Search
  • Follow NativePlanet
Share
» »கல்யாணத்துக்கு அதிகமா செலவு பண்றதுக்கு பதிலா இதெல்லாம் செய்யுங்க...

கல்யாணத்துக்கு அதிகமா செலவு பண்றதுக்கு பதிலா இதெல்லாம் செய்யுங்க...

23-24 வயது வரை தெரியாத யாருடனும் பேசாதே என்று சொல்லிவிட்டு பின் யாரென்றே தெரியாத ஒருவருடன் குடும்பம் நடத்தி குழந்தை பெற்றுக்கொள் என்று சொல்லும் நம் கல்யாண முறை எவ்வளவு அபத்தமோ அதே போல கல்யாணத்துக்கு வேண்டி நாம் செய்யும் செலவுகளும் அபத்தம் தான். வாழ்நாள் சேமிப்பையே கரைப்பதோடு மட்டுமில்லாமல் வட்டிக்கு கடன் வாங்கியேனும் பிரம்மாண்டமாக கல்யாணத்தை நடத்துகின்றனர்.

இப்படி வாழ்க்கையை துவங்குவதற்கு முன்பே இருக்கும் பணத்தையெல்லாம் கல்யாண செலவுகளில் வீணாக்குவதற்கு பதிலாக வாழ்கையில் என்றென்றைக்கும் மறக்க முடியாத அனுபவங்களை தரும் விஷயங்களுக்காக செலவிடலாம். அப்படிப்பட்ட அற்புதமான விஷயங்கள் என்னென்ன என்பதை இங்கே அறிந்துகொள்வோம் வாருங்கள்.

ராஜா - ராணி :

ராஜா - ராணி :

பொதுவாக சுற்றுலா சென்றால் ஒரு ஹோட்டல் ஒன்றில் தங்குவது இயல்பான ஒன்று தான் ஆனால் அந்த ஹோட்டலே சுற்றுலா அம்சமாக இருப்பது ராஜஸ்தானில் இருக்கும் உதய்பூர் நகரில் தான். விவரிக்க முடியாத அழகுடைய இந்த தாஜ் லேக் பேலஸ் ஹோட்டலில் தங்குவதற்காகவே உலகமெங்கும் இருந்து சுற்றுலாப்பயணிகள் வருகின்றனர்.

Photo: Tomasz Wagner

ராஜா - ராணி :

ராஜா - ராணி :

பிசோலா என்ற ஏரியின் நடுவே உள்ள சிறு தீவின் மேல் அமைந்திருக்கிறது தாஜ் லேக் பேலஸ் எனப்படும் ஜக் நிவாஸ் அரண்மனை. 17ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த அரண்மனையானது ஒரு கட்டத்தில் சிலதலமடையும் நிலையில் இருந்திருக்கிறது.

Photo: FLickr

ராஜா - ராணி :

ராஜா - ராணி :

பின்னர் 1971ஆம் ஆண்டு தாஜ் குழுமம் இந்த அரண்மனையை புதுப்பித்து சொகுசு விடுதியாக மாற்றி பராமரித்து வருகிறது. 83 அறைகள் கொண்ட இந்த விடுதியில் உள்ள பணியாளர்கள் அனைவரும் அரண்மனை கட்டப்பட்டதில் இருந்தே அங்கு பணியாற்றுபவர்களின் சந்ததிகள் என்பது குறிப்பிடத்தக்க ஒரு அம்சம் ஆகும்.

ராஜா - ராணி :

ராஜா - ராணி :

சுற்றிலும் நீர் சூழ்ந்திருக்கும் இந்த விடுதியில் மாலை நேரத்தில் சூரியன் அஸ்தமிக்கும் காட்சி பார்க்க கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். அந்நேரத்தில் சூரியனின் கதிர்கள் பிசோலா ஏரியை தங்க குளம் போல தோன்றவைக்கும் நேரத்தில் உங்கள் அன்பு மனைவியுடன் ஏரியின் நடுவே படகில் டின்னர் சாப்பிட்டபடியே வார்த்தைகளால் விவரிக்க முடியாத காதல் ததும்பும் கனத்தை பகிர்ந்துகொள்ளலாம்.

ராஜா - ராணி :

ராஜா - ராணி :

இங்கே இரண்டு இரவுகள் தங்க ஐம்பதாயிரம் வரை செலவாகும் என்றாலும் ஆசியாவிலேயே மிகச்சிறந்த ரோமேண்டிக் ஹோட்டலாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் இந்த லேக் பேலஸில் வாழ்கையில் ஒருமுறையேனும் சில இரவுகளை ராஜா - ராணி போல வாழ்ந்திடுங்கள்.

ராஜா - ராணி :

ராஜா - ராணி :

லேக் பேலஸ் மற்றும் உதய்பூர் ஆகிய இடங்களை பற்றிய தகவல்களை தமிழ் பயண வழிகாட்டியில் தெரிந்துகொள்ளுங்கள்.

