Search
  • Follow NativePlanet
Share
» »வேறு ஒருவரின் ரயில் டிக்கெட்டில் கூட இனி நீங்கள் பயணிக்கலாம் – எப்படி? தகவல்கள் உள்ளே!

வேறு ஒருவரின் ரயில் டிக்கெட்டில் கூட இனி நீங்கள் பயணிக்கலாம் – எப்படி? தகவல்கள் உள்ளே!

வேறு ஒருவரின் ரயில் டிக்கெட்டில் பயணம் செய்யலாமா? இது எப்படி சாத்தியம் என்றுதானே யோசிக்கிறீர்கள்! ஆனால் அப்படி செய்யலாம் என்று IRCTC கூறுகிறதே! ஆம்! வேறு ஒருவர் புக் செய்த டிக்கெட்டில் நீங்கள் பயணம் செய்யலாம். ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன் கோரிக்கையை அனுப்பினால் போதும். கோரிக்கை ஏற்கப்பட்டதும், IRCTC டிக்கெட்டில் இருக்கும் நபரின் பெயரை விண்ணப்பித்த நபரின் பெயருக்கு மாற்றி டிக்கெட்டை கன்பார்ம் செய்துவிடும். இதனைப் பற்றிய கூடுதல் விவரங்கள் உள்ளே!

நீண்ட காலமாக இருந்து வரும் வசதி

நீண்ட காலமாக இருந்து வரும் வசதி

ஏதோ ஒரு காரணத்திற்காக உங்களால் அந்த பயணத்தை மேற்கொள்ள முடியவில்லை என்றால், நீங்கள் அந்த டிக்கெட்டை வேறு ஒருவருக்கு மாற்றி கொடுப்பதன் மூலமாக அந்த டிக்கெட் வீணாவதை தடுக்கலாம். இந்த வசதி நீண்ட காலமாக இருந்து வருகிறது, ஆனால் பெரும்பாலான மக்கள் இதைப்பற்றி இன்னும் சரிவர அறியவில்லை என்பதே உண்மை. ஒன்றும் கவலை இல்லை! இப்போது தெரிந்துக் கொள்ளுங்கள்.

குடும்ப உறுப்பினர்களிடேயே மட்டுமே மாற்ற முடியும்

குடும்ப உறுப்பினர்களிடேயே மட்டுமே மாற்ற முடியும்

உங்களிடம் இந்திய ரயில்வேக்கான உறுதி செய்யப்பட்ட டிக்கெட் இருந்தால், சில காரணங்களால் உங்களால் பயணம் செய்ய முடியவில்லை என்றால் நீங்கள் அந்த டிக்கெட்டை தந்தை, தாய், சகோதரி, சகோதரர், மகள், மகன், கணவன் அல்லது மனைவி இவர்களில் எவரேனும் ஒருவருக்கு மாற்றி கொடுக்கலாம். இங்கே கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், இடமாற்றம் என்பது ஒரு குடும்ப உறுப்பினருக்கு மட்டுமே சாத்தியமாகும். நீங்கள் அந்நிய நபர்கள் யாருக்கும் மாற்றி கொடுக்க முடியாது.

24 மணி நேரத்தில் மாறும் டிக்கெட்

24 மணி நேரத்தில் மாறும் டிக்கெட்

இந்தச் சேவையைப் பெற, பயணிகள் ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன் கோரிக்கையை எழுப்ப வேண்டும். கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், ஒரு நபருக்கு ஒரு முறை மட்டுமே டிக்கெட் பரிமாற்றத்தைப் பெற முடியும். நீங்கள் ஏற்கனவே ஒருவருக்கு டிக்கெட்டை மாற்றியிருந்தால், இரண்டாவது முறையாக நீங்கள் சேவையைப் பெற முடியாது.

உங்கள் டிக்கெட்டை மாற்றுவதற்கான படிப்படியான வழிகாட்டி

உங்கள் டிக்கெட்டை மாற்றுவதற்கான படிப்படியான வழிகாட்டி

v உங்களின் உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டின் பிரிண்ட் அவுட்டை எடுத்துக் கொள்ளுங்கள்

v நீங்கள் டிக்கெட்டை மாற்ற விரும்பும் நபரின் ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டையை எடுத்துக் கொள்ளுங்கள்.

v உங்களுக்கு அருகில் உள்ள ரயில் நிலையத்தில் உள்ள முன்பதிவு கவுண்டருக்குச் செல்லவும்.

v பின்னர் டிக்கெட் பரிமாற்றத்திற்கு விண்ணப்பிக்கவும்.

அவ்வளவுதான், சற்று நேரத்தில் உங்களது டிக்கெட் நீங்கள் விண்ணப்பித்த நபரின் பெயருக்கு மாறிவிடும். இனி அவர்கள் எந்த தொந்தரவுமின்றி குறித்த நேரத்தில் பயணிக்கலாம்.

யாரெல்லாம் இந்த வசதியை உபயோகிக்கலாம்.

யாரெல்லாம் இந்த வசதியை உபயோகிக்கலாம்.

அரசு ஊழியராக இருந்தால், ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன் கோரிக்கையை உயர்த்த வேண்டும். ஒரு பண்டிகை, திருமண நிகழ்வு அல்லது ஏதேனும் தனிப்பட்ட பிரச்சனை இருந்தால், அந்த நபர் புறப்படுவதற்கு 48 மணிநேரத்திற்கு முன்னதாக டிக்கெட்டை உயர்த்த வேண்டும். NCC விண்ணப்பதாரர்கள் டிக்கெட் பரிமாற்ற சேவையின் பலன்களையும் அனுபவிக்க முடியும். பெயர் மாற்றம் செய்த பயணிகள், பயணத்தின் போது அடையாள ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டும்.

பண்டிகைக் கால விகல்ப் திட்டம்

பண்டிகைக் கால விகல்ப் திட்டம்

உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுகளைப் பெற மற்றொரு வழியும் உள்ளது - அதுதான் விகல்ப் திட்டம். ஆங்கிலத்தில் 'விகல்ப்' என்றால் விருப்பம் என்று பொருள். குறிப்பாக பண்டிகை காலங்களில் இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒவ்வொரு முறையும் ஐஆர்சிடிசி இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, விகல்ப் இன் பாப் அப் வருவதை நீங்களே பார்த்து இருப்பீர்கள். விகல்ப் திட்டத்தின் கீழ், உங்கள் டிக்கெட்டுகள் உறுதி செய்யப்படாவிட்டால், மற்றொரு மாற்று ரயிலில் உறுதிப்படுத்தப்பட்ட இருக்கைகள் உங்களுக்கு ஒதுக்கப்படும்.

ஆகவே இனி ஏதோ ஒரு காரணத்தினால் உங்களால் புக் செய்த நேரத்தில் பயணிக்க முடியவில்லை என்றால், உடனே அந்த டிக்கெட்டை உங்களது குடும்ப உறுப்பினர்களிடேயே மாற்றிக் கொடுத்து விடுங்கள்!

Read more about: irctc delhi
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X