Search
  • Follow NativePlanet
Share
» »மும்பையின் கடற்கரை சொர்க்கமான ரத்னகிரியைப் பற்றி ஒரு டூரிஸ்ட் கைடு!!

மும்பையின் கடற்கரை சொர்க்கமான ரத்னகிரியைப் பற்றி ஒரு டூரிஸ்ட் கைடு!!

மும்பையின் கடற்கரை சொர்க்கமான ரத்னகிரியைப் பற்றி ஒரு டூரிஸ்ட் கைடு!!

By Balakarthik Balasubramanian

மகாராஷ்டிர மாநிலத்தில் காணப்படும் அழகிய மாவட்டமான இரத்னகிரி, அரபிக்கடலுக்கும், சஹாயாத்ரி மலைக்கும் இடையில் காணப்படுகிறது. காதல் கொள்ளும் மலைகளும், கடற்கரையும், காடுகளும், நதிகளும், சூடான நீரூற்றுகளும், நீர்வீழ்ச்சிகளுமென எங்கும் சூழ்ந்திருக்க, சுற்றுலா ஆர்வலர்களின் அனைத்து விருப்பங்களுக்கும் ஏற்றதோர் இடமாக இது காணப்படுகிறது.

ரத்னகிரியில் காணப்படும் கவர்ச்சிகரமான மற்றும் ருசியான ஆல்போன்ஸோ மாம்பழங்களும் பெயர் பெற்று விளங்க, ரத்னகிரியின் இன்னொரு ஸ்பெஷலாக உணவும் விளங்குகிறது.

மீன் குழம்பு சாதமும், சோல்கடி உணவு வகையின் சுவையும் ஈடு இணையற்ற இன்பத்தை மனதில் தேடி, துள்ளிக்குதிக்க வைக்கிறது.
இவ்விடம் தேசபோராட்ட வீரர்களான லோக்மன்யா பாலகங்காதரர் திலக்கிற்கும், வீர் சவர்கருக்கும் பிறப்பிடமாக விளங்குகிறது.

இந்த ரத்னகிரியில் கம்பீரமான மற்றும் அற்புதமான கோட்டைகள் பல காணப்பட, அவை சிவாஜி காலத்தில் கட்டப்பட்டது என்றும் தெரியவருகிறது. மும்பையிலிருந்து 335 கிலோமீட்டர் தொலைவில் ரத்னகிரி காணப்பட, இயந்திரத்தனமான வாழ்க்கையின் அசதிகளில் விடுபட்டு, அசதிக்கு நாம் தேடும் சிறந்த வார விடுமுறை இடமாகவும் இது காணப்படுகிறது.

ரத்னகிரியை நாம் காண சிறந்த நேரங்கள்:

ரத்னகிரியை நாம் காண சிறந்த நேரங்கள்:

கோடைக்காலத்தில் தாக்கம் கடுமையாக இருக்க, அதன் வெப்ப நிலையானது சில நேரங்களில் 40 முதல் 42 டிகிரி செல்சியஸ் வரைக்கூட தொடும். பருவமழைக்காலத்தின் போது அது நம்மை குதூகலிக்க வைக்க, ஈரப்பதமும் சற்று தடுமாறவே வைப்பதோடு, இதன் அனுபவமானது வியர்வை துளிகளையும், வாடிய உணர்வையும் நமக்கு தருகிறது. அதனால், நவம்பர் முதல் பிப்ரவரி வரையிலான குளிர்காலம், ரத்னகிரியை நாம் பார்க்க சிறந்ததாக அமைகிறது..

Apoo8338

 ரத்னகிரியை நாம் அடைவது எப்படி:

ரத்னகிரியை நாம் அடைவது எப்படி:

தண்டவாள மார்க்கமாக:

ரத்னகிரியில் இரயில் நிலையம் காணப்படுகிறது. மும்பையிலிருந்து ரத்னகிரிக்கு சுமார் 4 இரயில்கள் தினமும் இயக்கப்படுகிறது. பயணத்திற்கான சராசரி நேரமாக 6 மணி நேரம் தேவைப்படுகிறது.

