Search
  • Follow NativePlanet
Share
» »குமரி Vs கோவை - தனிமை சுற்றுலாவுக்கு சிறந்தது எது?

குமரி Vs கோவை - தனிமை சுற்றுலாவுக்கு சிறந்தது எது?

தமிழகத்திலேயே சிறந்த இரு மாவட்டங்கள் எது என்று கேட்டால், சுற்றுலாப் பிரியர்கள் பெரும்பாலும் இந்த இரண்டையும்தான் தேர்வு செய்வார்கள். இயற்கை எழில் மிகுந்த இடங்களாக இருப்பது மட்டுமல்லாமல், விலை குறைந்த

By Udhaya

தமிழகத்திலேயே சிறந்த இரு மாவட்டங்கள் எது என்று கேட்டால், சுற்றுலாப் பிரியர்கள் பெரும்பாலும் இந்த இரண்டையும்தான் தேர்வு செய்வார்கள். இயற்கை எழில் மிகுந்த இடங்களாக இருப்பது மட்டுமல்லாமல், விலை குறைந்த சுற்றுலாத் தளங்களாகவும் இருப்பது இதன் கூடுதல் சிறப்பாகும்.

கோயம்புத்தூர் தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரம் மற்றும் தொழில் வளர்ச்சியில் சென்னைக்கு சற்றும் சளைக்காமல் இயங்கிவரும் மாவட்டமாகும். கன்னியாகுமரி இயற்கை வளங்கள் நிறைந்த சுற்றுலாத் தளங்களைக் கொண்ட மாவட்டமாகும். இந்த இரண்டு மாவட்டங்களிலும் சுற்றுலாவுக்கு செல்லநேர்ந்தால் நீங்கள் முக்கியமாக மிஸ் செய்யக்கூடாது பல இடங்கள் உள்ளன. அதே நேரத்தில் இந்த இரண்டு மாவட்டங்களிலும் எது சிறந்தது என்ற கேள்விக்கு விடையாக இந்த பதிவு அமையும் என்று நம்புகிறோம். நம் தளத்திலிருந்து மேலும் தகவல்களை பெறுவதற்கு மேலுள்ள நோட்டிபிகேஷன் மணியை கிளிக் செய்து சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள். நமது முகநூல் பக்கமான தமிழ் நேட்டிவ் பிளானட் ஐயும் பின்தொடருங்கள்.

குமரி Vs கோவை

குமரி Vs கோவை

குமரி மாவட்டத்திலும் சரி, கோயம்புத்தூர் மாவட்டத்திலும் சரி, காடுகளுக்கும் மலைகளுக்கும் பஞ்சமே இல்லை. இவ்விரண்டு மாவட்டங்களிலும் காடு மற்றும் மலையேற்ற சுற்றுலா மிகவும் சிறப்பானதாகும்.

கன்னியாகுமரி மலைகளும் காடுகளும் -

1 தெற்குமலை

2 தடாகமலை

3 பொய்கைமலை

4 மகேந்திரகிரிமலை

5 வீரப்புலி

6 வெள்ளிமலை

7 பழைய குலசேகரம்

8 கீழமலை

9 அசம்பு மற்றும் பல

கோயம்புத்தூர் மலைகளும் காடுகளும் -

1 வால்ப்பாறை

2 பொள்ளாச்சி

3 நீலகிரி காடுகள்

4 ஆனைமலை மற்றும் பல


Silvershocky

Abdulhaimba

நீர் ஆதாரங்கள்

நீர் ஆதாரங்கள்

குமரி, கோவை இரண்டும் நீர் ஆதாரத்துக்கு மேற்கு தொடர்ச்சி மலைகளை நம்பி இருக்கின்றன. தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைகள் மிகுந்த நீர் மற்றும் இயற்கை வளங்களைக் கொண்டிருப்பதால், தமிழகத்தில் மிக வளமான பகுதிகளாக இந்த இரண்டு மாவட்டங்களை ஆக்கியுள்ளது.

