Search
  • Follow NativePlanet
Share
» »பீகார் காட்டுக்குள் ஒரு பிரமாதமான சுற்றுலா போலாமா? # காட்டுயிர்சுற்றுலா 10

பீகார் காட்டுக்குள் ஒரு பிரமாதமான சுற்றுலா போலாமா? # காட்டுயிர்சுற்றுலா 10

By Udhaya

பீஹார் மாநிலத்தில் ஏரிகள், நீர்வீழ்ச்சிகள், வெந்நீர் ஊற்றுகள் என்று ஏராளமான இயற்கை எழில் அம்சங்கள் நிறைந்துள்ளன. புராதன காலத்தில் இந்த பீஹார் பிரதேசம் அரசியல், கல்வி, நாகரிகம் மற்றும் மதம் போன்றவற்றின் உன்னத கேந்திரமாக திகழ்ந்திருந்தது. பீஹார் மாநிலத்தின் தலைநகரான பாட்னாவுக்கு அருகில் முறையே 5ம் மற்றும் 8ம் நூற்றாண்டுகளில் தோற்றுவிக்கப்பட்ட நாளந்தா மற்றும் விக்ரம்ஷிலா ஆகிய கல்விக்கூடங்கள் இன்றைய பல்கலைக்கழக முறைக்கு ஒரு முன்னோடியாக இருந்தது தெரிய வந்துள்ளது. மேலும் இந்த கல்வி மையங்கள் சர்வதேச அளவிலும் அக்காலத்தில் பிரசித்தமாக அறியப்பட்டிருக்கின்றன.

ஜார்க்கண்ட்டில் ஒரு சாகச காட்டுயிர் பயணம் போகலாமா? #காட்டுயிர்வாழ்க்கை 9

 பல்வேறு மதங்கள்

பல்வேறு மதங்கள்

இந்துத்துவம், பௌத்தம், ஜைனம், சீக்கியம் மற்றும் இஸ்லாம் போன்ற அனைத்து மதங்களிலும் இந்த மாநிலம் ஒரு முக்கிய ஆன்மீக கேந்திரமாக விளங்குவது குறிப்பிடத்தக்கது. யுனெஸ்கோ அமைப்பின் மூலம் உலகப்பாரம்பரிய ஸ்தலமாக அறிவிக்கப்பட்டுள்ள மஹாபோதி புத்த கோயில் இந்த மாநிலத்தில்தான் அமைந்திருக்கிறது.

Bpilgrim

 ஆற்றுப்பாலம்

ஆற்றுப்பாலம்

பாட்னாவில் அமைக்கப்பட்டுள்ள மஹாத்மா காந்தி சேது எனப்படும் ஆற்றுப்பாலம் 1980ம் ஆண்டுகளின் துவக்கத்தில் உலகில் மிக நீண்ட பாலமாக புகழ் பெற்றிருந்தது மற்றொரு சிறப்பம்சமாகும். பாட்னா மற்றும் ராஜ்கீர் ஆகிய இரண்டு நகரங்களும் பீஹார் மாநிலத்தில் உள்ள இரண்டு முக்கியமான வரலாற்று நகரங்களாக பிரசித்தி பெற்றுள்ளன.

Manoj nav

 வித்தியாசமான உணவு வகைகள்

வித்தியாசமான உணவு வகைகள்

பீஹார் மாநிலத்தின் அடையாளங்களில் ஒன்றாகும். பௌத்தம் சிறந்து விளங்கிய பூமி என்பதால் இங்கு பெரும்பாலும் சைவ உணவுப்பண்டங்களே பிரதான அம்சங்களாக இருந்து வந்துள்ளன. இருப்பினும் அசைவப்பிரியர்கள் விரும்பும் உணவுவகைகளும் தற்போதைய கலாச்சாரத்தில் இடம் பிடித்துவிட்டன. சட்டு பராத்தா எனும் உணவுவகை இம்மாநிலத்தில் வெகு பிரசித்தம். இது பொறிக்கப்பட்ட பட்டாணி மாவு மற்றும் காரமான உருளைக்கிழங்கு மசியல் போன்றவை பொதிக்கப்பட்ட பராத்தா வகையாகும்.

Mala chaubey

 புராதன திருவிழா

புராதன திருவிழா

சாத் எனும் புராதன திருவிழா ஒன்று பீஹார் மாநிலத்தில் வருடம் இரண்டு முறை விசேஷமாக கொண்டாடப்படுகிறது. இது கோடைக்காலத்தில் சைதி சாத் என்ற பெயரிலும், தீபாவளிப்பண்டிகைக்கு பின் ஒரு வாரம் கழித்து கார்த்திக் சாத் என்ற பெயரிலும் கொண்டாடப்படுகிறது. இந்த சாத் திருவிழா சூரியனை துதித்து நிகழ்த்தப்படும் திருவிழாவாகும். இந்த திருவிழா நாளில் சடங்குக்குளியலை முடித்துவிட்டு விடியற்காலையிலும், அந்தி வேளையிலும் சூரியனை வணங்கும் நடைமுறை பின்பற்றப்படுகிறது. பெரும்பாலும் இந்த சடங்குக்குளியல் ஆற்றங்கரை மற்றும் குளக்கரைகளில் செய்யப்படுவதும் குறிப்பிடத்தக்கது. சாத் திருவிழா மட்டுமல்லாமல் ஏனைய முக்கிய இந்திய பண்டிகைகளும் பீஹார் மாநிலத்தில் விமரிசையாக கொண்டாடப்படுகின்றன. மகர சங்கராந்தி, சரஸ்வதி பூஜா மற்றும் ஹோலி போன்றவை இவற்றில் குறிப்பிடத்தக்கவை.

