Search
  • Follow NativePlanet
Share
» »கொலுக்குமலை - கண்டதுண்டா இப்படியொரு பேரழகை

கொலுக்குமலை - கண்டதுண்டா இப்படியொரு பேரழகை

தமிழ்நாட்டில் இருக்கும் எல்லா சுற்றுலாத்தலங்களுக்கும் சென்று சுற்றிப்பார்த்து முடித்தாகிவிட்டது என்று நினைப்பவரா நீங்கள்?. அப்படியானால் உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளும் நேரம் வந்தாகிவிட்டது.

நம்ம தமிழ்நாட்டில் தேனி மாவட்டத்தில் இருக்கும் கொலுக்குமலை என்ற இடம் இன்னும் அதிகம் அறியப்படாத சுற்றுலாத்தலமாகவே இருந்து வருகிறது. தூய்மையான இயற்கையின் அழகை ரசிக்க விரும்புகிறவர்களுக்கு இந்த கொலுக்குமலை ஒரு சொர்க்கம். வாருங்கள் இந்த இடத்தை பற்றிய மேலதிக தகவல்களை தெரிந்து கொள்வோம்.

கொலுக்குமலை :

கொலுக்குமலை :

இந்த கொலுக்குமலையானது தேனி மாவட்டத்தில் உள்ள போடிநாயக்கனூர் தாலுக்காவில் அமைந்திருக்கும் சிறு மலைக்கிராமமாகும். இந்த இடத்தின் குறிப்பிடும்படியான சிறப்புக்களில் ஒன்று உலகிலேயே 'டீ' பயிரிடப்படும் மிக உயரமான இடம் என்பது தான்.

Photo:Motographer

கொலுக்குமலை :

கொலுக்குமலை :

ஆம், இந்த கொலுக்குமலையில் கடல்மட்டத்தில் இருந்து கிட்டத்தட்ட 7,000 அடி உயரத்தில் 'டீ' சாகுபடி செய்யப்படுகிறது. 'டீ' சாகுபடி மட்டுமே இந்த பகுதியில் நடக்கும் ஒரே தொழிலாகும். இங்கு இன்னமும் பழங்கால முறைப்படி செயல்படும் தேயிலை தொழிற்சாலை ஒன்றும் அமைந்திருக்கிறது.

Photo:Earth-Bound Misfit,

கொலுக்குமலை - எப்படி அடைவது ?:

கொலுக்குமலை - எப்படி அடைவது ?:

தேனி மாவட்டத்தில் கேரளா, தமிழ்நாடு மாநில எல்லையை ஒட்டி அமைந்திருக்கிறது இந்த கொலுக்குமலை. மூணாறு வந்து அங்கிருந்து கிழக்கே 23 கி.மீ தொலைவில் உள்ள சூரிய நெல்லி என்கிற இடத்தை அடைய வேண்டும்.

Photo: Motographer

கொலுக்குமலை - எப்படி அடைவது ?:

கொலுக்குமலை - எப்படி அடைவது ?:

அதற்குமேல் காரில் பயணம் செல்வது மிகக்கடினம் என்பதால் இங்குவரும் சுற்றுலாப்பயணிகள் அனைவரும் தனியார் ஜீப் ஒன்றை வாடகைக்கு அமர்திக்கொள்கின்றனர். சூரிய நெல்லயில் இருந்து கொலுக்குமலை 10 கி.மீ தான் என்றாலும் இதனை சென்றடைய இரண்டு மணி நேரம் ஆகிறது. சுவாசப்பிரச்சனை இருப்பவர்கள், குழந்தைகள் இப்பயணத்தை தவிர்ப்பது நல்லது.

Photo:monsieur paradis

கொலுக்குமலை - என்ன செய்யலாம் இங்கே ?: :

கொலுக்குமலை - என்ன செய்யலாம் இங்கே ?: :

கொலுக்குமலையில் நாம் கண்டிப்பாக தவற விடக்கூடாத விஷயங்களில் முக்கியமானது இங்கு நிகழும் சூரிய உதயமாகும். அதிகாலையில் பனிவிலகாத பசுந்தேயிலைத் தோட்டத்தின் பின்னணியில் கைக்குழந்தையின் உள்ளங்கை போன்ற இளஞ்சிவப்பு நிறத்தை சூரியன் பரப்பும் காட்சி வார்த்தைகளில் அடங்காதது.