கன்னியாகுமரி ஆறு, ஏரி, நீர்வீழ்ச்சிகள்

1 திற்பரப்பு நீர்வீழ்ச்சி

2 ஒலக்கையருவி

3 காளிகேசம் அருவி

4 தாமிரபரணி ஆறு

5 பேச்சிப்பாறை

6 பெருஞ்சாணி

7 சிற்றாறு 1 மற்றும் 2

8 வள்ளியாறு

9 பழையாறு (கிட்டத்தட்ட அழிந்துவருகிறது)

10 பரளி ஆறு

கோயம்புத்தூர் ஆறு, ஏரி, நீர்வீழ்ச்சிகள்

1 நொய்யல்

2 கோவைக் குற்றாலம்

3 குரங்கு அருவி

4 வைதேகி அருவி

5 பவானி ஆறு

6 அமராவதி

7 கௌசிகா

8 ஆழியாறு

9 சிறுவாணி

10 சின்னக்கல்லார் அருவி

11 செங்குபதி அருவி

Jegan M

VasuVR

டிரெக்கிங்

டிரெக்கிங்

மலையேற்றம் என்பது சுற்றுலாவில் முக்கியமான ஒரு பகுதியாகும். ஏனென்றால் சுற்றுலாப் பிரியர்கள் கொஞ்சம் ரிஸ்க் எடுப்பது, தனிமையாக நீண்ட நேரம் கழிப்பது போன்ற நடவடிக்கைகளில் மிகுந்த ஆர்வம் கொள்கிறார்கள். அதிலும் சிலர் டைவிங்க், பிளையிங் போன்ற பறக்கும், மிதக்கும், நீர் சாகச விளையாட்டுக்கள் என நிறைய சாகசங்களை எதிர்பார்க்கிறார்கள். அப்படி எதிர்பார்ப்பவர்களுக்கு கோவையும் சரி, குமரியும் சரி நிறைய இடங்களை தருகின்றன.

குமரியில் டிரெக்கிங்

1 மருத்துவாழ் மலை

2 விளாவூர் மலை

3 கீரிப்பாறை

4 அகத்தியர் மலை டிரெக்கிங்


கோவையில் டிரெக்கிங்

1 ராஜமலை

2 சிறுவாணி

3 டாப் ஸ்லிப்

4 செம்பரா சிகரம்

5 வைதேகி நீர்வீழ்ச்சி (உள்ளே செல்ல சிறப்பு அனுமதி தேவை)

Prof. Mohamed Shareef

Anand Osuri

கோயம்புத்தூரில் தனிமையில் சுற்றுலா செல்ல சிறந்த மற்ற இடங்கள்

கோயம்புத்தூரில் தனிமையில் சுற்றுலா செல்ல சிறந்த மற்ற இடங்கள்

கோவையில் தனியாக சுற்றுலா செல்லவிரும்புபவர்களுக்காக சில இடங்கள் இருக்கின்றன. எனினும் மக்கள் இந்த இடங்களையும் சேர்த்தே பரிந்துரை செய்கின்றனர்

1 தயானலிங்கம்

தயானலிங்கம் இருக்கும் இடத்துக்கு சென்று வழிபட்டு, அங்கு நிலவும் அமைதியான சூழலை மனதில் ஏற்றி, புத்துணர்வை பெற்று திரும்பலாம்


2 ஜி டி நாயுடு அருங்காட்சியகம்

நம்ம ஊரிலிருந்து அறிஞரான இவரின் கண்டுபிடிப்புகளைப் பற்றியும், பெருமைகளைப் பற்றியும் குறைந்தபட்சம் தெரிந்துகொள்ளவாவது செய்யலாம்.

3 பஃன் ரிபப்ளிக் மால்

ஷாப்பிங், அப்றம் சாப்பாடு, கொஞ்ச நேர சுற்றல், அப்றம் உங்களுக்கு விருப்பம் இருந்தா ஒரு மூவி. தனிமையில மூவி பாக்குறது வேற லெவல் ஹாபி தெரியுமா?

4 வஉசி விலங்கியல் பூங்கா

இங்கு இருக்கும் விலங்குகளின் உணர்வுகளை தெரிந்து கொள்ளலாம். தனிமையில் இந்த உலகம் எப்படி பட்டது என்பதும் உங்களுக்கு புரிய வரும். கிட்டத்தட்ட பாதுகாப்பான காட்டுக்குள் உலாவும் சூழல் உங்களுக்கு கிடைக்கும்.

