Search
  • Follow NativePlanet
Share
» »சென்னைக்கு பக்கத்தில இத்தனை அழகான தீவுகள் இருக்கா – இது தெரியாம போச்சே!

சென்னைக்கு பக்கத்தில இத்தனை அழகான தீவுகள் இருக்கா – இது தெரியாம போச்சே!

படிக்கும் போதே உங்களுக்கு தோணலாம், சென்னையில் எங்க இருக்கு தீவு. ஆனால், உண்மையில் சென்னைக்கு அருகாமையில் பல அழகான மற்றும் அமைதியான தீவுகள் ஒளிந்துக் கொண்டிருக்கின்றன. சென்னையின் நகர சலசலப்பில் இருந்து ஒரு விடுப்பு எடுத்து அமைதியாக நேரத்தை செலவழிக்க இவை சிறந்த தேர்வுகள். சென்னையில் இருந்து ஒரு நாள் ட்ரிப் அல்லது பிக்னிக் செல்ல இந்த இடங்கள் தான் பெஸ்ட் சாய்ஸ். மறைந்து கிடக்கும் இந்த ரகசியங்கள் எங்கே இருக்கின்றன? அங்கே அப்படி செல்வது என்பதை கீழே காண்போம் வாருங்கள்!

சென்னையில் அமைந்துள்ள அழகிய தீவுகள்

ஓடிக் கொண்டு இருக்கும் இந்த இயந்திர வாழ்க்கையில் வேலைப்பளு, மன அழுத்தம் ஆகியவற்றால் சோர்ந்து போகும் நேரத்தில் இதில் இருந்து விடுபட்டு சற்று எங்காவது தப்பித்து கொள்ளலாமா என்ற எண்ணம் நம்மில் பெரும்பாலானோருக்கு ஏற்பட்டு இருக்கும். இதுபோன்ற நேரங்களில் நம்மை ஆசுவாசப்படுத்திக் கொள்ள நகர வாழ்க்கையில் இருந்து சற்றே விலக்கி, இயற்கை கொஞ்சும் எழில் மிகு இடங்களுக்கு சென்று வந்தால் மன அமைதியும், நிம்மதியும் ஏற்படும். அப்படி சென்னையில் இருக்கும் கூட்டமே இல்லாத அழகு நிரம்பிய தீவுகளை பற்றி பார்ப்போமா?

Island

ஆலம்பறை தீவு

சுற்றிலும் கடல் சூழ்ந்த ஆலம்பறை கிராமம், சுற்றுலாப் பயணிகளுக்கு சிறந்த பொழுதுபோக்கும் இடமாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. சென்னையில் இருந்து 110 கிமீ தொலைவிலும் மகாபலிபுரத்தில் இருந்து 50 கிமீ தொலைவிலும் இந்த இடம் அமைந்துள்ளது. சிறந்த பொழுது போக்கும் இடமாக இருப்பதோடு, புகைப்படங்கள் எடுக்க இது நல்ல ஸ்பாட். மூன்று புறமும் தண்ணீரால் சூழப்பட்டுள்ள இக்கோட்டையின் பின் புறத்தில் ஆறு கடலுடன் கலக்கும் காட்சியை நாம் கண்டு வியக்கலாம். ஒரு நாள் பிக்னிக் ஆக சென்னையில் இருந்து இ.சி.ஆர் சாலையில் புறப்பட்டால் ஒன்றரை மணி நேரத்தில் ஆலம்பாறை கோட்டை இருக்கும் இடைக்கழிநாடை அடைந்து விடலாம். ஒரு நாள் சுற்றுலா செல்ல இது ஏற்ற இடம்!

