» »வரலாறு: மருது சகோதரர்கள் வாழ்ந்த பூமி... ஒரு வரலாற்று சுற்றுலா

வரலாறு: மருது சகோதரர்கள் வாழ்ந்த பூமி... ஒரு வரலாற்று சுற்றுலா

Posted By: Udhaya

ஆங்கிலேயருக்கு எதிராக புரட்சியில் ஈடுபட வேண்டும் என்பதற்காக 216 ஆண்டுகளுக்கு முன்னர் கி.பி. 1801 ஆம் ஆண்டு தென்னிந்திய நாடுகளின் கூட்டணியை உருவாக்கி வரலாற்றுச் சிறப்புமிக்க நாவலந்தீவு பிரகடனம் எனும் ஜம்புதீவு பிரகடனத்தை மருது சகோதரர்கள் வெளியிட்ட நாள்தான் ஜூன் 12.

அந்த பிரகடனம் வெளியிட்ட மருதுசகோதரர்கள் வாழ்ந்த பூமி, அதன் சிறப்புகள் என்ன என்பது பற்றி இந்த பதிவில் காண்போம்.

மருது சகோதரர்கள்

மருது சகோதரர்கள்

மருது சகோதரர்கள் தமிழ்நாட்டில் ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்ட முன்னோடிகளுள் குறிப்பிடத்தக்கவர்கள்.

Kanags

இவர்களது காலம்

இவர்களது காலம்

ஆங்கிலேயரைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்ட 1785 முதல் 1801 இறுதி வரை ஆயுதம் தாங்கிப் போராடினார்கள்.

Jagadeeswarann99

 இந்தியராய் ஒன்றுபட்டவர்கள்

இந்தியராய் ஒன்றுபட்டவர்கள்

பெரிய மருது, சின்ன மருது எனப்படும் இவர்கள் ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடிய அனைத்திந்திய குழுக்களையும் ஒன்றிணைத்துத் திரட்ட முயன்ற போதுதான் ஆங்கிலேயரின் அதிருப்திக்கும் கோபத்திற்கும் ஆளானார்கள்.


Jagadeeswarann99

எங்கே தெரியுமா?

எங்கே தெரியுமா?

இவர்களது களம் சிவகங்கைச் சீமையைச் சேர்ந்த காளையார்கோயில் ஆகும்.

சிவகங்கை

சிவகங்கை

வீரத்துக்கும் தீரத்துக்கும் பெயர் போன சிவகங்கை பல வீரர்களை தந்து இந்திய விடுதலைக்குப் போராடச் செய்தது.

காளையார் கோயில்

காளையார் கோயில்

சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரம் இதுவாகும்.

தூக்கிலிடப்பட்ட இடம்

தூக்கிலிடப்பட்ட இடம்

ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியரால் 1801 அக்டோபர் 24 இல் திருப்பத்தூரில் இவ்விருவரும் தூக்கிலிடப்பட்டனர்.

 நினைவிடம்

நினைவிடம்


இவர்களது நினைவாலயம் காளையார் கோவிலில் அமைந்துள்ளது

Arunankapilan

சுற்றுலாத் தளங்கள்

சுற்றுலாத் தளங்கள்


வீரம் விளைந்த மண்ணில் சுற்றுலா செல்வதற்கென்று பல இடங்கள் உள்ளன.

இடைக்காட்டூர் ஆலயம்

இடைக்காட்டூர் ஆலயம்


மதுரையிலிருந்து 36கிமீ தொலைவில் ராமநாதபுரம் செல்லும்வழியில் அமைந்துள்ளது இந்த தேவாலயம்.

Rmckarthik

வடிவமைப்பு

வடிவமைப்பு


இந்த ஆலயம் பிரான்சின் நீம்ஸ் கதீட்ரல் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

கட்டடக்கலை

கட்டடக்கலை

கோதிக் கட்டடக்கலை பாணியில் வடிவமைக்கப்பட்ட இங்கு இருக்கும் அழகிய சிலை அனைத்தும் பிரான்சிலிருந்து கொண்டு வரப்பட்டதாகும்.

காளீஸ்வரர் கோயில்

காளீஸ்வரர் கோயில்


தேவகோட்டையிலிருந்து மானாமதுரை செல்லும் வழியில் அமைந்துள்ளது இந்த கோயில், பழங்கால கட்டடக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த கோயில் காளையார் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.

இரண்டு ராஜ கோபுரங்கள் உள்ளன.

Shriv55

கண்டதேவி கோயில்

கண்டதேவி கோயில்

தேவகோட்டையிலிருந்து 3கிமீ தொலைவில் அமைந்துள்ள ஒரு கிராமத்தில் உள்ளது இந்த கோயில்.

350 ஆண்டுகளுக்கு முன் இந்த கோயில்கட்டப்பட்டுள்ளது

கண்ணதாசன் மணி மண்டபம்

கண்ணதாசன் மணி மண்டபம்

காரைக்குடி அருகே அழகான மணிமண்டபம் ஒன்று கண்ணதாசன் நினைவாக கட்டப்பட்டுள்ளது.

Read more about: travel, temple, tour