சாலை மார்க்கமாக:

மும்பையிலிருந்து ரத்னகிரிக்கு 3 வழிகள் காணப்படுகிறது.

வழி 1:

மும்பை - நவி மும்பை - சிப்லுன் - பத்தன்சாய் - ரத்னகிரி ; தேசிய நெடுஞ்சாலை 66 இன் வழியாக. பயணத்திற்கான நேரம் 7 மணி நேரமாகவும், தூரம் 347 கிலோமீட்டராகவும் இருக்கிறது.

வழி 2:

மும்பை - லோனாவாலா - காண்டலா - பிம்ப்ரி சின்ஜ்வாத் - சட்டாரா - ரத்னகிரி. பெங்களூரிலிருந்து மும்பை வழியாக...
நெடுஞ்சாலை/மும்பை, நெடுஞ்சாலை/மும்பை - பூனே
நெடுஞ்சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலை 48இன் வழியாக

முந்தைய வழியை விட சுற்றாக இது அமைய, கூடுதல் நேரமானது நம் பயணத்திற்கு தேவைப்படுகிறது.
அதனால் ஒட்டுமொத்தமாக எட்டு மணி நேரங்கள் ஆக, தூரமும் 446 கிலோமீட்டராக காணப்படுகிறது.


வழி 3:

மும்பை - லோனாவாலா - பிம்ப்ரி சின்ஞ்வாத் - சிப்லுன் - பத்தன்சாய் - ரத்னகிரி; பெங்களூரிலிருந்து மும்பை வழியாக
நெடுஞ்சாலை/மும்பை நெடுஞ்சாலை/மும்பை - பூனே நெடுஞ்சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலை 66 இன் வழியாக. இந்த வழியாக நாம் செல்ல 9 மணி நேரங்கள் ஆகிறது. இந்த மூன்று வழிகளில் அதிக நேரம் எடுக்கும் ஒரு வழியும் இதான் என்பதோடு, இதன் தூரம் 439 கிலோமீட்டராக இருக்கிறது.

 ரத்னகிரிக்கு ஓர் பயணம்:

ரத்னகிரிக்கு ஓர் பயணம்:

இரண்டாம் வழியின் சாலை போக்குவரத்து நன்றாக இருக்க, மும்பையிலிருந்து ரத்னகிரிக்கு செல்ல நமக்கு இரண்டாம் வழி பரிந்துரை செய்யப்படுகிறது.
இந்த பயணத்தில் நிறுத்தமற்று நாம் செல்ல 8 மணி நேரம் ஆகிறது. அதனால், இந்த பயணத்தினை அதிவிரைவில் நாம் தொடங்கவேண்டியதும் முக்கியமாகும். மும்பையிலிருந்து லோனாவாலாவிற்கு 83 கிலோமீட்டர்கள் ஆக, ஒரு மணி நேரம் நாற்பத்தைந்து நிமிடங்கள் நம் பயணத்திற்கு தேவைப்படுகிறது. லோனாவாலா என்னும் அழகிய மலைபகுதியானது 1871ஆம் ஆண்டு எல்பின்ஸ்டோன் பிரபுவால் கண்டுபிடிக்கப்பட்டதாகும்.

டைகர் லீப் என்ற அழகிய குன்றின் உச்சியானது புலியை போன்று வடிவம் பெற்றிருக்க, எட்டு கால் பாய்ச்சலில் பள்ளத்தாக்கினையும் அது அடைகிறது. மேற்கு தொடர்ச்சியின் அழகிய காட்சியை இவ்விடம் நமக்கு தர, இதன் உயரமானது 650 மீட்டர் காணப்படுகிறது. இதன் அதிர்வலை புள்ளியானது இந்த டைகர் லீப்பின் சிறப்பம்சமாகவும் இருக்கிறது. லோனாவாலாவில் காணப்படும் புஷி அணையானது பருவ மழைக்காலங்களில் அழகிய காட்சியை நம் கண்களுக்கு தருகிறது.
இந்திரயானி நதியில் இது கட்டப்பட்டிருக்க, பருவமழைக்காலங்களில் அணையின் படிக்கட்டு நீரில் மூழ்கியும் போகிறது. இந்த காட்சியை காண எண்ணற்ற மக்கள் இங்கே வருவதும் வழக்கமாகிறது.

