Search
  • Follow NativePlanet
Share
» »இமாச்சல பிரதேசத்தில் இந்த டிரெக்கிங் பயணம் மிகவும் சுராவசியமா இருக்குமாமே!

இமாச்சல பிரதேசத்தில் இந்த டிரெக்கிங் பயணம் மிகவும் சுராவசியமா இருக்குமாமே!

இமாச்சல பிரதேசத்தில் இந்த டிரெக்கிங் பயணம் மிகவும் சுராவசியமா இருக்குமாமே!

By Udhaya

இந்தியாவின் வடமாநிலமான ஹிமாச்சல பிரதேசம் உலகம் முழுவதிமிருந்து லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை ஈர்த்துக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக வேகமாக வளர்ந்து வரும் ஹிமாச்சல பிரதேச சுற்றுலாத் துறை நாட்டிற்கு பெரிய அளவில் வருவாய் ஈட்டித் தருகிறது. அதோடு பயணிகளின் கூட்டம் பெருகப் பெருகப் அதற்கு ஏற்றார் போல ஹிமாச்சலத்தில் ஹோட்டல்களின் எண்ணிகையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. சுற்றுலா மட்டும் இல்லாமல் இங்கு நிறைய மலைப் பகுதிகள் இருப்பதால், டிரெக்கிங் எனப்படும் மலையேற்றமும் அதனுடன் கூடிய சுற்றுலா, வியாபாரங்களும் செழித்து விளங்குகிறது. வாருங்கள் இமாச்சல பிரதேசத்தில் டிரெக்கிங் போகலாம்.

நெவ்கல் காட்

நெவ்கல் காட்

நகர மையத்திலிருந்து 2 கி.மீ தூரத்தில் உள்ள இந்த நெவ்கல் காட் எனும் இடம் பாலம்பூர் பகுதியின் முக்கியமான சுற்றுலா ஸ்தலங்களில் ஒன்றாக பிரசித்தி பெற்றுள்ளது. புண்ட்லா சாஸம் என்ற பெயரிலும் அழைக்கப்படும் இந்த ஸ்தலத்தின் விசேஷம் இங்கு அமைந்துள்ள 300 மீட்டர் அகலமுடைய ஒரு நீரோடையாகும். சுற்றிலுமுள்ள தௌலாதார் மலைகளின் எழிற்காட்சிகளை ரசித்தபடி பிக்னிக் பொழுதுபோக்குகளில் ஈடுபடுவதற்கு இந்த நெவ்கல் காட் ஸ்தலம் மிக ஏற்றதாக உள்ளது. மழைக்காலத்தின் போது இன்னும் ரம்மியமாக பசுமையான சூழலுடன் இப்பகுதி காட்சியளிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே ஏராளமான பயணிகள் மழைக்காலத்தில் இந்த நெவ்கல் காட் பிக்னிக் ஸ்தலத்திற்கு விஜயம் செய்கின்றனர்.

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

சாமுண்டா தேவி கோவில்

பாலம்பூரின் மேற்கில் 10 கிமீ தொலைவிலும் மற்றும் தர்மசாலாவில் இருந்து 15 கிமீ தொலைவிலும் மலைகள் மற்றும் வனத்தின் வனப்புகளினூடே பானெர் ஆற்றின் கரையில் அமைந்திருக்கும் சாமுண்டா தேவி கோவில் சுமார் 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த இடமாகும். இந்த கோவில் 51 சக்தி பீடங்களில் ஒன்றாக இருப்பதால் வழிபாட்டு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இந்த கோவிலில் இந்து கடவுளான துர்கா தேவி, சாமுண்டா தேவி என்ற பெயரில் வீற்றிருக்கிறார். இந்த இடம் மிகவும் அழகுறவும், அமைதியுடனும் இருப்பதால், இங்கு வரும் பக்தர்கள் அமைதியான முறையில் தியானம் செய்யவும், தங்கள் வேண்டுதல்களை கடவுளிடம் முறையிட்டு அருள் பெறவும் ஏற்ற இடமாக உள்ளது. சுற்றுலா பயணிகள் இந்த கோவிலிற்கு உள்ளே உள்ள குளத்தில் புனித நீர் புனித நீர் நிரம்பியுள்ளதாக நம்புகின்றனர். 'சிவபெருமான்' லிங்க வடிவில் காட்சியளிப்பதைப் போன்ற குகை போன்ற வெற்றிடத்தையும் இங்கே காண முடியும். இங்குள்ள ஆண் மற்றும் பெண் கடவுள்களின் ஓவியங்கள் இதன் சுவற்றில் வரையப்பட்டிருப்பதைக் காணலாம். இதன் அருகிலுள்ள மற்றுமொரு பார்வையிடம் பான் கங்கா என்றழைக்கப்படும் ஆயுர்வேத மருத்துவமனை, சமஸ்கிருதக் கல்லூரி மற்றும் நூலகம் ஆகும். இந்த நூலகத்தில் பழங்கால ஓலைச் சுவடிகள், வானவியல் நூலகள், வேதங்கள், புராணங்கள் மற்றும் உபநிஷதங்களை காண முடியும்.