மணாலி - லெஹ் :

மணாலி - லெஹ் :

ரோமேண்டிக்காக தேனிலவு கொண்டாடுவதை தாண்டி வேறு ஏதாவது வித்தியாசமாக செய்ய நினைப்பவர்கள் திருமணம் முடித்த கையேடு ஹிமாச்சல பிரதேச மாநிலம் மணாலியில் இருந்து காஷ்மீரில் இருக்கும் லெஹ் வரை 479 கி.மீ பயணம் போகலாம். வழியெங்கும் இயற்கையின் பேரழகை ரசித்து மகிழலாம்.

Photo: Flickr

மணாலி - லெஹ் :

மணாலி - லெஹ் :

இந்த பயணத்தை நிறைவு செய்ய கிட்டத்தட்ட 3-5 நாட்கள் ஆகும். வருடம் முழுக்கவே கடுமையான பனிப்பொழிவு நிலவுவதால் கோடை காலமான மே - ஜூன் வரையிலான ஒன்றரை மாதம் மட்டுமே இந்த சாலை மக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்படுகிறது.

மணாலி - லெஹ் :

மணாலி - லெஹ் :

இந்த பயணத்தின் போது ஜிச்பா, சர்சு, கெய்லொங்க் போன்ற இடங்களில் கேம்ப் அமைத்து தங்கலாம். பொதுவாக இந்த பயணத்தில் ஈடுபடும் சுற்றுலாப்பயணிகள் ரோஹ்டங் கால்வை வரை சென்றுவிட்டு அங்கிருந்து திரும்பி விடுகின்றனர். காரணம் ரோஹ்டங் கால்வாய்க்கு பிறகு சாலைகள் மிகவும் கடினமானவையாக இருப்பது தான்.

மணாலி - லெஹ் :

மணாலி - லெஹ் :

இருப்பினும் ரோஹ்டங் கால்வாயை கடந்து சென்றால் இமய மலையின் பேரழகை கண்டு நாம் விக்கித்து போவது உறுதி. பனிபடர்ந்த மலைகள், சதுப்பு நிலங்கள், பாய்ந்தோடும் ஆறுகள் என இயற்கை அன்னை இங்கே நிகழ்த்தியிருக்கும் மாயாஜாலங்களை அன்பு வாழ்க்கைத் துணையுடன் சாகசம் நிறைந்த இந்த பயணத்தில் ஈடுபடுங்கள்.

மணாலி - லெஹ் :

மணாலி - லெஹ் :

மணாலி மற்றும் லெஹ் ஆகிய இடங்களை பற்றி உங்கள் பயணத்துக்கு தேவையான தகவல்களை தமிழ் பயண வழிகாட்டியில் அறிந்துகொள்ளுங்கள்.

சொர்கத்தீவில் தனித்திருங்கள் :

சொர்கத்தீவில் தனித்திருங்கள் :

வெளிநாடு சென்று தேனிலவு கொண்டாட முடியாதவர்கள் வெளிநாடுகளில் இருப்பதை விடவும் சிறப்பான சுற்றுலாத்தளமான அந்தமானில் இருக்கும் ஹெவ்லொக் தீவுக்கு செல்லுங்கள். இந்தியாவில் தான் இந்த இடம் இருக்கிறதா என்று நம்மை நிச்சயம் ஆச்சரியப்படுத்தும் இந்த இடம்.

சொர்கத்தீவில் தனித்திருங்கள் :

சொர்கத்தீவில் தனித்திருங்கள் :

இங்குள்ள கடற்கரைகள் அவ்வளவு அழகு. சற்றும் மாசுபடாத வெள்ளை மணல் கடற்கரைகள் மற்றும் அலைகள் துள்ளிவிளையாடும் நீல நிறக்கடலும் வேறு ஏதோ உலகத்தில் இருப்பது போல நம்மை உணரச்செய்யும்.

சொர்கத்தீவில் தனித்திருங்கள் :

சொர்கத்தீவில் தனித்திருங்கள் :

குறிப்பாக இங்குள்ள நொ.7 கடற்கரை எனப்படும் ராதா நகர் கடற்க்கரை இந்த ஹெவ்லொக் தீவில் உள்ள மிகச்சிறப்பான இடமாகும். வேறெந்த கடற்கரையிலும் இல்லாத அம்சமாக இங்கே யானை மீது அமர்ந்து சவாரி செய்யலாம்.

சொர்கத்தீவில் தனித்திருங்கள் :

சொர்கத்தீவில் தனித்திருங்கள் :

ஆள் ஆரவாரமின்றி தனிமையில் மாசில்லாத இயற்கையின் மடியில் தவழ அந்தமான் தீவில் இருக்கும் இந்த ஹெவ்லொக் தீவு ஆகச்சிறந்த இடமாகும். இங்கே இரண்டே தாங்கும் விடுதிகள் தான் இருப்பதால் முறையாக திட்டமிட்டு அறைகளை முன்பதிவு செய்துவிட்டு வருவது நல்லது.

சொர்கத்தீவில் தனித்திருங்கள் :

சொர்கத்தீவில் தனித்திருங்கள் :

அந்தமான் தீவில் இன்னும் பிரபலமாகாத ஏராளமான சுற்றுலாத்தலங்கள் இருக்கின்றன. அவற்றிப்பற்றிய தகவல்களையும் அங்கிருக்கும் ஹோட்டல்கள் பற்றிய தகவல்களையும் தமிழ் பயண வழிகாட்டியில் அறிந்துகொள்ளுங்கள்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X