Manu Jha

லோனாவாலா:

லோனாவாலா:


நமது ஓய்விற்கு ஏற்ற சிறந்த இடமாக லோனாவாலா விளங்குகிறது. இங்கே காணும் ஏரியானது சுற்றுலா வந்து செல்ல சிறந்த இடமாக அமைகிறது. இங்கே காணப்படும் இமேஜிகா அட்லாப்ஸ் எனப்படும் பொழுதுபோக்கு தீம் பூங்கா குழந்தைகளை வெகுவாக கவர்கிறது. லோனாவாலாவில் சிக்கி எனப்படும் ஒரு வகை நொறுக்கு தீனி பிரசித்திபெற்று விளங்க, வேர்கடலை மற்றும் சர்க்கரை கொண்டும் அது தயாரிக்கப்படுகிறது. எனினும், இந்த நாட்களில், காய்ந்த பழ சிக்கி, சுவையான சிக்கி, தேங்காய் சிக்கி, என பலவிதமான தேர்வு உணவுகள் காணப்படுகிறது.

Jainam oswal

 கண்டலா:

கண்டலா:

ஒரு மணி நேர பயணத்தின் மூலமாக கண்டலா என்னும் மலைப்பகுதியை நாம் அடைய, பிம்ப்ரி சிஞ்வாதிலிருந்து 56 கிலோமீட்டர்கள் தொலைவில் காணப்படுகிறது. அம்ருதாஞ்சன் புள்ளியானது அதிக சவுகரியமான புள்ளியாக அமைந்து அழகிய காட்சியை பள்ளத்தாக்கின் மூலம் நமக்கு தருகிறது. ட்யூக் நோஸ் எனப்படும் பிரசித்திபெற்ற இடமானது மலைப்பயணத்திற்கும், கயிர்கள் கொண்டு செங்குத்தான மலையில் இறங்கும் பயணத்திற்கும் பிரசித்திபெற்று விளங்குகிறது. இது மிகவும் சவாலான பயணமாக அமைய, போதிய வழிகாட்டுதலற்று நம்மால் ஏறவோ/இறங்கவோ முடிவதில்லை. சைத்யா கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்ட இந்த வரலாற்று புத்த குகைகளின் பெயர் கர்லா மற்றும் பாஜா என்பதும் நமக்கு தெரியவருகிறது. கண்டலாவிலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் இது காணப்படுகிறது..

Soham Banerjee

 பிம்ப்ரி சிஞ்ச்வாத்:

பிம்ப்ரி சிஞ்ச்வாத்:

லோனாவாலாவிலிருந்து 53 கிலோமீட்டர் தொலைவில் காணப்படும் பூனேவின் பிம்ப்ரி சிஞ்ச்வாத் பகுதிக்கு நாம் செல்ல ஒரு மணி நேரம் ஆகிறது. இங்கே தொழில்துறை மையங்கள் அதிகம் காணப்படுகிறது. மோர்யா கோசவி ஆலயத்துக்கு பிரசித்திபெற்று இவ்விடம் விளங்க, பவானா நதியின் வெள்ளப்பெருக்கால் வருடாவருடம் இந்த ஆலயம், நீரில் மூழ்கி போகிறது.

சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் கவரும் விதமாக நிசர்காகவி பஹினபாய் சௌத்ரி பாம்பு பூங்கா அமைந்திருக்கிறது. இங்கே காணும் இன்னும் சில ஆலயங்களாக ISKON ஆலயம், ஸ்ரீ மஹாவீர் ஜைன் ஆலயம், பக்தி சக்தி மற்றும் துர்கா தேக்டி ஆலயங்களும் காணப்படுகிறது.

