Search
  • Follow NativePlanet
Share
» »பார்க்க வேண்டிய ரயில் நிலையங்கள்

பார்க்க வேண்டிய ரயில் நிலையங்கள்

By Staff

ஆங்கிலேயர்கள் நமக்குத் தந்தவற்றில் மிக முக்கியமானது ரயில்கள். தேசத்தின் உயிர்நாடி எனப்படும் இந்திய ரயில்கள் தினமும் சுமார் 21 லட்சம் பேர்களைத் தாங்கிச் செல்கிறது. இந்தியா முழுவதும் 7000 ரயில் நிலையங்கள் இருக்கின்றன. ரயில் நிலையங்கள் வெறும் இடங்கள் அல்ல, அவை, பல பேர்களின் நினைவுகளை புதைத்து வைத்திருக்கும், வரலாற்றுச் சிறப்பை ஒளித்து வைத்திருக்கும் நினைவுச் சின்னங்கள்.

பேருந்து நிலையத்தில், 10 நிமிடம் ஒரு பேருந்து தாமதமாய் வந்தாலே பொறுத்துக் கொள்ள முடியாத நாம், ரயில் நிலையத்தில் மட்டும் அத்தனை சீக்கிரம் பொறுமை இழப்பதில்லை. அதிலும், சிறு நகரங்களில், அதிகம் ஆள் நடமாட்டமில்லாத ரயில் நிலையங்கள் அழகானவை, விசித்திரமானவை. பெரும்பாலும் ஊருக்கு வெளியே இருக்கும் இது போன்ற ரயில் நிலையங்களில், சில ரயில்கள் மட்டும் நிற்கும். மிச்ச நேரங்களில், சோம்பலுடன் ஒரு நாயும், பேரமைதியும், எப்பாவது தென்படும் ஸ்டேஷன் மாஸ்டர் ஆகியோர் மட்டுமே கொண்ட இடங்கள். இப்படி ஒவ்வொரு ரயில் நிலையமும் ஒரு தனித்தன்மை கொண்டிருக்கும்போது நாமும் இந்தியாவின் சில அழகான,பரபரப்பான‌ ரயில் நிலையங்களைப் பார்க்கலாம்.

சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம்

cst

Photo Courtesy : Aaditya Ganapathy

மும்பையில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க ரயில் நிலையமாகும். இந்த ரயில்நிலையம், பிரெட்ரிக் வில்லியம் ஸ்டீவென்ஸ் என்ற ஆங்கில பொறியாளரால், மொகாலய மற்றும் ஐரோப்பாவின் கோதிக் கட்டிடக் கலை என இரண்டின் பாதிப்பில் 1888'ஆம் ஆண்டில் கட்டப்பட்ட ரயில் நிலையம். நாட்டின் மிக பரபரப்பான ரயில் நிலையங்களில் ஒன்றான இது யுனஸ்கோ உலக பாரம்பரிய இடங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. புறநகர் மற்றும் வெளியூர் செல்லும் ரயில்கள் என இரண்டு பிரிவாய் இருக்கும் இந்த ரயில் நிலையம் பகலில்கூட மஞ்சள் கொப்பளிக்கும் வெளிச்சத்தோடு மின்னக்கூடியது.

கூம் ரயில் நிலையம்

ghum

Photo Courtesy : Tirthankar

இந்தியாவின் மிக உயரமான ரயில் நிலையம். டார்ஜீலிங் அருகே இருக்கும் கூம் என்ற கிராமத்தில் இருக்கிறது. இந்தியாவின் தூய்மையான ரயில் நிலையங்களில் இது முக்கியமானது. டார்ஜீலிங் செல்வோர் இந்த ரயில் நிலையத்திற்கு மறக்காமல் போய் வாருங்கள்.

வாஷி ரயில் நிலையம்

vashi

Photo Courtesy : Sthitaprajna Jena

நவி மும்பையின் முக்கிய ரயில் நிலையமான இது, ஒரு ஐடி அலுவலகத்தின் தோற்றத்தைக் கொண்டது. சர்வதேச இன்ஃபோ டெக் பூங்காவினுள் இருக்கும் வாஷி ரயில் நிலையம் ISO 9002 தரச்சான்றிதழ் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

விஜயவாடா ரயில் நிலையம்

vijayawada

Photo Courtesy : Myvijayawada

ஆந்திரம் பிரிந்த பிறகு விஜயவாடாவின் முக்கியத்துவம் பல மடங்கு உயர்கிறது. மேலும், மும்பை சென்ட்ரலக்க‌டுத்து மிக பிஸியான ரயில் நிலையம் இது. பார்ப்பதற்கு ஒரு அரசாங்க கட்டிடம் போல் இருக்கும் இந்த ரயில் நிலையம் இந்தியாவின் சுத்தமான ரயில் நிலையங்களில் ஒன்று.

ஹவ்ரா ரயில் நிலையம்

howrah

Photo Courtesy : Lovedimpy

கொல்கத்தாவின் ஹூக்ளி நதிக்கரையருகே இருக்கும் இந்த ரயில் நிலையம்தான் நாட்டின் மிகப் பழமையான ரயில் நிலையம்; 1854'இல் திறக்கப்பட்டது. மேலும், இந்தியாவின் மிகப்பெரிய ரயில் நிலையமும்கூட - 23 நடைமேடைகளைக் கொண்டது.

கட்டக் ரயில் நிலையம்

cuttack

Photo Courtesy : Aruni Nayak

ஒரிசாவின் கட்டக் நகரத்தில் இருக்கும் இந்த ரயில் நிலையம் முதன் முதலாக பார்ப்பவர் எவருக்கும் ஒரு பழங்கால கோட்டைக்குச் செல்வது போல் இருக்கும். நாட்டின் நூறு முக்கிய ரயில் நிலையங்களில் இது தனித்துவமானது.

Read more about: railway stations india trains
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X