Search
  • Follow NativePlanet
Share
» »சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈர்க்கும் கீழ்ப்பெரும்பள்ளம் - ஏன் தெரியுமா?

சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈர்க்கும் கீழ்ப்பெரும்பள்ளம் - ஏன் தெரியுமா?

சிதம்பரத்தை அடுத்த கீழ்ப்பெரும்பள்ளம் எனும் சிறிய ஊர் சமீப நாட்களில் சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈர்த்து வருகிறது. மேலும், இந்த ஊரைச் சுற்றிலும் நிறைய சுற்றுலா அம்சங்கள் நிறைந்து காணப்படுகிறது. இதுவே இ

By Udhaya

சிதம்பரத்தை அடுத்த கீழ்ப்பெரும்பள்ளம் எனும் சிறிய ஊர் சமீப நாட்களில் சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈர்த்து வருகிறது. மேலும், இந்த ஊரைச் சுற்றிலும் நிறைய சுற்றுலா அம்சங்கள் நிறைந்து காணப்படுகிறது. இதுவே இங்கு சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகை தர காரணமாக இருக்கிறது.

எங்குள்ளது

எங்குள்ளது

தமிழகத்தின் சிதம்பரம் மாவட்டத்தில் உள்ள அழகான சிறிய கிராமமே கீழ்பெரும்பள்ளம். இது திருவேற்காட்டின் அருகே இருக்கிறது. இங்கே அமைந்திருக்கும் புகழ்பெற்ற கீழ்பெரும்பள்ளம் கோவில் அதிக அளவில் பக்தர்கள் மற்றும் பயணிகளை ஈர்த்து வருகிறது. இந்தியாவின் வளமையான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை அனுபவிக்க விரும்பும் வேற்று நாட்டு சுற்றுலாப் பயணிகள் இடையே இக்கிராமம் புகழ்வாய்ந்தது ஆகும். இக்கிராம மக்களின் அன்றாட வேலைகளாகிய பால் கரத்தல் மற்றும் விவசாயம் ஆகியவற்றில் பங்குபெறுவதற்காக நீண்ட நாட்கள் இங்கு தங்கி இருக்க பல பயணிகள் விரும்புகிறார்கள். கேது தேவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவிலே கீழ்பெரும்பள்ளத்தின் முக்கிய ஈர்ப்பு ஆகும்.

Rsmn

கிரகங்களின் கோயில்

கிரகங்களின் கோயில்

கேது கிரகத்தை வழிபடவும், அந்த கிரகத்தினால் ஏற்படக்கூடிய தீய காரியங்களுக்கு பரிகாரம் செய்யவும் திரளான மக்கள் இங்கே கூடுகின்றார்கள். கீழ்பெரும்பள்ளத்தின் அருகே இருக்கும் மற்றும் ஒரு புகழ்வாய்ந்த சுற்றுலாத் தலம் பூம்புகார் கடற்கரை. ஒன்பது நவக்கிரக கோவில்களில் ஒன்றான கீழ்பெரும்பள்ளத்தின் அருகே 8 நவக்கிரக ஸ்தலங்களும் இருக்கின்றன. அவை திருநல்லார் (சனி அல்லது சனீஸ்வரர்), கஞ்சனூர் (வெள்ளி அல்லது சுக்ர தேவன்), திருவேங்கடு (புதன் அல்லது புதனீஸ்வரர்), சூரியனார் கோவில் (சூரியன் அல்லது சூரிய தேவன்), திங்களூர் (நிலா அல்லது சந்திர தேவன்), ஆலங்குடி (குரு அல்லது வியாழன்), வைதீஸ்வரன் கோவில் (செவ்வாய்), திருநாகேஷ்வரம் (பாம்பு கிரகமாகிய ராகு) ஆகியவை

எப்படி செல்வது

எப்படி செல்வது

கீழ்பெரும்பள்ளம் கிராமத்தில் ரயில் நிலையமோ விமான நிலையமோ இல்லை, ஆனால் அரசாங்கத்தால் நன்கு பராமரிக்கப்பட்டு வரும் சாலை வழியாக எளிதில் இவ்விடத்திற்கு பயணம் செய்யலாம். இந்த கிராமத்திற்கு குளிர் சாதனம் அல்லது சொகுசு பேருந்து வசதி இல்லை என்றாலும், இக்கிராமத்திற்கு சென்று வர தினந்தோறும் பேருந்து சேவையை அரசாங்கம் இயக்கி வருகின்றது. குளிர்காலத்தில் இங்கே வானிலை இனிமையாக இருப்பதால் குளிர்க்காலத்தில் திரளான சுற்றுலா பயணிகள் இங்கு வருகை தருகிறார்கள்.

கோயில்

கோயில்

சிவபெருமானும் பார்வதியும் இங்கு நாகநாத ஸ்வாமியாகவும் சௌந்தரநாயகியாகவும் வழிபடப்பட்டாலும், இக்கோவில் கேதுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டதாகும். கேது தேவனே இக்கோவிலின் முக்கிய கடவுள் என்பதால் பாதி மனிதனும் பாதி பாம்புமாக சித்தரிக்கப்பட்ட கேதுவின் சிலை இங்கு வைக்கப்பட்டு இருக்கின்றது. த ங்கள் ஜாதகத்தில் தவறான இடத்தில் கேது இருப்பதால் தோஷம் அடைந்த மக்கள், அதற்கு ஜோதிட பரிகாரம் செய்ய இந்த கோவிலுக்கு வருகிறார்கள்.

சோழமன்னர்கள் கட்டியது

சோழமன்னர்கள் கட்டியது

சிவபெருமானுக்கு பக்தர்களாக இருந்த சோழ மன்னர்களால் கி.பி. 12ஆம் நூற்றாண்டில் இக்கோவில் கட்டப்பட்டதாக நம்பப்படுகின்றது. இன்று, இக்கோவில் தமிழக மக்களுக்கு ஒரு முக்கிய வழிபாட்டுத் தலமாக இருக்கிறது. சுந்தரர், அப்பர் மற்றும் சம்பந்தர் ஆகிய மகா புருஷர்கள் இக்கோவிலை வாழ்த்தி பாடி இருக்கிறார்கள். கீழ்பெரும்பள்ளத்தில் இருக்கும் இக்கோவிலையும், தஞ்சாவூரில் இருக்கும் பிரகதீஷ்வரர் கோவிலையும் இணைக்கும் சுரங்கப்பாதை இருப்பதாக பரவலான நம்பிக்கை இங்கு நிலவுகிறது. எனினும், அடிக்கடி ஆய்வு செய்த பிறகும் இங்கு அப்படி எந்த ஒரு சுரங்கப்பாதையும் கண்டுபிடிக்கப்படவில்லை.

Rsmn

Read more about: travel temple
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X