Search
  • Follow NativePlanet
Share
» »பரிசல் சவாரி, ஜில்லுன்னு குளியல், சுடச்சுட மீன் வறுவல் - இந்த வாரம் இங்க போகலாமா?

பரிசல் சவாரி, ஜில்லுன்னு குளியல், சுடச்சுட மீன் வறுவல் - இந்த வாரம் இங்க போகலாமா?

வெயிலின் தாக்கம் சற்று குறைந்து விட்டது, நம்ம நண்பர்களுடன் அல்லது நம்ம குடும்பம் மற்றும் குட்டீஸ்களுடன் ஒரு சின்ன பிக்னிக் செல்ல வேண்டும் என்று நீங்க நினைச்சா உங்களுக்கு ஒரு சூப்பர் ஐடியா தருகிறோம்! ஈரோட்டில் மட்டுமே ஏகப்பட்ட அழகிய தடுப்பு அணைகளும், மிகப்பெரிய அணைகளும் உள்ளன. அவற்றில் ஒன்றான கொடிவேரி அணை பற்றி தான் இப்போது பார்க்கப் போகிறோம். கொடிவேரி அணை அதன் இயற்கை அழகு மற்றும் அமைதியான சூழலுக்காக ஈரோட்டில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய முக்கிய அம்சமாக இருக்கிறது. இதன் சிறப்பம்சம் என்ன? எதற்காக இங்கே செல்ல வேண்டும் என்று பார்ப்போமா?

ஈரோடு, கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மக்களுக்கு ஏற்ற ஸ்பாட்

ஈரோடு மாவட்டத்தில் இருந்து 50 கிமீ தூரத்திலும், கோயம்புத்தூரில் இருந்து 70 கிமீ தூரத்திலும், சத்தியமங்கலத்தில் இருந்து 8 கிமீ தூரத்திலும் அமைந்துள்ள இந்த கொடிவேரி அணை தமிழ்நாட்டின் இரண்டாவது பழமையான அணையாகும்.

தடுப்புகளுடன் அமைக்கப்பட்ட தடுப்பணை, பரிசல் பயணம், மீன் பிடிப்பது, அணைக்குள் நீச்சல், குழந்தைகள் பூங்கா, ஊற்றுகளில் குளியல், சுடச்சுட மீன்குழம்பு சாப்பாடு என இந்த இடத்தில் ஏகப்பட்ட அம்சங்கள் உள்ளன. ஈரோடு மற்றும் கோயம்பத்தூரில் இருந்து ஒரு நாளில் சுற்றிப் பார்க்க இது ஒரு அட்டகாசமான இடமாகும்.

கம்மி பட்ஜெட்டில் சூப்பர் ஒரு நாள் பிக்னிக்

உங்கள் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் ரொம்ப நாட்களாக எங்காவது கம்மி பட்ஜெட்டில் வெளியே சென்று வர வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா! அப்படியானால் ஈரோடு மற்றும் கோயமுத்தூர் வாசிகளுக்கு இது ஒரு சரியான சாய்ஸ் மக்களே. மதிய சாப்பாடு, பரிசல், நுழைவுக்கட்டணம் எல்லாம் சேர்த்து ஒரு நபருக்கு ரூ. 100 இருந்தால் போதும்! இந்த இடத்தில் அழகாக பரிசலில் சென்று, குளித்து மகிழ்ந்து, மீன் குழம்புடன் சாப்பாடு ஒரு பிடி பிடித்துவிட்டு வரலாம்!

கிட்டத்தட்ட 900 ஆண்டுகளுக்கு முன்னர் உருவான அணை

1125 ஆம் ஆண்டு கொங்காளுவன் என்ற மன்னரால் பவானி ஆற்றின் மீது 25000 ஹெக்டேர் நிலங்களுக்கு பாசன நீர் வழங்குவதற்காக இந்த அணை கட்டப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 897 ஆண்டுகளை நிறைவு செய்யும் இந்த அணை தமிழ்நாட்டின் இரண்டாவது பழமையான அணையாகும். முதலில் இருப்பது கல்லணை என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயமே. நீங்கள் இதனைக் கண்ட உடனே எப்படி நம் முன்னோர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தடுப்பணைகளுடன் கூடிய இந்த அமைப்பை உருவாக்கியிருப்பார்கள் என்பது நாம் வியப்பில் ஆழ்வது உறுதி.

இயற்கை அழகு, குட்டி நீர்வீழ்ச்சி - மனதைக் கவரும் சுற்றுலாத் தலம்

இந்த அணையானது பசுமைக்கு மத்தியில் அமைக்கப்பட்டு அமைதியான சூழலை வழங்குகிறது. அருவி நீர் மற்றும் கீழே உள்ள இயற்கை குளம் ஒரு அழகிய அமைப்பை உருவாக்குகிறது. தேக்கி வைக்கப்பட்டு இருக்கும் நீர், விழுவது ஒரு இயற்கையான நீர்வீழ்ச்சியை உருவாக்குகிறது. இந்த சின்ன நீர்வீழ்ச்சியில் நாம் அனைவரும் அமர்ந்து குளிப்பதற்கு ஒரு அழகிய சூழலை உருவாக்குகிறது. அதுவும் உங்க வீட்டில் குட்டீஸ்களுக்கு இந்த இடம் மிகவும் பிடிக்கும். ஒரு முறை அழைத்து வந்தால், மீண்டும் மீண்டும் இங்கு வர சொல்லி அடம் பிடிப்பார்கள்.

