Search
  • Follow NativePlanet
Share
» »தேனி பக்கத்துல ஒரு கோடி லிங்கம்... போனா என்ன நடக்கும்னு தெரியுமா ?

தேனி பக்கத்துல ஒரு கோடி லிங்கம்... போனா என்ன நடக்கும்னு தெரியுமா ?

பசுமை சூழ்ந்த காடு, மலையை உரசிச் செல்லும் மேகக் கூட்டங்கள் என ஒட்டுமொத்த உடலையும் பரவச நிலையடையச் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது கோடிலிங்கம் லிங்கபர்வதவர்த்தினி ஆலயம் கோவில்.

By SABARISH

PC : Mprabaharan

ஒரே இடத்துல இத்தன லிங்கமா ? எங்க இருக்குன்னு தெரியுமா ?

சிவலிங்கம் என்பது பல தத்துவங்களை உள்ளடக்கிய வடிவமாக உள்ளது நாம் அறிந்ததே. லிங்கத்தின் தோற்றம் உடலுறுப்பு போன்ற வடிவமைப் கொண்டுள்ளது, நீள் வட்டத் தோற்றம் சூரியக்குடும்பத்தின் பாதையை குறிக்கிறது, பிரதான உணவான அரிசியைக் குறிக்கிறது என்று பல்வேறு கருத்துக்கள் உள்ளன. இதனால்தான் சிவனை வணங்கி அன்னமிட்டால் கோடி சிவலிங்கத்தை வழிபட்ட பலன் கிடைக்கும் என்று கூறுகிறார்கள். ஆனால், இந்த கோடி லிங்கத்தையும் ஒரே இடத்தில் கண்டு தரிசிக்க வேண்டுமா? அப்படிப்பட்ட இடம் எனங்க இருக்குதுன்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.

எங்க உள்ளது ?

எங்க உள்ளது ?

PC : Map

கோவையில் இருந்து 260 கிலோ மீட்டர் தொலைவிலும், மதுரையில் இருந்து 124 கிலோ மீட்டர் தொலைவிலும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ளது கோடிலிங்கம் லிங்கபர்வதவர்த்தினி ஆலயம். பசுமை சூழ்ந்த காடு, மலையை உரசிச் செல்லும் மேகக் கூட்டங்கள் என ஒட்டுமொத்த உடலையும் பரவச நிலையடையச் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது இந்தக் கோவில்.

சிறப்புகள்

சிறப்புகள்

PC : Lingam-temple

கோடிலிங்கம் லிங்கபர்வதவர்த்தினி கோவில் தனியார் அறக்கட்டளையின் மூலம் நிறுவப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்தக் கோவிலில் கோடி லிங்கம் வைக்க திட்டமிடப்பட்டு தற்போதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட லிங்கங்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், இந்தக் கோவிலில் பல லிங்கங்களை வைக்க பணிகள் நடைபெற்று வருகின்றன.

புண்ணியதானம்

புண்ணியதானம்

PC : Lingam-temple

சுருளி மலைத் தொடரில் தேவர்களும், எண்பத்து மூன்றாயிரம் ரிஷிகளும் தங்கியிருந்ததாகக் கருதப்படும் கயிலாய மலைக் குகை இருப்பதால் இங்கு புண்ணியதானம் செய்யப்படுவது வழக்கம். இறந்தவரின் ஆன்மா சாந்தியடைய அவர்கள் உதவுவார்கள் என்று நம்பப்படுகிறது. கோடிலிங்கத்தினை வழிபட வருவோர் இறந்தவர்களுக்கான இறுதிக்கடன்களில் ஒன்றான புண்ணியாதானம் செய்யும் நிகழ்வுகளும் அதிகளவில் நடைபெறுகிறது.

மனதை மயக்கும் மலைத் தொடர்

மனதை மயக்கும் மலைத் தொடர்

PC : Kujaal

லிங்கபர்வதவர்த்தினி கோவிலில் சிவிலிங்க வழிபாட்டிற்குப் பிறகு சுற்றுவட்டாரப் பகுதியில் சுற்றிப் பார்க்க வேண்டிய எண்ணற்றத் தலங்கள் இங்கே உள்ளது. சுருளி அருவி, கும்பக்கரை அருவி, மேகமலை, போடி மெட்டு, வெள்ளிமலை, முல்லைப் பெரியாறு அணை, சோத்துப்பாறை அணை உள்ளிட்ட இடங்கள் இப்பகுதியில் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களாக திகழ்ந்து வருகின்றன.

