இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ள 'நிலத்தின் முடிவு' என்றழைக்கப்படும் கன்னியாகுமரி, அறுபடைவீடுகளில் ஒன்றான திருச்செந்தூர், ராமபிரானே வணங்கிய ராமேஸ்வரம் மற்றும் இந்த மூன்று பிரமிக்க வைக்கும் இடங்களின் சுற்றுலாத் தலங்கள் என எல்லாவற்றையும் ஒரே டூர் பேக்கேஜில் பார்த்து ரசிக்க IRCTC உங்களுக்கு வழங்குகிறது. முன்பதிவு செய்வது எப்படி, கட்டணங்கள் எவ்வளவு மற்றும் இதரபிற தகவல்கள் இதோ!

IRCTCயின் மலிவான சுற்றுலா - திருச்செந்தூர், ராமேஸ்வரம், கன்னியாகுமரி
இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) மலிவான விலையில் பயணிகளுக்கு நிறைவான சுற்றுலாவை வழங்கும் நோக்கில் அவ்வப்போது பேக்கேஜ்களை அறிமுகம் செய்கிறது. அந்த வகையில் இப்போது சென்னையிலிருந்து ராமேஸ்வரம், திருச்செந்தூர் மற்றும் கன்னியாகுமரி 4 இரவு 5 பகல் கொண்ட டூர் பேக்கேஜ் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த பேக்கேஜின் கீழ் நீங்கள் எந்தெந்த இடங்களை சுற்றிப் பார்ப்பீர்கள், கட்டணம், புக்கிங் மற்றும் இதர விவரங்கள் கீழே!
சென்னை to ராமேஸ்வரம், கன்னியாகுமரி, திருச்செந்தூர் டூர் பேக்கேஜ்
நாள் 1: சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் ரயில் எண். 16723 அனந்தபுரி சிறப்பு எக்ஸ்பிரஸில் 20.10 மணிக்கு உங்களது பயணம் தொடங்குகிறது.
நாள் 2: 9:20 மணிக்கு நாகர்கோவில் ரயில் நிலையத்தை வந்தடைந்தவுடன் கன்னியாகுமரியில் உள்ள ஹோட்டல் செக் இன் செய்து களைப்பாறிய பின்னர், லாபியில் கூடி, குமரி அம்மன் கோயில், மூன்று கடல்கள் மிங்கிள் பாயின்ட், விவேகானந்தர் பாறை நினைவுச்சின்னம், திருவள்ளுவர் சிலை, மகாத்மா காந்தி நினைவு மண்டபம் ஆகியவற்றைப் பார்வையிடுவீர்கள். பின்னர் சூரியன் மறையும் பாயின்ட் மற்றும் மெழுகு அருங்காட்சியகத்தைப் பார்வையிடலாம்.
நாள் 3: மூன்றாம் நாள் காலையில் கன்னியாகுமரியில் சூரிய உதயம் பார்த்து ரசித்துவிட்டு சாலை வழியாக ராமேஸ்வரம் சென்று, திருச்செந்தூர் கோயிலுக்கு செல்வீர்கள், மாலையில் உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு இராமேஸ்வரத்தை பார்வையிடலாம்.
நாள் 4: அதிகாலை 05:00 மணிக்கு, ராமநாதசுவாமி கோயிலில் தரிசனத்துக்குச் செல்லுவீர்கள். அதன் பிறகு ராமர்பாதம் கோயில், ஐந்து முகம் கொண்ட அனுமன் கோயிலுக்கு சென்று வந்த பின்னர், மதுரைக்கு புறப்படுவீர்கள். அங்கே திருப்பரங்குன்றம் முருகன் கோவில், திருமலைநாயக்கர் மஹால், மதுரை ஸ்ரீ மீனாட்சி கோவில் ஆகிய இடங்களை பார்வையிடுவீர்கள். பின்னர் அன்று இரவே, மதுரையிலிருந்து 23.20 மணிக்கு கிளம்பும் ரயில், எண் 16724 அனந்தபுரி எக்ஸ்பிரஸில் சென்னைக்கு கிளம்புவீர்கள்.
நாள் 5: 07.55 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும் உங்களது பயணம் இனிதே நிறைவேறுகிறது.

இந்த பேக்கேஜில் வரக்கூடிய சலுகைகள்
1. ஸ்லீப்பர் வகுப்பு மற்றும் 3AC ரயில் பயணம்
2. கன்னியாகுமரி மற்றும் ராமேஸ்வரத்தில் இரண்டு இரவு தங்கக்கூடிய ஹோட்டல் வசதி
3. தனிப்பட்ட வாகனம் மூலம் சாலை போக்குவரத்து
4. பயணத்திட்டத்தின்படி அனைத்து பார்வையிடல்
5. பயண காப்பீடு
6. ஜிஎஸ்டி
மேற்கூறியவை தவிர்த்து, இதர பிற சேவைகளுக்கு நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டும்
பேக்கேஜின் கட்டணங்கள்
1-3 நபர்கள் தங்கக்கூடிய ஸ்டாண்டர்ட் (Standard) பிரிவின் கீழ், தனி நபருக்கு ரூ.23,770, டபுள் ஷேரிங்கில் நபருக்கு ரூ.12,510, ட்ரிபிள் ஷேரிங்கில் நபருக்கு ரூ.9,400, 5-11 வயதுள்ள குழந்தைக்கு படுக்கை வேண்டுமென்றால் ரூ.5,430, படுக்கை வேண்டாமென்றால் ரூ.3,600 கட்டணமாக செலுத்த வேண்டும்.
அதே போல 4-6 நபர்கள் தங்கக்கூடிய ஸ்டாண்டர்ட் (Standard) பிரிவின் கீழ், டபுள் ஷேரிங்கில் நபருக்கு ரூ.9,840, ட்ரிபிள் ஷேரிங்கில் ரூ.9,250, 5-11 வயதுள்ள குழந்தைக்கு படுக்கை வேண்டுமென்றால் ரூ.6,400, படுக்கை வேண்டாமென்றால் ரூ.5,550 கட்டணமாக செலுத்த வேண்டும். இந்த டூர் பேக்கேஜ் ஜூலை 27 ஆம் தேதி துவங்கவுள்ளதால் நீங்கள் முந்திக் கொள்வது அவசியம்.
எப்படி புக்கிங் செய்வது?
நீங்கள் இந்த டூர் பேக்கேஜ் மூலம் கன்னியாகுமரி, திருச்செந்தூர் மற்றும் ராமேஸ்வரத்தை சுற்றிப்பார்க்க விரும்புகிறீர்கள் என்றால், IRCTCயின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான https://www.irctctourism.com/pacakage_description?packageCode=SMR023 ஐ பார்வையிட்டு புக் செய்து கொள்ளவும். அல்லது 8287931964 / 8287931972 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும்.



Click it and Unblock the Notifications