நாம் இங்கே என்னவெல்லாம் செய்யலாம்

நீர்வீழ்ச்சி - கொடிவேரி அணையிலிருந்து விழு நீரோட்டத்தால் சிறு நீர்வீழ்ச்சிகள் போன்ற அமைப்பு உருவாகிறது. நீர்வீழ்ச்சி கனமாக இல்லாததால், யார் வேண்டுமானாலும் எளிதாக நீர்வீழ்ச்சியின் அடிப்பகுதியை அடைந்து குளித்து மகிழலாம். சுற்றிலும் தடுப்புகள் நிறைய போடப்பட்டு மிகவும் பாதுகாப்பாக இருக்கிறது. முக்கியமாக குழந்தைகளுக்கு ஏற்றது.

குளத்தில் நீச்சல் - நீர்வீழ்ச்சியின் அடிப்பகுதியில் உள்ள குளத்தில் குளிப்பதும் நீந்துவதும் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், நீச்சல் தெரிந்தவர்கள் மட்டும் முயற்சி செய்யுங்கள். நீச்சல் தெரியாதவர்கள், கரையோரங்களில் குளித்து மகிழுங்கள்

பரிசல் பயணம் - சாகசத்தின் தொடுதலைச் சேர்த்து, சுற்றியுள்ள நீரை ஆராய்வதற்காக நீங்கள் கோரக்கிள் சவாரிகளை (சுற்றுப் படகுகள்) அனுபவிக்கலாம். 15 முதல் 20 நிமிடங்களுக்கு பரிசல் செய்வது இங்கு அனுமதிக்கப்படுகிறது. இதில் குழந்தைகளுக்கு இலவசம், பெரியவர்கள் மட்டும் ரூ. 50 கட்டணமாக செலுத்த வேண்டும்.

பிக்னிக் ஸ்பாட் - அணைக்கு அருகில் உள்ள பகுதி குடும்ப சுற்றுலா மற்றும் கூட்டங்களுக்கு ஏற்றதாக உள்ளது. நீங்கள் மரங்களின் நிழலில் ஓய்வெடுக்கலாம் மற்றும் குளிர்ந்த காற்றை அனுபவிக்கலாம். அணையின் நுழைவுப் பகுதியிலேயே பல சுற்றுலா அம்சங்களுடன் கூடிய அழகிய பூங்கா ஒன்று குழந்தைகளுக்காக கட்டப்பட்டுள்ளது. இதில் கட்டணம் எதுவும் இல்லை குழந்தைகள் இலவசமாக எவ்வளவு நேரத்திற்கு வேண்டுமானாலும் விளையாடலாம்.

மீன் குழம்பு சாப்பாடு - இங்கு எல்லாவற்றையும் விட சூப்பர் அம்சம் இது தான், ஆமாங்க! இங்கு பல்வேறு மீன் கடைகள் இருப்பதை நீங்கள் காணலாம். வெறும் ரூ. 60 கொடுத்து மீன் வறுவல், மீன் குழம்புடன் சுடச்சுட சுவையாக சாப்பிடலாம்.

நுழைவுக்கட்டணம் - இந்த இடத்திற்கு செல்ல அனைவரும் ரூ. 5 செலுத்தி நுழைவு டிக்கெட் பெற வேண்டும். பைக் பார்க்கிங்கிற்கு ரூ. 10, கார்களுக்கு ரூ. 20, வென்களுக்கு ரூ. 50 மீ கட்டணமாக வசூலிக்கப்படும்.

நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டிய மற்ற விஷயங்கள்

· அணைக்கு அருகில் குறைந்த விருப்பத்தேர்வுகள் இருப்பதால் உணவு மற்றும் தண்ணீரை எடுத்துச் செல்லவும்.

· மழைக்காலம் அல்லது பருவமழைக்குப் பிந்தைய காலத்தில் (ஜூலை முதல் டிசம்பர் வரை) அணையின் முழு மகிமையை கண்டு ரசிக்கலாம்.

· நீங்கள் பாறைப் பகுதிகளில் நடக்க வேண்டியிருக்கும் என்பதால் வசதியான பாதணிகளை அணியுங்கள்.

· சில இடங்களில் நீர் நீரோட்டங்கள் வலுவாக இருக்கும் என்பதால், நீங்கள் குளிக்கத் திட்டமிட்டால் எச்சரிக்கையாக இருங்கள்.

More News

    Read more about: erode waterfalls dam
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+