயற்சியால் கட்டப்பட்டது. நாயக்கமன்னர்கள் அனைவரும் மகாவிஷ்ணுவை வணங்கிவந்தவர்கள். பெருமாளுக்கு ஆலயம் எடுப்பதைப் பெருமையாகக் கருதியவர்கள். இக்கோவிலின் பாணி அக்காலத்தில் பின்பற்றப்பட்ட நாயக்கர் காலக் கட்டிடக் கலையைச் சேர்ந்ததாகும். இக்கோவிலின் சுவர்களில், ராமாயணத்தில் வரும் அனைத்து காட்சிகளும் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஓவிங்களாகத் தீட்டப்பட்டுள்ளன.

ஒப்பிலியப்பன் கோவில்
பெருமாளின் 108 திவ்ய தேசங்களுள் ஒன்றாக கருதப்படும் ஒப்பிலியப்பன் கோவில் 2000 ஆண்டுகள் பழமையானதாகும். இந்தக் கோயில் கும்பகோணத்திலிருந்து 8 கிலோமீட்டர் தூரத்திலும், திருநாகேஸ்வரத்திலிருந்து 1/2 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது. இங்கு பெருமாளுக்குப் படைக்கப்படும் நைவேத்தியங்கள் உப்பு இன்றியே சமைக்கப்படுகின்றன. அதோடு யாராவது வேண்டுமேன்றே உப்பு சேர்த்த உணவுப்பொருள்களைப் பெருமாளுக்குப் படைத்தால் அது குற்றமாகவும் பாவமாகவும் கருதப்படும். இக்கோயிலுக்கு வந்து பெருமாளையும், பூமாதேவியையும் வணங்கினால், அவர்களது குடும்பத்தில் கணவன் மனைவியர் இருவருக்கிடையில், சகிப்புத்தன்மை பெருகி இருவரிடையேயும் அன்னியோன்யம் அதிகரித்து மணவாழ்வில் இன்பம் வளரும் என்று நம்பப்படுகிறது.

ஸ்ரீ சாரங்கபாணிநாதர் ஆலயம்
கும்பகோணம் இரயில்வே நிலையத்திலிருந்து 2 கிலோமீட்டர் தூரத்திற்கும் குறைவான தூரத்திலேயே ஸ்ரீ சாரங்கபாணிநாதர் ஆலயம் அமைந்துள்ளது. 12 ஆழ்வார்கள் தமது பாடல்களில் இக்கோவிலைப் பற்றியும் இக்கோவிலில் உள்ள பெருமாளைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளனர். இக்கோவிலில் ஆதிசேஷன் தலைமீது படம் எடுத்துக் கொண்டு நிற்க, பெருமாளானவர் ஒரு ரதத்தின் மீது அனந்தசயன நிலையில் இருப்பதுபோன்று பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
படம் : Adam63

ஐராவதீஸ்வரர் கோயில்
கும்பகோணத்திலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தாராசுரத்தில் ஐராவதீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. கங்கைகொண்ட சோழபுரம் மற்றும் பிரகதீஸ்வரர் கோவில்களில் இருப்பதை விட சிறியதாக இருந்தாலும், மிகவும் நுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்டதாக திகழ்கிறது ஐராவதம் கோவில் சிற்பங்கள். ஒரு தேரை, குதிரைகள் இழுத்துச் செல்வது போல அமைந்திருக்கும் ஐராவதீஸ்வரர் கோயில், நிச்சயமாக நாம் அனைவரும் பார்க்க வேண்டிய அருமையான திருக்கோவில் ஆகும். துர்வாச முனிவரின் சாபத்தினால் தன்னுடைய நிறத்தை இழந்த இந்திரனின் யானை ஐராவதம், இங்கு வந்து சிவனை வழிபட்டு, சாப விமோச்சனம் பெற்றதாம். அதனால், இந்த கோவிலுக்கு ஐராவதீஸ்வரர் கோயில் என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது.
படம் : Eurekaitskk

காசி விஸ்வநாதர் கோயில்
கும்பகோணம் மகாமகம் குளத்துக்கு அருகிலேயே சிவாலயமான காசி விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் சிவன் சன்னதியை தவிர நவகன்னியர்களான கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, ,காவேரி, கிருஷ்ணா, கோதாவரி, துங்கபத்ரா, சரயு ஆகிய புனித நதிகளுக்கும் சன்னதிகள் உள்ளன. இக்கோயில் குறித்து தேவாரத்தில் பாடல் இடம்பெற்றிருப்பதுடன், இராமாயண காலத்திலேயே இராமரும், லக்ஷ்மணனும் இங்கு சிவனை வழிபட்டதாக நம்பப்படுகிறது.
படம் : Ssriram mt

சுவாமிநாதசுவாமி திருக்கோவில்
கும்பகோணத்திலிருந்து 8 கி.மீ தொலைவில் சுவாமிமலையில் அமைந்திருக்கிறது சுவாமிநாதசுவாமி திருக்கோவில். இங்கு மனிதனின் சராசரி ஆயுளாக கருதப்படும் 60 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில், தரையிலிருந்து கோவிலுக்குச் செல்ல 60 படிக்கட்டுகள் கொண்ட பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கோயிலில் முருகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்ய விரும்புபவர்கள் கோவிலின் கருவறைக்குள் அழைத்துச் செல்லப்பட்டு தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.



Click it and Unblock the Notifications



