Search
  • Follow NativePlanet
Share
» »17,000 க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கம் – இருந்தும் கலவரம் ஏன் – மகா கும்பமேளா!

17,000 க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கம் – இருந்தும் கலவரம் ஏன் – மகா கும்பமேளா!

சில தினங்களுக்கு முன்னர் நடந்து முடிந்த மகா கும்பமேளாவில், இந்தியாவின் அனைத்து இடங்களிலிருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். உலகின் மிகப்பெரிய மத நிகழ்வான இந்த மகா கும்பமேளா நடந்து முடிவதற்குள் எத்தனை எத்தனை கலவரங்கள், நெரிசல்கள், பிரச்சினைகள், ரயில் உடைப்பு என்று உங்களுக்கு தெரியுமா? இந்திய ரயில்வே இந்த 2 மாத நிகழ்வுக்கு 17,000 க்கும் மேற்பட்ட ரயில்களை இயக்கினாலும், ஏகப்பட்ட ரயில்கள் உடைக்கப்பட்டுள்ளதை நாமே பார்த்தோம்!

ஏகப்பட்ட ரயில்கள் சேதம்

பக்தி மார்க்கம் என்பது நம்மை நெறிமுறையுடன் வாழ்வதற்கும், ஒழுக்கமான பாதையில் செல்வதற்கும் வழிவகை செய்யும் ஒரு தூண்டுகோலே தவிர நம்மை மிருகத்தனமாக மாற்றுவதற்கு அல்ல. கடந்த மாதம் துவங்கப்பட்ட கும்பமேளா 2025 இல் கலந்து கொள்ள எண்ணற்ற பக்தர்கள் பிரயாக்ராஜ் நோக்கி படையெடுத்து வந்தனர். இந்த கும்பமேளா முடிவதுற்குள் எத்தனை ரயில்கள் சேதமடைந்துள்ளன என்று உங்களுக்கு தெரியுமா?

Train

66 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் வருகை

சமீபத்தில் நடந்து முடிந்த மகா கும்பமேளாவில் பிரயாகராஜுக்கு 66 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் வருகை தந்து வரலாறு படைத்துள்ள நிலையில், 45 நாள் மத விழாவிற்காக 17,000க்கும் மேற்பட்ட ரயில்களை இயக்கி இந்திய ரயில்வே சாதனை படைத்துள்ளது. மகா கும்பமேளாவின் போது பிரயாகராஜில் உள்ள ஒன்பது ரயில் நிலையங்கள் 4.5 கோடிக்கும் அதிகமான பயணிகளின் போக்குவரத்தை நிர்வகித்தன.

கணக்கை மீறி சிறப்பு ரயில்கள் இயக்கம்

2025 மகா கும்பமேளாவிற்கான ஆரம்ப செயல்பாட்டுத் திட்டத்தை ரயில்வே கணிசமாக மீறியது. மொத்தம் 13,500 ரயில்கள் ஆரம்பத்தில் திட்டமிடப்பட்டன, ஆனால் ரயில்வே 17,152 ரயில்களை இயக்குவதன் மூலம் இதை முறியடித்தது, இதில் 7,667 சிறப்பு ரயில்கள் மற்றும் 9,485 வழக்கமான ரயில்கள் அடங்கும். அதுமட்டுமின்றி, பிரயாக்ராஜில் உள்ள ஒன்பது முக்கிய நிலையங்களில் விரிவான உள்கட்டமைப்பு மற்றும் செயல்பாட்டு மேம்பாடுகளை செயல்படுத்தியது, இரண்டாவது நுழைவு புள்ளிகள், 48 நடைமேடைகள் மற்றும் 21 நடைமேடை பாலங்கள் (FoBs) ஆகியவற்றைச் சேர்த்தது.

