Search
  • Follow NativePlanet
Share
» »கண்டமனூர் ஜமீன் பத்தின இந்த உண்மை தெரியுமா ?

கண்டமனூர் ஜமீன் பத்தின இந்த உண்மை தெரியுமா ?

"கண்டமனூர் ஜமீன்'னு என்னைய கண்டம் பண்ணிட்டாரு" இந்த காமெடி சீனைத் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. வடிவேலு காமெடி தான். கண்டமனூர் - கண்டம் என்ற எதுகை மோனை வார்த்தைக்காக மட்டும் இந்த காமெடியில் வசனங்கள் வைக்கவில்லை. அதில் கூறுவது உண்மை தான். யார் இந்த கண்டமனூர் ஜமீன், இவரது கட்டுப்பாட்டுக்குள் இருந்த பகுதிகள் தான் என்ன ? அது எங்கே உள்ளது ?. வாருங்கள், கண்டமனூர்த் தேடியும், அப்பகுதி ஜமீன் குறித்தும் அறிந்து கொள்வோம்.

ஆங்கிலேயர்களால் உருவான ஜமீன்

ஆங்கிலேயர்களால் உருவான ஜமீன்

முன்னொரு காலத்தில் மன்னர்கள் ஆண்டு வந்த பகுதிகள் யாவும் பாளையங்கள் என அழைக்கப்பட்டன. பின், இந்தியாவிற்குள் ஆங்கிலேயர்களின் படையெடுப்பின் போது பாளையங்கள் அனைத்தும் ஜமீன் முறையாக மாற்றப்பட்டன. இப்படி மாறிய 70க்கும் மேற்பட்ட ஜமீன்களில் மிகப் பெரிய ஜமீன் நிலப்பரப்பைக் கொண்டிருந்ததுதான் கண்டமனூர். ஆங்கிலேயர்களுக்கு இவர்கள் செலுத்திய வரிகளும் அதிகம். கண்டமனூருக்கு உட்பட்ட பகுதிகள் மட்டும் 290 சதுர கிலோ மீட்டர் கொண்டது.

wikipedia

வேலப்ப நாயக்கர்

வேலப்ப நாயக்கர்

கண்டமனூரின் முதல் ஜமீன் என்ற பெருமை வேலப்ப நாயக்கருக்குத் தான் சேரும். ஆங்கிலேயர்களால் இவரே ஜமீனாக பதவியேற்று பட்டயச் சான்று பெற்றார். ஜமீன்தாரின் வாரிசுகளே அடுத்து ஆட்சிப் பொருப்பில் அமர வேண்டும். வேலப்ப நாயக்கருக்கு குழந்தை இல்லை. ஆகவே அவரது தம்பியான ஆண்டி வேலப்பா நாயக்கர் 1817 முதல் 1830 வரையில் ஜமீன்தாராக இருந்தார். அடுத்து அவரது மகன் கொண்டலநாகம நாயக்கரும், அவரது மகன் வேலப்ப நாயக்கரும் இருந்துள்ளனர்.

Hayathkhan.h

சாபத்தால் சரிந்த சாம்ராஜியம்

சாபத்தால் சரிந்த சாம்ராஜியம்

கண்டமனூர் ஜமீனுக்கு உட்பட்ட அனைத்தும் முற்றிலுமாக முடிந்துபோனதற்குக் காரணம் சித்தர் ஒருவர் சபித்த சாபமே. இருப்பினும், இவர்களின் உல்லாசமாக வாழ்வும் சாம்ராஜியம் அழிந்துபோனதற்கு ஓர் முக்கியக் காரணமாகக் கூட இருக்கலாம். அப்படி என்னதான் அன்று நடந்தது ?

சித்தருடன் நட்பு கொண்ட ஜமீன்

சித்தருடன் நட்பு கொண்ட ஜமீன்

ஆண்டி வேலப்பா நாயக்கர் மாவூற்று வேலப்பர் கோவிலுக்கு செல்வது வழக்கம். அவ்வாறு ஒரு முறை சென்ற போதுதான் பளியன் சித்தர் என்பவரின் நட்பும் கிடைத்துள்ளது. சித்தரின் மகிமைகள் அவர்மீது ஒருவித ஈர்ப்பை ஜமீனுக்கு ஏற்படுத்த, இவர்களின் நட்பை உறவினர்களும், ஊர்மக்களும் எதிர்த்து வந்தனர்.

Unknown

சித்தரின் சித்து வேலை

சித்தரின் சித்து வேலை

ஒரு முறை ஊர்ப் பிரச்சனையில் தீர்ப்பு வேண்டி சித்தரிடம் விடை கேட்டார் ஜமீன். ஆனால், அந்தத் தீர்ப்பு ஓர் உயிரை பலியெடுக்கவே ஒட்டுமொத்த உறவினர்களும் பளியன் சித்தரின் மீது குறைகூறி ஊரை விட்டு ஒதுக்கி வருசநாட்டு மலைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிகழ்வு ஜமீனுக்கும், சித்தருக்கும் மேலும் நட்டை அதிகரித்துள்ளது.