5 கரி மோட்டார் ஸ்பீடு வே

ரேஸிங்க் நடந்தால், அந்த சமயம் சென்று பார்க்கலாம். இல்லையென்றாலும் இந்த இடத்தை பார்த்துவிட்டு வருவது சிறந்ததுதான்.

6 பிளாக் தண்டர்

நீர்விளையாட்டுக்கள் நிறைந்த புத்தம் புதிய அனுபவம். கொச்சி, பெங்களூரில் ராட்சத விளையாட்டு அனுபவம் பெற்றவர்களுக்கு கொஞ்சம் போர் அடிக்கும்தான். இருந்தாலும் தனிமையில் இனிமையான நிகழ்வு காணுங்கள்.

7 அன்னப்பூர்னா, ராயப்பாஸ்

கோவையில் யாரைக் கேட்டாலும் சொல்வார்கள் சுவையான உணவுக்கு எங்கே செல்லவேண்டும் என்பதை. ஆனால் நீங்கள் பட்ஜெட்டில் சுற்றிப்பார்க்கிறீர்கள் என்றால் இதைவிட மலிவான உணவகங்களும் கோவையில் இருக்கின்றன

8 கொடிசியா அரங்கம்

பொருட்காட்சிகள், திருவிழாக்கள், பெரிய நிகழ்வுகள் இங்கு நடக்கும். வாய்ப்பிருந்தால் சென்று பாருங்கள்.

9 தாவரவியல் பூங்கா

வழக்கமான தாவரவியல் பூங்காக்களைப் போல, வேளாண் பல் கலை கழகத்தில் இருக்கும் இந்த பூங்காவும் சிறந்ததாகும்.

Balajijagadesh

குமரியில் தனிமையில் சுற்றுலா செல்ல சிறந்த மற்ற இடங்கள்

குமரியில் தனிமையில் சுற்றுலா செல்ல சிறந்த மற்ற இடங்கள்


1 விவேகானந்தர், திருவள்ளுவர், காந்தி மண்டபம்

கன்னியாகுமரியில் இறங்கி கடற்கரைக்கு செல்லும் முன்னரே அங்கு காந்தி மண்டபத்தையும், சூரிய உதயம், மறைவு ஆகியவற்றையும் அருகாமையில் காணமுடியும். மேலும் படகு பயணத்தில் விவேகானந்த மண்டபம் , திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை காணலாம்.

2 குமரி அம்மன் கோயில்

தேவி திருமணத்துக்கு முன்பு குமரியாக காட்சி தரும் இந்த கோயில் காந்தி மண்டபத்துக்கு சற்று முன்பாக அமைந்துள்ளது. இங்கு சென்று குமரி பகவதியின் அருள் பெற்று திரும்பலாம்.

3 மாயபுரி மெழுகு சிலை அருங்காட்சியகம்

இந்த மெழுகு சிலை அருங்காட்சியகத்தில் அன்னை தெரசா, அப்துல்கலாம், மைக்கேல் ஜாக்சன், சார்லி சாப்ளின், ஐன்ஸ்டின், ரவீந்திரநாத் தாகூர், மகாத்மா காந்தி, போப் பிரான்சிஸ், அமிதாப் பச்சன், அர்னால்டு, டேவிட் பெகாம், மன்மோகன்சிங், பாரக் ஒபாமா, ப்ரூஸ் விலிஸ், ஜேக் ஸ்பேரோ ஆகியோரது மெழுகு சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

4 பத்மநாபபுரம் கோட்டை

பத்மநாபபுரம் கோட்டை, அரண்மனை இரண்டும் அந்த காலத்திய நாகரிகம் பற்றியும் கட்டிடக் கலைப் பற்றியும் நமக்கு எடுத்துக் கூறுகின்றன. திருவனந்தபுரத்திலிருக்கும் பத்மநாபசுவாமி கோயிலின் சிறப்பை பற்றியும் தெரிந்துகொள்ளலாம்.

5 தாணுமாலயன் கோயில்

நாகர்கோயிலுக்கு முன் இருக்கும் சுசீந்தரம் தாணுமாலயன் கோயில் பற்றியும், அதன் வரலாறு பற்றியும் தெரிந்து கொள்ளவும், அங்கு இருக்கும் சிவ பிரம்ம விஷ்ணு கடவுளரின் அருள் பெறவும் இங்கு செல்லலாம்

6 பூவார் தீவு கடற்கரை

குமரியிலிருந்து கொஞ்சம் தொலைவு என்றாலும் நல்ல பொழுதுபோக்கான இடமாக உள்ளது இந்த கடற்கரை

7 கோவளம் கடற்கரை

இதுவும் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மிக அருகில் அமைந்துள்ள கடற்கரை ஆகும்.