Train

நெரிசலை தவிர்க்க முயற்சி செய்த ரயில்வே

முக அங்கீகார தொழில்நுட்பம் மற்றும் கூட்டக் கட்டுப்பாட்டுக்கான ட்ரோன் கண்காணிப்பு உள்ளிட்ட 1,186 சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டது. உச்ச நேர நெரிசலை நிர்வகிக்க, 23 நிரந்தர தங்குமிடப் பகுதிகள் நிறுவப்பட்டன, அதே நேரத்தில் 23 மொழிகளில் பன்மொழி அறிவிப்புகள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள் பயணிகள் தொடர்பை மேம்படுத்தின. கூடுதலாக, 151 மொபைல் UTS கவுண்டர்கள் மற்றும் QR- அடிப்படையிலான அமைப்பு உட்பட 554 கவுண்டர்களுடன் டிக்கெட் வசதிகள் விரிவுபடுத்தப்பட்டன.

ரூ.5,000 கோடி முதலீட்டில் ரயில்வே பணிகள்

பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவுக்கான பணிகள் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கின, சுமார் ரூ. 5,000 கோடி முதலீட்டில் 21க்கும் மேற்பட்ட மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகள் கட்டப்பட்டன, கங்கை நதியில் ஒரு பாலம் கட்டப்பட்டது, பிரயாக்ராஜில் உள்ள ஒவ்வொரு நிலையத்திலும் தங்குமிடப் பகுதிகள் உருவாக்கப்பட்டன, ஜுன்சி, சியோகி, பிரயாக்ராஜ் சந்திப்பு மற்றும் பிற நிலையங்களிலும் தங்குமிடப் பகுதிகள் கட்டப்பட்டன.

ஒழுக்கமில்லாமல் நடந்து கொண்ட பக்தர்கள்

இத்தனை முயற்சிகள் ரயில்வே நிர்வாகம் செய்திருந்த போதிலும் சமூக ஊடகங்களில் பரவும் வீடியோக்கள் இந்த நேரத்தில் பயணத்தின் கொடூரமான யதார்த்தத்தைக் காட்டுகின்றன. ரயில்களில் பயணிகள் நினைத்துப் பார்க்க முடியாத சூழ்நிலைகளைத் தாங்கிக் கொள்கிறார்கள். இதுபோன்ற ஒரு வீடியோவில், ஒவ்வொரு அங்குல இடத்திலும் பயணிகள் நிரம்பியிருக்கும் ஒரு நெரிசலான ரயிலைக் காட்டியது, சிலர் தரையில் அமர்ந்திருக்கிறார்கள், மற்றவர்கள் ஒரு பயணிக்காக ஒதுக்கப்பட்ட பெர்த்தை பல பேர் அமர்ந்திருப்பதை காண்பிக்கிறது. சில சந்தர்ப்பங்களில், இடமின்மை காரணமாக மக்கள் மேல் பெர்த்களில் கூட தங்கள் கால்களை பக்கவாட்டு பெர்த்களில் தொங்கவிட்டபடி கொண்டு செல்லப்பட்டனர்.

சூறையாடப்பட்ட ரயில்கள்

காசு கொடுத்து டிக்கெட் பண்ண பயணிகள், ரயிலில் ஏற முடியாமல் தவித்து வருகின்றனர். ஏசி பெட்டிகளில் அமர்ந்து இருக்கும் பயணிகளுக்கும் கூட பாதுகாப்பு இல்லை. ஏசி பெட்டிகளின் ஜன்னலை உடைத்து நொறுக்கி, ஜன்னல் வழியாக கூட்டம் கூட்டமாக ஏறுகின்றனர். இதனால் முன்பதிவு செய்து பயணம் செய்யும் பயணிகள் மிகவும் ஆபத்துக்கு உள்ளாகுகிறார்கள். இவை அனைத்தும் ஏற்படுவதற்கு காரணம் கும்பமேளாவில் கலந்து கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் மட்டும் தான்.

இப்படி மிருகத்தனமாக மக்களுக்கும், பொது உடமைக்கும் சேதம் விளைவித்து நெறி இல்லாமல் பயணம் செய்வதன் பெயர் தான் பக்தியா?

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+