Search
  • Follow NativePlanet
Share
» »இந்திய விடுதலையில் தமிழகத்தின் தியாகம்! மறக்கடிக்கப்பட்ட உண்மைகள்..!

இந்திய விடுதலையில் தமிழகத்தின் தியாகம்! மறக்கடிக்கப்பட்ட உண்மைகள்..!

இந்திய நாட்டின் 72-வது சுதந்திர தினம் நாடுமுழுவதும் நாளை (ஆகஸ்ட் 15) கொண்டாடப்படவுள்ளது. சொல்லப் போனால், பல விசேச நாட்களைப் போலவே அனைவரது மனதிலும் ஒருவார காலமாக இத்தினம் ஒருவித உற்சாகத்தை ஏற்படுத்தி கொண்டப்பட்டுதான் வருகிறது. இத்தனையாண்டு இந்திய விடுதலை போராட்டம் குறித்து எத்தனை எத்தனையோ கதைகள், வரலாற்று நினைவுகள், பங்குகொண்ட தியாகிகள் என பல கதைகளையும், கட்டுரைகளையும் பார்த்திருப்போம். அவற்றில் பெரும்பாலும் மையப்படுத்தி இருப்பது வடநாட்டு சுதந்திரப் போராட்ட வீரர்களையே. நம்மில் ஒருசிலர் விடுதலைப் போராட்டத்தில் நம் தமிழர்களின் பங்கு எத்தகையது என தேடித்தேடி படித்திருப்போம். ஆனால், விடுதலைப் போரில் வீரம் கொண்டு செயலாற்றிய தமிழகத்தின் வீரஞ்செரிந்த பகுதிகள் குறித்து கேள்விப்பட்டதுண்டா ?.

பூலித்தேவன்

பூலித்தேவன்

இந்திய விடுதலையில் தமிழர்கள் என்றாலே சற்றும் சிந்திக்காமல் சொல்லிவிடலாம் பூலித்தேவனையும், கட்டபொம்மன், மருதுசகோதரர்களையும். நாடு ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் இருந்த போது 1755-ல் நெல்லையின் நெற்கட்டும்சேவல் கோட்டையை முற்றுகையிட்டு வரி வசூல் செய்த கர்னல் ஹெரோனையும், பிரிட்டிஸ் படைகளையும் விரட்டியடித்து தமிழகத்தில் முதன் முறையாக விடுதலைக்கான விதையிட்டவரே மாவீரன் பூலித்தேவன்.

Rajasubash

இன்றும் வாழும் பூலித்தேவன்

இன்றும் வாழும் பூலித்தேவன்

போராட்டத்தின் போது ஆங்கிலேயர்களால் வாசுதேவநல்லூர் கோட்டை தாக்கப்பட்டு வீழ்த்தப்பட்டது. அங்கே இருந்த பூலித்தேவனும் இதர வீரர்களும் காட்டிற்குள் தப்பிச்செல்ல முயன்றும் பூலித்தேவன் கைதுசெய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறைக்குச் செல்லும் வழியில் அவர் தப்பிச்சென்றதாக கூறப்படுகிறது. ஒரு தரப்போ, சங்கரன்கோவிலில் உள்ள சங்கர நாராயணார் கோவிலில் பூலித்தேவர் இறுதியாக வழிபடச் சென்று மறைந்த இடம் என்று ஒரு இடம் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.

James Welsh

வேலு நாச்சியார்

வேலு நாச்சியார்

பூலித்தேவனைத் தொடர்ந்து, 1780-யில் முப்படைகளைத் திரட்டிய வேலு நாச்சியார் சிவகங்கையில் பிரிட்டிஸ் படை வீரர்களுடன் போரில் ஈடுபட்டார். அப்போது, வேலுநாச்சியாருக்கு உறுதுணையாக இருந்தது மருது சகோதரர்கள். இரு மாபெரும் வீரர்களின் தாக்குதள்களை எதிர்கொள்ள முடியாத ஆங்கிலேயர்கள் சிவகங்கையை விட்டு வெளியேறினர். கிழக்கிந்திய கம்பெனி முழுவதும் நொருக்கப்பட்டது.

Nileshantony92

மருதநாயகம்

மருதநாயகம்

1725 ஆம் வருடம் பிறந்து 1764 வரை பல வீரச் செயல்கள் புரிந்து 40 வயதியில் வீரமரணம் அடைந்தவர் நம் மருதநாயகம். கிழக்கிந்திய கம்பெனியின் கூலிப்படைத் தளபதியாக இருந்த கான்சாகிப் மருதநாயகம், பின்னாளிலேயே பிரிட்டிசாரின் சூழ்ச்சிகளை அறிந்து அவர்களை எதிர்த்து போரிட்டார். விளைவு, தன் நம்பர்களாலேயே சூழ்ச்சியில் சிக்கி தூக்குக் கயிற்றில் வீரமரணத்தை எய்தினார். இன்றும், கொடைக்காணல் சாலையும், மதுரை மீனாட்சி அம்மன், கள்ளலகர் கோவிலும் இவர் பெயரை போற்றுகிறது.

