Search
  • Follow NativePlanet
Share
» »மலை முகடுகளும், ரிசார்ட்டுகளும் நிறைந்த ஆந்திராவின் ஊட்டி..!

மலை முகடுகளும், ரிசார்ட்டுகளும் நிறைந்த ஆந்திராவின் ஊட்டி..!

தமிழகத்தில் எப்படி ஊட்டி மலைப் பிரதேசம் உலகம் அறிந்த பிரசித்தமான சுற்றுலாத் தலமாக உள்ளதோ அதேப் போன்று ஆந்திராவிலும் நாட்டின் இரண்டாம் ஊட்டி என்றழைக்கடும் வகையில் அமைந்துள்ளது ஹார்ஸ்லி குன்று. மதனப்பள்ளி நகருக்கு வெகு அருகாமையில் அமைந்திருக்கும் ஹார்ஸ்லி குன்று மிகவும் பிரசித்தி பெற்ற கோடை கால மலைப் பிரதேசமாகும். அப்படி இந்த ஆந்தியாவின் ஊட்டியின் என்னதான் உள்ளது ? எப்படிச் செல்வது என தொடர்ந்து பார்க்கலாம் வாங்க.

மதனப்பள்ளி - ஹார்ஸ்லி குன்று

மதனப்பள்ளி - ஹார்ஸ்லி குன்று

மதனப்பள்ளி சித்தூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் சிறிய நகரமாகும். கி.பி. 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் இவ்வூர் மதனப்பள்ளி என்ற பெயரைப் பெற்றது. இந்தியாவில் பெருவாரியாக வருவாய் ஈட்டித்தரும் பகுதியாகவும் அறியப்படும் இங்கு விளையும் காய்கறிகள் மற்றும் பழங்கள் நல்ல தரத்துடன் இருப்பதால் இந்தியா முழுதும் இவற்றிற்கான தேவை அதிகரித்துள்ளது. மதனப்பள்ளி நகரம் பெங்களூர், ஹைதராபாத், திருப்பதி போன்ற நகரங்களிலிருந்து சுலபமாக அடையும் தொலைவில் இருப்பதால் அந்த பகுதிகளிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஹார்ஸ்லி குன்றில் தங்கள் கோடை காலங்களை கழிக்க கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர்.

Shyamal

யானையால் வளர்க்கப்பட்ட பெண்

யானையால் வளர்க்கப்பட்ட பெண்

ஹார்ஸ்லி குன்று முன்பு எனுகு மல்லம்மா கொண்ட என்ற பெயரால் அழைக்கப்பட்டு வந்தது. இங்கு முன்னொரு காலத்தில் மல்லம்மா என்றொரு பெண் யானைகளால் வளர்க்கப்பட்டதாக நம்பப்படுகிறது. அந்த சிறிய பெண்ணின் நினைவாகவே இந்தக் குன்று அந்நாளில் எனுகு மல்லம்மா கொண்ட என்ற பெயரால் அறியப்பட்டது. இந்தப் பெண் அப்பகுதியில் நோய்வாய்ப்பட்ட பழங்குடி மக்களை பராமரித்து வந்துள்ளார். ஒரு நாள் திடீரென அவள் மாயமானதால் இதே குன்றில் அப்பகுதி மக்கள் மல்லம்மாவுக்கு கோவில் கட்ட எண்ணியதாகவும் பற்பல நம்பிக்கைகள் இங்கு நிலவி வருகின்றன.

இதன் பிறகு ஹார்ஸ்லி என்ற ஆங்கிலேய அதிகாரி இங்கு கராச்சி அறை மற்றும் பால் மாளிகை ஆகிய கோடை கால ரிசார்ட்டுகளை கட்டியதால் அவர் பெயராலேயே ஹார்ஸ்லி குன்று என்ற பெயரை தற்போது இந்தக் குன்று பெற்றுள்ளது.

rajaraman sundaram

அசத்தும் அழகு

அசத்தும் அழகு

ஆந்திரப் பிரதேசத்தின் ஊட்டி என்று அழைக்கப்படும் இந்த ஹார்ஸ்லி குன்று பிரபலமான மலை ரிஸார்ட்டும், கண்ணுக்கு இனிய பல மலைவாழிடங்களையும் கொண்டுள்ளது. குறுகிய மலைப்பாதையின் இரு புறங்களிலும் வானுயர்ந்த யூகலிப்டஸ், அலமண்டா, ஜகராண்டா போன்ற மரங்களைக் கண்டு ரசித்தபடியே பயணிக்க முடியும். எழில்மிகுந்த விடுமுறை தலமான ஹார்ஸ்லி குன்று இங்கு செல்லும் யாவருக்கும் புத்துணர்ச்சியைத் தருவதுடன் கோடை காலத்தின் வாட்டத்தில் இருந்தும் விடுவித்து இதமளிக்கும்.

