Search
  • Follow NativePlanet
Share
» »கொல்லூர் மூகாம்பிகா கோவில் நேரம், முகவரி மற்றும் புகைப்படங்கள்

கொல்லூர் மூகாம்பிகா கோவில் நேரம், முகவரி மற்றும் புகைப்படங்கள்

கொல்லூர் மூகாம்பிகா கோவில் நடைதிறக்கும் நேரம், முகவரி மற்றும் சிறப்புகள் குறித்து இந்த பதிவில் காண்போம்

By Udhaya

கர்நாடக மாநிலத்தில் குண்டப்பூர் தாலுக்காவில் அமைந்துள்ள இந்த சிறு நகரம், நாடு முழுவதிலுமுள்ள பக்தி யாத்ரீகர்களால் விரும்பப்படும் நகரமாகும். அழகிய மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடர் பின்னணியில் வீற்றிருக்க, வற்றாமல் ஓடிக்கொண்டிருக்கும் சௌபர்ணிகா ஆற்றின் கரையில் சாந்தம் தவழும் சூழலில் இந்த புகழ் பெற்ற புண்ணிய ஸ்தலம் அமைந்துள்ளது. பரசுராமரால் உருவாக்கப்பட்டதாக கருதப்படும் புகழ்பெற்ற மூகாம்பிகை தேவியின் கோயில் இந்த ஸ்தலத்தில் பிரசித்தமாக அறியப்படுகிறது. வாருங்கள் பெங்களூருவிலிருந்து இந்த கொல்லூருக்கு எப்படி செல்வது, கோயிலுக்கு செல்லும் பயண வழிகாட்டி, நடை திறக்கும் நேரம், கோயில் முகவரி முதலியன பற்றி இந்த பதிவில் காண்போம்.

 இயற்கை பின்னணியில் மூகாம்பிகா கோயில்

இயற்கை பின்னணியில் மூகாம்பிகா கோயில்


இந்த மூகாம்பிகா கோயில் கொலப்புர ஆதி மஹாலட்சுமி கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இது கொல்லூரின் பிரதான சுற்றுலா அம்சமாகும். இந்த கோயில் அடர்த்தியான கானகத்தின் நடுவில் மலைகள் பின்னணியில் உயர்ந்தோங்கி நிற்கும் இயற்கை சூழலில் அமைந்துள்ளது.

GaneshSB

தங்கக் கோட்டுடன் காணப்படும் லிங்கம்

தங்கக் கோட்டுடன் காணப்படும் லிங்கம்


புராதன ஹிந்து பாரம்பரியத்தை எடுத்துக்காட்டும் ஒரு கட்டிடக்கலை அதிசயமாக இந்த கோயில் காணப்படுகிறது.இந்த கோயிலில் சக்தியின் அடையாளமாக ஒரு ஜோதிர்மயா லிங்கம் நடுவில் தங்கக்கோட்டுடன் காணப்படுகிறது. இதுவும் இந்த கோயிலின் சிறப்புகளில் முக்கிய மானது ஆகும். மேலும் இந்த லிங்கம் அமைந்திருக்கும் இடமும் அதனை சிறப்பாக்குகிறது.

Yogesa

லிங்கம் அமைந்திருக்கும் இடம்

லிங்கம் அமைந்திருக்கும் இடம்

இந்த லிங்கம் மூன்று கண்களைக்கொண்ட மூகாம்பிகா தேவி சிலைக்கு முன்னால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோயில் ஒரு சித்தி ஷேத்திரத்தையும் கொண்டுள்ளது. இதன் பின்னால் பல புராண கதைகள் சொல்லப்படுகின்றன. இவை பெரும்பாலும் செவி வழி கதைகளாகவே இருக்கின்றன. மேலும் இவற்றின் பின்னால் வரலாற்று தொடர்புள்ள சான்றுகள் எவையும் கிடைத்ததாக தெரியவில்லை.