Photo:monsieur paradis

கொலுக்குமலை - எங்கே தங்குவது ?:

கொலுக்குமலை - எங்கே தங்குவது ?:

கொலுக்குமலைப்பதை தனியாருக்கு சொந்தமானது என்பதால் நுழைவுக்கட்டணமாக 100 ரூபாய் செலுத்தவேண்டும். இங்கு தங்கவேண்டுமானால் கொலுக்குமலை தேயிலை உற்பத்தி ஆலையால் நடத்தப்படும் 3 படுக்கையறை வசதி கொண்ட தங்கும் விடுதி ஒன்று மட்டுமே உள்ளது. முன்னரே திட்டமிட்டு முன்பதிவு செய்துவிட்டு செல்வது நல்லது.

Photo:Ramya Bhuthalingam

கொலுக்குமலை - எங்கே தங்குவது ?:

கொலுக்குமலை - எங்கே தங்குவது ?:

இப்படியொரு அழகான இடத்தை புதுமையாக ரசித்திட வேண்டும் என்று நினைப்பவர்கள் இரவில் கொலுக்குமலையில் 'கேம்ப்' அமைத்து தங்கலாம். இதற்கென்றே பிரத்யேகமான இடங்களும் இங்கே உண்டு.

Photo:Prasanth Chandran

கொலுக்குமலை - எங்கே தங்குவது ?:

கொலுக்குமலை - எங்கே தங்குவது ?:

மலையேற்றம் செல்லவும் கொலுக்குமலை நல்லதொரு இடமாகும். கொலுக்குமலையில் இருந்து மீஷபுலிமலை வரை டிரெக்கிங்கில் ஈடுபடலாம். அப்போது இந்த கொளுக்குமலையை சுற்றியிருக்கும் சோலைக் காடுகள்,ஊசியிலைக்காடுகள், பசுமையான மேய்ச்சல் நிலங்கள் போன்றவற்றை பார்க்கலாம்.

Photo:Motographer

கொலுக்குமலை :

கொலுக்குமலை :

இங்குள்ள தேயிலை தொழிற்சாலையில் பாரம்பரியமான ஆங்கிலேயே முறைப்படி தயாரிக்கப்படும் நாம் குடிக்கும் தேநீரில் இருந்து வித்தியாசமான சுவையுடைய தேநீரை சுவைத்து மகிழலாம்.

Photo: Flickr

கொலுக்குமலை :

கொலுக்குமலை :

கொலுக்குமலையின் சில அழகிய புகைப்படங்களின் தொகுப்பு.

Photo:Husena MV

கொலுக்குமலை :

கொலுக்குமலை :

கொலுக்குமலையின் சில அழகிய புகைப்படங்களின் தொகுப்பு.

Photo:Earth-Bound Misfit,

கொலுக்குமலை :

கொலுக்குமலை :

கொலுக்குமலையின் சில அழகிய புகைப்படங்களின் தொகுப்பு.

Photo:kamleshmehta

கொலுக்குமலை :

கொலுக்குமலை :

கொலுக்குமலையின் சில அழகிய புகைப்படங்களின் தொகுப்பு.

Photo:Earth-Bound Misfit,

கொலுக்குமலை :

கொலுக்குமலை :

மொத்தத்தில் வழக்கமாக செல்லும் சுற்றுலாவில் இருந்து மாறுபட்டு சில நாட்கள் இனிமையாக, இயற்கையுடன் நெருக்கமாக களித்திட விரும்புகிறவர்கள் ஒருமுறைக்கு பலமுறை செல்லவேண்டிய ஓரிடம் இந்த கொளுக்குமலையாகும்.

Photo:monsieur paradis

More News

    Read more about: kolukkumalai munnar trekking
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+