Search
  • Follow NativePlanet
Share
» »நீண்ட கால ஆசைகளை ஒரே நாளில் நிறைவேற்றும் காத்ர சுந்தரேஸ்வரர்! எங்கே தெரியுமா?

நீண்ட கால ஆசைகளை ஒரே நாளில் நிறைவேற்றும் காத்ர சுந்தரேஸ்வரர்! எங்கே தெரியுமா?

நீண்ட கால ஆசைகளை ஒரே நாளில் நிறைவேற்றும் காத்ர சுந்தரேஸ்வரர்! எங்கே தெரியுமா?

srisankaramatrimony.com

மயிலாடுதுறை அருகில், அமைந்துள்ளது கஞ்சநகரம். இங்கு இருக்கும் சிவ பெருமான் கோவில் காத்ர சுந்தரேஸ்வரர் ஆலயம் ஆகும். இந்த கோவிலுக்கு கார்த்திகை மாதம் சென்று வந்தால், நீங்கள் வாழ்க்கையில் நீண்ட காலமாக நினைத்துக் கொண்டிருக்கும் ஆசைகள் நிறைவேறும். வாருங்கள் இந்த கோவில் பற்றிய மேலும் விவரங்களைத் தெரிந்து கொள்வோம்.

எங்களது பதிவுகள் தொடர்ந்து கிடைக்க மறக்காமல் இந்த பக்கத்தின் வலது பக்க மேல் முனையில் இருக்கும் பெல் ஐகானை சொடுக்கி சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள். மேலும் எங்களது தமிழ் நேட்டிவ் பிளானட் முகநூல் பக்கத்தையும் மறக்காமல் பாலோ செய்யுங்கள்.

கார்த்திகை துவக்கம்

கடந்த ஒரு மாத காலமாக துலாம் ராசியில் தனது பலத்தினை முழுமையாக இழந்து நீசம் என்ற நிலையில் சஞ்சரித்து வந்த சூரியன், தான் முழுமையாக வலிமை பெற விருச்சிகம் ராசியில் தனது பயணத்தைத் துவக்கும் காலமே கார்த்திகை மாதம். இந்த மாதத்துக்கு மற்ற மாதங்களை விட அதிக சக்தி இருப்பதாக ஜோதிடக் கலையில் நம்பப்படுகிறது. ஆன்மீக ரீதியான பல நிகழ்வுகள் இந்த மாதத்தில் தொடங்கும்.

சித்தர்கள் கண்ட உண்மை

கார்த்திகை மாதத்தில் ஐயப்ப பக்தர்கள், முருக பக்தர்கள் விரதம் இருந்து மாலை போட்டு பக்தர்கள் பக்திமயமாக காட்சியளிப்பார்கள். கார்த்திகை மாதத்தில்தான் நம் உடம்பில் உள்ள நாடி, நரம்புகள் எல்லாம் சீராக இயங்கும் என்று சொல்வார்கள். இந்த காலத்தில் தியானத்தில் ஈடுபடுவோர்க்கு நிச்சயம் ஞானம் சித்தியாகும் என்பது அனுபவித்தவர்கள் கண்ட உண்மை. இது முக்கியமாக தென்னிந்தியாவில் உள்ளவர்களுக்கு அவர்கள் வாழும் வானிலை சூழலை மனதில் வைத்து கணிக்கப்பட்ட சித்தர்களின் செயல்.

காத்ர சுந்தரேஸ்வரர்

காத்ர சுந்தரேஸ்வரர், வேண்டுபவர்களுக்கு உடனடியாக அருள்பாலிப்பதாக உள்ளூர் மக்கள் நம்புகின்றனர். மேலும் இவர் துங்கபாலஸ்தானம்பிகையுடன் மூலவராக இந்த கோவிலில் அமர்ந்துள்ளார்.

எங்குள்ளது

இந்த கோவில் நாகப்பட்டினம் மாவட்டம் கஞ்சாநகரத்தில் அமைந்துள்ளது. இது மயிலாடுதுறையிலிருந்து மிக அருகில் உள்ளது. மயிலாடுதுறையைச் சுற்றி பல கோவில்கள் அமைந்திருப்பது நமக்கு தெரிந்திருக்கும். அதே நேரத்தில் காத்ர சுந்தரேஸ்வரர் கோவில் அதிகம் பக்தர்களால் வழிபடப்படுகிறது.

செல்லும் நேரங்கள்

காலை 10 முதல் 11 மணி வரையிலும் மாலை 4 முதல் 5 மணி வரையிலும் இந்த கோவிலுக்கு அதிக அளவில் பக்தர்கள் வருகை தருகிறார்கள்.