_paVan_

சட்டாரா:

சட்டாரா:


அடுத்து வழியாக சட்டாரா காணப்பட, கண்டலாவிலிருந்து 177 கிலோமீட்டர் தொலைவில் இவ்விடம் காணப்படுகிறது. இந்த இடத்தை அடைய நமக்கு 3 மணி நேரங்கள் ஆக, இதனை ‘காஸ் பீடபூமி' என்றும் அழைப்பர். யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான இவ்விடத்தில் பள்ளத்தாக்குகளின் ஒரு அங்கமாக மலர்களும் காணப்படுகிறது. இந்த காஸ் பள்ளத்தாக்கில் 850 வகையான பூக்கும் தாவரங்கள் காணப்படுகிறது.

ராஷ்ட்ரகுடாக்களால் முதலில் இந்த சட்டாரா பகுதி ஆட்சி செய்யப்பட, இவர் சாலுக்கியர்கள், மயூர்களை பின்பற்றி, இஸ்லாமிய படையெடுப்பின் வழியாகவும், இறுதியில் இவ்விடம் மராட்டிய பேரரசரால் பாதுகாக்கப்பட்டதாகவும் தெரியவருகிறது. இங்கே அஜிங்கியட்டரா மற்றும் சஜ்ஜாகாத் என்னும் இரண்டு அழகிய கோட்டைகள் காணப்பட, இரண்டுமே மராட்டியர்களின் வரலாற்றை பிரதிபலித்துக்கொண்டே நிற்கிறது.

Travelling Slacker

 அஜிங்கியட்டரா கோட்டை:

அஜிங்கியட்டரா கோட்டை:

ஒட்டுமொத்த தெற்கு மகாராஷ்டிராவின் முக்கிய பார்வையை இக்கோட்டை தருகிறது. பாமணி வம்சத்தால் கட்டப்பட்டது சஜ்ஜாகாத் ஆகும். சட்டாராவின் போவாய் நகாவில் பேரன்புமிக்க சிலை ஒன்று சத்திரபதி சிவாஜிக்கு காணப்படுகிறது.

சட்டாராவிலிருந்து 187 கிலோமீட்டர் தொலைவில் ரத்னகிரி காணப்பட, 3 மணி நேரம் 30 நிமிடங்கள் நாம் சென்று சேர தேவைப்படுகிறது. துறைமுக நகரமான இவ்விடம், கடற்கரைகளையும், மாம்பழம், கலாச்சாரம், உணவென சிறந்து விளங்குகிறது. மகாராஷ்டிராவின் தென்மேற்கு பகுதியில் காணப்படும் ரத்னகிரியினை சூழ்ந்து கிழக்கில் சஹயாத்ரி மலையும், மேற்கில் அரபிக்கடலும் காணப்படுகிறது. ரத்னகிரியில் நாம் பார்க்க வேண்டிய இடங்களை இப்பொழுது பார்க்கலாமா.

Omar AV

 கணபதிபுல்லே:

கணபதிபுல்லே:


சுயம்பு கணபதி ஆலயத்தை கொண்டிருக்கும் ஒரு சிறு கிராமமான இவ்விடம், கணேஷ பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒன்றாகும். கொங்கன் பகுதியில் வாழ்ந்த மக்களின் பழங்கால வாழ்க்கையை உணர்த்தும் ஒரு அருங்காட்சியகமிருக்க, அதன் பெயர் ‘ப்ரசின் கொங்கன்' என்றும் நமக்கு தெரியவருகிறது. இந்த கணபதிபுல்லேயில் சில அழகான மனதை வருடும் கடற்கரையாக ஆரிவாரே, காய்வாடி கடற்கரை, மற்றும் கணபதிபுல்லே கடற்கரைகளும் காணப்படுகிறது.

