அனைவருமே அசைவ பிரியர்கள் ஆக தான் இருக்க வேண்டும் என்று அர்த்தம் இல்லை. அசைவ பிரியர்களாக இருந்தாலும் கூட என்ன தான் மட்டன், சிக்கன் மற்றும் பிரியாணி என சாப்பிட்டாலும், நம் நாட்டு சாம்பார், வடை, பாயசத்துடன் அனைத்து அசைவ உணவுகளும் சற்று தள்ளி தான் இருக்க வேண்டும். குறிப்பாக ரயில் பயணங்களில் நாம் உணவுகளின் தேவையை நன்கு அறிந்திருப்போம். பயண நேரங்களில் பொதுவாக அசைவம் சாப்பிடுவதை பெரும்பாலானோர் விரும்ப மாட்டார்கள்.
இங்கு, அப்படித்தான் இந்தியாவில் ஒரு சுவாரஸ்யமான விஷயம் அரங்கேறி இருக்கிறது. வேகன் மற்றும் சைவ உணவு சாப்பிடுவர்களைக் கருத்தில் கொண்டு இந்த டெல்லி கத்ரா வந்தே பாரத் எக்ஸ்பிரஸில் பயணிகளுக்கு சைவ உணவுகள் மட்டும் தான் வழங்கப்படுமாம்.

சாத்விக் சான்றிதழ் பெற்ற முதல் ரயில்
நாட்டிலேயே முதன்முறையாக இந்த ரயிலுக்கு தான் சாத்விக் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
என்.ஜி.ஒ சாத்விக் கவுன்சில் ஆஃப் இந்தியா உடனான ஒப்பந்தத்தின் மூலம், புனித இடங்களுக்குப் பயணிக்கும் சில ரயில்களுக்கு இந்த அங்கீகாரத்தைத் தொடர இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் விருப்பம் தெரிவித்துள்ளது.
அதன்படி ஜம்மு காஷ்மீரின் கத்ராவில் உள்ள ஸ்ரீ மாதா வைஷ்ணவ தேவி கோவிலுக்கு செல்லும் இந்த ரயிலுக்கு சாத்விக் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. கத்ரா ரயில் தான் சாத்விக் அங்கீகாரம் பெற்ற முதல் ரயில் ஆகும். இந்திய சாத்விக் கவுன்சில் ஆய்வாளர் ஒருவர் கூறுகையில், வந்தே பாரத் முதல் வாரணாசி வரை 18 ரயில்களில் இதைப் பின்பற்றத் திட்டமிடப்பட்டுள்ளது.

பலகட்ட சோதனைகளுக்கு பின்னர் வழங்கப்பட்ட அங்கீகாரம்
சாத்விக் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் நிறுவனர் அபிஷேக் பிஸ்வாஸ், வந்தே பாரத் ரயிலுக்கு சாத்விக் சான்றிதழை வழங்குவதற்கு முன்பு பல நடைமுறைகளை முடிக்க வேண்டியிருந்தது என்று கூறுகிறார்.
இதில், சமையல் நுட்பம், சமையலறை, பரிமாறும் மற்றும் சேமித்து வைக்கும் பொருட்கள், அவற்றை வைக்கும் முறை என அனைத்தும் மதிப்பீடு செய்யப்பட்டது. முழு செயல்முறையையும் முடித்த பின்னரே சான்றிதழ் வழங்கப்பட்டது என அவர் தெரிவித்தார்.

சைவ பயணிகள் நிம்மதி பெருமூச்சு
டெல்லி மற்றும் கத்ரா இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸில் பயணிகள் முற்றிலும் சைவ சூழலில் இணைக்கப்படுவார்கள், பயணிகளுக்கு வழங்கப்படும் உணவு வகைகள் மட்டுமின்றி அனைத்திலும் தூய்மை பாதுகாக்கப்படும்.
பரிமாறுபவர்கள் கூட அசைவ உணவைக் கையாண்டிருக்க மாட்டார்கள், அவர்கள் தயாரிக்கும் சமையலறை சைவ உணவுகளைத் தவிர வேறு எதையும் தயாரிக்காது. துப்புரவு முகவர்கள், சோப்புகள் மற்றும் பிற ஒத்த தயாரிப்புகளும் நடுநிலை பொருட்களா க இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயிலின் உள்ளே அசைவம் சாப்பிட அனுமதி இல்லை
இது முற்றிலும் சைவ மற்றும் வேகன் பயணிகளுக்கான ரயில். ஆகவே நீங்கள் ஒரு அசைவ பிரியராக இருந்து, இந்த ரயிலில் பயணம் செய்யும் போது வெளியில் ரயில் நிலையங்களில் இருந்து அசைவ உணவுகளை வாங்கி சுவைக்க அனுமதி இல்லை.
நீங்கள் டெல்லி-கத்ரா வந்தே பாரத் எக்ஸ்பிரஸில் பயணம் செய்ய திட்டமிட்டால், இனிமேல் அசைவ உணவை எடுத்துச் செல்லவோ அல்லது உட்கொள்ளவோ முடியாது என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இதன் மூலம் டெல்லி-கத்ரா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சாத்விக் சான்றிதழுடன் பயணிகளுக்கு முற்றிலும் சைவ சூழலை வழங்கும் முதல் இந்திய இரயில்வே இரயில் ஆகும்.



Click it and Unblock the Notifications



