Search
  • Follow NativePlanet
Share
» »கொச்சியிலிருந்து கோவளம் வரை.... கேரள கடற்கரைகளில் அனுபவியுங்கள்!

கொச்சியிலிருந்து கோவளம் வரை.... கேரள கடற்கரைகளில் அனுபவியுங்கள்!

கொச்சியிலிருந்து கோவளம் வரை இரண்டு நாள்களில் கேரள கடற்கரைச் சுற்றுலாவை அனுபவியுங்கள்...

By Udhaya

கேரளா என்றாலே மனதுக்குள் ஒரு மத்தாப்பூ பூத்ததுபோல ஆனந்தம். அப்படி என்னவோ தெரியல சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் தன் அழகால் கட்டியிழுக்கிறது இந்த கேரளா..

கேரள பெண்களைப் போன்றே அவர்களின் உணவு உபசரிப்பு எல்லாம் கொள்ளை அழகுதான். சரி கேரளா என்றாலே அங்குள்ள மலைகளும் கடற்கரைகளும்தான் மனதிற்கு நினைவு வரும்..

கேரள கடற்கரைகளில் மகிழ்ந்து புரண்டு, அவர்களின் புட்டு, கொண்டைக்கடலை குழம்பும் உண்டு மகிழ ஆசையா.. உடனே திட்டமிடுங்கள். இரண்டே நாள்களில் ஐந்து கடற்கரைகள்..

நமது பயணத்தை கொச்சியிலிருந்து ஆரம்பிக்கலாம் . நம் இலக்குகளுக்கு இடைப்பட்ட பயணதூரம் ஏறக்குறைய ஓரளவுக்குத் துல்லியமாக கீழே தந்துள்ளோம்.

கொச்சி - ஆலப்புழை 1 மணி 15 நிமிட பயணதூரம்
ஆலப்புழை - கொல்லம் 1 மணி 40 நிமிட பயணதூரம்
கொல்லம் - கோவளம் 2 மணி நேர பயணதூரம்

சரி பயணம் ஆரம்பமாகட்டும்............

 நாள் 1

நாள் 1

நாள்: 1

இடம்: கொச்சி

நேரம்: காலை 8 மணி

காலை உணவுகளை முடித்துவிட்டு, தங்கியிருந்த விடுதியை காலி செய்துவிட்டு திரும்புங்கள். இன்று ஒருநாள் முழுவதும் கொச்சியை சுற்றலாம்.

கொச்சி

கொச்சி

இரண்டே நாள்களில் கேரளாவின் அழகிய
கொச்சி அல்லது எர்ணாகுளம் கேரளாவின் வடக்குபகுதியில், அரபிக்கடலின் ஓரத்தில் அமைந்துள்ள மாநகரமாகும்.

எர்ணாகுளம் ஒரு முக்கியமான துறைமுகமாகும். இந்நகரம் அரபிக்கடலின் அரசி என்று அழைக்கப்படுகிறது.

இது மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தில் இருந்து 220 கிலோமீட்டர் தொலைவில் வடக்குத் திசையில் அமைந்துள்ளது.

PC: Sanif

 கொச்சி கோட்டை கடற்கரை

கொச்சி கோட்டை கடற்கரை

கொச்சியின் கடற்கரை பகுதிகள் பழைய கொச்சி அல்லது கோட்டை கொச்சி என்று அழைக்கப்படுகிறது.

PC: Challiyan

 இரண்டே நாள்களில் கேரளாவின் அழகிய கடற்கரைகளுக்கு ஒரு சுற்றுலா

இரண்டே நாள்களில் கேரளாவின் அழகிய கடற்கரைகளுக்கு ஒரு சுற்றுலா

கடற்கரை நடைபாதை

PC: Ranjith Siji

இம்மாணுவேல் கோட்டை

இம்மாணுவேல் கோட்டை

கொச்சி முதன் முதலில் மலபாரில் உள்ள பொன்னனி தாலுகவில் உள்ள கிராமத்தினையொட்டி பெரும்படப்பு நாடு என்று அழைக்கப்பட்டு வந்தது. பின்னர் 1341ல் துறைமுகம்

உருவானபோது இதன் பெயர் கொச்சின் என்றழைக்கப்படலாயிற்று.

