Search
  • Follow NativePlanet
Share
» »"தபோலி" மகாராஸ்டிராவின் குட்டி மஹாபலேஷ்வர்..!

"தபோலி" மகாராஸ்டிராவின் குட்டி மஹாபலேஷ்வர்..!

மும்பையிலிருந்து 227 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இந்த தபோலி. ரத்னகிரி மாவட்டத்தில் அமைந்திருக்கும் இது கொங்கன் மலை வாசஸ்தலத்தின் ஒரு அங்கமாக உள்ளது. மஹாராஷ்டிராவில் எந்தளவிற்கு மஹாபலேஷ்வர் மலைப்பிரதேசம் புகழ்பெற்றதோ அந்தளவிற்கு பிரசிதிபெற்றது இந்த தபோலி. இதனாலேயே மகாராஷ்டிராவின் குட்டி மஹாபலேஷ்வர் என்றும் சுற்றுலாப் பயணிகளால் இப்பகுதி செல்லமாக அழைக்கப்படுகிறது.

ஹர்னை போர்ட்

ஹர்னை போர்ட்

தபோலியில் இருந்து 17 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஹர்னாய் துறைமுகத்தில் இரண்டு கோட்டைகளும் உள்ளன. சுவன்தார்ர்க் மற்றும் கனக்டர்கா. கனகதுர்கா நிலம் கோட்டை ஆகும். இது ஆதில்-ஷா ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டு பின்னர் சத்ரபதி சிவாஜி மகாராஜாவால் கைப்பற்றப்பட்டது. முன்பு கோட்டை இரண்டையும் இணைக்கும் ஒரு பாதை இருந்தது. ஆனால் தற்போது இக்கோட்டை ஒன்று கடலில் தனித்துவிடப்பட்டது போல காட்சியளிக்கிறது. சுற்றுலாப் பயணிகள் இந்தக் கோட்டையை கண்டு ரசிப்பதற்காகவே படகு சவாரி வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Chirag Upadhyay

பன்ஹாலகாஜி குகை

பன்ஹாலகாஜி குகை

தபோலியில் உள்ள மலைப் பிரதேசத்தில் பிரபலமான சுற்றுலா அம்சமாக உள்ளது பன்ஹாலகாஜி குகைகள். இந்த புராதனச்சின்னங்கள் இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்தவை ஆகும். மிகப் பெரிய பாறையைக் குடைந்து கட்டப்பட்ட இத்தலம் வரலாற்று ஆய்வாலர்கள் மத்தியில் மிகவும் பிரசிதிபெற்றது. பன்ஹாலாஜி குகைகள் டெபோலி-டபில் பங்காரி சாலையில் அமைந்துள்ளது. சாலைகள் சரியான குகைகளுக்கு செல்கின்றன. இது பள்ளத்தாக்குகளில் ஆழமாக அமைந்துள்ளது மற்றும் பறவைகள் மற்றும் ஊர்வனவற்றால் நிரப்பப்பட்ட காடு மற்றும் நதிகளால் சூழப்பட்டுள்ளது. சுமார் 29 குகைகள் மற்றும் பல சிற்பங்கள் உள்ளன. சாகச ஆர்வத்துடன் ஒரு வரலாற்றுக்கு இது சிறந்த இடமாக கருதப்படுகிறது.

Elroy Serrao

கடவியர் கணபதி

கடவியர் கணபதி

தபோலியில் மிகவும் பிரசிதிபெற்ற ஆன்மீகத் தலம் இந்த கடவியர் கணபதிக் கோவில். தபோலி அருகே அஞ்சார் என்னும் அழகிய கிராமத்தில் அமைந்துள்ள இது முதலில் முற்காலத்தில் மரத்தினால் கட்டப்பட்டு பின்னர் 1768-1780 காலகட்டத்தில் மறுகட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது. இப்பகுதிக்குச் சுற்றுலா செல்லும் எவரும் தவறவிடக்கூடாத பகுதிகளில் இக்கணபதி கோவில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

Ravn

ஹாட் ஸ்பிரிங்ஸ்

ஹாட் ஸ்பிரிங்ஸ்

துலாபியில் இருந்து சுமார் 35 கிலோ மீட்டர் தொலைவில் உன்னவேர் கிராமத்தில் அமைந்துள்ளது அஹவரே ஹாட் ஸ்பிரிங். வருடம் முழுவதும் வற்றாத இந்த நீரூற்று எந்தநேரமும் சூடாகவே இருப்பது வியக்கத்தகுந்ததாகும். சுற்றுவட்டாரப் பகுதியில் நிலவும் குளிர்ந்த காற்றினால் கூட இந்த நீர் தனது கொதிநிலையை இழக்காமல் உள்ளது. இந்நீரில் நீராடினால் உடலிற்கும், சருமத்திற்கும் நல்லது என்ற நம்பிக்கை இப்பகுதி மக்களிடையே நிலவுகிறது.

கேசவராஜ்

கேசவராஜ்

தபோலி மற்றும் ஆசுட் புல் இடையே அமைந்துள்ளது கேசவராஜ். மலைகளின் நடுவே ஒரு சிறிய ஆற்றைக் கடந்த பிறகு இத்தலத்தை அடைய முடியும். இத்தலத்தில், ஓர் மரத்தடியில் இருந்து நீரானது ஊற்றுபோல் வந்து செங்குத்தாக மேல்நோக்கி செல்வதாகவும், இது வருடம் முழுவதும் வற்றாமல் இருப்பதாகவும் நம்பப்படுகிறது.

Ankur P

முருட் பீச்

முருட் பீச்

முருட் கடற்கரை தபோலியில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. மஹாராஷ்டிர மாநிலத்தின் பிரசித்தமான கடற்கரைகளுள் இந்த முருட் கடற்கரையும் ஒன்றாகும். முருட் ஜஞ்சிராவில் அமைந்துள்ள இது 1.75 கிலோ மீட்டர் நீளத்துக்கு காணப்படுகிறது. இது பார்ப்பதற்கு ஒரு ஆபரணத்தைப் போன்றே காட்சியளிக்கின்றது. வெள்ளை மணலுடனும் ஸ்படிகம் போன்று தெளிந்த நீருடனும் காட்சியளிக்கும் இந்த கடற்கரை சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் மத்தியில் மிக பிரசித்தமாக அறியப்பட்டுள்ளது.

Shreyank Gupta

தத்தாத்ரேயர் கோவில்

தத்தாத்ரேயர் கோவில்

தத்தாத்ரேய கடவுளுக்காக ஒரு மலை மீது எழுப்பப்பட்டுள்ளது இந்த தத்தாத்ரேயர் கோவில். முருட் பகுதியில் உள்ள இந்த கோவிலில் பிரம்மா, விஷ்ணு மற்றும் மஹேஸ்வரன் ஆகிய மூன்று தலைகளுடன் காட்சியளிக்கும் தத்தாத்ரேயர் சிலை காணப்படுகிறது.

Usc2020

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more