» »இந்த கோடைக்கு நீங்கள் ஊட்டிக்கு போனா இத மட்டும் மறந்துடாதீங்க

இந்த கோடைக்கு நீங்கள் ஊட்டிக்கு போனா இத மட்டும் மறந்துடாதீங்க

Posted By: Udhaya

கோடை வந்தாலே குதூகலம்தான் குழந்தைகளுக்கு அவங்களுக்கு என்ன ஒரு மாசம் லீவுல நம்மள பாடா படுத்திருவாங்களேனு அலுத்துக்குறீங்க கரக்ட்டா...

பேசாம ஒரு ரெண்டு நாள் டூர் போய்ட்டு வரலாமா னு உங்க மனைவி சொல்லிருப்பாங்க.,. வேலை அவசரத்துல நீங்க காதுலயே வாங்கிருக்க மாட்டீங்க...

இந்த கோடையில் மனைவி (அ) காதலியுடன் செல்ல ஏற்ற 'அந்த' இடங்கள்!

குழந்தைகளும் படிப்பு அது இதுனு இப்போதான் ப்ஃரீயா இருப்பாங்க... அந்த கிளாஸ் இந்த கிளாஸ்னு அனுப்பாம ஜாலியா ஒரு டூர்....

சரி சரி மனசு மாறுறதுக்குள்ள இந்த கட்டுரைய படிச்சி எப்படி போகலாம்னு திட்டமிடுங்க... சந்தோசமா போய்ட்டு வரலாம்...

நேரம்

நேரம்

நீங்கள் காலை 8 மணிக்கெல்லாம் கோயம்புத்தூரை அடையுமாறு பார்த்துக்கொள்ளவேண்டும்.

மலைப் பாதை என்பதால் போகும் நேரம் அதிகமாகும்.

Pratheept2000

சொந்த வாகனம்

சொந்த வாகனம்

சொந்த வாகனத்தில் வந்தால் கோயம்பத்தூரிலிருந்து ஊட்டி ஒரே வழிதான். தேசியநெடுஞ்சாலை எண் 181 வழியாக மேற்கு நோக்கி பயணிக்கவேண்டும்.

பின் குன்னூர் கைக்கட்டி மஞ்சூர் சாலையில் பயணிக்கவேண்டும். இடதுபுறம் திரும்பி காத்தாடி மட்டம் எனும் இடம் நோக்கி சென்றால் ஊட்டி வந்துவிடும்.

பொதுப் போக்குவரத்து

பொதுப் போக்குவரத்து

பொதுப்போக்குவரத்தில் பயணித்தால் கோயம்பத்தூரிலிருந்து நிறைய பேருந்துகள் ஊட்டி நோக்கி செல்லும்.

அல்லது ஊட்டி ரயிலில் பயணிக்க ஆசைப்படுகிறீர்கள் என்றால் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் ஞாயிறு காலை 5.15 க்கு வரும்.. அதை பிடிக்கவேண்டும் என்றால் முன்கூட்டியே திட்டமிட்டு வந்து சேரவேண்டும்.

Shanmugamp7

கற்பூர மரம்

கற்பூர மரம்

உதகைமண்டலத்தில் அமைந்துள்ள கற்பூர மரம் 12 மீட்டர்கள் சுற்றளவு கொண்டதாக உள்ளது. இதனை 12 ஆட்கள் கைகோர்த்தால்தான் கட்டி பிடிக்க முடியும். இம்மரம் பழைய மைசூர் சாலையில் அமைந்துள்ளது.

KARTY JazZ

பனிச்சரிவு ஏரி

பனிச்சரிவு ஏரி


நீலகிரி மலையில் அமைந்துள்ள பனிச்சரிவு ஏரி ஊட்டியில் இருந்து சுமார் 22 கிமீ தொலைவில் உள்ளது. 19 ஆம் நூற்றாண்டின் போது இந்தப் பகுதியில் நிகழ்ந்த பனிச்சரிவின் காரணமாக இந்தப் பெயர் அமைந்தது.

stonethestone

 சாகச செயல்கள்

சாகச செயல்கள்

சில சுற்றுலா பயணிகள், ஏரிக்கு அருகே முகாம்கள் அமைத்து தங்குவர். சிலர் படகு விளையாட்டை விரும்புகின்றனர் சிலர் ட்ரெக்கிங் போன்ற சாகச செயல்களில் ஈடுபடுகின்றனர்.

Amol.Gaitonde

அரசு தாவரவியல் பூங்கா

அரசு தாவரவியல் பூங்கா

பொடானிக்கல் கார்டன் எனப்படும் அரசு தாவரவியல் பூங்கா, 22 ஹெக்டேர் பரப்பளவில், ஊட்டியில் அமைந்துள்ளது. தொட்டபெட்டா மலைச் சரிவுகளில் விரிந்துள்ள இந்தப் பூங்காக்கள், பசுமையான கம்பளம் போன்று காட்சியளிக்கும். இந்தப் பூங்காவை பராமரிக்கும் பொறுப்பு தமிழ்நாடு தோட்டக்கலை துறையிடம் உள்ளது.

VasuVR

Read more about: travel