rajaraman sundaram

காற்றில் தவழும் மலர் வாசம்

காற்றில் தவழும் மலர் வாசம்

பச்சைப் பசேலென்று மரங்கள் மலைச் சரிவில் அடர்த்தியாய் வளர்ந்துள்ள ஹார்ஸ்லி குன்றுக்கு செல்லும் வளைந்து நெழிந்த பாதையில் மரங்களை மட்டும் அல்ல வன விலங்குகளையும், பசுமையான தாவர இனங்களையும் கூட காணக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. வண்ணம் மிகுந்த மலர்கள் உரச பசுமைக் காற்று காதில் துழைக்கும்.

rajaraman sundaram

சாகச விரும்பிகளுக்காக...

சாகச விரும்பிகளுக்காக...

ஜோர்பிங் எனப்படும் மிகப் பெரிய பந்துகளின் உள்ளே நுழைந்து மலைச் சரிவில் உருண்டு விளையாட ஆசையா உங்களுக்காகவே இந்த மலைத் தொடரில் அந்த வாய்ப்பு காத்துட்டு இருக்கு. ராப்பெல்லிங் எனப்படும் மலைக் கயிற்றிறக்கம் போன்ற சாகச விளையாட்டுக்களை வழங்கும் சில இடங்களில் ஹார்ஸ்லி குன்றும் ஒன்றாகும்.

rajaraman sundaram

அருகில் உள்ள சுற்றுலாத் தலங்கள்

அருகில் உள்ள சுற்றுலாத் தலங்கள்

ஹார்ஸ்லி குன்று பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் வன விலங்குகள் நிறைந்த ஹார்ஸ்லி ஹில்ஸ் ஜூ உள்ளது.

பேருந்து நிலையத்தில் இருந்து ஒரு சில கிலோ மீட்டர் அருகிலேயே மல்லம்மா கோவில் அமைந்துள்ளது. மல்லம்மா கோவில் ஹார்ஸ்லி குன்றில் வசிக்கும் பழங்குடியின மக்களின் கண்கண்ட தெய்வமாகும். சுற்றுவட்டாரத்தில் ரிஷி பள்ளத்தாக்குப் பள்ளிக்கூடம், ஹார்ஸ்லி ஹில்ஸ் மியூசியம், சுற்றுச் சூழல் பூங்கா, கௌடின்யா வன விலங்கு சரணாலயம், கங்கோத்ரி ஏரி மற்றும் காலிபந்தாரே போன்றவை பயணிகளை வசீகரிக்கும் சுற்றுலாத் தலங்களாகும்.

J929

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?

ஹார்ஸ்லி ஹில்ஸ் பெங்களூர், சென்னை, பாண்டிச்சேரி உள்ளிட்ட பிற நகரங்களிலிருந்து சுலபமாக அடையும் தொலைவில் உள்ளது. சென்னையிலிருந்து மதனப்பள்ளி 237 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. வேலூர், சித்தூர், பலமனேர், புங்கனூர் வழியாகச் செல்லலாம். பெங்களூரிலிருந்து 125 கிலோ மீட்டர் பயணித்தால் மதனப்பள்ளியை அடையலாம். ஹஸ்கோடே, கோலார், ஸ்ரீவாஸ்புரா, கவனிப்பள்ளி, ரவலப்பாடு வழியாகச் செல்லலாம்.

NAYASHA WIKI

ரயில், விமான நிலையம்

ரயில், விமான நிலையம்

இங்கிருந்து தும்மனகுட்டா இரயில் நிலையம் சுமார் 7.5 கிலோ மீட்டர் தொலைவிலும், பங்காரப்பேட்டை இரயில் நிலையம் சுமார் 87 கிலோ மீட்டர் தொலைவிலும், பாகாலா ஜங்க்ஷன் இரயில் நிலையம் 89 கிலோ மீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது. 101 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பெங்களூரு விமான நிலையம் இதன் அருகில் உள்ளதாகும். திருப்பதி விமான நிலையம் இங்கிருந்து 138 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. மதனப்பள்ளியிலிருந்து ஹார்ஸ்லி குன்றுக்கு பேருந்து அல்லது தனியார் வாடகைக் கார்கள் மூலம் எளிதில் சென்றடையலாம்.

Moulalisaheb.g

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more