Search
  • Follow NativePlanet
Share
» »பெங்களூருவில் இருந்து ஜோக் நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா செல்ல வேண்டுமா – KSRTC அறிமுகப்படுத்திய டூர் பேக்கேஜ்!

பெங்களூருவில் இருந்து ஜோக் நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா செல்ல வேண்டுமா – KSRTC அறிமுகப்படுத்திய டூர் பேக்கேஜ்!

நீங்கள் பெங்களூருவில் இருக்கிறீர்கள் என்றால், இந்தப் பதிவு உங்களுக்கு தான்! கர்நாடகா மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் (KSRTC) பெங்களூருவில் இருந்து புகழ்பெற்ற ஜோக் நீர்வீழ்ச்சி மற்றும் பெங்களூரிலிருந்து சோமநாதபுரா வரை இரண்டு புதிய டூர் பேக்கேஜ்களை அறிமுகப்படுத்தியுள்ளது. மிகவும் மலிவான விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த இரண்டு பேக்கேஜ்களும் சுற்றுலாப் பயணிகளிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது!

பெங்களூருவிலிருந்து ஜோக் நீர்வீழ்ச்சி சுற்றுலா

கர்நாடகா மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம், பயணிக்கும் பொதுமக்களின் வசதிக்காக வார இறுதி நாட்களில் (வெள்ளி மற்றும் சனி) A/C ஸ்லீப்பர் சேவையுடன் பெங்களூரிலிருந்து ஷிவமொக்கா, சாகரா வழியாக ஜோக் நீர்வீழ்ச்சிக்கு புதிய பேக்கேஜ் பயணத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அறிவிப்பின்படி, இந்த டூர் பேக்கேஜ்கள் நவம்பர் 8, 2023 முதல் நடைமுறைக்கு வரவுள்ளன.

1

பெங்களூரு to ஜோக் நீர்வீழ்ச்சி டூர் பேக்கேஜ் விவரம்

1. இரவு 9:30 மணிக்கு பெங்களூருவில் இருந்து கிளம்பும் பேருந்து மறுநாள் காலை 5 மணிக்கு சாகராவை அடைகிறது.

2. பிறகு பயணிகள் ஒரு ஹோட்டலில் சிற்றுண்டிகளை சாப்பிடுவார்கள்.

3. காலை 7 மணிக்கு காலை உணவுக்குச் செல்லலாம் என்று அட்டவணை கூறுகிறது. பகலில் வரதஹள்ளி, வரதமூலா, இக்கேரி மற்றும் கேலடி ஆகிய இடங்களை சுற்றிப் பார்ப்பார்கள்.

4. அதன் பிறகு பயணிகள் மதியம் 12:45 மணிக்கு சாகாராவிற்கு மதிய உணவிற்காக மீண்டும் கொண்டு வரப்படுவார்கள்.

5. பயணிகள் பின்னர் சாகராவில் இருந்து ஜோக் நீர்வீழ்ச்சிக்கு அழைத்து செல்லப்படுவார்கள்.

6. அதற்கு பிறகு ஒரு மணி நேரம் ஷாப்பிங்கிற்காக கடைத்தெருவிற்கு அழைத்து வரப்படுவார்கள், அவர்கள் இரவு 7 மணி முதல் 8 மணி வரை அங்கே ஷாப்பிங் செய்யலாம்.

7. இரவு 8:30 மணிக்கு இரவு உணவு வழங்கப்படும், அதன் பிறகு சாகராவில் இருந்து கிளம்பும் பேருந்து பெங்களூருக்கு இரவு 10 மணிக்குத் திரும்பும்.

கட்டண விவரங்கள்

பேக்கேஜ் சுற்றுப்பயணத்திற்கு பெரியவர்களுக்கு ரூ.2,500 கட்டணம் வசூலிக்கப்படும் என்றும், குழந்தைகளுக்கு (ஆறு முதல் 12 வயது வரை) ரூ.2,300 வசூலிக்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூருவிலிருந்து சோமநாதபுரா சுற்றுலா

கர்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம், பயணிக்கும் பொதுமக்களின் வசதிக்காக வார இறுதி நாட்களில் அதாவது சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் எக்ஸ்பிரஸ் சேவையுடன் பெங்களூரு, சோமநாதபுரா, தலைக்காடு, மத்தியரங்கா, பரசுக்கி, ககனசுக்கி என்ற புதிய பேக்கேஜ் டூர் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த டூர் பேக்கேஜ் ஆகஸ்ட் 12, 2023 முதல் தொடங்குகிறது. மேலும், சுற்றுப்பயணத்தில் இரவு உணவு, மதிய உணவு, நுழைவுக் கட்டணம் போன்றவை இல்லை.

2

பெங்களூரு to சோமநாதபுரா டூர் பேக்கேஜ் விவரம்

1. பயணிகள் பெங்களூரில் இருந்து சனிக்கிழமை காலை 6:30 மணிக்கு புறப்பட்டு இரண்டு மணி நேரத்தில் மத்தூரை அடைவார்கள்.

2. பின்னர், அங்குள்ள ஒரு ஹோட்டலில் காலை உணவை சாப்பிடுவார்கள்.

3. அங்கிருந்து சோமநாதபுரத்திற்கு சென்று சோமநாதேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்வார்கள்.

4. அதன் பிறகு பஞ்சலிங்க தரிசனத்திற்காக பஸ் தலக்காடு நோக்கி செல்வார்கள்.

5. பயணிகள் தலக்காடுவில் மதிய உணவு சாப்பிட்டுவிட்டு, ரங்கநாதசுவாமி தரிசனத்திற்காக மத்தியரங்கம் செல்வார்கள்.

6. பின்னர் பாரச்சுக்கி மற்றும் ககனசுக்கியின் இரட்டை நீர்வீழ்ச்சிகளை பார்வையிடுவார்கள்.

7. அங்கு பயணிகள் மாலை 4 மணி முதல் 6 மணி வரை பார்வையிடலாம்.

8. பின்னர் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை ககனசுக்கியில் இருந்து பெங்களூருக்கு திரும்பும் பயணத்துடன் முடிவடைகிறது.

கட்டண விவரங்கள்

இது பெரியவர்கள் தலா ரூ.450 கட்டணமாக வசூலிக்கப்படும். 6 முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு தலா ரூ.300 கட்டணமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நீங்கள் பெங்களூருவில் இருக்கும் பட்சத்தில் இந்த டூர் பேக்கேஜ்களில் ஒன்றை தேர்ந்தெடுத்து சென்று வரலாமே!

More News

    Read more about: bengaluru
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+