» »ஜார்க்கண்ட்டில் ஒரு சாகச காட்டுயிர் பயணம் போகலாமா? #காட்டுயிர்வாழ்க்கை 9

ஜார்க்கண்ட்டில் ஒரு சாகச காட்டுயிர் பயணம் போகலாமா? #காட்டுயிர்வாழ்க்கை 9

Written By: Udhaya

பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கும் மாநிலம் என்பதால் இம்மாநிலத்தின் எல்லா அம்சங்களிலும் இயற்கையோடு ஒன்றிய பாரம்பரியம் வேரூன்றி காணப்படுகிறது. ஒவ்வொரு வீட்டு முகப்பிலும் புனிதமான மரங்கள் நடப்பட்டிருப்பதை இந்த மாநிலத்தில் பார்க்க முடியும். சடங்குபூர்வமான நிகழ்ச்சியாக இந்த மரங்கள் கொண்டுவரப்பட்டு வீட்டு வாசலில் நடப்படுகின்றன. இது போன்ற மரங்களை தெய்வமாகவே கருது வழிபடுவது இம்மக்களின் ஆதி இயற்கை உறவை பிரதிபலிக்கிறது. பௌஷ் மேலா அல்லது துசு திருவிழா எனும் கொண்டாட்ட நிகழ்ச்சி ஒவ்வொரு வருடமும் மகர சங்கராந்தி திருநாளின்போது விமரிசையாக இம்மாநிலத்தில் கொண்டாடப்படுகிற்து. நாட்டுப்புற தெய்வங்களின் சிலைகளை அச்சமயம் ஊர்வலமாக எடுத்துச்சென்று மக்கள் பூஜைகள் செய்து வழிபடுகின்றனர். ஜார்க்கண்ட்டில் இருக்கும் காடுகளுக்கு நாம் பயணம் செய்தோமேயானால், பல அற்புத தருணங்களை நினைவுகளோடு எடுத்துக்கொண்டு வரலாம்.

சத்தீஸ்கர் காட்டுக்குள் ஒரு சாகசப்பயணம் போலாமா? #காட்டுயிர்வாழ்க்கை 8

ராஞ்சி

ராஞ்சி


நீர்வீழ்ச்சிகளின் நகரம் என்றழைக்கப்படும் ராஞ்சியில் தசாம் நீர்வீழ்ச்சி, கன்ச்னி நதி, சுபர்னரேகா நதியின் தசாம் நீர்வீழ்ச்சி என ஏரிகளும், நீர்வீழ்ச்சிகளும் உள்ளன. சுபர்னேகாவின் ஹுன்ட்ரு நீர்வீழ்ச்சி 320அடி உயரத்தில் இருந்து விழுகிறது. ஜோனா நீர்வீழ்ச்சி ராஞ்சியில் இருந்து 40கிமீ தொலைவில் உள்ளது. 500 படிகள் இறங்கி இந்த நீர்வீழ்ச்சியின் அழகைக் காணலாம். புத்தர் கோவிலுடன் கூடிய விருந்தினர் மாளிகை ஒன்றும் இங்குள்ளது. மேலும் நட்சத்திரா வான், கோண்டா, தாகூர் மலை ஆகிய இடங்களும் உண்டு.

Wasim Raja

தசாம் காக்

தசாம் காக்

ராஞ்சியில் இருந்து 40கிமீ தொலைவில் டாடா சாலையில் உள்ள இந்த நீர்விழ்ச்சி 144அடி உயரத்தில் இருந்து விழுகிறது. குளிக்கும் போது பாதுகாப்பாக இருக்குமாறு பயணிகள் வலியுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

ஃபிப்ரவரி மற்றும் ஏப்ரல் மாதத்தில் இந்த இடத்திற்கு வருவது சிறப்பாக கருதப்படுகிறது. தசாம் காக் என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த இடம் இயற்கை அழகிறாக புகழ்பெற்று விளங்குகிறது.