8 கன்னியாகுமரி காடுகள்

9 உதயகிரி கோட்டை

10 பேச்சிப்பாறை அணை

Manju Shakya

சித்தாறல்

சித்தாறல்

சித்தாறல் என்ற சின்ன கிராமம் கன்னியாகுமரியிலிருந்து 45 km தொலைவில் அமைந்துள்ள ஒரு புகழ் பெற்ற சுற்றுலாத்தலம். இதிலுள்ள மலைக்கோயிலும் ஜெயின் நினைவுச் சின்னங்களுமே இந்த ஸ்தலத்தின் புகழுக்குக் காரணமாக விளங்குகின்றன.

சித்தாறல் மலைக்கோயில் ஒரு குன்றின் மேல் அமைந்துள்ளது. இந்த குன்றின் மேல் உள்ள குகையில், பாறைகளில் செதுக்கிய ஊழிய கடவுள்கள் மற்றும் ஜெயின் தீர்தங்கரார்களின் உருவங்களை காணலாம்.

இந்த சிற்பங்களும் செதுக்கள்களும், குகைப் பாறையின் உட்புறமும் வெளிபுறமும் பல உள்ளன. குகைக் கோயிலை அடைய 10 நிமிட தூரம் குன்றின் மேல் நடக்க வேண்டும்.

சித்தாறலிலுள்ள ஜெயின் நினைவுச் சின்னங்கள் வளமான பண்பாட்டிற்கு எடுத்துக்காட்டு. கடவுள்களுக்கு கொடுக்கும் மரியாதையாக எண்ணி பல சுற்றுலாப் பயணிகள் இங்கே வருவதுண்டு.

இங்கிருக்கும் ஜெயின் நினைவுச் சின்னங்களாகிய விக்கிரகங்களும் பாறைக் கூடாரங்களும் 9-11 நூற்றாண்டுகளில் வடிவமைக்கப்பட்டதாக கருதப்படுகிறது.

Infocaster

வாவத்துரை

வாவத்துரை

வாவத்துரை என்பது கன்னியாகுமரியில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம். இது அங்குள்ள செயின்ட் ஆரோக்கிய நாதர் கத்தோலிக் கிறிஸ்துவ தேவாலயத்திற்கு புகழ் பெற்றது. கடற்கரையை ஒட்டியே உள்ள இந்த தேவாலயம், 2010-ஆம் ஆண்டு கோட்டரின் இன்றைய தலைமை குருவான அருள்திரு பீட்டர் ரெமிகஸ் D.D அவர்களால் நிறுவப்பட்டது. இந்த தேவாலயம் செயின்ட் ஆரோக்கிய நாதருக்கு அர்ப்பணிக்கப்பட்டது. எப்போதும் மக்களை நோயிலிருந்து காப்பாற்றி அனைவருக்கும் நல்ல உடல்

Mapantony

ஓலக்குருவி நீர்வீழ்ச்சி

ஓலக்குருவி நீர்வீழ்ச்சி


மிக முக்கியமான சுற்றுலாத் தளமான ஓலக்குருவி நீர்வீழ்ச்சி நாகர்கோவிலில் இருந்து 20கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது. இயற்கைச் சூழலில் அமைந்திருக்கும் இந்நீர்வீழ்ச்சிக்கு கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் தவறாமல் வருகை தருகிறார்கள். தென்னிந்தியாவில் புகழ்பெற்ற நீர்வீழ்ச்சிகளில் இதுவும் ஒன்றாகும். உள்ளூர் நம்பிக்கைகளின்படி ஓலக்கருவி நீர்வீழ்ச்சி மருத்துவ குணங்கள் நிறைந்ததாகக் கருதப்படுகிறது. தோல்வியாதிகளையும், மூட்டு வலிகளையும் குணப்படுத்தும் தன்மை கொண்ட இந்நீர்வீழ்ச்சி, அதில் குளிக்கும் வயதானவர்கள் புத்துணர்ச்சி பெறவும், சக்தி பெறவும் உதவுகிறது. நாகர்கோயில் நகரத்தில் இருந்தே நீர்வீழ்ச்சிக்கு சாலை வசதி இருக்கிறது. இருப்பினும் நீர்வீழ்ச்சிக்கு சற்று தொலைவிலேயே இந்த சாலை முடிவுறுகிறது. நீர்வீழ்ச்சியை அடைய சிறிது தொலைவு நடக்கவேண்டும். இந்த நடைபாதை சிறிது தொலைவே என்றாலும் நடைபாதையைச் சுற்றி இருக்கும் இயற்கை சூழல் காண்போரை மயங்கச் செய்யும் அழகுடன் விளங்குகிறது.