மதியம் 12மணி தொட்டதும், இந்த சுற்றுலாவை நிறைவு செய்துவிட்டு கேளிக்கை பூங்காவை நோக்கி செல்லலாம். அங்கேயே மதியஉணவை உண்டு, விளையாட்டு திருவிழாவை குதூகலிக்கலாம்.

PC: Challiyan

 ஒண்டர்லா - கேளிக்கைப் பூங்கா

ஒண்டர்லா - கேளிக்கைப் பூங்கா


கொச்சினிலிருந்து ஒரு மணி நேரத்துக்கும் குறைவான பயண தூரத்திலேயே அமைந்துள்ளது ஒண்டர்லா பூங்கா.. குழந்தைகள் முதல் பெரியவர் அனைவரும் மகிழும் வண்ணம் அனைத்து

வித விளையாட்டுக்களும் உள்ள இந்தியாவின் பெரிய அம்யூஸ்மெண்ட் பார்க்களில் ஒன்றாகும்.

மதியம் 1 மணிக்கெல்லாம் வந்துவிட்டால் மாலை வரை முடிந்த அளவு அனைத்து வித விளையாட்டுக்களையும் அனுபவித்துவிட்டு வரலாம்.
பின் மாலையில் ஆலப்புழை நோக்கி பயணிக்கலாம்.

ஏறக்குறைய இரண்டு மணிநேரங்களில் ஆலப்புழையை அடைந்துவிடலாம். பின்னர் அங்கு தங்கி ஓய்வெடுக்கலாம்.

PC: RanjithSiji

இரண்டாம் நாள்

இரண்டாம் நாள்

நாள் 2

இடம் ஆலப்புழை

நேரம் இரவு 9 மணி

நாள் முழுவதும் ஆடிப்பாடிவிட்டு வந்த சோர்வில் உங்களுக்கு ஓய்வெடுக்க தகுந்த விடுதிகளைப் பார்த்து தேர்ந்தெடுங்கள். நகரத்திற்கு சற்று வெளியே நல்ல தரமான விடுதிகள்

குறைந்தவிலையில் கிடைக்கின்றன. உங்கள் பணத்திட்டமிடலைப் பொறுத்து விடுதிகளின் வசதிகள் இருக்கும் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும். காலையில் 8

மணிக்கெல்லாம் கிளம்பியாகவேண்டும்.

 ஆலப்புழை

ஆலப்புழை

ஆலெப்பி' என்ற பெயரால் தற்சமயம் அறியப்படும் ‘ஆலப்புழா' உப்பங்கழிப் பகுதியானது ஓய்வுக்கும் ஏகாந்தத்துக்கும் பெயர் பெற்ற இடமாகும். ‘கீழைத்தேசத்து வெனிஸ் நகரம்' என்று

இது அழைக்கப்படுகிறது என்று சொன்னாலே போதும், ஆஹா! என்ற உணர்வு நம் மனதின் நிச்சயம் தோன்றாமல் இருக்காது.

PC: Prof.Mohamed Shareef

 படகு போட்டி

படகு போட்டி

ஆலப்புழாவில் படகுப்போட்டி மிகவும் பிரசித்திப் பெற்றதாகும். இதனைக் காண வெளிநாடுகளிலிருந்தும் சுற்றுலாப்பயணிகள் வருகைத் தருகின்றனர். இது விழாக்காலங்களில் மட்டும்

நடப்பதால் நீங்கள் அதற்கேற்றவாறு திட்டமிட்டு சென்றால் போட்டியைக் கண்டு ரசிக்கலாம்.

PC: Manojk

 படகு குழாம்

படகு குழாம்

இங்கு குழந்தைகள் ஆடி மகிழ்ந்திட படகு சவாரியும் உள்ளது. இதில் பங்கேற்று திரும்புகையில் மனம் ஆனந்த கூத்தாடும். மீண்டும் மீண்டும் செல்லத்தூண்டும்.

