» »பல நூறு வருடங்களுக்கு முன் தமிழகம் எப்படி இருந்தது தெரியுமா?

பல நூறு வருடங்களுக்கு முன் தமிழகம் எப்படி இருந்தது தெரியுமா?

Written By: Udhaya

தமிழ்நாட்டின் வரலாறும் தமிழர்களின் நாகரிகமும் மிகப்பழமையானது. உலகின் முதல் மொழி தமிழ் என்று பல்வேறு அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருந்த நகரங்கள் கூட இப்போதும் சீரும் சிறப்புமாக இருக்கிறது. பண்டை தமிழகத்தை சேர, சோழ, பாண்டியர்கள் ஆட்சி செய்தனர். சேர சோழ பாண்டியர்களின் ஆட்சிக்காலத்தில் சொர்க்கமாக திகழ்ந்தது தமிழ்நாடு. மேலும் பல்லவர்களும், அதற்குபின் முகலாயர்கள், ஆங்கிலேயர்கள் என நிறைய பேரின் ஆட்சிக்குட்பட்டிருந்தது தமிழ்நாடு.. பல நூறு வருடங்களுக்கு முன் தமிழகம் எப்படி இருந்தது தெரியுமா? வாருங்கள் இந்த பதிவில் காண்போம்

மதுரை மீனாட்சியம்மன் கோயில்

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் யானையுடன் காட்சி தரும் யானைப் பாகன் ஒருவர்.

சொக்கநாத பெருமான் கருவறை

மதுரை சொக்கநாத பெருமான் கருவறையின் மேல் செய்யப்பட்ட வேலைப்பாடுகளை கவனியுங்கள். இதுதான் இந்திர விமானம்

திருச்சி கோயிலின் தெப்பக்குளம்

மலைக்கோட்டையிலிருந்து திருச்சி கோயிலின் தெப்பக்குளத்தின் மிகத் தெளிவான புகைப்படம்.

சென்ட்ரல் ரயில் நிலையம்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் முதல் மற்றும் இரண்டாம் நடைமேடைகள். நினைத்துப் பாருங்கள் இப்போது இந்த இடம் எப்படி மாறிவிட்டது.

செனட் ஹவுஸின் முன்

செனட் ஹவுஸின் முன் அமைக்கப்பட்டிருந்த ராணியின் சிலை. அந்த சிலைக்கு முன் மதராஸின் மைந்தர்கள் நின்று எடுக்கும் புகைப்படம் இதுவாகும்.

மதுரையின் ஆலமரம்


பல ஆண்டுகளுக்கு முன் மதுரையில் எடுக்கப்பட்ட புகைப்படம். ஆலமரத்திந் முன் அரிவாளுடன் போஸ் கொடுக்கும் ஒருவர்.

மதுரை மீனாட்சியம்மன்


மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் நுழைவு வாயிலின் மற்றுமொரு அழகிய புகைப்படம்.

குளச்சல் துறைமுகம்

குமரி மாவட்டம் குளச்சலில் அந்த காலத்தில் இருந்த துறைமுகம். சரக்கு கப்பலொன்றும் படத்தில் தெரிகிறது பாருங்கள்.

பாண்டிச்சேரி

பாண்டிச்சேரி பகுதியில் அமைந்துள்ள வில்லியனூர் கோயில் தேரோட்டம்

அண்ணாமலையார்

அண்ணாமலையார் கோயிலின் மிகத் தெளிவான புகைப்படம் இதுவாகும்.

திருவரங்கம்

திருச்சிராப்பள்ளி அருகே அமைந்துள்ள திருவரங்கத்தின் நுழைவு வாயில் பழமையான புகைப்படங்கள்.

மீனாட்சியம்மன் கோயில்

மீனாட்சியம்மன் கோயிலின் பொற்றாமரைக் குளமும் அதன் அழகிய கோபுரமும்...

பதினாறு கால் மண்டபம்

மதுரை கோயிலின் ஆயிரங்கால் மண்டபத்தின் முன் அமைந்துள்ள பதினாறு கால் மண்டபம்.

சிதம்பரம் நடராஜர்

சிதம்பரம் நடராஜர்கோயிலின் அழகிய மண்டபம்

மதுரை புதுமண்டபம்

மதுரை புதுமண்டபத்தின் 1880ம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படமாகும்.

திருச்சி மலைக்கோட்டை

திருச்சி மலைக்கோட்டையின் அந்த காலத்துப் புகைப்படம் பாருங்கள்.

செஞ்சி


செஞ்சி வேணுகோபாலசுவாமி ஆலயத்தின் சிற்பங்கள்

திருவரங்கம் கோயில் கோபுரம்

திருச்சி திருவரங்கம் கோயிலின் கோபுரத்தின் அழகிய புகைப்படம்

டவுன் கேட்


திருச்சி திருவரங்கம் கோயில் டவுன்கேட்

தஞ்சாவூர் தர்பார் ஹால்

தஞ்சாவூர் தர்பார் ஹால்

திருவானைக்காவல்

திருவானைக்காவல் திருக்கோயிலின் அழகிய தோற்றம்

பாண்டிச்சேரி

பாண்டிச்சேரியின் பழைய தோற்றம்

திருவரங்கம்


தென்னை மரங்கள் சூழ்ந்த அழகிய காட்சி

Read more about: travel tamilnadu

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்