Search
  • Follow NativePlanet
Share
» »கார்கில் போரும் கட்டுக்கோப்பான வாஜ்பாய் அரசும் என்ன நடந்துச்சி தெரியுமா?

கார்கில் போரும் கட்டுக்கோப்பான வாஜ்பாய் அரசும் என்ன நடந்துச்சி தெரியுமா?

By Udhaya

இந்தியாவின் பெருமையை சொல்லும் பல விசயங்களுள் முக்கியமான ஒன்றாக இருப்பது கார்கில் போர். அப்போது பிரதமராக இருந்தவர் அடல் பிகாரி வாஜ்பாயி. அவரது தலைமையிலான அரசு துணிந்து எடுத்த முடிவில் இந்திய படையினர் வெற்றி பெற்றனர். வரலாற்றில் பொறிக்கப்பட்ட இந்த வெற்றியால் நம் நாட்டுக்கு பெருமை தேடி தந்தவர் வாஜ்பாய். ஆனால் நாம் நினைப்பது போல் கார்கில் வெறும் போருக்காக மட்டும் நினைவு கொள்ளத் தக்கது அல்ல.. அது இன்னும் சில விசயங்களுக்காக புகழ் பெற்றதாகும். போரின் வரலாற்றுடன் அதன் சிறப்பம்சங்களையும் பற்றி இந்த பதிவில் விரிவாக காண்போம்.

 போர் காரணம்

போர் காரணம்

மே 1999ம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவமும் காஷ்மீரி போராளிகளும் இந்திய கோட்டைத் தாண்டி உள் நுழையே போருக்கு அடித்தளம் அமைத்து கொடுத்தனர் அவர்கள். இந்தியாவைப் பொறுத்தவரையில் அந்நியர்களான அவர்களை விட்டுவிடுவது சரியல்ல. இதனால் இந்திய குடியிருப்பில் அமைதிக்கு பங்கம் வரும் என கருதிய அதிகாரிகள் பதில் தாக்குதல் நடத்த திட்டமிட்டனர். இதில் வேடிக்கை என்னவென்றால் ஆரம்பத்தில் இந்த போரில் நாங்கள் ஈடுபடவில்லை என பாகிஸ்தான் கூறியது. அது வெறும் தீவிரவாத செயல் எனவும் உலகை நம்ப வைத்தது. பின்னர் கிடைத்த ஆவணங்கள் மூலம் போரில் பாகிஸ்தான் ராணுவ தளபதி தலைமையில் ஈடுபட்டது தெரியவந்தது.

 அணு ஆயுத சக்தி மிக்க இரு நாடுகளுக்கு இடையேயான போர்

அணு ஆயுத சக்தி மிக்க இரு நாடுகளுக்கு இடையேயான போர்

இந்த போரில் மிக முக்கியமாக குறிப்பிட வேண்டிய ஒரு விசயம் என்னவென்றால் அணு ஆயுதம். இதனால் உலகை ஒரு நொடியில் அழிக்கமுடியும். இது உலகம் முழுவதும் தடை செய்யப்பட்டது என்றாலும் ரகசியமாக பல நாடுகள் இந்த ஆயுத சோதனைகள் நடத்தியே வருகின்றன. அப்படி இந்தியா பாகிஸ்தான் இரண்டு நாடுகளுமே அணுகுண்டு சோதனை நடத்தி அதில் வெற்றி பெற்றவையாகும். இப்போது போரின் அச்சுறுத்தல் உங்களுக்கு கொஞ்சம் விளங்கியிருக்கும்தானே.. இரு நாடுகளில் எந்த நாடு நினைத்தாலும் கொல்லப்படபோவது அப்பாவி மக்கள்தான்.

இந்தியா 1974ல் முதல் முறையும் பின் 19998ல் இரண்டாவது முறையும் என அணு ஆயுத சோதனை நிகழ்த்தியது. பாகிஸ்தானும் 1998 ம் ஆண்டு சோதனை நடத்தியதாக தெரிகிறது.

Mail2arunjith

 கார்கில் எங்கே இருக்கிறது

கார்கில் எங்கே இருக்கிறது

கார்கில் நகரம் ஸ்ரீநகரில் இருந்து 20 கிமீ தூரத்தில் இந்திய வடக்கு எல்லையில் அமைந்துள்ளது.

இமய மலைக்கு மிக அருகில் அமைந்துள்ளதால் மிதமான வானிலை கொண்டதாக கார்கில் விளங்குகிறது.

ஸ்ரீநகரையும் லே பகுதியையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை கார்கில் வழியே தான் செல்கிறது.