Samratbit

ஜோனா நீர்வீழ்ச்சி

ஜோனா நீர்வீழ்ச்சி

இதன் அருகில் இருக்கும் ஜோனா கிராமத்தின் பெயராலேயே வழங்கப்படும் இந்த இடத்தில் புத்தர் குளித்ததாக நம்பப்படுகிறது. ராஜா பல்தேவ்தாஸ் என்பவரால் கட்டப்பட்டுள்ள புத்த கோவில் ஒன்று மலை உச்சியில் உள்ளது. ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வியாழனில் இங்கு வரும் சந்தை மக்களிடம் புகழ்பெற்று விளங்குகிறது. ஜோனாவை மக்கள், கங்கா கட்டில் இருந்து வருவதால் கங்கா நலா என்றும் அழைக்கின்றனர் 453படிகள் இறங்கி நீர்வீழ்ச்சியை அடையலாம். ராஞ்சி பீடத்தின் முகட்டில் உள்ள இந்த நீர்வீழ்ச்சி கங்கை மற்றும் ராரு நதியில் இருந்து நீர் சேர்க்கிறது. 43அடி உயரத்தில் இருந்து விழும் இந்த நீர்வீழ்ச்சியின் சிறப்பான தோற்றத்தைக் காண குறைந்தபட்சம் 500படிகளாவது தேவைப்படுகிறது.

Unknown

நட்சத்திரா வான்

நட்சத்திரா வான்

நகரின் மையப்பகுதியில் உள்ள இந்த இடம் ஆளுநர் மாளிகைக்கு அருகில் உள்ளது. அருகில் உருவாக்கப்பட்டுள்ள செயற்கை காடுகள், குழந்தைகள் பூங்காக்கள், செயற்கை குன்றுகள், நீர்வீழ்ச்சிகள், இசை நீரூற்று என பலவகை சுற்றுலா இடங்கள் உள்ளன. ஜார்கண்ட் சுற்றுலா துறையால் உருவாக்கப்பட்டுள்ள இந்த பூங்காவில் வெவ்வேறு நட்சத்திரக் குறியீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நட்சத்திரமும் ஒரு மூலிகைச் செடியக் குறிக்கும் வண்ணம் வட்ட வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பல வகை பூக்களும் இங்கு உள்ளது.
Unknown

கார்கை வன விலங்கு பூங்கா

கார்கை வன விலங்கு பூங்கா

கார்கை மற்றும் சுவர்ணரேகா நதிகள் சங்கமிக்கும் இடத்தில் இந்தப் பூங்கா அமைந்துள்ளது. வனத்தின் இயற்கை சூழலில் பயணிகள் நடமாட முடிந்த இந்த சூழலில் ஏராளமான பூக்கள் மற்றும் விலங்குகளை ரசிக்க முடிகிறது.

ஓய்வெடுக்கவும், புத்துணர்ச்சி பெறவும் இந்த இடம் பயன்படுகிறது. படகு சவாரி உள்ள இந்த பூங்கா இயற்கை ஆர்வலர்களுக்கு ஏற்ற இடமாக இருக்கிறது. ஏராளமான பறவைகளும் வருகின்றன.

devx

ஏரி

ஏரி


மலை சார்ந்த இடமான டெல்கோ காலனியில் இயற்கை ஆர்வலர்கள் பூரிக்கும் வண்ணம் இந்த ஏரி அமைந்துள்ளது. எஃகு தொழிற்சாலையின் முழு தோற்றத்தையும், லாஃபார்ஜ் சிமண்ட் மற்றும் டாடா பவர்ஸின் தோற்றத்தையும் காணலாம். மாலைவேளை ஓய்வுக்கு இந்த ஏரி தகுந்த இடமாக விளங்குகிறது.