Rakesh

நண்பரைக் கொன்ற ஜமீன்

நண்பரைக் கொன்ற ஜமீன்

காலங்கள் கடந்தன. ஒரு நாள் பளியர் சித்தர் தனது மனைவி கர்ப்பிணியாக இருந்த நிலையில் அவரது கண்களை துணியால் கட்டி மறுநாள் வரை திறக்ககூடாது என உத்தரவிடுகிறார். மேலும், ஒரு அம்பில் நவபாசன விசத்தையும் தடவி வைத்தார் சித்தர். அன்று வழக்கம்போல ஜமீன் ஆண்டி வேலப்பர் சித்தரைக் காண வந்த நிலையில், பளியன் சித்தர் தனக்கும் தன் பளியர் இனத்திற்கும் ஜமீனுக்கு இணையான உரிமையும், மதிப்பும் வேண்டும் என வரம் கேட்கிறார். அவ்வளவு தான், கோபமடைந்த ஜமீன்தாரோ அருகில் இருந்த விச அம்பால் சித்தரைக் கொலை செய்கிறார்.

சாபமளித்த சித்தர்

சாபமளித்த சித்தர்

உயிரிழக்கும் முன் சித்தர் ஜமீனுக்கு சாபமளிக்கிறார். அதுவும் சாதாரண சாபம் அல்ல, எப்படி நான் என் குழந்தையை காணாமல் உயிரிழக்கிறேனோ அதேப் போன்று உங்கள் ஒட்டுமொத்த ஜமீன் குடும்பமும் வாரிசைக் கானாமலேயே உயிரிழக்கும் என சாமளித்து உயிர் துறந்தார். அன்று தொடங்கி ஜமீன் குடும்பமும் சரிவைக் கண்டது.

உல்லாச ஜமீன்

உல்லாச ஜமீன்

என்னடா இது, இப்பதான் சாபம் பெற்றார், அதற்குள் உல்லாசமா என தோன்றுகிறதா. ஆம், ஜமீன் அல்லவா. ஜமீனுக்கு குழந்தையும் பிறக்கிறது. ஆனால், சாபத்தைப் போன்று எதுவும் நிகழவில்லை. அத்துடன் தொடர்கிறார் தனது உல்லாச பயணத்தையும். ஆனால், சித்தரின் சாபமோ என்னவோ சிறிது சிறிதாக ஏலத்தில் தன் சொத்துகளை எட்டயபுரம் ஜமீனிடம் இழந்தார். தொடர்ந்து கண்டமனூர் ஜமீனின் வம்சமும் அழியத் துவங்கியது.

சித்தர் குகையிலேயே மரணித்த ஜமீன்

சித்தர் குகையிலேயே மரணித்த ஜமீன்

நிறைவாக, அனைத்தையும் இழந்த ஆண்டி வேலப்பர், நோய்வாய்ப்பட்டு வாழ்வின் கடைசி நாட்களில் சித்தர் வாழ்ந்த குகையிலேயே கழிக்க முடிவு செய்து அங்கு சென்று தங்குகிறார். நீண்ட நாட்கள் ஊர் மக்கள், சொந்தம் என யாரையும் காணாமல் சித்தர் விமோட்சனம் வேண்டி அங்கேயே மரணமும் அடைந்தார். இன்றும் மாவூற்று வேலப்பர் கோவிலின் அருகே சித்தரின் குகை உள்ளது.

எங்கே உள்ளது ?

எங்கே உள்ளது ?

தேனி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகில் உள்ளது கண்டமனூர். இதனருகே உள்ள முத்துநாயக்கம்பட்டி, காட்டுநாயக்கன்பட்டி, வீரசின்னம்மாள்புரம், வரசநாடு மலைப் பகுதி என சுற்றுவட்டாரம் முழுவதுமே கண்டமனூர் ஜமீனுக்கு உட்பட்ட பகுதிகளாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

வேலப்பர் கோவில்

வேலப்பர் கோவில்

வேலப்பர் கோவிலுக்கு அடியில் உள்ள மலைபாறையில் பல்வேறு குகைகள் குடையப் பட்டுள்ளன. இங்கு தான் பளியர் மக்கள் வாழ்ந்து வந்தனர். சுற்றிலும் அடர்ந்த மரங்கள் சூழ மெல்லிய சுனை நீரும், வேலப்பர் முருகன் கோவிலும் இன்றும் பிரசித்தமான ஆன்மீகத் தலமாக உள்ளது.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X