 கார்கில் சுற்றுலாத் தளங்கள் | செய்யவேண்டியவை

கார்கில் சுற்றுலாத் தளங்கள் | செய்யவேண்டியவை

கார்கில் போருக்கு பிறகு இந்த இடங்களுக்கு மக்கள் செல்ல அனுமதி இல்லாமல் இருந்தது. எனினும் இங்கு காண்பதற்கு ஏகப்பட்ட இடங்கள் காணப்படுகின்றன. அவற்றில்

திராஸ் போர் நினைவுச் சின்னம்

லமாயுரு மானஸ்டெரி

சுரு பள்ளத்தாக்கு

முல்பெக் மானஸ்டெரி

குண்டர்மன் கிராமம்

குகை மானெஸ்டரி

ராங்க்டம் மானெஸ்டரி

கார்ஸ்டெ ஆறு

சனி மானெஸ்டெரி

அப்பாத்தி புத்தர் சிலை ஆகிய வை முக்கியமானவையாகும். மேலும் இந்த மாநிலத்தில் சுற்றுலா செல்பவர்கள் காண வேண்டிய ஏராளமான தளங்கள் குறித்தும் பார்க்கலாம்.

wiki

 கர்ஷா மடாலயம் | ஈர்க்கும் இடங்கள் | செய்யவேண்டியவை

கர்ஷா மடாலயம் | ஈர்க்கும் இடங்கள் | செய்யவேண்டியவை

கர்ஷா, ஷான்ஸ்கரில் உள்ள மிகப் பெரிய மடாலயமாகும். இது, பதூமில் இருந்து 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இங்கே பல தேவாலயங்களும், 150 பெளத்த பிக்குகளுக்கான அறைகளும் உள்ளன. கர்ஷா மடாலயம், இப்பகுதியில் உள்ள மிகப் பெரிய மற்றும் பணக்கார மடாலயமாகும்.

இயற்கையின் மடியில் அமைந்துள்ள இம்மடாலயம், பக்ஸ்பா ஷிராப், என்பவரால் 11 ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது. இம்மடாலயத்தில் இரண்டு சட்டசபை அரங்குகள், எட்டு கோவில்கள், மற்றும் நூலகம் உள்ளது. இந்த நூலகம் ஷான்ஸ்கரில் உள்ள மிகப் பெரிய நூலகமாக அறியப்படுகிறது.

பண்டைய சுவரோவியங்களை, கடவுள் மற்றும் மத அறையின் சுவர்களில் காணலாம். இந்த ஓவியங்களின் வரலாறு 15 ஆம் நூற்றாண்டு வரை பின்னோக்கி செல்கிறது. மடத்தின் மற்றொரு பகுதியில், டோர்ஜெ ஷோங்க் என்கிற கன்னி மடம் உள்ளது.

hamon jp

 முல்பெகே மடாலயம் | ஈர்க்கும் இடங்கள் | செய்யவேண்டியவை

முல்பெகே மடாலயம் | ஈர்க்கும் இடங்கள் | செய்யவேண்டியவை

முல்பெகே மடாலயம் கார்கிலிருந்து 45 கி.மீ. தொலைவில் உள்ள முல்பெகே கிராமத்தில், ஒரு பள்ளத்தாக்கின் இறுதியில் அமைந்துள்ளது. இம்மடம் சாலையிலிருந்து 200 மீ, உயரத்தில், ஒரு மலையின் மேல் உள்ளது.

இம்மடலயத்தில் ` எதிர்கால புத்தர்', ` சிரிக்கும் புத்தர்', அல்லது `மைத்ரேயா புத்தர்' என்கிற 9 மீ உயரமுள்ள சிலை உள்ளது. இந்த சிலை 8 ஆம் நூற்றாண்டில் செதுக்கப்பட்டது. இச்சிலையை, ` லடாக்' பகுதியில் புத்த மதத்தை அறிமுகப்படுத்திய மிஷினரிகள் கொண்டு வந்தனர்.

இம்மடத்தில் பல பெளத்த பிக்குகளின் மிச்சங்கள் எஞ்சியுள்ளன. மடாலயத்தின் கட்டிடக்கலை மற்றும் சிற்பங்கள், இந்த மடங்கள் திபெத்தை சேர்ந்தவை அல்ல என்று நிரூபிக்கின்றன.

kargil.nic.in

 ஷோங்குல் மடாலயம் | ஈர்க்கும் இடங்கள் | செய்யவேண்டியவை

ஷோங்குல் மடாலயம் | ஈர்க்கும் இடங்கள் | செய்யவேண்டியவை

ஷோங்குல் மடாலயம், பதூம்-கிஷ்ட்வாருக்கு ட்ரெக்கிங் செல்லும் வழியில் ஒரு கண்கவர் குகையின் உள்ளே நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

