Search
  • Follow NativePlanet
Share
» »கண் திறந்து பார்த்த கருமாரியம்மன்! கடுமையான தண்டனை காத்திருக்கிறது!

கண் திறந்து பார்த்த கருமாரியம்மன்! கடுமையான தண்டனை காத்திருக்கிறது!

கண் திறந்து பார்த்த கருமாரியம்மன்! கருவிழியால் கட்டளையிட்ட கோவில் எங்கே தெரியுமா?

வேலூரைத் தாண்டி தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய மாரியம்மன் கோவில் பற்றிதான் தற்போது அனைவரது பேச்சும். ஆமா.. இந்த கோவில்ல மாரியம்மன் சிலை கண் திறந்து பாத்துச்சினு ஊர் மக்கள் பேச, இது வேலூர் மாவட்டம் தாண்டி தமிழகம் முழுக்க பேச்சா கெடக்கு. அதுமட்டும் இல்லாம ஆந்திரா மற்றும் கர்நாடகத்தின் தென் மாவட்ட பகுதி மக்களுக்கும் போயி சேர்ந்துடிச்சி. அங்கும் இந்த கோவில் நிறைய மக்களால பேசப்பட்டு வருது. வாருங்கள் அந்த கோவில் எங்க இருக்கு, அங்கு சுத்தி என்னவெல்லாம் இருக்குங்குறத பத்தி பாக்கலாம்.

 எங்குள்ளது

எங்குள்ளது

காட்பாடி அருகே செங்குட்டை பஜனை கோயில் தெருவில் ஒரு மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் மிகவும் பழமையானது.

மிகவும் சக்தி வாய்ந்த அம்மன்

மிகவும் சக்தி வாய்ந்த அம்மன்

சக்தி வாய்ந்த அம்மன் இந்த ஆலயத்தில் குடியிருப்பதாக அந்த பகுதி மக்களால் நீண்ட காலமாகவே அதிகமாக நம்பப்பட்டு வருகிறது.

மார்கழி மாத வழிபாடு

மார்கழி மாத வழிபாடு

வழக்கமான மார்கழி மாத சிறப்பு வழிபாடுகள் தற்போது நடந்து வருகிறது. அப்படித்தான் கோயிலில் வழிபாடு நடந்து கொண்டிருந்தது. இதனால் ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர். மாரியம்மன் கோவில் என்பதால் பெண்களும் நிறைய பேர் இந்த பூஜை வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர்.

கண் திறந்த கருமாரியம்மன்

கண் திறந்த கருமாரியம்மன்

இந்நிலையில் திடீரென ஒரு தகவல் அது அம்மன் சாமி கண் திறந்துடிச்சாம். அப்படி ஒரு தகவல் கிளம்பியதும் இது ஊர் முழுக்க பரவியது. ஒரே இரவில் வேலூர் மாவட்டம் முழுவதும் பதைபதைக்கும் தகவலாக பரவி, வட தமிழகத்தின் பெரும்பாலான மக்கள் இதைப் பற்றி பேச ஆரம்பித்துவிட்டனர். அவர்கள் பதபதைக்க ஒரு காரணம் இருக்கிறது.

கடும் தண்டனை

கடும் தண்டனை

இந்த கோவிலின் ஐதீகப்படி, எப்போது பெரும் குற்றம் நிகழ்கிறதோ அப்போது கடவுள் கண் திறந்து தண்டனை வழங்குவார் என்பதாகும். இதன்படி, கடவுள் கண் திறந்ததாக கிளம்பிய புரளியால், கடவுள் நம்பிக்கை இருக்கும் மக்கள் கொஞ்ச நேரம் பயந்தே போனார்கள் என்றே சொல்லலாம். தமிழ்நாடு இப்போது இருக்கும் நிலைமைக்கு யாருக்கு வேண்டுமானாலும் தண்டனை கிடைக்கலாம் என்றும் அரசல் புரசலாக பேசிக்கொண்டனர்.

பிரகாசமான கண்கள்

பிரகாசமான கண்கள்

மக்கள் கூட்டத்தால் கலைகட்டிய கோவில், சிறிது நேரத்தில் உள்ளே நுழைய முடியாத அளவுக்கு அந்த தெருவே கூட்டமாகியது. குறுகிய தெருதான் எனவே மக்கள் நெரிசலில் சாமியைக் காண வந்தோடினர். ஆனாலும் அவர்கள் ஏமாந்து திரும்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கண் திறந்து பார்த்ததை ஏன் யாரும் புகைப்படம் எடுக்கவில்லை என்பதும் பெரிய கேள்வியாக உள்ளது. ஆனாலும் சிலர் இந்த நிகழ்வில் சாமி வந்து ஆடினர். அதைத் தொடர்ந்து பக்தர்கள் பலர் இந்த கோவிலுக்கு வந்து வழிபட்டனர்.

 கடுமையான தண்டனை

கடுமையான தண்டனை

தவறு செய்தவர்கள் நிச்சயம் தண்டனையைப் பெறுவார்கள். மாரியாத்தா கண் திறந்து பாத்துட்டா நிச்சயம் நீதி கிடைக்குமென்று அவரவர்க்கு பேசிக்கொண்டார்கள். எனினும் யாரை மனதில் வைத்து பேசினார்கள் என்பதை அவர்களிடம்தான் கேட்க வேண்டும். தமிழ்நாட்டுல கொஞ்சநஞ்ச பிரச்சனையா ஓடிக்கிட்டு இருக்கு..

More News

    Read more about: travel temple
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+