Search
  • Follow NativePlanet
Share
» »அரிய விலங்குகளை எல்லாம் பார்க்க எங்க போறதுன்னு தெரியலையா ? இங்க போய் பாருங்க...

அரிய விலங்குகளை எல்லாம் பார்க்க எங்க போறதுன்னு தெரியலையா ? இங்க போய் பாருங்க...

அரிய விலங்குகளை எல்லாம் பார்க்க வேண்டும், அதனுடன் ஒரு செல்ஃபி எடுக்க வேண்டும் என ஆசைகள் பல அனைவருக்கும் இருக்கும். அப்படிப்பட்ட ஆசைகள் உள்ளோர், விடுமுறையை விலங்குகளுடன் பயனுடையதாக செலவிட விரும்புவோர்

PC : Diganta Talukdar

நம்மில் பெரும்பாலானோருக்கு அரிய விலங்குகளை எல்லாம் பார்க்க வேண்டும், உடன் ஒரு செல்ஃபி எடுத்து பேஸ்புக்கில் போட வேண்டும் என ஆசைகள் பல இருக்கும். வன விலங்கு ஆர்வலராக இருந்தால் சொல்லவே வேண்டியதில்லை. எந்நேரமும் விலங்குகளைத் தேடி காட்டில் பயணிப்பதும் எதிர்பாராத விதமாக காணக்கிடைக்கும் விலங்குகளைக் கண்டு மகிழ்ச்சியடவதும், அது குறித்து அரிந்து கொள்வதும் வேற லெவல் ஃபீலிங்ஸ். அவ்வாறு காட்டிற்குள் சென்று விலங்குகள் எதையும் காண முடியாமல் திரும்புவது கொஞ்சம் வேதனைதான். ஆனால், இதுபோன்ற ஏமாற்றங்களில் இருந்து விலகி, விலங்குகள் பலவற்றை காண விரும்புவோர் ஒரு முறை இங்க போய் பார்த்துட்டு வாங்களேன்.

எங்க இருக்கு தெரியுமா?

எங்க இருக்கு தெரியுமா?

PC : Vikramjit Kakati

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாம் இந்தியாவின் பன்முகத்தன்மையின் எடுத்துக்காட்டாக திகழ்கிறது. இயற்கை வளம் மிகுந்த இந்த மாநிலத்தின் கலாச்சாரம் தனித்துவமானது. பசுமை போர்த்தியது போன்று காட்சியளிக்கும் இமாலய மலைகள், சீறிப்பாயும் பிரம்மப்புத்திரா ஆறு, மணம் வீசும் தேயிலைத் தோட்டங்கள், வகை வகையான மிருகங்கள் வாழும் காடுகள் என அசாம் அள்ளித்தரும் அற்புதங்களுக்கு அளவே இல்லை. அம்மாநிலத்தில் அமைந்திருக்கும் புகழ்பெற்ற காசிரங்கா தேசியபூங்கா இயற்கையின் அதிசயங்கள் நிரம்பிய இடம். வாங்க, அங்க என்ன இருக்குதுன்னு பார்க்கலாம்.

காசிரங்கா தேசியப் பூங்கா

காசிரங்கா தேசியப் பூங்கா

PC : Diganta Talukdar

காண்டாமிருகங்களை பற்றி கேள்விப்பட்ட ஜார்ஜ் கர்சான் என்னும் ஆங்கிலேயரின் மனைவி காண்டாமிருகங்களை காண வந்து ஒன்றை கூட பார்க்க முடியாமல் போனதால் தன் கணவரிடம் முறையிட்டதைத் தொடர்ந்து, அவர் அழிந்து வரும் உயிரனமான அவற்றை பாதுகாக்க உத்தரவிடுகிறார். இப்படி 1904-ஆம் துவங்கப்பட்டது தான் இந்த காசிரங்கா தேசியப் பூங்கா.

சவால் நிறைந்த பூங்கா

சவால் நிறைந்த பூங்கா

PC : RAJEEV BASUMATARY

உலக புராதன சின்னங்களில் ஒன்றான இந்த பூங்கா, உலகில் பாதுகாக்கப்பட்ட இடங்களிலேயே வைத்து புலிகள் அதிக அடர்த்தியாக வாழும் இடமாக உள்ளது. இதன் காரணமாக 2006-யில் இந்த பூங்கா புலிகள் சரணாலயமாகவும் அறிவிக்கப்பட்டது. இங்கிருக்கும் உயரமான புட்களில் இவை பதுங்கிக்கொள்வதால் புலிகளை கணக்கெடுப்பது பெரும் சவாலாக இருக்கும்.