Own work

 ஜெய்காத் கோட்டை:

ஜெய்காத் கோட்டை:

ரத்னகிரி அருகில் காணப்படும் இந்த கோட்டையானது பெரும் ஈர்ப்பாக அமைகிறது. கணபதிபுல்லேவிலிருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் இவ்விடம் காணப்பட, இந்த கோட்டையானது குன்றின் மேல் நின்றுக்கொண்டிருப்பதோடு, சாஷ்த்ரி நதியின் வழியாக அரபிக்கடலையும் அடைகிறது. கோட்டையின் உள்ளே கணபதி ஆலயம் ஒன்று காணப்பட, அது பாதுகாக்கப்பட்டு வரும் நினைவு சின்னமாகவும் விளங்குகிறது. இந்த கோட்டையானது இடிபட்ட நிலையில் காணப்பட, வெளிப்புற சுவர்களானது உயரமாகவும், வலிமையாகவும் காணப்படுகிறது.

Nilesh2 str

 மர்லேஷ்வர் ஆலயம்:

மர்லேஷ்வர் ஆலயம்:


அழகிய சஹ்யாத்ரி கொண்டு அமைக்கப்பட்ட குகை கோயிலானது சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த மர்லேஷ்வர் ஆலயமானது பக்தர்களின் பல முயற்சிகளை கடந்து இறைவனை தரிசிக்க துணை புரிகிறது. ஆம், 400 படிகளை ஏறி நாம் செல்ல மர்லேஷ்வர் ஆலயத்தை அடைகிறோம். மேலும், தரேஷ்வர் நீர்வீழ்ச்சி மற்றும் கரம்போலி தோ ஆகிய ஆலயங்களும் காணப்படுகிறது. மஹா சிவராத்திரியை இங்கே சிறப்பாக மரியாதையுடன் கொண்டாடப்பட, ஆலயத்தில் மகத்தான முறைகளும் காணப்படுகிறது..

Pranav

 அஞ்சர்லே கடற்கரை:

அஞ்சர்லே கடற்கரை:

ரத்னகிரியில் காணப்படும் அஞ்சர்லே கடற்கரை, அமைதியான வெள்ளை மணல் கடற்கரையை கொண்டிருக்கிறது. இங்கே பாராசைலிங்க், ஸ்னோர்கெல்லிங்க், காற்று உலாவல் என கடற்கரையில் பல சாகச விளையாட்டுக்கள் காணப்படுகிறது. நிறைய குடில்கள் தூய்மையாக காணப்பட, சுவையான கடல் உணவுகளும் ஊள்ளூர் ஸ்டைலில் நமக்கு கிடைக்கிறது.

திமிங்கல மீன்களின் துள்ளல் விளையாட்டு அஞ்சர்லேவில் நம் மனதினை ஈர்க்கிறது. இங்கே கடற்கரையின் அருகில் கட்யாவார்ச்சா கணபதி ஆலயமும் காணப்படுகிறது. இங்கே காணும் கணேஷரின் சிலை, தனித்துவமிக்கதாக காணப்பட, உடற்பகுதியின் வலதுபுறமும் அரிதான காட்சியை நம் கண்களுக்கு அளிக்கிறது.

Apoorva Karlekar

 திபௌ அரண்மனை:

திபௌ அரண்மனை:


ரத்னகிரிக்கு சிறைவாசம் அனுப்பப்பட்ட பர்மா/மியான்மரின் ராஜா, ராணிக்காக ஆங்கிலேயரால் 1910ஆம் ஆண்டு இந்த அரண்மனை கட்டப்பட்டது. பர்மாவின் முதல் குடும்பத்தின் அரச சிறையாக திபௌ காணப்பட, 1916ஆம் ஆண்டு அவர்கள் இறக்கும் வரையில் அங்கிருந்ததாகவும் சொல்லப்படுகிறது. சிறுகுன்றின் மேலே இந்த அரண்மனை காணப்பட, ASI ஆல் இன்று இந்த அரண்மனையானது அருங்காட்சியகமாக பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரியவருகிறது.

