Search
  • Follow NativePlanet
Share
» »பேட்ட படம் எடுக்கப்பட்டது இப்படி ஒரு இடத்துலயா? இது தெரியாம போச்சே!

பேட்ட படம் எடுக்கப்பட்டது இப்படி ஒரு இடத்துலயா? இது தெரியாம போச்சே!

"பேட்ட" படத்தின் உச்சகட்ட காட்சி இங்குதான் படம்பிடிக்கப்பட்டதாம்!

இப்ப இதுதானுங்க டிரெண்டிங்க்.. வாட்ஸ்ஆப்ல சீன் வச்சி மீம் போடுறாங்க. சரி சுற்றுலாக் கட்டுரையில அதப்பத்தி என்ன பேச்சுனு கேட்கலாம். இது பேட்ட படத்தோட படப்பிடிப்பு நடந்த இடங்கள பத்தின ஒரு சுற்றுலா கட்டுரை. அதான் இப்படி...

பேட்ட படத்தோட படப்பிடிப்பு நடத்துவதற்காக இடங்கள தேடி தேடி கண்டுபிடிச்சாங்களாம். புதுசாவும் அதே நேரம் கதைக்கு ஏற்றவாறும் சில இடங்கள கண்டுபிடிச்சி சூட்டிங்கையும் முடிச்சி பொங்கலும் ரிலீசும் பண்ணிட்டாங்க. அட இன்னிக்கு டிரெண்டிங்குக்கு எதாவது சிறப்பா பண்ணலாம்னு யோசிக்கும்போதுதான், பேட்ட படத்தோட உச்சகட்ட காட்சி ஒன்னு படம்பிடிக்கப்பட்ட ஒரு இடம் பத்தி தெரிஞ்சது. இது மிகவும் அழகான அதே நேரம் பலருக்கு தெரியாத ஒரு இடம். சுற்றுலாத் தளமும்கூட.. தலைவர் படம் எடுக்கப்பட்ட இடத்தில் ஒரு உலா போயிட்டு வரலாம் வரீங்களா?

எங்குள்ளது

எங்குள்ளது


இந்த இடம் மேற்கு வங்க மாநிலத்தில் அமைந்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தின் சுற்றுலாத் துறை அமைச்சரே ரஜினியை நேரில் சென்று தனது வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார். அத்துடன் ரஜினியை கொண்டு அந்த மாநிலத்தின் சுற்றுலாவை பிரபலப்படுத்தவும் திட்டமிட்டுள்ளார்கள். அப்படி ஒரு இடம் பற்றி ரஜினி என்ன கூறினார் தெரியுமா?

Mayukh Ghose

இனி சுற்றுலா அமோகம்

இனி சுற்றுலா அமோகம்


எனக்கு இங்கு வருவது மிகவும் பிடித்திருக்கிறது. ஆச்சர்யமாக இருக்கிறது இத்தனை அருமையான படப்பிடிப்பு தளங்கள் இருக்கின்றன. எனினும் இதுவரை யாருக்கும் தெரியாமல் ஒளிந்திருக்கின்றவே... இந்த திரைப்படத்தின் வாயிலாக இந்த நாடு முழுக்க இந்த இடம் பேசப்படும். இங்கு சுற்றுலாவுக்கு என் ரசிகர்கள் உட்பட பலர் வருவார்கள். இதை நான் அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

Imran Samad

குருசியாங்

குருசியாங்

குருசியாங்க் என்பது ஒரு அழகிய மலைப் பகுதி ஆகும். பரவலாக சுற்றுலாப் பயணிகள் வரும் டார்ஜிலிங் பகுதியில்தான் இது அமைந்துள்ளது. ஆனால் இந்த இடத்தை பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மேற்கு வங்க அரசாங்கம் இப்போதுதான் இந்த சுற்றுலாத் தளத்தை பிரபலப்படுத்தி வருகிறது.

