» »அட்சய திருதியை செல்வச் செழிப்பாக்கும் மகாலட்சுமி குபேரன் திருக்கோவில்! #Teavel2Temple 12

அட்சய திருதியை செல்வச் செழிப்பாக்கும் மகாலட்சுமி குபேரன் திருக்கோவில்! #Teavel2Temple 12

Written By: Sabarish

பௌர்ணமி அல்லது அமாவாசை தினத்தை அடுத்து மூன்றாவதாக வரும் தேதியே திருதியை என்று அழைக்கப்படுகிறது. அட்சயம் என்றால் என்றும் குறைவின்றி வளர்தல் என்று பொருள்படுகிறது. சித்திரை மாத வளர்பிறையில் வரும் திருதியை நாளே அட்சய திருதியை என்றழைக்கிறோம். அதனாலேயே இத்தினத்தில் விலை உயர்ந்த தங்கம் உள்ளிட்ட பொருட்களை வாங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளோம். இச்செல்வங்கள் அனைத்தும் நிலைத்து நிற்க, மேலும் செழிப்பான வாழ்க்கை பெற மகாலட்சுமி குபேரன் திருக்கோவிலுக்கு சென்று வழிபடுவது சிறந்தது.

எங்கே உள்ளது ?

எங்கே உள்ளது ?


விழுப்புரம் மாவட்டம், கிழக்கு பாண்டிரோட்டில் அமைந்துள்ளது அருள்மிகு மகாலட்சுமி குபேரன் கோவில். விழுப்புரத்தில் இருந்து திண்டிவனம், செங்கல்பட்டு வழியாக சுமார் 141 கிலோ மீட்டர் பயணித்தால் கோவிலை அடையலாம். சென்னையில் இருந்து தண்டலம், பெருங்களத்தூர் வழியாக 44 கிலோ மீட்டர் தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது.

Krishna Kumar

கோவில் சிறப்பு

கோவில் சிறப்பு


பொதுவாக பிறக் கோவில்களில் குபேரன் வடக்கு திசையை நோக்கு அருள்பாலிப்பார். ஆனால், இங்கு தனது மனைவியான சித்ரலேகாவுடன் தெற்கு நோக்கியவாறு அருள்பாலிக்கிறார். பொருட்செல்வம், மக்கள் செல்வம், உற்றார் உறவினரின் மகிழ்ச்சி உள்ளிட்டவற்றை வேண்டி இத்தலத்திற்கு வந்து வழிபட அனைத்து செல்வங்களும் கிடைக்கும்.

JJ Harrison

திருவிழா

திருவிழா


மகாலட்சுமி குபேரன் கோவிலில் அட்சய திருதியை முக்கிய விழாவாகக் கொண்டாடப்படுகிறது. சித்திரா பவுர்ணமி, வைகாசி உள்ளிட்ட தினங்களில் குபேரனுக்கு நகைகளைக் கொண்டு சிறப்பு அலங்காரப் பூஜைகள் செய்யப்படுகிறது. வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு வைபவம், ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீனிவாசப் பெருமாள் வீதி உலா நடைபெறும். இதனைத் தவிர்த்து மாதந்தோறும் பவுர்ணமி தினத்தில் மகாலட்சுமி ஹோமம், பூச நட்சத்திரத்தில் குபேர பூஜை உள்ளிட்டவையும் நடைபெறுகிறது.

Mai-Linh Doan

நடைதிறப்பு

நடைதிறப்பு


குபேரன் கோவில் நடை காலை 6.30 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறக்கப்பட்டிருக்கும். காலை 7 மணியளவில் சூரியநாராயணனின் ஒளி மகாலட்சுமியின் மீது படரும் காட்சி சிறப்பு தரிசனமாக இருக்கும்.

Rsmn

வழிபாடு

வழிபாடு

திருமணத் தடையால் வேதனையுற்று வருவோர் இங்கு நடைபெறும் பங்குனி உத்திர திருக்கல்யாணத்தில் பங்கேற்பதன் மூலம் கூடிய விரைவில் திருமண நிகழ்வு நடைபெறும் என்பது தொன்நம்பிக்கை. மேலும், தடைபட்ட காரியங்கள் நிறைவடையவும், நோய் நிவர்த்தி, கடன் தொல்லையில் இருந்து நிவர்த்தி உள்ளிட்டவையும் நீங்கும்.

Saba rathnam

நேர்த்திக்கடன்

நேர்த்திக்கடன்


பக்தர்கள் தாங்கள் வேண்டியவை நிறைவேறியதும் மகாலட்சுமிக்கும் சீனிவாசப் பெருமாளுக்கும் புத்தாடைகள் சாற்றி, அபிஷேகம் செய்கின்றனர். சிலர் திருக்கல்யாணமும் செய்து வைக்கின்றனர்.

Sathish DJ

கோவில் சிறப்பு

கோவில் சிறப்பு


தினமும் காலை 7 மணியளவில் சூரிய ஒளிக் கதிர்கள் மகாலட்சுமி அம்மையாரின் மீது படர்வது காணக்கிடைக்காத வரமாகும். தடைப்பட்ட காரியங்கள் விரைவில் நடைபெறுதல், செல்வச் செழிப்புகள் மட்டுமின்றி அனைத்து விதமன வலங்களையும் அருளுதல் போன்றவை இத்தலத்தின் சிறப்பம்சங்களாகும்.

Zprazan

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?


சென்னையில் இருந்து தியாகராய நகர், பல்லாவரம், பெருங்களத்தூர் வழியாக சுமார் 42 கிலோ மீட்டர் பயணித்தால் கோவிலை அடையலாம். அல்லது, தண்டலம் வழியாக 56 கிலோ மீட்டரும், பூவிருந்தவல்லி வழியாக 42 கிலோ மீட்டரும் பயணிக்க வேண்டும். விழுப்புரத்தில் இருந்து திண்டிவனம், செங்கல்பட்டு சாலை எளிதானதாகும்.

Manivanswiki

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்