Yogesa

 குளித்துவிட்டு நடை ஏறும் பழக்கம்

குளித்துவிட்டு நடை ஏறும் பழக்கம்


நவராத்திரியின்போது இங்கு சரஸ்வதி பூஜா விசேஷமாக கொண்டாடப்படுகிறது. அச்சமயம் ஏராளமான பக்தர்கள் இங்கு விஜயம் செய்கின்றனர்.மலர்களால் மிக அழகாக அலங்கரிக்கப்பட்டிருக்கும் மூகாம்பிகா கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் லிங்கத்தையும் தேவியையும் தரிசிக்கும் முன் திரு முழுக்காடி பின் வணங்குகின்றனர். இந்த பழக்கம் தொன்றுதொட்டு இருந்து வருவதாக கூறப்படுகிறது.

Yogesa

 பெங்களூர் - கொல்லூர்

பெங்களூர் - கொல்லூர்

பெங்களூரு மாநகரத்திலிருந்து கொல்லூருக்கு மூன்று வழித்தடங்கள் இருக்கின்றன.

முதல் வழி

பெங்களூரு - துமக்கூரு - ஹிரியூரு - தாரிக்கரே - பத்ராவதி - ஷிவமோகா - நகரா - கொல்லூர்

இரண்டாம் வழி

பெங்களூரு - துமக்கூரு - ஹிரியூரு - தவனக்கரே - மேலபென்னூர் - ஹோனாலி - அரசலூ - கொல்லூர்

மூன்றாம் வழி

பெங்களூரு - குனிகல் - சிரவணபெலகோலா - அரிசிக்கரே - கடூர் - தாரிக்கரே - பத்ராவதி - ஷிவமோகா - நகரா - கொல்லூர்

இதில் முதல் வழியே சிறந்தது. 429 கிமீ தூரம் பயணிக்க வைக்கும் இந்த வழியில் கொல்லூரை அடைவது பெங்களூர் வாசிகளுக்கு மிக எளிமையானதாக இருக்கும். இரவு 9 மணிக்கு மேலாக புறப்பட்டுச் சென்றால் காலையில் நேரமாகவே கொல்லூரை அடைந்துவிடலாம்.

 ரயில் விபரங்கள்

ரயில் விபரங்கள்

யெஸ்வந்த்பூர் சந்திப்பு நிலையத்திலிருந்து புறப்படும் இரண்டு ரயில்கள் பைந்தூர் வரை செல்கிறது. இந்த இரு ரயில்களிலும் நீங்கள் கொல்லூரை அடைய முடியும்.

முதல் ரயில்

யெஸ்வந்த்பூரிலிருந்து காலை 6 மணி 30 நிமிடங்களுக்கு புறப்படும் ரயிலான கார்வார் விரைவு வண்டி 13 மணி நேரம் 50 நிமிடங்களுக்குள் அட்டவணைப்படி பைந்தூரை அடையும்.

இரண்டாவது ரயில்

கார்வார் எக்ஸ்பிரஸ் இரவு 8 மணி 20 நிமிடங்களுக்கு புறப்பட்டு காலை 11 மணி 36 நிமிடங்களுக்கு பைந்தூரை அடையும்.

Vinayaraj

நடை திறக்கும் நேரம், பூசைகள், முகவரி

நடை திறக்கும் நேரம், பூசைகள், முகவரி


முகவரி

மூகாம்பிகை இன்போஃலைன்
கொல்லூர்
குண்டப்பூர் வட்டம்
உடுப்பி மாவட்டம்
கர்நாடகம் 576220

பூசை மற்றும் நடை திறக்கும் நேரங்கள்

காலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது

காலை 6.30 மணி, 7.30 மணி, பகல் 12 மணி, மாலை 3 மணி, இரவு 8 மணி மற்றும் 10 மணி என பூசைக்கான நேரங்கள் இவை.

மதியம் அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏழை எளிய மக்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கிறார்கள். வசதி படைத்த நல்ல உள்ளங்கள் ஏழைகளுக்காக இந்த அன்னதானத்தில் கலந்து கொள்வதில்லை.

மதியம் 12.30 மணிக்கு சாற்றப்படும் நடை, மீண்டும் உணவு இடைவேளைக்கு பிறகு 2 மணிக்கு திறக்கிறது.

இரவு 9 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது.

Iramuthusamy

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X