கட்டபொம்மன்

கட்டபொம்மன்

இந்திய வரலாற்றில் தன்னிகரற்ற மாவீரனாக திகழ்ந்த திப்பு சுல்தான் ஆங்கிலேயர்களால் வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து கட்டபொம்மன் குறிவைக்கப்பட்டார். திப்பு சுல்தான் வீழ்த்தப்பட்ட அதே ஆண்டு கட்டபொம்மனின் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை முற்றுகையிடப்பட்டது. ஆங்கிலேயருக்கு எதிரான போரில் இருதரப்பிலும் பெரும் சேதம் ஏற்பட்டது. ஆனால் அதிக பாதிப்பை சந்தித்தது கட்டபொம்மன் தான். 1799-ம் ஆண்டு அக்டோபர் 16-ம் தேதி கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டார். இன்றும் பாஞ்சாலங்குறிச்சியும், கட்டபொம்மனின் கோட்டையும் அவர் நினைவைப் போற்றுகிறது.

wikipedia

தீரன் சின்னமலை

தீரன் சின்னமலை

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மூன்று பெரும் போர்கள் நடைபெற்றது என்றால் அது தீரன் சின்னமலைக்கு உரியதுதான். கிழக்கிந்திய படையை தீரன் சின்னமலை தனது சிறியபடையைக் கொண்டு போரிட்டு வெற்றி பெற்றது வரலாற்றுச் சான்று. 1801யில் காவிரிப் போர், 1802யில் ஓடாநிலைப் போர், 1804யில் அறச்சலூர்ப் போர் என மூன்று முறை ஆங்கிலேயர் சின்னமலையிடம் படுதோல்வியடைந்து விரக்தியுற்றனர்.

Invisiblemaniac

தூக்கு மேடையில் தீரன்

தூக்கு மேடையில் தீரன்

மீண்டும் படையைத் திரட்டி தீரனை சூழ்ந்த பிரிட்டிஸார்கள் சங்ககிரி மலையின் உச்சியில், சின்னமலை, பெரியதம்பி, கிலேதார், கறுப்பசேர்வை ஆகிய நால்வருக்கும் ஆலமரத்தின் வடக்கே தூக்கு மேடையை நிறுவினர். அங்கு மேடையேறிய வீர மறவர்கள் நால்வரும் தங்கள் கழுத்தில் தாங்களே தூக்குக் கயிற்றை இட்டு வீரமரணத்தை எய்தினர். உண்மையில் சங்ககிரி கோட்டை சரித்திரப் புகழ்பெற்றது தான்.

Maheece

வ.உ. சிதம்பரம் பிள்ளை

வ.உ. சிதம்பரம் பிள்ளை

இளம் வயதிலேயே சுதந்திர போராட்டத்தில் ஆர்வம் கொண்டவர். கப்பலோட்டிய தமிழன் என்று உலகம் போற்றும் அளவிற்கு இன்றும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கும் தமிழக். சுதேச இயக்கத்தை வலுப்படுத்தும் நோக்கில் சுதேச கப்பல் கம்பெனியை ஆரம்பித்து, கப்பம் கட்ட மறுத்ததால் 36 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு செக்கிழுத்து, கல்லுடைத்தார். கோவை சிறைச் சாலையில் இவரது நினைவுப் பொருட்கள், செக்கு இன்றும் இவரது நினைவாக உள்ளது.

wikipedia

திருப்பூர் குமரன்

திருப்பூர் குமரன்

பனியனுக்கு மட்டும் சிறப்பு பெற்றது இல்லைங்க, குமரனை பெற்றடுத்ததற்காகவும் பெயர்பெற்றதுதனன் திருப்பூர். இந்திய விடுதலைப் போராட்ட தியாகி திருப்பூர் குமரன் தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் பரவிய நேரத்தில் திருப்பூரில் இளைஞரைகளைக் கொண்டு மறியல் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டவர்தான் இவர். ஆங்கிலேயர்க் கைக்கூலியாக இருந்த காவலர்களால் தாக்கப்பட்டு தடியடிபட்டு இரத்தம் பீரிட்டபோதும் கையில் தேசியக் கொடியை ஏந்தியபடி உயிர் துறந்த கொடிகாத்த குமரனின் நினைவு இடத்தில் அவருக்கான நிலை திருப்பூர் பயணிக்கும் எவரும் வணங்க வேண்டிய ஒன்றாகும்.