wikipedia.org

 வாட்டர்ஃபால் பாயிண்ட்

வாட்டர்ஃபால் பாயிண்ட்

வாட்டர்ஃபால் பாயிண்ட் என்று அழைக்கப்படும் இந்த நீர்வீழ்ச்சி தளம் ஷோஜாவிலிருந்து 1 கி.மீ தூரத்திலேயே அமைந்துள்ளது. இயற்கையின் வனப்பு நிறைந்த ஒரு சூழலில் இந்த நீர்வீழ்ச்சி காணப்படுகிறது. வனப்பகுதியில் உள்ள ஒரு நடைபாதையின் வழியாக கால்நடையாகவே பயணிகள் இந்த நீர்வீழ்ச்சிப்பகுதிக்கு செல்ல முடியும். உள்ளூர் மக்கள் தங்களது காலை நடைப்பயிற்சியை இப்பாதையில் மேற்கொள்கின்றனர். இயற்கைக்காட்சிகள் நிறைந்துள்ளதால் புகைப்பட கலைஞர்களுக்கும், இயற்கை ரசிகர்களுக்கும் இந்த இடம் மிகவும் பிடித்தமானதாக உள்ளது. நீர்வீழ்ச்சியின் நீர் குளுமையாகவும் இனிப்புடனும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

 அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

தீர்த்தன் பள்ளத்தாக்கு

தீர்த்தன் வேலி எனப்படும் இந்த பள்ளத்தாக்கு பகுதி ஷோஜா நகரத்திற்கு அருகில் உள்ளது. கிரேட் ஹிமாலயன் நேஷனல் பார்க் எனும் காட்டுயிர் சரணாலயத்திற்காக இப்பள்ளத்தாக்குப்பகுதி பிரசித்தி பெற்றுள்ளது. பல்லுயிர்ச்சூழல் நிலவும் இயற்கைப்பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள இப்பிரதேசத்தினை சுற்றுப்புற மாசிலிருந்து பாதுகாப்பதற்கான முயற்சிகள் துவங்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் பயணிகள் ஆற்றில் மீன் பிடிக்கும் பொழுதுபோக்கில் ஈடுபட்டு மகிழலாம்.

 இயற்கை நடை பயணங்கள்

இயற்கை நடை பயணங்கள்

இந்த பகுதியின் உண்மையான அழகை கண்டுகளிக்க விரும்பும் சுற்றுலாப் பயணிகள் இயற்கை நடை பயணங்களை மேற்கொள்வது சரியான பலனை தரும். நடந்து செல்வதே இந்த இடத்தை சுற்றிப்பார்க்க ஏற்ற சிறந்த வழிமுறையாகும். மனம் மகிழ வைக்கும் சுற்றுச்சூழல் இந்த இடத்தின் அழகை மேலும் கூட்டுவதாக இருக்கும்.

 மகசு சிகரம்

மகசு சிகரம்

மகசு சிகரம் குஃப்ரியை ஒட்டி உள்ள பகுதியின் மிக உயரமான இடமாகும். குஃப்ரியிலிருந்து மகசு சிகரத்துக்கு செல்ல மலைப் பாதையில் உள்ள இமயமலை சிடார் காடுகளைக் கடந்து செல்ல வேண்டும். இந்த இடத்திலிருந்து பத்ரிநாத் , கேதர்நாத் மலைத்தொடர்களை சுற்றுலாப்பயணிகள் தெளிவாகக் காணலாம். பனிச்சறுக்கு , பனி மலையேற்றம் போன்ற அனைத்து சாகச விளையாட்டுக்களையும் இந்த இடத்தில் விளையாடி மகிழலாம். இந்த விளையாட்டுக்களை இங்கு உள்ள அனுபவமுள்ள பயிற்சியாளர்களின் உதவியுடன் பாதுகாப்பாக விளையாடலாம். சுற்றுலா பயணிகள் இந்த விளையாட்டுக்களுக்கு தேவையான சாதனங்களை தாங்களே கொண்டும் வரலாம். அல்லது இங்கு வாடகைக்கும் பெற்றும் கொள்ளலாம். இங்கு உள்ள நாக தேவதைக் கோவில் ( நாக் தேவ்தா கோவில்) மனதைக்கவரும் மற்றொரு இடமாகும்.

Read more about: travel trekking india
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X