Vkumarv

 சந்தைகள்

சந்தைகள்

தீபாவளி பண்டிகை முடிந்து அரை மாதம் கழித்து இங்கு சோனேபூர் கால்நடை சந்தை நடைபெறுகிறது. இது ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை சந்தையாகும். சோனேபூர் நகரத்தில் கண்டக் ஆற்றின் கரையில் இந்த சந்தை கூடுகிறது.

Manoj nav

 ராஜ்கிர்

ராஜ்கிர்

ராஜ்கிர் நினைவுச் சின்னங்களால் நிரம்பி வழியும் நகரம். இது சுற்றுலா வருபவர்களுக்கு அறிவு சார்ந்த அனுபவத்தை ஏற்படுத்தும். அஜட்ஷத்ரு கோட்டை, ஜீவகமீவன் தோட்டம் மற்றும் ஸ்வர்ண பந்தர் போன்றவைகள் இங்குள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களாகும்.

ராஜ்கிர் சுற்றுலாவின் முக்கிய அம்சமாக விளங்குகிறது பிரம்மகுந்த். பிரம்மகுந்த் என்பது மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு வெந்நீர் ஊற்றாகும். இதை காண பல சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகின்றனர்.

Djai 9

ஜெயின் மற்றும் புத்த மதங்கள்

ஜெயின் மற்றும் புத்த மதங்கள்

கௌதம புத்தரும், மஹாவீரும் தங்கள் வாழ்க்கையின் அதிக நாட்களை இங்கே கழித்துள்ளதால் இந்த இடத்தை ஜெயின் மற்றும் புத்த மதங்களை சேர்ந்தவர்கள் அதிகம் விரும்புகின்றனர்.

ராஜ்கிர் என்றால் ராஜக்ரிஹா என்று அர்த்தமாகும். அதாவது ராஜாவின் வீடு என்று பொருளாகும். இது ஜரசந்தா என்ற பேரரசரின் கதையையும் அவர் பாண்டவர்களிடம் நடத்திய போரை பற்றியும் விளக்கும். மேலும் கௌதம புத்தர் மற்றும் மஹாவீரரின் வாழ்க்கை பயணத்திற்கு சாட்சியாக விளங்குகிறது ராஜ்கிர்.

Rajyadavbijapur999

முங்கர்

முங்கர்

முங்கர் சுற்றுலாவின் பிரதான காட்சியகங்கள் முங்கர் கோட்டை, பீஹாரின் யோகா பாடசாலை, சீதா கந்த், கராக்பூர் ஏரி, பீர் ஷா நஃபா வழிபாட்டு மையம், பீம்பந்த் வனவிலங்குகள் சரணாலயம், ஸ்ரீ கிருஷ்ண வாடிகா, ஷா முஸ்தஃபா சூஃபியின் கல்லறை மற்றும் தில்வார்பூர் ஆகியவை ஆகும்.

அதீத வரலாற்று வளங்கள் மற்றும் ஆன்மீகத் திருத்தலங்களால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ள முங்கர், கண்டு களித்து அனுபவிக்க வேண்டிய ஒரு அற்புதமான ஸ்தலமாகும்.

ஒரு சிறு குன்றின் மேல் கட்டப்பட்டு, இடைநிலை காலத்திலிருந்தே மிகப் பிரம்மாண்ட கட்டுமானத்துடன் தோற்றமளிக்கும் முங்கர் கோட்டை போன்ற சிறப்பம்சங்களை கொண்டு விளங்கும் முங்கர் சுற்றுலா, ஆர்வமிக்க பல சுற்றுலாப் பயணிகளின் விருப்பத் தேர்வாக இருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

Suman Kumar Hansada

 மேற்கு சம்பரன்

மேற்கு சம்பரன்

வால்மிகி தேசியப் பூங்கா, திரிவேணி கரை, பவனாங்கரி, பிக்நதோஹரி, சுமேஷ்வர் கோட்டை, பிருந்தாவனம், நந்தகார்ஹ், அசோகா ஸ்தூபிகள் என பலவகையான சுற்றுலா தளங்கள் இங்கு உள்ளன.

Hideyuki KAMON -

நவாதா

நவாதா

நவாதாவின் முக்கிய சுற்றுலா அம்சமாக கக்கோலட் மலைகளில் உள்ள கக்கோலட் நீர்வீழ்ச்சி பிரசித்தமாக அறியப்படுகிறது. இந்த நீர்வீழ்ச்சியை சுற்றிலும் ரம்மியமான இயற்கை எழிற்காட்சிகள் நிரம்பியுள்ளதால் சுற்றுலாப்பயணிகள் தவறவிடக்கூடாத ஒரு அம்சம் இந்த கக்கோலட் நீர்வீழ்ச்சி. புராணிக நம்பிக்கைகளின்படி இந்த நீர்வீழ்ச்சியில் கோபிகா ஸ்தீரிகளுடன் ஷீகிருஷ்ணர் நீராடியதாக நம்பப்படுகிறது. இவை தவிர நவாதாவில் நாரத் மியூசியம் மற்றும் ராஜௌலி எனும் இயற்கை அழகுப்பிரதேசம் போன்றவையும் பார்க்க வேண்டிய சுற்றுலா அம்சங்களாகும். நவாதாவில் கோலாகலமாக கொண்டாடப்படும் திருவிழாக்களான மஹாவீர் ஜயந்தி, ஜன்மாஷ்டமி மற்றும் சத் பூஜா போன்றவையும் சுற்றுலாப்பயணிகளை கவர்ந்திழுக்கின்றன.

ஜார்க்கண்ட்டில் ஒரு சாகச காட்டுயிர் பயணம் போகலாமா? #காட்டுயிர்வாழ்க்கை 9

Sauravanuraj

Read more about: travel temple forest bihar
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more