சுருளி அருவி

சுருளி அருவி

PC : Mprabaharan

சுருளி அருவி உள்ள பகுதியில் 18 குகைகள் காணப்படுகின்றன. இந்த அருவியின் அருகே சுருளி வேலப்பர் கோவில் உள்ளன. சுமார் 40 அடி உயரம் கொண்ட இந்த அருவியில் ஜூன் முதல் அக்டோபர் மாதங்களில் நீர் வரத்து அதிகளவில் காணப்படும். கீழ்ச் சுருளி, மேல்ச்சுருளி என இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ள இந்த அருவியில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உருவாகி மூலிகைகள் நிறைந்ததாக கொட்டும் நீர் புத்துணர்ச்சி அளிப்பதோடு நோய்களையும் தீர்க்கும் வல்லமை கொண்டுள்ளது.

கும்பக்கரை அருவி

கும்பக்கரை அருவி

PC : Huka Falls

சுருளி அருவியில் இருந்து சுமார் 71 கிலோ மீட்டர் தொலைவில் கொடைக்கானல் மலையடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது கும்பக்கரை அருவி. இயற்கைச் சூழல் நிறைந்த கும்பக்கரை நீர்வீழ்ச்சிப் பகுதியில் இந்த நீர்வீழ்ச்சியைத் தவிர வழுக்குப் பாறை, உரல் கெஜம், பாம்பு கெஜம் என மேலும் சில நீர்வீழ்ச்சிகளும் காணப்படுகின்றன.

மேகமலை

மேகமலை

PC : Vinoth Chandar

மேகங்கள் தவழும் மலை என்பதால், மேகமலை என்று பெயர்பெற்றது இந்த மலை. தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் பள்ளத்தாக்கின் கிழக்குப் பகுதியில் உயர்ந்து நிற்கும் இந்த மலைத் தொடர், ஒரு பக்கம் மேற்குத் தொடர்ச்சி மலைகளாலும், மறுபக்கம் வருசநாடு மலைத் தொடராலும் இணைந்துள்ளது. இரு மலைத் தொடர்களுக்கு நடுவே, பசுமையான தேயிலைச் செடிகள் சூழ அழகான நீர்த் தேக்கங்கள் கண்டுரசிக்க கண்கள் இரண்டு போதாது.

போடி மெட்டு

போடி மெட்டு

PC : Arshad.ka5

தென்னாட்டு காஷ்மீர் என்றழைக்கப்படும் மூணாறு செல்லக்கூடிய வழியில் தமிழக, கேரளாவை இணைக்கும்படி அமைந்துள்ளது போடிமெட்டு. தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு மற்றும் கேரளா எல்லை அருகே அமைந்துள்ள ஒரு மலை வாழ் கிராமம் இது. இதன் மிக அருகிலேயே மூணார், மறையூர், தேக்கடி, கொடைக்கானல், இடுக்கி அணை உள்ளிட்ட பிரபலமான சுற்றுலாத் தளங்கள் அமைந்துள்ளது.

எப்படிச் செல்ல வேண்டும்

எப்படிச் செல்ல வேண்டும்

PC : Map

தேனியில் இருந்து 22 கிலோ மீட்டர் சமவெளியில் பயணம் செய்தால் போடி முந்தலை அடையலாம். அங்கிருந்து 17 கொண்டை ஊசி வளைவுகள் உடைய மலைப்பகுதியை கடந்து 22 கிலோ மீட்டர் பயணித்தால் போடிமெட்டு மலைப்பகுதியை அடையலாம். தேனியிலிருந்து போடிமெட்டு வழியாக 88 கிலோ மீட்டர் தூரத்தில் மூணாறு உள்ளது. அங்கு போடிமெட்டு வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் உயரமான மலையின் உச்சி, பனிமூட்டம், இயற்கை எழில் கொஞ்சும் பசுமையை கண்டு ரசிக்கலாம்.

