Search
  • Follow NativePlanet
Share
» »ஒவ்வொரு கடவுளுக்கும் இரண்டு சிலைகள்... ஒரே தலத்தில் இதுவென்ன அதிசயம்..!

ஒவ்வொரு கடவுளுக்கும் இரண்டு சிலைகள்... ஒரே தலத்தில் இதுவென்ன அதிசயம்..!

ஒரு கோவிலில் மூலவர் தொடங்கி, அம்மையார், தலவிருட்சம், தீர்த்தம், என ஒவ்வொறு திருவுருவமும் இரண்டு முறை பிரதிஸ்ட்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.

ஒரு கோவில் என்றால் மூலவர் சன்னிதி, அம்மையார், சில கோவில்களில் அம்மையாருக்கு என தனிச் சன்னிதி, விநாயகர், நந்தி, தல விருட்சம், மண்டபம் என பொதுவாக அமைந்திருக்கும். இவை எல்லாம் ஒன்றாக அமைந்த கோவில் மட்டும் தானே நமக்குத் தெரியும். ஆனால், இங்கே ஒரு கோவிலில் மூலவர் தொடங்கி, அம்மையார், தலவிருட்சம், தீர்த்தம், என ஒவ்வொன்றும் இரண்டு முறை பிரதிஸ்ட்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. அது ஏன், அக்கோவில் எங்கே உள்ளது என டர்ந்து பார்க்கலாம் வாங்க.

எங்கே உள்ளது ?

எங்கே உள்ளது ?


ஒவ்வொரு கடவுளுக்கும் இரண்டு சிலைகள் பிரதிஸ்ட்டை செய்யப்பட்டு பூஜை நடக்கும் இடம் நாட்டிலேயே நம் தென்னிந்தியாவில் தான் உள்ளது. அதுவும், சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஓர் கோவிலில் தான் இந்த அதிசய நிகழ்வு அரங்கேறுகிறது.

Mohan Krishnan

கோவில் சிறப்பு

கோவில் சிறப்பு


திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது படம்பக்கநாதர் கோவில். தேவாரப் பாடல் பெற்ற சிவாலயங்களில் இத்தலம் 253 வது தலமாக உள்ளது. இக்கோவிலில் சிவபெருமான் சுயம்பு லிங்கமாக காட்சியளிக்கிறார். இத்தலத்து மூலவராக ஆதிபுரீஸ்வரர், ஒற்றீஸ்வரர் என இரண்டு திருவுருவம் உள்ளது. அதுமட்டுமின்றி, வடிவுடையாம்பினை, வட்டப்பாறையம்மன், அத்தி, மகிழம், தீர்த்தத்தில் பிரம்மம், அத்தி தீர்த்தம் என எல்லாமே இரண்டாக உள்ளது.

Ssriram mt

காரணம்

காரணம்


ஆகம பூஜையில் காமீகம் என இரண்டு ஆகமத்தின் படி இங்கு இரண்டு என்ற எண்ணிக்கையில் வழிபாடு நடத்தப்படுகிறது. சிவபெருமான் பாண லிங்க வடிவில் காட்சியளிக்கிறார். பைரவர் பிற கோவில்களில் காணப்படுவதைப் போல அல்லாமல் தனது வாகனமின்றி உள்ளார். அம்மனின் 51 சக்தி பீடங்களில் இத்தலம் இஷீ சக்தி பீடமாக குறிப்பிடப்படுகிறது.

Wiki heritage review

அம்பிகை தரிசனம்

அம்பிகை தரிசனம்


இத்தலத்து தாயாரான வடிவுடையநாயகி தனிச்சன்னதியில் தெற்கு நோக்கியவாறு அருள்பாலிக்கிறார். அம்மையின் காலுக்குக் கீழே ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. கேரள நம்பூதிரிகளைக் கொண்டே இங்கு பூஜைகள் நடத்தப்படுகின்றன.

