Search
  • Follow NativePlanet
Share
» »தென்னிந்தியாவில் மறைந்துகிடக்கும் இயற்கைப் பொக்கிஷம் 'லம்பாசிங்கி'

தென்னிந்தியாவில் மறைந்துகிடக்கும் இயற்கைப் பொக்கிஷம் 'லம்பாசிங்கி'

தென்னிந்திய பகுதிகள் வித்தியாசமான சூழ்நிலையைக் கொண்டுள்ளது. அவற்றுள், தற்போது வரை பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் அறியாத ஓர் அற்புத மலைப் பிரதேசத்திற்கு சுற்றுலா செல்வோம் வாங்க.

மாறுபட்ட மக்களில் தொடங்கி, கலாச்சாரம், பாரம்பரியம், அழகிய கடற்கரைகள், அடர்ந்த காடுகள், திராவிடக் கல பேசும் கோவில்கள் என மத்தியில் இருந்தும், வட இந்தியாவில் இருந்தும் மாறுபட்டு காட்சியளிப்பதுதான் தென்னிந்தியா. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் வருடத்தின் அனைத்து நாட்களுமே வறட்சியாய் இருக்கும் பாளை வனங்களும், எந்நேரமும் பனி மட்டுமே பொழியும் காஷ்மீர், லே உள்ளிட்டவற்றைப் போல் அல்லாமல் தென்னிந்தியாவிற்கு உட்பட்ட பகுதிகள் வித்தியாசமான சூழ்நிலையைக் கொண்டுள்ளது. அவற்றுள், தற்போது வரை பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் அறியாத ஓர் அற்புத மலைப் பிரதேசத்திற்கு சுற்றுலா செல்வோம் வாங்க.

லம்பாசங்கி

லம்பாசங்கி


உலக அளவில் பிரசித்தமானது மேற்குத் தொடர்ச்சி மலை. பல அரிய உயிரினங்கள், பசுமையான மலைக் காடுகள், வியப்பூட்டும் நீர்வீழ்ச்சிகள் என மேற்குத் தொடர்ச்சி மலையின் சிறப்பு பட்டியல் நீளும். இருப்பினும், சீதோஷன நிலையைப் பொருத்தவரையில் மணாலி, லே லடாக், டார்ஜிலிங் போன்றவற்றிற்கு இணையாகவில்லை. இந்த குறையைப் போக்கும் வகையில் இயற்கை அளித்த பொக்கிஷமே லம்பாசங்கி.

Bdmshiva

எங்கே உள்ளது ?

எங்கே உள்ளது ?


ஆந்திராவில் காஷ்மீராக காட்சியளிக்கிறது லம்பாசங்கி. மலைக் கிராமமாக அறியப்படும் லம்பாசங்கி விசாகப்பட்டினத்திற்கு உட்பட்ட சிந்தப்பல்லி அருகே உள்ளது. உயரமான பள்ளத்தாக்குகளும், பனிப் பொழிவுடன் வீசும் சிலுசிலுக் காற்றும் உடலை சிலிப்படையச் செய்யும்.

மனதைத் தளுவும் மூடுபனி

மனதைத் தளுவும் மூடுபனி


வருடத்தின் பெரும்பாலான நாட்கள் லம்பாசங்கி கிராமம் மூடுபனியால் போர்வை போர்த்தியது போன்றே காட்சியளிக்கும். டிசம்பர் முதல் பிப்ரவரி வரையிலான காலம் உச்சகட்ட குளிராக, அதாவது பூஜ்ஜியம் வரையில் குறைந்து சில நேரங்களில் மேகக் கூட்டங்களே பனிப் பொழிவாக மாறி மலைத் தொடரை ரம்மியமாக்குகிறது.

இரவில் முகாம்

இரவில் முகாம்


பசுமை புல்வெளிகள் மீது பனி படர அன்று இரவு அங்கேயே கழிக்க விரும்பினால் அதற்கு ஏற்ற முகாம் அமைக்க தலங்களும் உள்ளன. சூனால், முகாமிற்குத் தேவையான உபகரணங்களை சுற்றுலாப் பயணிகள் தான் எடுத்துச் செல்ல வேண்டும்.

