Search
  • Follow NativePlanet
Share
» »இலவசமாக ஸ்லீப்பர் கிளாஸ் டிக்கெட்டை 3 AC கிளாஸுக்கு அப்கிரேடு செய்திடலாம் – விவரங்கள் இதோ!

இலவசமாக ஸ்லீப்பர் கிளாஸ் டிக்கெட்டை 3 AC கிளாஸுக்கு அப்கிரேடு செய்திடலாம் – விவரங்கள் இதோ!

உங்கள் ஸ்லீப்பர் கிளாஸ் டிக்கெட்டை எந்த கூடுதல் கட்டணமும் இல்லாமல் இலவசமாக தானாக அப்கிரேடு செய்வதற்கு வழி உள்ளது என்று உங்களுக்கு தெரியுமா? எந்த கூடுதல் கட்டணமும் இல்லாமல் ஆரம்பத்தில் நீங்கள் முன்பதிவு செய்ததை விட உயரிய கிளாஸுக்கு உங்கள் டிக்கெட்டை அப்கிரேடு செய்திடலாம். அதாவது ஸ்லீப்பர் வகுப்பு ரயில் டிக்கெட்டை 3AC ஆகவும், 3AC வகுப்பு டிக்கெட்டை 2 AC ஆகவும் மாற்றலாம், அதற்கான அனைத்து விவரங்களும் கீழே!

 IRCTC says that you can upgrade your Sleeper ticket to 3 AC at free of cost

IRCTC அறிமுகப்படுத்திய அசத்தல் அப்கிரேடெஷன்

நீங்கள் எவ்வளவு ஆடம்பர மற்றும் சேவைகளை விரும்புகிறீர்களோ, அவ்வளவு பணம் செலுத்தி டிக்கெட்டை முன்பதிவு செய்ய வேண்டும். ஆனால் இந்திய ரயில்வேயில் ஒரு பைசா கூட செலவு செய்யாமல் உங்களின் ஸ்லீப்பர் கிளாஸ் ரயில் டிக்கெட்டை 3AC ஆக மேம்படுத்தலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? கொஞ்சம் ஆச்சரியமாக இருக்கிறது, இல்லையா? ஆனால் IRCTC யில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும்.

இந்தத் திட்டத்தைப் பற்றித் தெரியாதவர்களுக்கு, IRCTC தனது இணையதளத்தில் அஞ்சல் மற்றும் விரைவு ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் போது, ஆட்டோ கிளாஸ் அப்கிரேடெஷனை தேர்வுசெய்யும் வாய்ப்பை அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.

ஸ்லீப்பர் கிளாஸில் இருந்து 3AC ஆகவும், 3AC யிலிருந்து 2 AC ஆகவும் அப்கிரேடு செய்யலாம்

உங்களின் ஸ்லீப்பர் வகுப்பு ரயில் டிக்கெட்டை 3AC ஆகவும், 3AC வகுப்பில் இருந்து 2 AC ஆகவும் அப்கிரேடு செய்யும் முறையை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. IRCTCஐப் பயன்படுத்துபவர்கள் இந்த அமைப்பைப் பற்றி அறிந்திருக்கலாம். IRCTC தனது சொந்த இணையதளத்தில் மட்டுமே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் போது அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் டிக்கெட் அப்கிரேடு வாய்ப்பை வழங்குகிறது.

வெயிட்டிங் லிஸ்டில் இருக்கும் பயணிகளுக்கு சாதகமான அப்கிரேடெஷன்

ரயிலில் இருக்கும் மற்றும் மீதமுள்ள அனைத்து இருக்கைகளையும் முழுமையாகப் பயன்படுத்துவதே இந்த அமைப்பைத் தொடங்குவதற்கான காரணம். எந்தவொரு கூடுதல் கட்டணமும் இல்லாமல், தங்கள் பயணிகளுக்கு அப்கிரேடு வழங்குவதன் மூலம் காலியாக உள்ள பெர்த்களை நிரப்ப இந்த முறை உண்மையில் ஒரு சிறந்த வழியாகும். இது தவிர, காத்திருப்புப் பட்டியலில் உள்ளவர்கள் தங்களின் உறுதியான டிக்கெட்டுகளைப் பெறுவதற்கான செயல்முறையையும் இது எளிதாக்குகிறது.

டிக்கெட்டை எப்படி அப்கிரேடு செய்வது

அடுத்த மேல் வகுப்பு இருக்கைக்கு தானாக தரம் உயர்த்த விண்ணப்பிக்கும் போது, ஆன்லைனில் உங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் போது ஆட்டோ அப்கிரேடேஷன் தேர்வுப்பெட்டியில் டிக் செய்ய வேண்டும். பயணிகள் முன்பதிவு அமைப்பு (PRS) இந்த முழு அப்கிரேடெஷன் அமைப்பு மற்றும் சார்ட் பிரிப்பரேஷனை செயல்படுத்துகிறது. இது முற்றிலும் PRS இன் கட்டுப்பாட்டில் மட்டுமே உள்ளது மற்றும் ரயில்வேயில் இருந்து வேறு யாரும் இந்த செயல்பாட்டில் தலையிட முடியாது.

இடையூறு இல்லாத அப்கிரேடெஷன்

இந்த சார்ட் பிரிப்பரேஷன் மற்றும் தானாக அப்கிரேடேஷன் செய்யும் முறை உண்மையில் கணினியால் உருவாக்கப்பட்டு, அடுத்த மேல் வகுப்பில் காலியாக உள்ள இடங்களின் அடிப்படையில் செயல்படுகிறது. இந்த அமைப்பு பயணிகளைத் தேர்ந்தெடுத்து, முன்பதிவு அட்டவணையைத் தயாரிக்கும் போது அவர்களின் டிக்கெட்டுகளை முறையாக அப்கிரேடு செய்கிறது. அப்கிரேடு செய்யப்பட்ட டிக்கெட்டுகளை பயணிகள் ரத்து செய்ய விரும்பினால், ஒரிஜினல் டிக்கெட்டின் விலையே அவர்களுக்கு வழங்கப்படும், அப்கிரேடு செய்யப்பட்ட டிக்கெட்டின் விலை வழங்கப்படாது.

அப்கிரேடு செய்யும் போது நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியவை

உயர் வகுப்பில் இருக்கைகள் இருந்தால் மட்டுமே ஒருவர் தங்கள் டிக்கெட்டுகளை உயர் வகுப்பிற்கு மேம்படுத்த முடியும். எந்த ஒரு காலியிடமும் தரம் உயர்த்தப்படுவதைக் காட்டாது. சீசன் இல்லாத காலங்களில் டிக்கெட்டுகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம். நீங்கள் மேம்படுத்த விரும்பினால், உங்கள் பயணத் தேதிக்கு குறைந்தது 20 நாட்களுக்கு முன்னதாகவே உங்கள் டிக்கெட்டை முன்பதிவு செய்ய வேண்டும் என்பது ஒரு முக்கியமான விஷயம். நீங்கள் அடுத்த நிலைக்கு அப்கிரேடு செய்ய விரும்பினால் மட்டுமே இந்த முழு செயல்முறையும் செயல்படும், ஒரே ஒரு மேல் நிலைக்கு மட்டுமே இது பொருந்தும்.

ஆகவே இனி நீங்கள் ரயிலில் பயணிக்கும் போது, 20 நாட்களுக்கு முன்னதாக அப்கிரேடு செய்து உயர் ரக வகுப்பில் இலவசமாக பயணித்திடுங்கள்!

Read more about: ac irctc train travel
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X