வெள்ளிமலை

வெள்ளிமலை

PC : Cyrillic

சுருளி நீர்வீழ்ச்சியில் இருந்து 65 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது வெள்ளிமலை. வருசநாடு மலைத்தொடரில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியான இங்கு பூக்களும் தாவரங்களும் கண்களைக் கவரும். மேலும், இப்பகுதியின் அருகில் அமைந்துள்ள சதுரகிரி சிவன் கோவில், சாம்பல் நிற அணில் சரணாலயம் உள்ளிட்டவை சுற்றுலாப் பயணிகளை பெரிதும் ஈர்த்து வருகிறது.

முல்லைப் பெரியாறு அணை

முல்லைப் பெரியாறு அணை

PC : Rameshng

கம்பத்தில் இருந்து அடர்ந்த வனப்பகுதியின் நடுவே சுமார் 49 கிலோ மீட்டர் பயணித்தால் முல்லை பெரியார் அணையை அடையலாம். தமிழக - கேரள எல்லைப் பகுதியில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த அணை தமிழக அணைகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

சோத்துப்பாறை அணை

சோத்துப்பாறை அணை

PC : Kujaal

போடியில் இருந்து சுமார் 42 கிலோ மீட்டர் தொலைவில் அகமலை அடுத்து அமைந்துள்ளது சோத்துப்பாறை அணை. வராக ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த அணையின் அருகாமையில் பெரியகுளம், தேனி, கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கொழுக்குமலை

கொழுக்குமலை

அதென்ன கொழுக்குமலைன்னு யோசிச்சுட்டு இருக்கீங்களா?.. பெரும்பாலும் அரியப்படாத குளுகுளு சீதோஷன நிலைகொண்டதுதான் இந்த கொழுக்குமலை. இதுக்குமேல இந்த மலைக்கு இன்னொரு சிறப்பும் இருக்கு. தமிழில் வெளிவந்த மைனா படம் எடுத்த மலை இதுதாங்க. கட்டிட நெரிசல், வாகன இரைச்சல், வேலைப் பழு இதில் இருந்து தப்பிச்சு மன நிம்மதியை தேடி போறதா இருந்தா இங்க போங்க. உங்களுக்கு இந்த இடம் கண்டிப்பாக நிம்மதியையும், புத்துணர்ச்சியையும் கொடுக்கும்.

எழில் கொஞ்சும் தேக்கடி

எழில் கொஞ்சும் தேக்கடி

PC : Appaiah

தமிழக- கேரள எல்லையில் அமைந்திருக்கும் அழகான இடம் தேக்கடி. தமிழகத்தின் தேனி மாவட்டத்தின் எல்லையான குமுளியில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் தேக்கடி அமைந்துள்ளது. இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலமாக இப்பகுதி விலங்குகிறது.

வனவிலங்கு சரணாலயம்

வனவிலங்கு சரணாலயம்

PC : Theni.M.Subramani

தேக்கடியில் சுமார் 675 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள வனவிலங்கு சரணாலயம் சுற்றுலாப் பயணிகளுக்கு மேலும் மகிழ்ச்சிதரும் பகுதியாகும். பச்சைப் பசேலென பரந்து விரிந்து கிடக்கும் இந்த சரணாலயத்தில் யானைகள், காட்டெருமை, மான்கள், குரங்குகள் என பல வனவிலங்குகள் கூட்டம் கூட்டமாக திரிவதை பார்க்கலாம்.

யானை சவாரி

யானை சவாரி

PC : JKDs - Flickr

தேக்கடியை நோக்கி சுற்றுலாப் பயணிகள் படையெடுப்பிற்கு முக்கியக் காரணம் யானை சவாரியும் ஒன்று. பசுமை நிறைந்த அடர் காட்டின் நடுவே யானை மீது அமர்ந்து காம்பீரமாய் பயணம் செய்ய யார் தான் விரும்ப மாட்டார்கள். ஒய்யாரமாக நடந்து செல்லும் யானை மீது அமர்ந்து காட்டின் அழகை ரசிக்க விரும்புவோர் தேக்கடிக்கு உடனே ஒரு ட்ரிப் போக தயாராகுங்க.

Read more about: travel
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X