Search
  • Follow NativePlanet
Share
» »தலைகீழாக பாயும் நீர்வீழ்ச்சி ஒன்று இந்தியாவில் உள்ளதா? எங்கே இருக்கிறது

தலைகீழாக பாயும் நீர்வீழ்ச்சி ஒன்று இந்தியாவில் உள்ளதா? எங்கே இருக்கிறது

இந்த பூமி இன்னும் மனிதகுலத்தால் ஆராயப்படாத மர்மமான இடங்களால் நிறைந்துள்ளது. இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட, ஆனால் இன்னும் மக்களால் அதிகம் அறியப்படாத நீர்வீழ்ச்சிகளில் ஒன்று மகாராஷ்டிராவில் உள்ள நானேகாட்டில் அமைந்துள்ளது.

நானேகாட் நீர்வீழ்ச்சி எங்கே அமைந்துள்ளது?

நானேகாட் நீர்வீழ்ச்சியின் சிறப்பம்சம்

மனிதர்களால் கண்டுபிடிக்கப்பட்ட இயற்கையின் பல அற்புதமான அதிசயங்களைக் கண்டு நாம் வியந்துள்ளோம், ஆனால் நானேகாட்டின் தலைகீழ் நீர்வீழ்ச்சி நிச்சயமாக நம்மை முற்றிலும் திகைப்பில் ஆழ்த்தும் அதிசயங்களில் ஒன்றாகும். நானா காட் என்றும் பிரபலமாக கருதப்படும் நானேகாட், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கொங்கன் கடற்கரை மற்றும் தக்காண பீடபூமிக்கு அருகில் உள்ள ஒரு கம்பீரமான மலைத்தொடர் ஆகும். நானேகாட்டின் பிரமிக்க வைக்கும் மலைப்பாதையானது அமைதியான காட்சியைக் கண்டும் காணாததுடன், உங்கள் நண்பர்களுடன் இங்கு ஒரு சிறிய பயணத்தை அனுபவிக்கும் வாய்ப்பை வழங்குகிறது. புனேவின் ஜூன்னாருக்கு அருகே அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சி, மும்பையில் இருந்து சுமார் மூன்று மணி நேரத்தில் அமைந்துள்ளது.

நானேகாட்டின் சிறப்பம்சம்: (What is unique in Naneghat)

இது ஒரு மர்மமான மலை, அங்கிருந்து ஒரு நீர்வீழ்ச்சி தலைகீழ் திசையில் பாய்கிறது. ஆனால் அது எப்படி நடக்கிறது? அதற்குக் காரணம் என்ன, பாய்ந்து வரும் நீரை மேல்நோக்கித் தள்ளும் காற்றின் வலுவான சக்திதான் அதற்கு காரணம். இதில் உள்ள சுவாரஸ்யம் என்னவென்றால், இந்த மலையேற்றப் பாதை பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வர்த்தகத்திற்காக பயன்படுத்தப்பட்டது. சத்ரபதி சிவாஜியின் ஆட்சிக் காலத்தில் இந்த மலைப்பாதை பயன்பாட்டில் இருந்து வந்தது என பழங்கால குகைகளும் பாறையில் வெட்டப்பட்ட பானைகளும் இந்த இடத்தில் சாட்சியாக கடந்த காலத்தின் கதைகளை கூறுகின்றன.

வரலாற்றுடன் தொடர்புள்ள நானேகாட்

தேவநாகரி மற்றும் பிராமி எழுத்துக்களில் உள்ள கல்வெட்டுகளுடன், நானேகாட் மலையேற்ற பாதையின் முடிவில் ஒரு பழங்கால குகை அமைந்துள்ளது, இது 2.000 ஆண்டுகளுக்கும் மேலானதாக நம்பப்படுகிறது. இது இப்பகுதிகளில் சாதவாகன வம்சத்தின் ஆட்சியின் சான்றுகளை வழங்குகிறது. இந்தக் கல்வெட்டுகள் சூரியன், இந்திரன், வாசுதேவ் அல்லது கிருஷ்ணன், சந்திரன், யமன் போன்ற தெய்வங்கள் பற்றிய தகவல்களையும் வேதங்களின் சடங்குகளையும், சாதவாகன ஆட்சியாளர்களைப் பற்றிய சில வரலாற்றுத் தகவல்களையும் தருவதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். நானேகாட்டிற்குச் செல்லும் ஒவ்வொரு பார்வையாளர்களும், மேலிருந்து பார்க்கும்போது இந்த இடம் பூமியில் உள்ள ஒரு சொர்க்கம் போன்றது என்பதை ஒப்புக்கொள்வார்கள்.

நானேகாட் ட்ரெக்கிங்

நானேகாட் தீவிர ட்ரெக்கிங் பிரியர்களிடையே மிகவும் பிரபலமானது. ஒவ்வொரு ஆண்டும் இங்கு ட்ரெக்கிங் செய்ய வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. உற்சாகத்துடன் ட்ரெக்கிங் செய்து புவியீர்ப்பு விதியை அறியாத அழகிய வெள்ளை அருவியைக் காணலாம். இருப்பினும், மழைக்காலத்தில் நானேகாட் நீர்வீழ்ச்சியைப் பார்ப்பது நல்லது என ஒரு பெரும்பான்மை கருத்து நிலவுகிறது, ஏனெனில் இந்த விசித்திரமான நிகழ்வு நீரின் வேகம் அதிகமாக இருக்கும் போது கண்களுக்கு விருந்தாக அமைகிறது எனலாம். கல்யாண் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்தில் ஏறி ஜுன்னாரில் இறங்கலாம். அங்கிருந்து சாலை வழியாக நானேகாட்டை எளிதாக அடையலாம். மாற்றாக, மும்பை மற்றும் புனேவிலிருந்து வழிகாட்டப்பட்ட சுற்றுப்பயணங்களையும் நீங்கள் தேர்வு செய்யலாம், ஒரு நபருக்கான கட்டணம் 750 ரூபாய் முதல் தொடங்குகிறது.

செய்யவேண்டியவை

மலைத்தொடருக்கு அருகே பலத்த காற்று வீசுவதால் சூழல் குளிர்ச்சியடையக்கூடும் என்பதால், சில அத்தியாவசிய மருந்துகளையும் சில சூடான ஆடைகளையும் எடுத்துச் செல்ல மறக்காதீர்கள். மேலும், நீர்வீழ்ச்சிகள் வரை மலையேற்றத்திற்குச் சென்றால் உங்களுக்கு தாகம் மற்றும் பசி ஏற்படும் என்பதால் குடை, சில சிற்றுண்டிகள், பிஸ்கட் பாக்கெட்டுகள் மற்றும் தண்ணீர் பாட்டில் ஆகியவற்றை எடுத்துச் செல்லுங்கள். குறிப்பாக மழைக்காலமாக இருந்தால், உறுதியான பிடியுடன் கூடிய நல்ல மலையேற்ற காலணிகளை அணிவது கட்டாயமாகும். பார்வையாளர்களின் வசதிக்காக பாதைகள் நன்கு குறிக்கப்பட்டுள்ளன. மாற்றாக, பார்வையாளர்கள் தங்கள் வாகனத்தை மலையின் உச்சிக்கு ஓட்டிச் சென்று அங்கு அமைந்துள்ள சிறிய தாபாவில் சூடான பாஜியாக்கள் மற்றும் தேநீர் ஆகியவற்றை அனுபவிக்கலாம்.
என்ன வரவிருக்கும் வார இறுதியில் இங்கு சென்றிடலாமா? உடனே திட்டமிடுங்கள்!!!

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X