» »இந்தியாவில் வாழ்ந்த தேவதைகள்! மர்ம முடிச்சை அவிழ்க்கும் மணற் குகை!

இந்தியாவில் வாழ்ந்த தேவதைகள்! மர்ம முடிச்சை அவிழ்க்கும் மணற் குகை!

Written By:

நம் முன்னோர்கள் நமக்குச் சொன்னதில் மிகவும் முக்கியமானதில் ஒன்று, தீயவற்றை செய்யக்கூடாது, நாம் பிறர் அறியாமல் செய்யும் ஒவ்வொன்றையும் தேவதைகள் நம் அருகில் நின்றுகொண்டு பார்ப்பார்கள். அதனால், யாருக்கும் தீங்கு நினைக்காமல் இருக்க வேண்டும் என்று. நாம் பிறருக்கு என்ன செய்கிறோமோ அதையே தேவதைகள் நமக்கும் செய்வார்கள். பிறருக்கு உதவி செய்கையில் நமக்கும் அதுபோன்ற உதவிகள் கிடைக்கும் என பெரியவர்கள் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறோம். இவை அனைத்தும், ஓர் கட்டுக்கதையே, தேவதைகள் என்பது ஓர் கற்கனையே என்றும் நாம் இத்தனை நாட்கள் நினைத்திருப்போம். ஆனால், அத்தகைய கட்டுக்கதைகளை உடைத்தெரியும் வகையில் தற்போது இந்தியாவின் கிழக்கு பகுதியில் உள்ள மேகாலயத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஓர் குகை தேவதைகள் மீதான மர்ம முடிச்சுக்களை அவிர்க்கும் வகையில் உள்ளது.

குகைகள்

குகைகள்


மலை அல்லது குன்றுகளின் அடிவாரங்களில் இயற்கையாக அமைந்த அறைப் பகுதியே பொதுவாக குகை என அறியப்படுகிறது. கற்காலங்களில் மனிதனின் வசிப்பிடமாக குகைகளே இருந்து வந்தன. குகையில் வாழ்ந்த அவன் குகைச் சுவர்களில் தீட்டிய ஓவியங்களும், குறியீடுகளும்தான் அன்றைய மொழி பரிமாற்றத்துக்கு பயன்படுத்தப்பட்டது. இன்றும் கூட பல இடங்களில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட குகைகளை காண முடிகிறது. இவைத்தவிர கசித்துளி படிவுகள், சுண்ணாம்பு போன்றவற்றால் உருவான பிற்கால குகைகளும் இந்தியாவில் நிறைய உள்ளன. இவற்றில் சில வரலாற்று சிறப்புக்காகவும், திகில் அனுபவத்தை தருவதாலும் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களாக திகழ்ந்து வருகின்றன.

Jojo, en:Jojo_1

மேகாலயம்

மேகாலயம்


மேகாலயா மாநிலம் காஸி, ஜைன்டியா மற்றும் கரோ பழங்குடி இன மக்கள் வசிக்கும் பகுதியாகும். மடிப்பு மடிப்புகளாய் புரண்டு கிடக்கும் மலைத்தொடர்கள் அமைந்துள்ள இம்மாநிலத்தின் வடக்கில் அஸ்ஸாம் மாநிலமும், தெற்கில் பங்களாதேஷ் நாடும் எல்லைகளாக உள்ளது. இந்த மாநிலத்தின் மூன்றில் ஒரு பங்கு நிலப்பகுதி வனப் பிரதேசமாக காட்சியளிக்கிறது. இங்குள்ள காடுகள் பல்லுயிர்ப்பெருக்க இயற்கைச்சூழல் அமைப்பை கொண்டுள்ளன. பல்வேறு விலங்கினங்கள், பறவைகள் மற்றும் தாவரங்கள் இந்த காடுகளில் இடம்பெற்றுள்ளன. செழுமையான இந்த வனப்பிரதேசத்தின் தாவர மற்றும் உயிர் செழிப்பு பார்வையாளர்களை பிரமிக்க செய்கின்றன.

Rajesh Dutta

மேகாலயக் குகை

மேகாலயக் குகை


மேகாலயா மாநிலத்தின் ஜெயின்டியா மலைப்பகுதியில் 31 கிலோ மீட்டர் நீளம் கொண்ட குகை இந்தியாவின் நீளமான குகையாக கருதப்படுகிறது. இதேபோல அடர்ந்த காடுகளுக்கு மத்தியில் அமைந்திருக்கும் எண்ணற்ற குகைகள் மேகாலயா மாநிலத்தில் நிறைய காணப்படுகின்றன. அவற்றில் சில குகைகள் உலகின் மிக நீளமான மற்றும் மிக ஆழமான குகைகளில் ஒன்றாக திகழ்ந்து வருகின்றன.

Biospeleologist - F Simpson

தேவதைகள் குகை

தேவதைகள் குகை


மேகாலயாவின் அடர்ந்த காடுகளைக் கடந்து சில கிலோ மீட்டர் தொலைவில் காணப்படுகிறது க்ரெம் புரி என்று அழைக்கப்படும் தேவதைகளின் குகை.
கடல் மட்டத்திலிருந்து சுமார் 4 ஆயிரம் அடி ஆழமான செங்குத்தான பள்ளத்தாக்கின் அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த தேவதைகளின் குகை சுமார் 24.5 கிலோ மீட்டர் நீளமும், 13 சதுர கிலோ மீட்டர் பரப்பளவையும் உள்ளடக்கியதாகும்.

Dave Bunnell

திகிலூட்டும் தேவதைகள் குகை

திகிலூட்டும் தேவதைகள் குகை


சிறிய நடைபாதையுடன் உள்ளே நுழையும் இந்தக் குகை, உண்மையில் அடர் இருள் சூழ்ந்தவையாகவும், ஆழ்ந்த அச்சத்தை தரக்கூடிய வைகையிலும் அமைந்துள்ளது. குறிப்பாக, யாரேனும் உள்ளே வழி தவறி சென்றுவிட்டர்ல மீண்டு வெளியே வருவது முடியாத காரியம். இதில் மேலும் நமக்கு வியப்பூட்டும் வகையில் குகைகளின் பாறையில் மிகப் பெரிய மீன்களின் பற்கள் படிவங்களாக காணப்படுவதாகும். ஏனெனில் தற்போது அடர்ந்த காடாக காணப்படும் மேகாலயா ஒரு காலத்தில் ஆழ்கடல் பகுதியாக இருந்திருப்பதற்கான சாத்தியக்கூறாக அந்த மீன்களின் படிகங்கள் அமைந்துள்ளன. மேலும், பள்ளத்தாக்கில் நடுப்பகுதியில் அமைந்துள்ள கிரேட் வொயிட் ஷார்க் என்ற சாம்பல் பாறையில் திமிங்கலம் போன்ற தோற்றம்கொண்ட கடல்வாழ் உயிரினம் உள்ளது.

R. Sieben

டைனோசர் உலகம்

டைனோசர் உலகம்


இந்த தேவதைகளின் குகையில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான சாததியக்கூறுகள் சிலவை மட்டுமே காணப்பட்டாலும், இங்கே காணப்படும் எலும்புகளின் எச்சங்கள் 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய கடல்வாழ் டைனோசர்களுக்கு உரியது என ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், இப்பகுதியில் கண்டறியப்பட்ட பல பொருட்கள் அறிவியலாளர்களையே வியப்படையச் செய்யும் வகையில் மர்மங்கள் நிறைந்ததாகக் காணப்படுகிறது.

Nobu Tamura

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்