Search
  • Follow NativePlanet
Share
» »வாரத்திற்கு 40 மணிநேர வேலை மற்றும் 1.5 கோடி சம்பளம் – எங்கே தெரியுமா?

வாரத்திற்கு 40 மணிநேர வேலை மற்றும் 1.5 கோடி சம்பளம் – எங்கே தெரியுமா?

நம்ம ஊருல தான் படித்த இளைஞர்களும் கூட வேலை கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர். ஆனால் உலகின் பல இடங்களில் வேலை செய்வதற்கு ஆட்கள் இல்லாமல் அந்நாட்டு அரசு சிரமப்பட்டு வருகின்றது. ஆம், சில ஊர்களுக்கு நீங்கள் சென்றாலே அவர்கள் உங்களுக்கு பணம் தருகின்றனர். அந்நாட்டு பெண்களை திருமணம் செய்தால் பணம் தருகின்றனர். இங்கு அப்படித்தான் ஒரு தீவு நாட்டில், வாரத்திற்கு 40 மணிநேர வேலை செய்தால் போதும், ஆண்டுக்கு 1.5 கோடி சம்பளம் தர தயாராக இருக்கிறார்கள்!

சுற்றுலா சென்றால் காசு தருகிறார்கள்

உலகெங்கிலும் பல்வேறு அதிர்ச்சியூட்டும் தீவுகள் உள்ளன, அங்கு மக்கள் விடுமுறைக்கு செல்ல விரும்புகிறார்கள். இதுபோன்ற அழகான இடங்களுக்குச் செல்வதற்கு சுற்றுலாப் பயணிகள் லட்சக்கணக்கில் செலவழிக்கின்றனர். அத்தகைய கண்கவர் தீவுகளின் ஒரு குழு மக்களை அழைத்து, வருகை தருபவர்களுக்கு இலவச உணவு மற்றும் தங்குமிடத்தை வழங்குகிறது. பார்வையாளர்களுக்கு பணமும் வழங்கி வருகிறது. அப்படி ஒரு இடம் தான் ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள உயிஸ்ட் மற்றும் பென்பெகுலா என்கிற இரு தீவுகள்!

uist and benbecula

வெறும் 40 மக்கள் மட்டுமே வசிக்கும் உயிஸ்ட் மற்றும் பென்பெகுலா

ஸ்காட்லாந்தின் மேற்கு கடற்கரையில் உயிஸ்ட் மற்றும் பென்பெகுலா என்ற இரு தீவுகள் அமைந்துள்ளன. தற்போது அங்கு வெறும் 40 மக்கள் மட்டுமே வசிக்கின்றனர். இந்நிலையில் கோடை காலத்தை முன்னிட்டு அங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் வெஸ்டர்ன் ஐல்ஸ் நடத்திய ஆட்சேர்ப்பில் மருத்துவருக்கு ஆண்டுக்கு ரூ.1 கோடி ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டன் மருத்துவர்களை விட 40% அதிகமான சம்பளம்

இது பிரிட்டன் மருத்துவர்கள் வாங்கும் ஊதியத்தை விட சுமார் 40% அதிகமாகும். அதுமட்டுமன்றி இடமாற்ற உதவித்தொகையாக ரூ.8 லட்சமும், பணிக்கொடை ரூ.1.3 லட்சம், அலெவன்ஸ் ரூ.11 லட்சம் தனித்தனியாக வழங்கப்படும். அதன்படி மொத்தமாக ஒரு மருத்துவருக்கு ஆண்டுக்கு ரூ.1.5 கோடி ஊதியமாக வழங்கப்படும். இந்த சலுகைகளை பெற வாரத்திற்கு 40 மணி நேரம் வேலை செய்தால் மட்டும் போதுமாம்.

ஆசிரியர்களும் வரவேற்க்கப்படுகிறார்கள்

இங்கு பாடசாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. அதற்கு தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களை தேடி வருகின்றனர். அந்த பாடசாலையில் மொத்தம் 5 முதல் 11 வயதுக்குட்பட்ட 5 மாணவர்கள் மட்டுமே உள்ளனர். அதிலும் 2 மாணவர்கள் முன்பள்ளி வகுப்பில் உள்ளனர். அவர்களின் வயது வெறும் 4 மட்டுமே. இந்த பாடசாலையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஆண்டுக்கு சுமார் 62 லட்சம் ஊதியம் வழங்கப்படும். இத்துடன் சுமார் ரூ.6 லட்சம் உதவித்தொகையும் வழங்கப்படும்.

வெளிநாட்டு மக்களுக்கே முன்னுரிமை

ஆலோசகர்கள், பொது பயிற்சியாளர்கள் மற்றும் செவிலியர்கள் தற்போது கிராமப்புற ஆட்சேர்ப்பு செயல்முறையில் உள்ள பல்வேறு சவால்களால் மிகுந்த அழுத்தத்தில் உள்ளனர். சமூகத்தில் நீண்ட காலம் வாழ விரும்புபவர்களைத் தேடுகிறார்கள். வெளியாட்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்படுவதாகவும், கடலோரப் பகுதிகளில் பணி அனுபவம் இருந்தால் பயனுள்ளதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

More News

    Read more about: interesting facts
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+