மேலும் கார்த்திகை மாதம் இந்த கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கு மிக அதிக அளவில் இருக்கிறது. இந்த சமயத்தில் வந்து வழிபட்டால், நீண்ட நாளாக நடக்காத நீங்கள் நினைத்த ஆசைப்பட்ட காரியஙகள் அடுத்த சில நாட்களிலேயே நடந்தேறும் என நம்பப்படுகிறது.

சிறப்புகள்

சுயம்பு மூர்த்தியாக அமர்ந்திருக்கிறார் சிவபெருமான்

மற்ற கோவில்களைப் போலலல்லாம் இந்த கோவில் அவர் மேற்கு திசை நோக்கி அமர வைக்கப்பட்டிருக்கிறார்.

63 நாயன்மார்களில் ஒருவரான மானக்ஞ்சார நாயனார் இந்த கோவிலில்தான் அவதாரம் செய்து முக்தி அடைந்தாராம்.

கார்த்திகைப் பெண்கள் அறுவரும் இங்குதான் அவதாரம் செய்தார்களாம்.

முகவரி

இந்த கோவிலின் முகவரி

அருள்மிகு காத்ர சுந்தரேஸ்வரர் திருக்கோவில், கஞ்சாநகரம் - 609304, தரங்கமம்பாடி வட்டம், கீழையூர் வழி, நாகப்பட்டினம் மாவட்டம்.

வந்தால் கிடைக்கும் நன்மைகள்

இங்கு வந்து வழிபடுபவர்கள் விரைவில் செல்வந்தராகிவிடுவார்களாம்.

கல்வியில் பின்தங்கி இருந்தாலும் அவர்களின் திறமைகள் அதிகம்.

பெண்களின் நட்பு அதிகம் தேடி வரும்.

மற்ற தெய்வங்கள்

இந்த கோவிலில் இருக்கும் மற்ற தெய்வங்களாக செல்வ விநாயகர், நர்த்தன விநாயகர், முருகர், துர்க்கை, பிரம்மா, சண்டிகேஸ்வரர், மேதா தட்சணமூர்த்தி, நந்தி, நவக்கிரகங்கள்.

அருகாமை கோவில்கள்

மயிலாடுதுறை மயூர்நாதர் கோவில், வள்ளலார் கோவில், திருஇந்தளூர் கோவில், பல்லவனீஸ்வரர் கோவில் ஆகியவை இந்த கோவிலுக்கு அருகில் இருக்கும் கோவில்கள் ஆகும்.

வேண்டுதல்கள்


கார்த்திகை நட்சத்திரக்காரர்களின் தோஷம் நீங்க இந்த கோவில் உதவுகிறது.

திருமணத்தடை விலக இந்த கோவிலில் வேண்டுதல்கள் நடைபெறுகின்றன

குழந்தை பேறுக்காகவும் வேண்டப்படுகின்றன

சொத்துத் தகராறு மற்றும் குடும்ப பிரிவுகள் சேரவும் இந்த கோவிலில் வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.

நேர்த்திக்கடன்

இந்த கோவிலில் நடத்தப்படும் சுமங்கலி பூசை மிகவும் சிறப்பானதாகும். மேலும் இங்கு வேண்டிய அனைவருக்குமே திருமணம் விரைவில் முடிந்துள்ளதாகவும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

கையில் கிளி கொண்ட அம்மன்

இந்த கோவிலின் அம்மன் கையில் கிளி அமர்ந்துள்ளது. அந்த கிளி வேறு யாருமல்ல அது சிவபெருமான் தான்.

வெள்ளிக்கிழமைகளில் இங்கு வந்த பூசை செய்து கிளியை தரிசனம் செய்தால் அடுத்த மாதத்துக்குள் திருமணம் நிச்சயம்.

எப்படி செல்வது


மயிலாடுதுறையிலிருந்து 8 கிமீ தூரம் பயணித்தால் இந்த கோவிலை அடையலாம். மயிலாடுதுறையிலிருந்து மணிக்கு ஒரு பேருந்து இருக்கிறது. பேருந்து வசதிகளுக்கு குறைவில்லை என்றாலும் ஆட்டோ உள்ளிட்ட வாடகை வாகனங்களிலும் செல்லலாம்.

ரயில் விமான நிலையங்கள்

அருகிலுள்ளவிமான நிலையம் திருச்சி ஆகும்

அருகிலுள்ள ரயில் நிலையம் மயிலாடுதுறை

Read more about: travel temple season
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X