» »ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே கட்டப்பட்ட பிரம்மாண்ட இந்திய கோயில்கள் இவை

ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே கட்டப்பட்ட பிரம்மாண்ட இந்திய கோயில்கள் இவை

Posted By: Udhaya

நூறு ஆண்டுகள் நிலைத்து நிற்கும் கட்டிடங்களே அரிதான காலத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் நிலைத்து அப்படியே கம்பீரமாக நிற்கும் பிரம்மாண்டமான கோயில்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

பாதாமி குகைக்கோயில்

பாதாமி குகைக்கோயில்

ஆதிச்சாளுக்கிய வம்சம் என்று அறியப்படும் ராஜவம்சத்துக்கு இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக இந்த பாதாமி (தலைநகரமாக திகழ்ந்துள்ளது.

6 ம் நூற்றாண்டிலிருந்து 8 ம் நூற்றாண்டு வரை பெரும்பாலான (இன்றைய) ஆந்திர கர்நாடகப் பகுதிகளில் பரந்து விரிந்திருந்தது சாளுக்கிய சாம்ராஜ்யம்.

இரண்டாம் புலிகேசி மன்னரின் ஆட்சியின்போது சாளுக்கிய சாம்ராஜ்யம் உச்சத்திலிருந்தது. ஆனால் அந்த உச்சம் அவருடன் முடிந்துபோனது. பாதாமி என்ற வாதாபி நகரின் புகழும் அவருடன் மங்கிப்போனது.

Anirudh Bhat

பத்ரிநாத் கோயில்

பத்ரிநாத் கோயில்

பத்ரிநாத் கோயில் அல்லது பத்ரிநாராயணன் கோயில் என்பது விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில் ஆகும்.

இது உத்தரகண்ட் மாநிலத்தில் அமைந்துள்ளது. இது 108 திவ்யதேசங்களுள் ஒன்றாக கருதப்படுகிறது.

Raji.srinivas

லிங்கராஜா கோயில்

லிங்கராஜா கோயில்


லிங்கராஜர் கோயில், புவனேஸ்வர், இந்திய மாநிலமான ஒரிசாவின் தலைநகரமான புவனேஸ்வரில் அமைந்துள்ளது. கோயில் நகரம் என அழைக்கப்படும் புவனேஸ்வரில் உள்ள மிகப் பழைய கோயில்களுள் ஒன்றான இக் கோயில் இந்துக் கடவுளான சிவனுக்காக அமைக்கப்பட்டது. இது இந்துக்களின் புனித யாத்திரைத் தலமும் ஆகும்.

G-u-t

விருப்பக்ஷா கோயில்

விருப்பக்ஷா கோயில்

சிவபெருமானுக்கு அவரது துணைவியார் பம்பா தேவிக்கும் அர்ப்பணிக்கப்பட்ட கோயில் இந்த விருபாக்‌ஷா ஆலயமாகும். துங்கபத்திரை ஆற்றின் கரையில் ஹேமகுதா மலை அடிவாரத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது.

SOMA PAUL DAS

துவாரக்காதீஷ் கோயில்

துவாரக்காதீஷ் கோயில்

துவாரகா நகரத்தின் பிரதான கோயிலான இந்த துவாரகதீஷ் கோயில் ஜகத் மந்திர் (உலக கோயில்) என்றும் சிறப்புப்பெயரை பெற்றுள்ளது. 2500 வருடங்களுக்கு முன்னர் இந்த கோயிலின் ஆதி அமைப்பு ஷீ கிருஷ்ணரின் கொள்ளுப்பேரனான வஜ்ரநபி என்பவரால் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது.

Scalebelow

ஸ்ரீரங்கநாத சுவாமி கோயில்

ஸ்ரீரங்கநாத சுவாமி கோயில்

ஸ்ரீரங்கத்தில் உள்ள ஸ்ரீ ரங்கநாதஸ்வாமி கோயில், "ரங்கநாதஸ்வாமி" என்றழைக்கப்படும் மஹா விஷ்ணுவுக்காக எழுப்பட்ட ஒரு இந்துக் கோயிலாகும். இங்கு மஹா விஷ்ணு, சாய்ந்து பள்ளி கொண்ட நிலையில் காணப்படுகிறார்.

Ssriram mt

 மீனாட்சியம்மன் கோயில்

மீனாட்சியம்மன் கோயில்


சுந்தரேஸ்வரர் என்ற பெயரில் குடிகொண்டுள்ள சிவபெருமானுக்கான இந்த கோயிலானது பெண் சக்தியை முன்னிறுத்தும்விதமாக அவரது மனைவி மீனாட்சியின் பெயரிலேயே அறியப்படுவது ஒரு சிறப்பம்சமாகும்.
மீனாட்சியை வணங்கியபின் சுந்தரேஸ்வரரை வணங்குவது இக்கோயிலில் பின்பற்றப்படும் ஐதீக மரபாகும். மதுரையில் அவதரித்திருந்த மீனாட்சியை மணப்பதற்காக சிவபெருமான் மதுரைக்கு விஜயம் செய்ததாக புராணிக ஐதீகம் கூறுகிறது.

Jorge Royan

முண்டேஸ்வரி கோயில்

முண்டேஸ்வரி கோயில்

முண்டேஷ்வரி மலையில் அமைந்துள்ள முண்டேஷ்வரி கோவில் சிவபெருமான் மற்றும் பார்வதி தேவிக்காக கட்டப்பட்ட கோவிலாகும். இக்கோவிலில் சாஸ்திர சம்பிரதாயங்களை தினசரி தவறாமல் கடைப்பிடிப்பதால் அவைகளை கடைப்பிடிக்கும் பழைமையான கோவிகளில் இதுவும் ஒன்றாக விளங்குகிறது.

Lakshya2509

துர்க்கையம்மன் கோயில்

துர்க்கையம்மன் கோயில்

கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள இந்த துர்க்கையம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இது ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது.

சாளுக்கயன் வம்சத்தினரால் கட்டப்பட்ட கோயில் இது.

Vaasusreeni

லாட் கான் கோயில்

லாட் கான் கோயில்

லாட் கான் கோயில்

Meesanjay

Read more about: travel temple

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்