அடிங் ஜார்ஜ் மீது அமைந்துள்ள இந்த மடம், நரோபா என்ற ஒரு பிரபலமான இந்திய யோகா குருவுடன் தொடர்புடையது. இம்மடம் இரண்டு குகைகளை சுற்றி கட்டப்பட்டுள்ளது. இக்குகைகளில்தான் நரோபா தியானம் செய்துள்ளர். குகைகளின் சுவர்களில் அந்த கலத்திய கலை பாணியை பிரதிபலிக்கும் மிக பழமையான ஓவியங்கள் தீட்டப்பற்றிருக்கின்றன.

kargil.nic.in

 புக்தல் மடாலயம் | ஈர்க்கும் இடங்கள் | செய்யவேண்டியவை

புக்தல் மடாலயம் | ஈர்க்கும் இடங்கள் | செய்யவேண்டியவை

புக்தல் மடாலயம், பார்வையாளர்களின் கண்களை கவரும் வகையில் அமைந்த்துள்ளது. இது ஒரு பெரிய குகையின் வெளியே கட்டப்பட்டுள்ளது. இந்த குகையின் வாசலில் லுங்நாக் நதி பாய்ந்து ஓடுகிறது.

புக்தல் மடாலயம், ஷான்ஸ்கரின் தனிமைப்படுத்தப்பட்ட மடாலயமாகும். 12 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் நிறுவப்பட்ட இந்த மடத்தில் உள்ள அழகான சுவரோவியங்கள், இந்திய பாணியிளான கலையை வெளிப்படுத்துகின்றன.

kargil.nic.in

 பதூம் | ஈர்க்கும் இடங்கள் | செய்யவேண்டியவை

பதூம் | ஈர்க்கும் இடங்கள் | செய்யவேண்டியவை

பதூம் அல்லது பதம் கார்கிலில் இருந்து 240 கி. மீ. தொலைவில் அமைந்துள்ள, ஷான்ஸ்கர் தாலுகாவின் மிகப்பெரிய நகரமாகும். பண்டைய காலங்களில் இந்த நகரம், ஷான்ஸ்கர் பேரரசின் தலைநகரமாக செயல்பட்டு வந்தது.

உள்ளூர் ராஜாவின் சேற்று அரண்மனை, ஒரு சிறிய மடம், மற்றும் ஆற்றின் அருகே கண்டுபிடிக்கப்பட்ட 8 ஆம் நூற்றாண்டை சேர்ந்த பாறை சிற்பங்கள் ஆகியன இங்கே உள்ள முக்கிய இடங்கள்.

ஒரு சிறிய குன்றின் மீது அமைந்துள்ள, பிபிடிங் எனப்படும் பண்டைய கிராமத்தில், அமைந்துள்ள மடம் பார்வையாளர்களை பெரிதும் கவர்கிறது.

kargil.nic.in

 ஷான்ஸ்கர் | ஈர்க்கும் இடங்கள் | செய்யவேண்டியவை

ஷான்ஸ்கர் | ஈர்க்கும் இடங்கள் | செய்யவேண்டியவை

ஷான்ஸ்கர், ஜம்மு & காஷ்மீர் மநிலத்தின் வடக்கு பகுதியில் கார்கில் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு தாலுகாவாகும். கடும் பனிப்பொழிவு காரணமாக ஆண்டு தோறும், சுமார் எட்டு மாதங்கள், ஷான்ஸ்கர் முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டு, உலகின் பிற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டு விடும்.

4.401 மீ மற்றும் 4.450 மீ வரையிலான உயரத்தில் அமைந்துள்ள இரண்டு சிறிய ஏரிகள் இப்பகுதியில் உள்ளன. இப்பகுதியில் திபெத்திய பாணியிலான `கர்ஷா', ஷோங்குல், மற்றும் `ஸ்ட்ராங் டே' போன்ற பல மடங்கள் உள்ளன. மலை முகட்டின் உச்சியில் அமைந்துள்ள ஏராளமான தங்கும் தளங்கள், அதிக அளவிலான சுற்றுலா பயணிகளை ஈர்க்கின்றன.

சுற்றுலா பயனிகளை அதிக அளவிள் கவரும் டிராங் - டரங் பனியாறு ஷான்ஸ்கர் செல்லும் வழியில் காணப்படுகின்றது. சுரு பள்ளத்தாக்கின் மத்தியில் உள்ள இந்த இடம், கார்கில் மற்றும் கம்பீரமான இமயமலையின் அழகான காட்சியை நமக்கு அளிக்கின்றது. கர்ஷா, புக்தல் மற்றும் ஸ்டரிமோ மடாலயங்கள் இந்த இடத்தின் மற்ற பிரதம சுற்றுலா இடங்களாகும்.

Corto Maltese

Read more about: travel jammu
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more