Unknown

சரித்திரம் படைத்த கோயம்புத்தூர்

சரித்திரம் படைத்த கோயம்புத்தூர்

இந்திய விடுதலையில் நாடுமுழுவதும் எத்தனை எத்தனையோ போராட்டங்களும், வீரமரனங்களும் நிகழ்ந்திருக்கும். ஆனால், அன்று தொடங்கி இன்று வரை அதே சுதந்திரத்திற்காக மீண்டும் மீண்டும் போராடிவருபவர்கள் தமிழகத்தினரே. ஏனென்ற அரசியல் மிக நீண்டது. ஆனால், இந்திய சுதந்திர போராட்டத்தில் தமிழகத்தின் கொங்கு மண்டலத்தின் பங்கு போற்றக்கூடிய ஒன்றாகவே உள்ளது. அன்றாடம் நாம் கடந்து வந்த பாதையில் சிதைந்துகிடக்கும் வீர வரலாற்றை உற்று நோக்குங்கள்.

wikimedia

கோவை வந்த காந்தி

கோவை வந்த காந்தி

சுதந்திர போராட்டத்தின் ஒரு பகுதியாக 1921 ஆம் ஆண்டு கோயம்புத்தூருக்கு தனது மனைவியுடன் வந்தார் காந்தி. பின், இரண்டாவது முறையாக 1927ஆம் ஆண்டு கதர் நடைபயணத்திற்காகவும், 1934 ஆம் ஆண்டு ஹரிஜன் நல நடைபயணத்திற்காகவும் கோயம்புத்தூருக்கு வந்துள்ளார். மூன்றாவது முறையாக வந்தபோதுதான் இராமநாதபுரம், திருச்சி சாலையில் உள்ள கூட்டுறவு ஒழுங்கு முறை விற்பனைக் கூட வளாகத்தில் நாவல் பழ மரத்தை நட்டுச் சென்றார். இன்றும் அம்மரங்கள் கோவையில் காந்தியின் நினைவு கூறும் வகையில் வளர்ந்து நிற்கின்றது.

Unknown

மத்திய சிறைச் சாலை

மத்திய சிறைச் சாலை

கோயம்புத்தூர் காந்திபுரத்தில் உள்ள மத்திய சிறைச் சாலையில் தான் சுதந்திரப் போராட்டத் தியாகி வ.உ. சிதம்பரம் பிள்ளை உட்பட ஏராளமான விடுதலைப் போராட்ட வீரர்கள் சிறைபிடித்து வைக்கப்பட்டனர். அப்போது அவருக்கு தண்டனைக்காக கொடுக்கப்பட்ட செக்கு இன்றும் காட்சிப் பொருளாக உள்ளது. செக்கிழுத்த செம்மல் பெயர் பெற்றதும் இங்கே தான்.

Surya Prakash.S.A.

ரேஸ்கோர்ஸ்

ரேஸ்கோர்ஸ்

கோயம்புத்தூரில் அதிக பாதுகாப்பு நிறைந்த பகுதியும், இராணுவ அம்சங்கள் நிறைந்த பகுதியாகவும் இருக்கும் ரேஸ்கோர்ஸ் அனைவரும் அறிந்ததே. ஆனால், அங்கே காந்தி நடைபயிற்சி செய்துள்ளார் என்றால் நம்ப முடிகின்றதா ?. ஆம், 1921 ஆம் ஆண்டு முதன்முறையாக, கோயம்புத்தூர் வந்த காந்தி இங்கே தாக் நடைபயிற்சி செய்தார்.

தமிழகமும் விடுதலையும்

தமிழகமும் விடுதலையும்

இந்திய விடுதலையில் தமிழகர்களின் பங்கு எண்ணில் அடங்காததது. மேற்குறிப்பிட்ட வீரர்கள் மட்டுமின்றி இன்னும் நூற்றுக் கணக்கான, ஆயிரக் கணக்கான மாவீரர்கள் நம் தமிழகத்தில் இருந்து பங்கேற்று இந்திய விடுதலையில் வெற்றி கண்டுள்ளனர். ஆனால், அன்று ஆங்கினேயனால் அடக்கப்பட்டு வெற்றி கண்ட நாம், இன்று...?. மீண்டும் ஓர் புரட்சி செய்வோம். மக்களாட்சிக்கான சுதந்திரத்தை மீட்டெடுப்போம்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more