Subhamwiki1984

 சிலிகுரி

சிலிகுரி

குருசியாங் எனும் இந்த பகுதி சிலிகுரியிலிருந்து கிட்டத்தட்ட 47 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. டார்ஜிலிங்க் இமயமலை ரயில் இதை இணைக்கிறது.

புதிய ஜல்பாய்குரி எனும் பகுதியில் ரயில் நிலையம் அமைந்துள்ளது. இது 53 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

Shahnoor Habib Munmun

 அழகிய டீ தோட்டம்

அழகிய டீ தோட்டம்

குருசியாங்க் மிக அழகான இயற்கை காட்சிகளுக்கு பெயர் பெற்றதாக விளங்க வேண்டியது. இங்கு இன்னும் ஓரிரு ஆண்டுகளில் சுற்றுலா மிக அதிக வேகத்தில் வளர்ச்சி அடையும். அப்போது இங்குள்ள தேயிலைத் தோட்டங்களுக்காக பேசப்படும். முக்கியமாக கேஸ்டல்டன், அம்பூட்டியா, கூம்டீ முதலியனவைகளுக்காக பேசப்படும்.

Shahnoor Habib Munmu

டார்ஜிலிங் ரயில் பயணம்

டார்ஜிலிங் ரயில் பயணம்

ஊட்டி மலை ரயில் போலவே சிறப்பான ஒரு ரயில் பயணம் இதுவாகும். இங்கு ரயில் பயணத்தை ரசிக்கவும் முடியும்.

Neil Satyam

 ஆன்மீக தலங்கள்

ஆன்மீக தலங்கள்

அம்பூட்டியா சிவன் கோவில்

கீத்தா பஹார் சீதா ராம் கோவில்

கீத்தா பஹார் துர்க்கா மாதா கோவில்

ஜகதீஸ் கோவில்

புனித பால் தேவாலயம்

புத்தர் கோம்பா

குங்கசங்க் சோய்லிங்க் மோனாஸ்டரி

ஜூம்ஆ மசூதி

commons.wikimedia.org

இயற்கை ஆர்வமுள்ளவர்களுக்காக

இயற்கை ஆர்வமுள்ளவர்களுக்காக


கழுகு பகுதி

ராக் கார்டன்

மான் பூங்கா

கோலா நீர்வீழ்ச்சி

கெட்டில் பள்ளத்தாக்கு

Hutiny

 சரணாலயங்கள்

சரணாலயங்கள்

நேதாஜி அருங்காட்சியகம் இங்கு அமைந்துள்ள சரணாலயமாகும். இங்கு நேதாஜி அவரது மனைவிக்கு எழுதிய கடிதங்கள், அவருக்கு அவர் மனைவி எழுதிய கடிதங்கள் என நிறைய நினைவு பொருள்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

Rangan Datta

 அருகிலுள்ள சுற்றுலாத் தளங்களைக் காண்போம்

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்களைக் காண்போம்

டார்ஜீலிங் நகரத்தின் சிறப்பை அறியாதவர்கள் இந்தியாவில் இருக்க முடியாது என்று சொல்லும் அளவுக்கு பல்வேறு அம்சங்களுக்காக புகழ் பெற்ற ஒரு மலைவாசஸ்தல நகரமாக இது புகழ்பெற்று விளங்குக்கிறது.

Sayantani

டார்ஜீலிங்

டார்ஜீலிங்


ஹாலிவுட் மற்றும் திரைப்படங்களில் அதிகமாக இடம் பெற்றுள்ள இந்திய மலைநகரம் எனும் அடையாளத்தையும் இது கொண்டுள்ளது. இயற்கை அழகை பார்த்து ரசிக்க வசதியாக இங்கு இயக்கப்படும் டார்ஜீலிங் ஹிமாலயன் ரயில்வே உலகப்பிரசித்தி பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Ujjal Ghosh

 டார்ஜீலிங்

டார்ஜீலிங்


மேற்கு வங்காள மாநிலத்தின் வடகோடியில் இந்த மலைநகரம் வீற்றிருக்கிறது. சிறு இமாலயம் அல்லது மஹாபாரத் மலைத்தொடர்கள் எனப்படும் மலைப்பிரதேசத்தில் எத்திசையிலும் பனி மூடிய மலைச்சிகரங்கள் சூழ்ந்திருக்க இந்த நகரம் காட்சியளிக்கிறது.