ஆண்மை கூட்டும் கொம்பு

ஆண்மை கூட்டும் கொம்பு

PC : Diganta Talukdar

இதைத்தவிர உலகில் இருக்கும் மூன்றில் ஒரு பங்கு ஒற்றை கொம்பு காண்டாமிருகங்கள் இங்கே அதிகளவில் உள்ளன. இந்த காண்டாமிருகங்களின் கொம்பிலிருந்து ஆண்மைக்குறைவுக்கான மருந்து தயாரிக்க முடியும் என நம்பப்படுவதால் வேட்டைக்காரர்களால் அதிகம் வேட்டையாடப்பட்டு அழிந்து போகும் நிலையில் இருந்த காண்டாமிருகங்களின் எண்ணிக்கை தற்போது வெகுவாக பெருகியுள்ளது.

வேற என்னவெல்லாம் இருக்கு ?

வேற என்னவெல்லாம் இருக்கு ?

PC : Rahulyadav96

புலி, காண்டாமிருகங்கள் மட்டுமல்ல... யானைகள், ராஜ நாகங்கள், காட்டு எருமைகள், மான்கள், 100-க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் என இப்பூங்காவினுள் ஏராளமான பல்லுயிர்கள் வாழ்கின்றன. வெகுவாக அழிந்து வரும் பிணந்தின்னி கழுகளும் இப்பூங்காவில் அதிகளவில் இருப்பது சற்று வியக்கத்தகுந்த விசயம்தான். மிகப்பெரிதாக வளரக்கூடிய பாம்பு வகைகளான ஆசிய மலைப்பாம்பு, ராக் பைதான், அதிக விஷம் கொண்ட ராஜ நாகங்கள் போன்ற பாம்பு வகைகளும் இங்கே வாழ்கின்றன.

சவாரி விரும்பிகளே..!

சவாரி விரும்பிகளே..!

PC : Udit Kapoor

மிருகங்கள் அழிந்து போவதை தடுக்க எடுக்கப்பட்ட முயற்சிகளில் இப்பூங்கா ஓரளவு வெற்றியும் கண்டுள்ளது. இங்கே சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் பூங்காவைச் சுற்றிப்பார்க்க வரும் சுற்றுலாப்பயணிகள் யானை சவாரி அல்லது ஜீப் மூலம் பூங்காவை சுற்றிப்பார்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் முதல் அக்டோபர் இறுதிவரை மழைகாலத்தில் இப்பூங்கா மூடப்படுவதால் சரியான திட்டமிட்டு செல்ல வேண்டும்.

லெட்ஸ் டேக் செல்ஃபியா...

லெட்ஸ் டேக் செல்ஃபியா...

PC : Adrita Ghosh 94

வனவிலங்குகளை உங்களுக்கு பிடிக்குமென்றாலோ, அவற்றை புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் உடையவராகவோ நீங்கள் இருந்தாலோ காசிரங்கா தேசியப் பூங்கா உங்களுக்கு சொர்க்கம் தான். யாரும் எதிர்பாராத படி அரிய விலங்குகளுடன் வகை வகையா புகைப்படம் எடுத்து போட்டா "லைக்ஸ் சும்மா பிச்சுக்கும்"

எப்படி அடையலாம்?

எப்படி அடையலாம்?

PC : I, Deepraj

அசாம் மற்ற மாநிலங்களுடன் விமானம், ரயில் மற்றும் சாலை போக்குவரத்து வசதிகளால் நன்கு இணைக்கப்பட்டிருக்கிறது. குவஹாட்டி நகரத்தில் லோகப்பிரியா கோபிநாத் போர்டோலோய் இண்டர்நேஷனல் ஏர்போர்ட் விமான நிலையம் அடைந்து அங்கிருந்து சுமார் 213 கிலோ மீட்டர் பயணித்தால் காசிரங்கா தேசியபூங்காவை அடையலாம்.

More News

Read more about: assam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+