Island

இருக்கம் தீவு

பல ஆண்டுகளாக, சென்னையைச் சுற்றியுள்ள சில இடங்கள் அதன் இயற்கை அழகுக்காக மிகவும் பிரபலமாக உள்ளன. மலைகள் முதல் பள்ளத்தாக்குகள், கோட்டைகள் முதல் கோயில்கள், நினைவுச்சின்னங்கள் முதல் வரலாற்று கட்டிடங்கள் மற்றும் கடற்கரைகள் முதல் தீவுகள் வரை அனைத்து வகையான சுற்றுலா தலங்களையும் சென்னை கொண்டுள்ளது. அவற்றில் முதல் தீவு இந்த இருக்கம் தீவு, இது ஆங்கிலத்தில் Hidden island, Irukkam island, Lake island என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. இந்த அழகிய தீவு சென்னையில் இருந்து 50 கிமீ தொலைவில் புலிகாட் ஏரியின் நடுவே அமைந்துள்ளது. பல அரிய உயிர்களைக் கொண்டிருக்கும் இந்த புலிகாட் தீவில் நிழலில் ஒரு ஓரமாக அமர்ந்து வேடிக்கை பார்த்து கொண்டிருந்தாலே போதும். மனசு லேசாக மாறிவிடும். நகர்ப்புற வாழ்க்கை முறையிலிருந்து ஒரு சின்ன பிரேக் எடுக்க நினைக்கும் பயணிகளிடையே இது ஒரு முக்கிய சுற்றுலா தலமாக மாறியுள்ளது. ஒரு புது இடத்திற்கு சென்று நண்பர்கள், குடும்பம் குழந்தைகளுடன் ஒரு நாள் பிக்னிக் செல்ல இது ஒரு அருமையான ஸ்பாட் ஆகும்.

Island

திமிங்கல தீவு

சென்னை அடையாறு ஆற்றங்கரையில் உடைந்த பாலத்திக்கு அருகே அமைந்துள்ளது. இங்கு ஒரு போட்டிங் கிளப்பும் செயல்படுகிறது. ஆற்றில் நீர் மட்டம் நன்றாக இருக்கும் போதெல்லாம், இந்த போட் கிளப்பின் சார்பில் இங்கு போட்டிங் ஏற்பாடு செய்யப்படுகிறது.அடையாறு பாலத்திக்கு அப்பால் உள்ள ஆறு தெளிவாக தெரிவதுடன், பல புலம்பெயர் பறவைகளையும் நாம் இங்கே காணலாம். இங்கு சென்று வந்தவர்கள் 'இந்த தீவில் படகோட்டி செல்வது, மனதில் உள்ள குழப்பங்களை சரி செய்து ஒரு வித தியான மனநிலையை தருகிறது' என்று சொல்கிறார்கள். நீங்களும் ஏன் செல்லக் கூடாது?

Island

க்விபிள் தீவு

சென்னையில் உள்ள அடையாறு ஆற்றில் அமைந்துள்ள க்விபிள் தீவு (Quibble island), சால்ட் வாட்டர் லகூன்களில் உருவான நான்கு சிறிய தீவுகளில் மிகப்பெரியது ஆகும். தீவின் நடுவே அமைந்துள்ள பெரிய ஐரோப்பிய கல்லறையாலே தான் இந்த தீவு பேமஸ் ஆனது என்று கூறலாம். பிரெஞ்சு தலைமையிலான இந்தியப் படைகளுக்கும் நவாப் படைகளுக்கும் இடையே நடந்த போருக்குப் பிறகு இந்த கல்லறை இங்கு கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. மெரினா கடற்கரையின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள இந்த தீவை மயிலாப்பூர் மற்றும் அடையார் பகுதிகளில் இருந்து எளிதில் அணுகலாம். இந்த அமைதியான இடத்தில் அமர்ந்து, கரையோரங்களில் மோதும் அலைகளின் இனிமையான ஒலியில் சற்றே இளைப்பாறலாம்.

இவற்றில் நீங்கள் இந்த வார இறுதியில் எங்கே செல்ல போகிறீர்கள் என்று இப்போதே பிளான் பண்ணிக் கொள்ளுங்கள்!

More News

    Read more about: chennai travel guide
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+