Search
  • Follow NativePlanet
Share
» »காஞ்சீபுரம் - இந்தியாவின் பட்டு நகரம்

காஞ்சீபுரம் - இந்தியாவின் பட்டு நகரம்

நவநாகரீகம் என்ற பெயரால் நவீன உடைகள் நம் அலமாரியை ஆக்கிரமித்திருந்தாலும் சேலை கட்டும் போது வெளிப்படும் அழகுக்கு எதுவும் நிகராகாது. சங்க கால இலக்கியமொன்றில் ஒரு தீப்பெட்டி போன்ற சிறியதொரு பெட்டியில் வைக்கும் அளவுக்கு மெல்லியதாய், நுணுக்கமாய் வேயப்பட்டிருக்கிறது ஒரு சேலை.

காலப்போக்கில் எண்ணற்ற மாற்றங்கள் நிகழ்ந்தாலும் இன்றும் மாறாமல் இருக்கும் பாரம்பரியங்களில் ஒன்று சுப காரிய நாட்களில் சேலை அணிவது. தனக்கு பொருத்தமான சேலையை எடுப்பதற்காக பல மணிநேரங்கள் கூட பெண்கள் செலவிடுவதுண்டு. அப்படிப்பட்ட பட்டு சேலைகளுக்கு மிகவும் பெயர்போன காஞ்சீபுரம் நகருக்கு ஒரு பயணம் போகலாம் வாங்க.

காஞ்சீபுரம் :

காஞ்சீபுரம் :

பட்டு சேலைகள் என்றதும் சட்டென நம் ஞாபகத்துக்கு வரும் இடம் காஞ்சீபுரம் தான். இங்கு தயாராகும் பட்டு சேலைகளுக்கு உலகம் முழுக்கவே தனி மதிப்பு உண்டு. அதற்க்கு காரணம் பல நூறு ஆண்டுகளாக பரம்பரை தொழிலாக சேலை நெய்யும் தொழிலாளர்களின் கை வண்ணம் தான்.

Photo:nevil zaveri

காஞ்சீபுரம் :

காஞ்சீபுரம் :

வீட்டில் திருமணம் போன்ற முக்கியமான சுபகாரியங்களுக்கு காஞ்சிபுரத்திற்கு நேரடியாக சென்று பட்டு சேலைகள் வாங்கி வாருங்கள். பெயர் போன கடைகளில் வாங்குவதை காட்டிலும் இங்கே வந்து நேரடியாக வாங்குவதன் மூலம் போலியான பட்டு சேலைகளை வாங்குவதில் இருந்து தப்பிக்கலாம், அதே சமயம் விலையும் பதிக்குபாதி குறைவாக இருக்கும்.

Photo:nevil zaveri

காஞ்சிபுரத்தின் சுற்றுலா அம்சங்கள் :

காஞ்சிபுரத்தின் சுற்றுலா அம்சங்கள் :

தமிழகத்தில் இருக்கும் மிகப்பழமையான நகரங்களில் இதுவும் ஒன்றாகும். கி.மூ 3-2ஆம் நூற்றாண்டில் யோக முனிவரான பதஞ்சலி எழுதிய நூலில் காஞ்சீபுரத்தை பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. அதே போல பழந்தமிழ் மன்னர்களான முக்கால சோழர்கள், பல்லவர்களின் தலைநகரமாகவும் இந்த காஞ்சீபுரம் இருந்திருக்கிறது. அவர்கள் கட்டிய சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த கோயில்கள் ஏராளமாக இருக்கின்றன.

Photo:Jenny Mackness

வரதராஜ பெருமாள் கோயில்:

வரதராஜ பெருமாள் கோயில்:

காஞ்சீபுரத்தில் இருக்கும் முக்கியமான கோயில்களில் ஒன்று இந்த வராத ராஜ பெருமாள் கோயிலாகும். 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இந்த விஷ்ணு கோயிலானது தமிழகத்தில் ஸ்ரீ ரங்கத்துக்கு இணையான மதிப்புடைய வைணவத்தலமாகும்.

Photo: Wikipedia

வரதராஜ பெருமாள் கோயில்:

வரதராஜ பெருமாள் கோயில்:

ல்லவ மன்னன் இரண்டாம் நந்திவர்மனால் கட்டப்பட்டு பின்னர் வந்த சோழர்கள் காலத்தில் விரிவு படுத்தப்பட்டிருக்கிறது. வைகாசி மாதத்தில் கொண்டாடப்படும் பிரம்மோர்த்சவம் இக்கோயிலின் முக்கிய பண்டிகையாகும்.

Photo: Wikipedia

வரதராஜ பெருமாள் கோயில்:

வரதராஜ பெருமாள் கோயில்:

வரதராஜ பெருமாள் கோயில் கோயிலின் முகப்பு தோற்றம்.

Photo: Wikipedia

வரதராஜ பெருமாள் கோயில்:

வரதராஜ பெருமாள் கோயில்:

வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள குதிரைகளின் சிற்பம் ஒன்று. பார்க்க ஏதோ களிமண்ணால் செய்யப்பட்டது போல காட்சியளிக்கிறது.

Photo: Wikipedia

ஏகாம்பரேஸ்வரர் கோயில் :

ஏகாம்பரேஸ்வரர் கோயில் :

காஞ்சீபுரத்தில் இருக்கும் கோயில்களுள் மிகப்பெரியதான இக்கோயிலில் மூலவராக சிவ பெருமான் ஏகாம்பரேஸ்வரராக வீற்றிருக்கிறார்.

Photo: Wikipedia

ஏகாம்பரேஸ்வரர் கோயில் :

ஏகாம்பரேஸ்வரர் கோயில் :

கி.பி 600 ஆம் ஆண்டில் கட்டப்பட்டதாக சொல்லப்படும் இக்கோயில் இந்தியாவில் இருக்கும் பழமையான கோயில்களுள் ஒன்றாகும்.

Photo: Wikipedia

ஏகாம்பரேஸ்வரர் கோயில் :

ஏகாம்பரேஸ்வரர் கோயில் :

ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபம். இது விஜய நகர மன்னர்களால் கட்டப்பட்டிருக்கிறது.

Photo: Wikipedia

ஏகாம்பரேஸ்வரர் கோயில் :

ஏகாம்பரேஸ்வரர் கோயில் :

இக்கோயிலின் கோபுரம் 58.மீ உயரமானதாகும். இது இந்தியாவில் உள்ள உயரமான கோபுரங்கள் உடைய கோயில்களுள் ஒன்றாக சொல்லப்படுகிறது.

Photo: Wikipedia

ஏகாம்பரேஸ்வரர் கோயில் :

ஏகாம்பரேஸ்வரர் கோயில் :

ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் உள்ள கலைநயம் மிக்க ஒரு தூண்.

Photo: Wikipedia

காமாட்சி அம்மன் கோயில் :

காமாட்சி அம்மன் கோயில் :

தமிழகத்தில் இருக்கும் மிகப்பிரபலமான அம்மன் கோயில்களுள் காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலும் ஒன்று. பார்வதி தேவி காமாட்சி அம்மனாக பத்மாசனத்தில் அமர்ந்து காட்சி தருகிறார்.

Photo: Wikipedia

காமாட்சி அம்மன் கோயில் :

காமாட்சி அம்மன் கோயில் :

இக்கோயிலானது பார்வதி தேவியின் ஷக்தி பீடங்களில் ஒன்றாக சொல்லப்படுகிறது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சிறப்பு பூஜைகள் இங்கே நடைபெறுகின்றன.

Photo: Wikipedia

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+