Bharat Bang

 ரத்னதுர்கா கோட்டை:

ரத்னதுர்கா கோட்டை:

பதினாறாம் நூற்றாண்டில் பாமணி அரசரால் இக்கோட்டை கட்டப்பட, ஆதில் ஷாவின் சொத்தாக அதன்பிறகு மாறியது. பல வருடங்களுக்கு பிறகு, மராட்டிய போர்வீரரான சிவாஜி அவருடைய பேரரசில் இதனை இணைத்துக்கொண்டார். அதன்பிறகு பல வருடங்களுக்கு இஸ்லாமியர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இது இருந்து வந்தது. மராட்டியர்களிடமிருந்து இக்கோட்டை பேஷ்வாவிடம் செல்ல, பேஷ்வவிடமிருந்து ஆங்கிலேயர்கள் இந்த கோட்டையை அதன் பிறகு கைப்பற்றினர். இந்த கோட்டையானது குதிரை-காலணி., அதாவது ‘U' வடிவத்தில் காணப்படுகிறது. இந்த கோட்டையை ‘கணபதி துர்கா கோட்டை' என்றும் அழைக்கப்படுகிறது. இந்த கோட்டையின் உள்ளே துர்கா தேவியும், கணபதியும் காணப்படுகின்றனர்.

RameshSharma1

 குஹகர் கடற்கரை:

குஹகர் கடற்கரை:


இந்த கடற்கரையானது ஒதுங்கு புறமாக அமைந்து விடுமுறைக்கு ஏற்ற இடமாக அமைகிறது. குஹகர் கடற்கரையானது ஆழமற்று காணப்பட, நீரோட்டங்களும் வலிமையற்றே காணப்படுகிறது. இந்த நீர் நிலையானது நீச்சலுக்கு ஏற்றதாக அமைய நீர்விளையாட்டுகளும் காணப்படுகிறது. இந்த கடற்கரையின் சூரிய அஸ்தமன காட்சிகள் நம் மனதினை வருடுகிறது. இந்த கடற்கரை மணலானது வெள்ளை நிறம் கொண்டிருக்க, அழகிய மற்றும் உன்னதமான காட்சியை நம் கண்களுக்கு இவை தருகிறது.

Ankur P

 வேலாஸ் கடற்கரை:

வேலாஸ் கடற்கரை:

ஆமைகளை நேரடியாக நாம் பார்க்க இந்த கடற்கரை உதவ, ஒவ்வொரு வருடமும் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதங்களில் ஆமைகள் திருவிழாவானது இங்கே கொண்டாடப்படுகிறது. ஆலிவ் ரிட்லி ஆமைகள், மகாராஷ்டிராவின் மேற்கு பகுதிகளில் முட்டைகளை இடுகிறது. அவற்றுள், 40 சதவிகிதம் வேலாஸ் கடற்கரையை வந்து சேர்கிறது. இந்த நேரத்தில் ஒவ்வொரு பெண் ஆமையும் 90 முதல் 150 முட்டைகளை ஈன்று வருகிறதாம். இந்த முட்டைகள் குஞ்சு பொறிக்க 55 நாட்கள் எடுத்துக்கொள்கிறதாம். இவற்றுள் சுவாரஷ்யமான தகவலாக, 1000 குஞ்சுகளுள் ஒன்றே ஒன்று தான் வயது பருவத்தை அடைகிறதாம்.

Eli Duke

 திலக் அலி அருங்காட்சியகம்:

திலக் அலி அருங்காட்சியகம்:

தொல்லியல் துறையால் இந்த அருங்காட்சியகம் பராமரிக்கப்பட்டு வர, லோக்மன்ய பாலகங்காதர திலக்கின் மூதாதையர் வீடுகள் இங்கே காணப்படுகிறதாம். திலக் அலி அருங்காட்சியகம், திலக்கின் வாழ்க்கையை சித்தரிப்பவையாக அமைய, அவருடைய இந்திய சுதந்திர போராட்டத்து பங்களிப்பை உணர்த்தும் ஓவியங்களும், வரைபடமும் இங்கே காணப்படுகிறது. இந்த அருங்காட்சியகத்தின் காட்சிகள், அருகில் காணும் கொங்கன் கட்டிடக்கலையை உணர்த்துகிறது.

Pradeep717

Read more about: travel mumbai
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X