Gokulnathk

சிங்காநல்லூர் ஏரி

சிங்காநல்லூர் ஏரி


சிங்காநல்லூர் ஏரி கோயம்புத்தூரின் சிங்காநல்லூர் பகுதியில் அமைந்துள்ளது. இந்த ஏரியைச் சுற்றி உள்ள பல வகையான பூக்கள் மற்றும் தாவரங்களால் இது இங்கு வசிக்கும் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் புகழ் பெற்ற இடமாக உள்ளது. இதைச் சுற்றிலும் உள்ள புல்வெளிகளை இருப்பிடமாகக் கொண்டு வாழும் பறவையினங்களால், பறவைகளைப் பார்க்கவருபவர்களுக்கு இந்த ஏரி சொர்க்கமாக தெரிகிறது. இந்த இடத்திற்கு கிட்டத்தட்ட நூறு வகையான பறவைகள் வழக்கமாக வருவதாக நம்பப்படுகிறது. வசந்த காலத்தில் இங்கு பறவைகளைக் காண வரும் சுற்றுலாப் பயணிகளால் இந்த இடம் பரபரப்பாக காணப்படும். உலகெங்கிலும் இருந்து பறவை ஆராய்ச்சி செய்யும் வல்லுனர்கள் இங்கு மட்டுமே காணக் கிடைக்கும் அரிய ,அபூர்வ பறவைகளை காண வருகிறார்கள். எக்ரெட் , ஹெரான் , ஸ்டார்க் , இபிஸ் , ஸ்பூன் பில் , கைட் , ஹாரியர் , டீல் முதலியன இங்கு வரும் பறவைகளுள் சிலவற்றின் வகையாகும்.

K. Mohan Raj

 மருதமலை கோயில்

மருதமலை கோயில்

கோயம்புத்தூரில் உள்ள மருதமலை கோயில் இந்துக் கடவுள் முருகனுக்காக பிரத்தியேகமாக அமைக்கப்பட்டது. மலை உச்சியில் இந்தக் கோயில் அமைந்துள்ளதால் மருதமலை என்று அழைக்கப்படுகிறது. இக்கோயில் முற்காலத்தில் கொங்கு வேட்டுவ கவுண்டர் மன்னர்களின் சொத்தாக விளங்கியது. முருகக் கடவுளுக்கான கோயில்களில் அறுபடைவீடு ஆலயங்களிற்கு அடுத்த முக்கியத்துவத்தை இந்தக் கோயில் பெறுகிறது. முருக பக்தர்கள் மருதமலை முருகனின் ஏழாவது படைவீடு என்று நம்புகின்றனர். இந்தக் கோயில் புராதனமானது. பல வேத புராணங்களில் குறிப்பிடப் பட்டுள்ளது. இன்னும் சொல்லப்போனால் திருமுருகன்பூண்டி ஆலயத்தில் உள்ள கல்வெட்டுகள் கூட மருதமலை கோயில் பற்றி குறிப்பிடுகின்றன. இந்தக் கல்வெட்டுக் குறிப்புகளைக் காணும்போது மருதமலை கோயில் குறைந்தபட்சம் 1200 ஆண்டுகள் பழமையானது என்பதை ஒருவர் கணிக்க முடியும். முருகக் கடவுளின் பிற கோயில்களைப் போலவே மருதமலை கோயிலும் மேற்குத் தொடர்ச்சியின் விரிவான இந்த மலை உச்சியில் அமைந்துள்ளது. கோயம்புத்தூரிலிருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளதால் சாலை வழியாக எளிதில் அடையக்கூடியதாக இருக்கிறது.

Sodabottle

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X