Search
  • Follow NativePlanet
Share
» »கொல்ஹூ ஹில்ஸுக்கு ஓர் கோலாகல சுற்றுலா போலாமா?

கொல்ஹூ ஹில்ஸுக்கு ஓர் கோலாகல சுற்றுலா போலாமா?

கொல்ஹூ ஹில்ஸுக்கு ஓர் கோலாகல சுற்றுலா போலாமா?

கொல்ஹு ஹில் ஜார்க்கண்ட்டில் உள்ள சத்ராவின் புகழ்பெற்ற சிறப்புகளில் ஒன்றாகும். மலை உச்சியில் இருந்து பார்க்கும் வனாந்திர பார்வை உங்களை கண்டிப்பாக மூச்சடைக்க செய்து விடும். மிகப் பிரபலமான கொல்ஹு மேளா வருடத்தில் இரண்டு முறை ராம்நவமி மற்றும் மகா வசந்த் பஞ்சமிக்கு முன்பு கொண்டாடப்படுகிறது. மலையுச்சியில் அன்னை கௌலெஸ்ஹ்வரிக்கு ஒரு கோவில் கட்டப்பட்டுள்ளது. பக்தர்கள் கோவில் அடைய செங்குத்தான மலை மீது ஏறிச் செல்ல வேண்டும்.

கொல்ஹூ ஹில்ஸுக்கு ஓர் கோலாகல சுற்றுலா போலாமா?

பிச்ஹ்கிலியா நீர்வீழ்ச்சி சத்ரா சுற்றுலாவில் மிக முக்கிய இடத்தை பெறுகின்றது. இந்த தெள்ளத் தெளிவான நீர்வீழ்ச்சியின் அழகு பார்வையாளர்களுக்கு புத்துணர்வை கொடுக்கிறது. இந்த அழகிய பிரம்மாண்டமான நீர்வீழ்ச்சி நகரத்தில் இருந்து சுமார் 11 கி.மீ தொலைவில் உள்ளது. இது சத்ராவிற்கு மேற்கே நிரஞ்சனா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. பிச்ஹ்கிலியா நீர்வீழ்ச்சி இயற்கை ஆர்வலர்களால் விரும்பக்கூடிய இடம் மட்டுமல்ல, இது சாகசப் பிரியர்களையும் தன்னுள் ஈர்க்கின்றது. நீங்கள் மலை வரை ட்ரெக்கிங் செல்லலாம் அல்லது சீரற்ற தளத்தில் ஒரு இயற்கை நடை பயின்று வரலாம்.

கொல்ஹூ ஹில்ஸுக்கு ஓர் கோலாகல சுற்றுலா போலாமா?
கௌலெஸ்ஹ்வரி தேவி கோவில் சத்ராவில் உள்ல கொல்ஹு மலை மேல் அமைந்துள்ளது. இந்த கோவில் 10-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். மேலும் இந்தக் கோவில் இந்துக்கள், புத்த மதத்தினர் மற்றும் சமணர்கள் போன்ற அனைத்து மதத்தவர்களுக்கும் ஒரு பிரபலமான யாத்திரை ஸ்தலமாக விளங்குகின்றது. இந்தக் கோவிலில் குடி கொண்டுள்ள கௌலெஸ்ஹ்வரி தேவி ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த கோய் சமூகத்தவர்களால் வணங்கப்படுகிறாள். இந்த இடம் இராமாயணம் மற்றும் மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கோவிலை அடைய மலையை ஏறிச் செல்ல வேண்டும். அதுவே பக்தர்களுக்கு ஒரு இனிய ட்ரெக்கிங் அனுபவத்தை தருகின்றது. இங்கு வசந்த் பஞ்சமி மற்றும் ராம்நவமியின் போது கொல்ஹு மேளா கொண்டாடப்படுகிறது.
கொல்ஹூ ஹில்ஸுக்கு ஓர் கோலாகல சுற்றுலா போலாமா?


குந்தா, சத்ராவில் உள்ள ஒரு சிறிய கிராமம் ஆகும். குந்தா குகை கிராமத்தில் இருந்து சில மைல்கள் தொலைவில் உள்ளது. இங்கு குந்தா அரண்மனை இடிபாடுகள் மிகவும் பிரபலம். வரலாற்று ஆய்வுகள் இந்த அரண்மனை 17-ஆம் நூற்றாண்டின் இறுதியில் அல்லது 18-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கட்டப்பட்டிருக்க வேண்டும் என தெரிவிக்கின்றன. சத்ராவின் பிற முக்கியமான சுற்றுலாத் தலமாக கொல்ஹு ஹில் மற்றும் கௌலெஸ்ஹ்வரி கோயில் போன்றவை திகழ்கின்றன.

Read more about: travel jharkhand
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X