Anandajoti Bhikkhu

கோவில் வரலாறு

கோவில் வரலாறு


மதுரையில் பாண்டிய மன்னரால் அநீதியிழைக்கப்பட்ட கண்ணகி, மதுரையை எரித்துவிட்டு கோபத்துடன் வெளியேறினாள். அவள், இத்தலத்திற்கு வந்து சிவனிடம் முறையிட்டால். சிவபெருமானுளும் கண்ணகியின் கோபத்தை தனிக்க முயற்சித்து அருகே இருந்த கிணற்றில் கண்ணகியை விழச் செய்து வட்ட வடிவ பாறையால் கிணற்றை மூடினார். பின், கண்ணகி அந்த பாறையின் வடிவிலேயே எழுந்தருளினாள். எனவேதான் இத்தலத்து அம்பாள் வட்டப்பாறையம்மன் என அழைக்கப்படுகிறார்.

PJeganathan

வழிபாடு

வழிபாடு

வறுமையின் பிடியில் சிக்கித் தவிப்போர், அதிகப்படியான மன உழைச்சலால் அவதிப்படுவோர் இத்தலத்திற்கு வந்து மஞ்சள் தூவி வழிபடுவதன் மூலம் சுபமான நிலை நிலவும். இத்தலத்து விநாயகரை வேண்டிக்கொண்டால் குழந்தைகள் ஒழுக்கம் காப்பர் என்பது நம்பிக்கை. வட்டப்பாறையம்மன் சன்னிதிக்கு அருகில் உள்ள திருப்தீஸ்வரர் என்னும் சிவனை வழிபட்டால் வாழ்க்கை சிறக்கும்.

Zhyusuf

நேர்த்திக்கடன்

நேர்த்திக்கடன்


பக்தர்கள் வேண்டிய காரியம் நிறைவேறியதும் மூலவருக்கும், அம்பாளுக்கும் விசேஷ அபிஷேகம் செய்து, நெய்வேத்தியம் படைத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.

Indianhilbilly

நடைதிறப்பு

நடைதிறப்பு

அருள்மிகு தியாகராஜசுவாமி கோவில் நடை காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறக்கப்பட்டு பூஜை நடத்தப்படுகிறது.

Mohan Krishnan

திருவிழா

திருவிழா

வட்டப்பாறை அம்மனுக்கு சித்திரை மாதத்தில் உற்சவத் திருவிழா நடத்தப்படுகிறது. பவுர்ணமியன்று இத்தலத்து இறைவனுக்கு நடக்கும் சாம்பிராணி, தைல பூஜை பிரசிதிபெற்றது. வருடத்தில் மூன்று நாட்கள் மட்டும் இந்த திருவிழா வழிபாட்டின் போது சுவாமியின் முழு சுயரூபத்தையும் தரிசிக்க முடியும். மாசி மாதம் மகம் நட்சத்திரத்தன்று சுந்தரர் திருமணம் நடக்கிறது. இந்த விழாவின்போது சிவன் மகிழ மரத்தடியில் எழுந்தருளி, சுந்தரருக்கு திருணம் செய்து வைப்பார். இந்த விழாவின்போது அறுபத்து மூவரும் எழுந்தருளுவர். இங்குள்ள மகிழ மரத்தடியில் சிவபெருமானின் பாதம் உள்ளது. இதற்கு சந்தனக்காப்பிட்டு அலங்கரிக்கின்றனர். நீண்ட நாட்களாக திருமணத் தடை உள்ளவர்கள் இந்த விழாவில் பங்கேற்றால் விரைவில் திருமணம் நடைபெறும்.

Jothi Balaji

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?


திருவள்ளூர் மாவட்டம், திருவொற்றியூரில் அமைந்துள்ளது தியாகராஜசுவாமி கோவில். சென்னையில் இருந்து ராஜிவ் காந்தி நகர் சாலை வழியாக சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருவொற்றியூர் காவல் நிலையத்திக் கடந்தால் இக்கோவிலை அடையலாம். சென்னை கடற்கரை வழிகாக பயணம் செய்யத் திட்டமிட்டால் உயர்நீதி மன்றம், எக்மோர் முக்கியச் சாலை வழியாக 13 கிலோ மீட்டர் பயணித்தாலும் இத்தலத்தை அடையலாம்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X