Search
  • Follow NativePlanet
Share
» »சென்னை, தமிழ்நாடு பற்றி தெரியாத தகவல்கள்!

சென்னை, தமிழ்நாடு பற்றி தெரியாத தகவல்கள்!

By Staff

சென்னை மற்ற இந்திய நகரங்களைப் போல் கடந்த 100-200 ஆண்டுகளில் வளர்ச்சியடைந்தது அல்ல. சென்னைக்கு வயதே 375 மேல் ஆகிவிட்டது. சென்னை, தமிழ் நாடு , தமிழ் பற்றி சில சுவாரஸ்யமான தகவல்களைப் பார்க்கலாம்.

Engg

Photo Courtesy : Srinath1905

இந்தியாவிலேயே வருடந்தோறும் அதிக எஞ்சினியர்களை உருவாக்கும் மாநிலம் தமிழ் நாடு. காரணம், தமிழ்நாடுதான் அதிக அளவிலான பொறியியல் கல்லூரிகளை கொண்டிருக்கிறது. மொத்தம் 552 பொறியியல் கல்லூரிகள் இருக்கிறது தமிழ்நாட்டில்.

Tirukural

ப்ரான்ஸ் ரயிலில் திருக்குறள் எழுதபட்டிருப்பதைப் பாருங்கள்.

Photo Courtesy : S Kalyanasundar

இந்தியாவில் வேறு எந்த மொழிக்கும் , மாநிலத்திற்கும் இல்லாத பெருமை நமக்குண்டு; அதுதான் திருக்குறள். பைபிள், குரானுக்குப் பிறகு உலகில் அதிகம் மொழிபெயர்க்கப்பட்ட நூல் திருக்குறள்

உலகில் பேசப்படும் மிகப் பழமையான மொழிகளில், தமிழும் ஒன்று. ஆங்கிலம், சீன மொழி, ஹிந்தி போன்ற‌ அதிகம் பேரால் பேசப்படும் மொழிகள் எதுவும் இந்த பட்டியலில் கிடையாது. தமிழ் மொழியை உலகம் முழுதும் 7 கோடிக்கும் அதிகமானோர் பேசுகின்றனர். தமிழ் நாடு தவிர, இலங்கை, சிங்கப்பூரில் ஆட்சி மொழிகளில் ஒன்று.

இந்தியாவின் மிகப் பழமையான ரயில் நிலையம் ராயபுரம் ரயில்வே நிலையம்.(ஹவ்ரா ரயில் நிலையமும் பழமையானது என்று சொல்கிறார்கள்) ஆனால், ப்ரிட்டிஷ் கால கட்டுமானத்தை இன்னும் மாறாமல் வைத்திருப்பது ராயபுரம் ரயில்வே நிலையம் மட்டும்தான். பம்பாய், தானே ரயில் நிலையங்கள் இதைவிட பழமை என்றாலும் அவைகளின் கட்டிடங்கள் இடிக்கப்பட்டு சீரமைக்கப் பட்டுவிட்டன.

Lonely Planet என்ற வலைதளம் கட்டாயம் பார்க்கவேண்டிய நகரங்கள் பட்டியலில் சென்னையை ஒரு முக்கிய நகரமாக குறிப்பிட்டுள்ளது. இந்தியாவில் வேறு எந்த நகரத்திற்கும் கிடைக்காத பெருமை.

Chicken65

Photo Courtesy : Amiyashrivastava

National Geographic எடுத்த உணவு சர்வேயில் சென்னையின் உணவான Chicken-65 தான் உலகின் மிகச் சுவையான உணவுகளில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்தின் உணவும் இதில் வரவில்லை.

Kollukumalai

Photo Courtesy: Amudha Hariharan

தேனி மாவட்டத்தில் உள்ள‌ கொழுக்குமலை தேயிலைத் தோட்டங்கள்தான் உலகில், அதிக உயரத்தில் இருக்கும் தேயிலைத் தோட்டங்கள். இதன் காரணமாக‌, இங்கு விளையும் தேயிலைகள் சிறந்த தேனிரைத் தருகின்றன என்று பலர் சொல்கிறார்கள்.

Chennai

Photo Courtesy : PlaneMad

உங்களுக்குத் தெரியுமா சென்னை மாநகராட்சிதான் இந்தியாவின் மிகப் பழமையான மாநகராட்சி. கி.பி.1688'இலேயே சென்னை மாநகராட்சி Madras Corporation என்ற பேரில் அமைக்கப்பட்டது.

தமிழ் நாடு மொத்த உள் நாட்டு உற்பத்தி என்று சொல்லப்படுகின்ற GDP'யில் இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. எண்ணற்ற தொழிற்சாலைகள், மென்பொருள் நிறுவனங்கள் இதை சாத்தியமாக்கியிருக்கின்றன.

சென்னையை, இந்தியாவின் டெட்ராய்ட் என்று அழைக்கிறார்கள். டெட்ராய்ட் எப்படி அமெரிக்காவின் ஆட்டோமொபைல் நகரமோ சென்னையிலும் உலகின் முன்னணி மோட்டார் நிறுவன்ங்களான BMW, Ford, Robert Bosch, Renault-Nissan, Caterpillar, Hyundai, Mitsubishi Motors ஆகியவற்றின் தொழிற்சாலைகள் இருக்கின்றன.

Read more about: chennai tamilnadu tamil thirukural
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X