Search
  • Follow NativePlanet
Share
» »எமதர்மனின் ஒரே கோயில் : மரணபயம் நீங்க விசித்திர வழிபாடு!

எமதர்மனின் ஒரே கோயில் : மரணபயம் நீங்க விசித்திர வழிபாடு!

எமதர்மன் என்றாலே ஒருவித அச்சம் ஏற்படுகிறது. உயிரை வாங்குபவன், கணக்கை முடிப்பவன் என்றெல்லாம் நம்பிக்கை உள்ளது. ஆனால் அப்படிபட்ட எமனுக்கும் கூட தமிழகத்தில் கோயில் உள்ளது. வேறு சில கோயில்கள் இந்தியாவில் இருந்தாலும் அதில் எமன் மூலவராக இல்லை. உலகிலேயே எமதர்மனை மூலவராகக் கொண்ட கோயில் பற்றியும் எப்படி செல்வது, அருகில் சுற்றிப்பார்க்க என்னவெல்லாம் இருக்கிறது என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

 எங்குள்ளது

எங்குள்ளது

எமதர்மன் கோயில் தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே திருச்சிற்றம்பலம் எனும் ஊரில் அமைந்துள்ளது.

Unknown

தல வரலாறு

தல வரலாறு

மன்மதனால் தவம் கலைந்ததால் கோபம் கொண்ட சிவன் ஒரு வேகத்தில் மன்மதனை அழித்தாராம். பின் ரதிதேவியின் வேண்டுதலுக்காக இத்தலத்திற்கு அருகிலுள்ள ஒரு இடத்தில் மன்மதனை உயிர்த்தெழச் செய்தாராம். அப்போது எமன் தனக்கு அளித்துள்ள அழிக்கும் பணியை செய்ய அனுமதிக்குமாறு வேண்டியதால், அதே இடத்தில் எமனுக்கு ஒரு தலம் அமைத்துக் கொடுத்தாராம். அதுதான் இந்த தலம் என்கிறது வரலாற்று நம்பிக்கை.

Unknown

காமன்பொட்டல்

காமன்பொட்டல்

மன்மதன் உயிர்த்தெழுந்த தலம் இங்கிருந்து சிறுதொலைவில் அமைந்துள்ளது. இதற்கு காமன்பொட்டல் என்றுபெயர். இக்கோயில் வளாகத்தில் வீரனார், ராக்காச்சி, முத்துமணி, கருப்பண்ணசாமி, கொம்புக்காரன், வடுவச்சி எனக் காவல்தெய்வங்களும் உள்ளன.

Ssriram mt -

நேர்த்திக்கடன்

நேர்த்திக்கடன்

சுவாமிக்கு அபிசேகம் செய்து வஸ்திரம் அணிவித்தல் நேர்த்திக்கடனாக பார்க்கப்படுகிறது.

Unknown

பிரார்த்தனை

பிரார்த்தனை

இந்த கோயிலில் வந்து வழிபட்டால் ஆயுள் நீளும் என்கிறார்கள். எமதர்மர் நீதிக்கு தர்மர் எனவே திருடுபோனவர்கள், ஏமாற்றப்பட்டவர்களெல்லாம் இங்குவந்து வேண்டிக்கொள்கின்றனர்.

Unknown

 கோரிக்கை

கோரிக்கை

தங்கள் கோரிக்கையை தாளில் எழுதி, அதை எமதர்மன் சன்னதியில் வைத்து வழிபட்டு, சூலத்தில் கட்டிவிடுகின்றனர். இவ்வாறு வேண்டுதல் வைத்த சில நாள்களில் அது நிறைவேறிவிடும் ஆச்சர்யங்களும் இங்கு நிகழ்கின்றன.

Unknown

ஆயுள்விருத்தி ஹோமம்

ஆயுள்விருத்தி ஹோமம்

சனிக்கிழமைகளில் எமகண்ட நேரங்களில் இந்த கோயிலில் ஆயுள்விருத்தி ஹோமம் நடத்தப்படுகிறது. சனியும், சூரியனும் எம புத்திரர்களாக கருதப்படுகின்றனர்.

Unknown

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

முறுக்கிய மீசையுடன், எருமை மீது அமர்ந்திருக்கும் எம தர்மன் நீல நிற வஸ்திரம் அணிந்திருக்கிறார். கைகளில் பாசக்கயிறு, ஓலைச்சுவடி, கதை வைத்துள்ளார். இவருக்கு கீழே சித்திரகுப்தரும், எமதூதரும் இருக்கின்றனர்.