Bureau of Land Management

தஜங்கி நீர்த்தெக்கம்

தஜங்கி நீர்த்தெக்கம்


லம்பாசங்கியில் இருந்து சுமார் 6.5 கிலோ மீட்டர் தொலைவில் தஜங்கி நீர்த்தேக்கம் அமைந்துள்ளது. பசுமைக் காடுகள் சூழ, சலசலக்கும் ஆற்றுப் படுகையுடன் அமைந்துள்ள இது புகைப்படம் எடுக்கவும், மனதிற்கு விருப்பமானவர்களுடன் நேரம் செலவிடவும் ஏற்றதாக இருக்கும்.

Abhishek SingerVerma

கோத்தப்பள்ளி நீர்வீழ்ச்சி

கோத்தப்பள்ளி நீர்வீழ்ச்சி


லம்பா சிங்கிக்க பயணம் செய்துர்கள் என்றால் கூடவே தவறாமல் சென்று அனுபவித்து வரவேண்டிய இடம் கோத்தப்பள்ளி நீர்வீழ்ச்சி. லம்பா சிங்கி கிராமத்திலிருந்து 32 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கோத்தப்பள்ளி நீர்வீழ்ச்சி. தென்னிந்தியாவில் உள்ள நீர்வீழ்ச்சிகளின் பட்டியலில் காணப்படாத இது சமீபத்திலேயே உள்ளூர் சிறுவர்களார் கண்டறியப்பட்டது. தற்போது பெறும்பாலான சுற்றுலாப் பயணிகள், இளைஞர்களின் இலக்காக இது உள்ளது.

சாகச மலையேற்றம்

சாகச மலையேற்றம்


லம்பா சிங்கி நீர்வீழ்ச்சிக்கு அருகில் உள்ள மலைக்குன்றுகளும், சமவெளிகளும் பள்ளத்தாக்குகளும் சாகச விரும்பிகளுக்கு ஒரு சிறந்த தலமாக திகழ்கிறது. மலை ஏறும் பயிற்சிக்கு ஏற்ற இடமாக அறியப்பட்டுள்ள இந்த மலைக் குன்று பகுதிகளில் முகாமிட்டு தங்கவும் ரம்யமான சூழ்நிலை உண்டு.

IM3847

இவங்க கூட போங்க..!

இவங்க கூட போங்க..!


பனி பொழிந்த மலைச் சாலை, அதிக நடமாட்டம் இல்லாத பாதை, தனிமைப் படுத்தப்பட்ட குன்றுகள், ரம்மியமான நீர்வீழ்ச்சி என புதுவிதமா தோற்றம் கொண்ட லம்பாசிங்கி நிச்சம்ய புதுமனத் தம்பதியருக்கு ஏற்ற பிக்னிக் தலமாகும். நண்பர்களுடன் ஜாலியார் சுற்றுலா செல்லவும் இது ஏற்றதாக உள்ளது இதன் தனிச் சிறப்பு.

Bdmshiva

எப்போது செல்லலாம் ?

எப்போது செல்லலாம் ?


ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு உள்ளிட்ட பகுதிகளில் பனிப் பொழிவு ஏற்பட்டுள்ளது என என்றாவது ஒரு நாள் செய்திகள் வாயிலாக நாம் கேட்டிருப்போம். உள்ளூர் மக்களைத் தவிர்த்து சுற்றுலாப் பயணிகள் ஒரு சிலரே இதனை ரசித்திருக்க முடியும். ஆனால், மேற்குறிப்பிட்ட காலகட்டத்தில் லம்பாசங்கிக்கு பயணம் செய்தீர்கள் என்றால் நிச்சயம் சிறிய அளவிலாக பனிப் பொழிவையாவது ரசிக்க முடியும்.

IM3847

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X