Rajat63ghosh

 டார்ஜீலிங்

டார்ஜீலிங்

ஆங்கிலேய ஆட்சிக்காலத்திலிருந்தே ஒரு உலகப்புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாகவும், தரமான தனித்தன்மையான தேயிலை விளையும் பூமியாகவும் இது அறியப்பட்டு வந்திருக்கிறது. இந்நகரத்திலிருந்து பல்வேறு ரகங்கள் மற்றும் தர வகைகளில் உலகமெங்கும் தேயிலை ஏற்றுமதி செய்யப்படுகிறது.

Ankantalit

 சிலிகுரி

சிலிகுரி

சிலிகுரியைச் சுற்றி ஏராளமான சுற்றுலா இடங்கள் உள்ளன. இஸ்கான் கோவில், மஹாநந்தா வனவிலங்கு சரணாலயம், விஞ்ஞான நகரம், கரொனேஷன் பாலம், சலுகரா மொனாஸ்ட்ரி, மதுபான் பூங்கா, உம்ரோ சிங் படகு முகாம் என பலவகையான இடங்கள் உள்ளன.

Atudu

விழாக்கள்

விழாக்கள்


இந்தியாவின் பிற பகுதிகளைப் போலவே சிலிகுரியிலும் தீபாவளி, பாய் டிகா, துர்கா பூஜா, காளி பூஜா, கணேஷ் பூஜா போன்ற பண்டிகைகள் இங்கு கொண்டாடப்படுகின்றன. பைசாகி மேளா போன்ற பழம்பெரும் பண்டிகைகள் மட்டுமல்லாது உடை அணிவகுப்புகள், பொருட்காட்சிகளும் இங்கு இவற்றையொட்டி நடத்தப்படுகின்றன.

Christopher J. Fynn

"பேட்ட" படம்பிடிக்கப்பட்ட அழகிய தளங்கள்

அழகிய குருசிலாங் சுற்றுலா வழிகாட்டி இது

"பேட்ட" படம்பிடிக்கப்பட்ட அழகிய தளங்கள்

அழகிய குருசிலாங் சுற்றுலா வழிகாட்டி இது

"பேட்ட" படம்பிடிக்கப்பட்ட அழகிய தளங்கள்

அழகிய குருசிலாங் சுற்றுலா வழிகாட்டி இது

"பேட்ட" படம்பிடிக்கப்பட்ட அழகிய தளங்கள்

அழகிய குருசிலாங் சுற்றுலா வழிகாட்டி இது

"பேட்ட" படம்பிடிக்கப்பட்ட அழகிய தளங்கள்

அழகிய குருசிலாங் சுற்றுலா வழிகாட்டி இது

"பேட்ட" படம்பிடிக்கப்பட்ட அழகிய தளங்கள்

அழகிய குருசிலாங் சுற்றுலா வழிகாட்டி இது

"பேட்ட" படம்பிடிக்கப்பட்ட அழகிய தளங்கள்

அழகிய குருசிலாங் சுற்றுலா வழிகாட்டி இது

"பேட்ட" படம்பிடிக்கப்பட்ட அழகிய தளங்கள்

அழகிய குருசிலாங் சுற்றுலா வழிகாட்டி இது

"பேட்ட" படம்பிடிக்கப்பட்ட அழகிய தளங்கள்

அழகிய குருசிலாங் சுற்றுலா வழிகாட்டி இது

"பேட்ட" படம்பிடிக்கப்பட்ட அழகிய தளங்கள்

அழகிய குருசிலாங் சுற்றுலா வழிகாட்டி இது

"பேட்ட" படம்பிடிக்கப்பட்ட அழகிய தளங்கள்

அழகிய குருசிலாங் சுற்றுலா வழிகாட்டி இது

Read more about: travel siliguri
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X