Ssriram mt

விழாக்கள்

விழாக்கள்

ஆடிமாதத்தில் இந்த கோயிலில் விழா சிறப்பிக்கப்படும். அப்போது பத்து நாள்களுக்கு எமனுக்கு சிறப்பு அலங்காரத்துடன் பூசை நடைபெறும். அப்போது மிக உக்ரத்துடன் காணப்படுவாராம்.

Unknown

வேட்டை

வேட்டை

எமன் வேட்டைக்கு செல்லும்போது அதிக கோபத்துடன் காணப்படுவாராம். இவர் உருவத்தைப் பார்க்கும்போது கண்கள் சிவந்து பெரிதாகி, கோபத்தின் வெளிப்பாடாய் காட்சிதருமாம். அதை குறைக்கவே அருகில் பிள்ளையார் உள்ளார்.

Unknown

 கோயில் குளத்தின் மர்மம்

கோயில் குளத்தின் மர்மம்

இந்த கோயில் குளத்தில் யாரும் நீராடுவதில்லையாம். அது என்ன காரணம் என்பது புரியாத புதிராக உள்ளது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணம் சொன்னாலும் சரியான காரணமென்று எதும் இல்லை.

Joe Mabel

சிறப்பம்சம்

சிறப்பம்சம்

ஆலயத்தின் மூலவராக எமதர்மன் இருக்கிறார். இந்த கோயில் 1000வருடங்களாகவே பராமரிக்கப்பட்டு பூசிக்கப்பட்டு வருகின்றதாம்.

Ssriram mt

எப்படி செல்லலாம்?

எப்படி செல்லலாம்?

புதுக்கோட்டையிலிருந்து மூன்று வழிகளில் எமதர்மன் கோயிலை அடையலாம்.

புதுக்கோட்டை - ஆலங்குடி - வடகாடு - ஆவணம் - திருச்சிற்றம்பலம்

புதுக்கோட்டை - காயம்பட்டி - கும்மாங்குளம் - ராசியாமங்கலம் - திருச்சிற்றம்பலம்

புதுக்கோட்டை - வடவளம் - மாங்கோட்டை - நம்பம்பட்டி - ஆலங்குடி - திருச்சிற்றம்பலம்

 முதல் வழி

முதல் வழி

மொத்த தொலைவு - 48 கிமீ

பயண நேரம் - 1.15 மணி

வழி - ஆலங்குடி - வடகாடு - ஆவணம்

போக்குவரத்து நெரிசல்மிக்க பகுதிகள் - புதுக்கோட்டையிலிருந்து பொன்நகர் வரும்வரை அளவான போக்குவரத்து நெரிசல் காணப்படும்

டும்சர் மற்றும் திருவரங்குளம் அருகிலும் போக்குவரத்து அதிகம் காணப்படும்.

முதல் வழியில் காணவேண்டிய இடங்கள்

முதல் வழியில் காணவேண்டிய இடங்கள்

புனித இருதய ஆலயம், அந்தோணியார் ஆலயம், இயேசு மலை கோயில், இம்மானுவேல் ஆலயம், பெரியநாயகிபுரம் விநாயகர் கோயில், திருவரங்குளம் சிவன் கோயில், பிடாரியம்மன் கோயில், ஆயிப்பட்டி பிள்ளையார் கோயில், செல்வகணபதி கோயில் என எண்ணற்ற கோயில்கள் இந்த வழித்தடத்தில் இருக்கின்றன.

மேலும் புதுக்கோட்டையிலிருந்து இரண்டு கிமீ ஒரு பெட்ரோல் நிலையம், சிறிது நேரத்தில் மற்றொரு பெட்ரோல் நிலையம் என ஐந்தாறு நிலையங்கள் இந்த வழித்தடத்தில் உள்ளன. இவை தவிர்த்து பல ஏடிஎம்களும் இருக்கின்றன.

மற்ற இருவழிகள்

மற்ற இருவழிகள்

மற்ற இருவழிகளும் மாற்றுப்பாதைகளாக வைத்துக்கொள்ளலாமே தவிர, அதை பின்பற்றவேண்டாம். அந்த வழிகளில் சாலைகளும் மிகச்சிறப்பாக இல்லை. எனினும், தேவைப்படின் அந்த வழிகளில் செல்லுங்கள்.

ரயில் நிலையம்

ரயில் நிலையம்

திருச்சிற்றம்பலம் ரயில் நிலையம், போராவூரணி ரயில் நிலையம் இந்த கோயிலுக்கு மிக அருகில் அமைந்துள்ள நிறுத்தங்கள் ஆகும். முக்கிய ரயில் நிலையமான தஞ்சாவூர் 52கிமீ தொலைவில் உள்ளது.

Read more about: travel temple

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more