இதுபோன்ற அயல்மாநில சுற்றுலாக்களில் நேரமேலாண்மை மிக முக்கியம். எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு விரைவாக முடித்துவிட்டு கொல்லம் நோக்கி செல்லவேண்டும்.

PC: Vimaljoesph93

 கொல்லம்

கொல்லம்

ஏறக்குறைய 2 மணி நேர பயணம் என்பதால், மதிய உணவுக்கு முன்னர் சென்றடைவது சிறப்பு..

PC: Arunvrparavur

 முந்திரித் தோட்டங்கள்

முந்திரித் தோட்டங்கள்


இங்குள்ள முந்திரித் தோட்டங்கள் இயற்கையாகவே மிக அழகாக இருக்கும்.. பச்சை பசேலென்று இருக்கும் இலைகளுக்கு மத்தியில் மஞ்சள் நிறக் கனிகள் ......உங்கள் எண்ணங்களை

சிறகடிக்கச் செய்யும்....

PC: Abhishek Jacob

அஷ்டமுடி ஏரி

அஷ்டமுடி ஏரி

மிக அழகான ஏரிகளுள் ஒன்றான அஷ்டமுடி ஏரி மீன் பிடிக்க சிறந்த பகுதியாகும். அவர்கள் மீன்பிடிப்பதை பார்ப்பதே மிக அழகாக இருக்கும்.

PC: wikipedia

 இரண்டே நாள்களில் கேரளாவின் அழகிய கடற்கரைகளுக்கு ஒரு சுற்றுலா

இரண்டே நாள்களில் கேரளாவின் அழகிய கடற்கரைகளுக்கு ஒரு சுற்றுலா


லைட் ஹவுஸிலிருந்து ஒரு காட்சி

Pc: Arunvrparavur

 கொல்லம் கடற்கரை

கொல்லம் கடற்கரை


Pc: Arunvrparavur

 படகு இல்லம்

படகு இல்லம்


அஷ்டமுடி ஏரியில் மிதந்துவரும் படகு இல்லம். இதன் சவாரி மிகவும் அழகு.

PC: Arunvrparavur

 கோவளம்

கோவளம்

கேரளாவின் மிக அழகிய கடற்க்கரையான இந்த வர்கலா பீச்சின் சிறப்பு என்னவென்றால் இங்கு அரேபியக்கடல் மற்றும் இந்தியப்பெருங்கடல் ஆகிய இரண்டின் கரைகளும் இங்கே ஒரே

இடத்தில் அமைந்திருக்கின்றன. மேலும் ஒரு கேரளாவில் மலைக்குன்றை ஒட்டி அமைந்திருக்கும் ஒரே கடற்கரையும் இதுதான்.

PC: Manju Shakya

ஹவா பீச், கோவளம்

ஹவா பீச், கோவளம்


நீச்சலடிக்க மற்றும் சூரியக்குளியல் போட தகுந்த இடமாக இந்தக்கடற்க்கரை உள்ளது. இங்கு நடக்கும் சூரிய அஸ்தமனத்தின் கண் கொள்ளாக்காட்சியை காண ஏராளமான

சுட்ட்ருலாப்பயனிகள் வருகின்றனர். இந்தக்கடற்க்கரை பாபநாசம் பீச் என்ற பெயரிலும் விளிக்கப்படுகிறது.

PC: Manju Shakya

 ஒற்றையடி பாதை

ஒற்றையடி பாதை

தென்னைமரங்கள் நிறைந்த இயற்கை எழில் கொஞ்சும் அழகிய காட்சி

PC: BishkekRocks

 பயண நிறைவு

பயண நிறைவு

கோவளத்தின் இயற்கை அழகுகளை ரசித்துக்கொண்டே பயணத்தை நிறைவு செய்யலாம்.

PC: Mehu antani

நன்றி

நன்றி

இன்னும் ஒரு நாள் சுற்றிப் பார்க்கவேண்டுமென்றால், அருகிலுள்ள இடங்களான திற்பரப்பு,கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று பாருங்கள்.

இப்படி ஒரு கன்னியாகுமரி சுற்றுலாவை நீங்கள் வாழ்க்கையிலேயே அனுபவித்திருக்கமுடியாது!

Read more about: travel kerala
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X