Alok Prasad

 ஹஜாரிபாக்

ஹஜாரிபாக்

ராஞ்சியில் இருந்து 93 கிமீ தொலைவில் உள்ள ஜார்கண்டில் சோடாநாக்பூர் பீடத்தில் அமைந்துள்ளது ஹஜாரிபாக். காடுகளால் சூழப்பட்டுள்ள ஹஜாரிபாக்கில் கொனார் நதி ஓடுகிறது. சந்ர்ஹ்வரா, ஜிலிஞ்ஜா ஆகிய மலைத்தொடர்ங்கள் இங்கு உள்ளன. ஹஜாரிபாகின் மிக உயரமான மலையான பராஸ்நாத்தில் 23மற்றும் 24வது ஜைன தீர்த்தங்கரர்கள் முக்தி அடைந்ததாகச் சொல்லப்படுகிறது. புகழ்பெற்ற ஆரோக்கிய தளமாகவும் விளங்கும் இந்நகரம் செடிகளாலும், வனவுயிர்களாலும் சூழப்பட்டுள்ளது. முக்கியமான மத தளமாகவும் விளங்கும் இந்நகரில் அழகிய கோவில்களும் ஏராளமாக உள்ளன. ஒருகாலத்தில் ராணுவ தளமாக விளங்கிய இவ்விடம் இந்திய சுதந்திரப் போரில் முக்கியப் பங்காற்றியுள்ளது. தாது மற்றும் கனிவளத்திலும் ஹஜாரிபாக் சிறந்து விளங்குகிறது.

Pic Boy 101

பலமு

பலமு


பலமுவில் உள்ள வளமான நிலங்கள் மற்றும் வனவிலங்குகள் இயற்கை காதலர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்களுக்கு வரப்பிரசாதமாக திகழ்கின்றன. இந்த மாவட்டத்தின் தலைநகராக டால்டொன்கஞ்ச் விளங்குகின்றது. இப்பகுதியில் ஏராளமான தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் காணப்படுகின்றன. மேலும் இந்தப் பகுதி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாகவும் விளங்குகிறது. இந்த இடத்தின் கண்ணுக்கினிய அழகிய காட்சியானது சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமைகின்றது.

Marlisco

ஜவஹர் நேரு உயிரியல் பூங்கா

ஜவஹர் நேரு உயிரியல் பூங்கா

ஜார்க்கண்ட் மாநிலத்தின் மிகப்பெரிய உயிரியல் பூங்காவான இது சுற்றுலா பயணிகளை பெரிதும் ஈர்க்கின்றது. இந்த ஜவஹர் நேரு உயிரியல் பூங்காவில் ஆசிய சிங்கங்கள், வெள்ளை புலிகள் மற்றும் ராயல் பெங்கால் புலிகள் போன்ற அரிய வகை வன விலங்குகள் சிறப்பாக பாதுகாக்கப்படுகின்றன. இந்தப் பூங்காவில் பறவைகள் மற்றும் மிருகங்களை தவிர்த்து மனிதனால் உருவாக்கபப்பட்ட ஏரி ஒன்று உள்ளது. இந்த ஏரியில் பயணிகள் படகுச் சவாரியில் ஈடுபட்டு களிக்கலாம். அதனை தவிர்த்து குழந்தைகளை மகிழ்விக்கும் பொருட்டு மொவ்க்ஹில் எக்ஸ்பிரஸ் என்கிற பொம்மை ரயிலும் இயக்கப்படுகின்றது.

Neelabh2007

பொகரோ

பொகரோ


பொகரோ மற்றும் தன்பாத் மாவட்டங்களை பிரிக்கும் தாமோதர் ஆற்றின் அருகில் புபுன்கி கிராமத்தில் இந்த புபுன்கி ஆசிரமம் அமைந்துள்ளது. இந்த பண்டைய ஆசிரமத்தில் பண்டைய குரு குலக் கல்வி கற்பிக்கப்படுகின்றது. அதாவது குருவினுடைய வீட்டில் அவருடைய சீடர்கள் தங்கியிருந்து கல்வி கற்கும் பண்டைய முறை இன்றும் இங்கு நடைமுறையில் உள்ளது. இந்தக் கிராமத்தில் ஒரு பல்துறை பல்கலைக்கழகம் பாபாமணி என அழைக்கப்படும் அஹண்ட மகாகாளீஸ்வர் சுவாமி ஸ்வருப்பானந்தா பரமஹம்ச தேவாவினால் நிறுவப்பட்டுள்ளது.

சத்தீஸ்கர் காட்டுக்குள் ஒரு சாகசப்பயணம் போலாமா? #காட்டுயிர்வாழ்க்கை 8

Niraj Jaiswal

Read more about: travel forest jharkhand

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்