Search
  • Follow NativePlanet
Share
» »கடவுள் நுழைந்த குகையில் இன்றும் வாழும் தேவ கன்னிகள்!

கடவுள் நுழைந்த குகையில் இன்றும் வாழும் தேவ கன்னிகள்!

பல கிலோ மீட்டர் விரிந்த மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தான் முன்னொரு காலத்தில் கடவுள் குடிகொண்டுள்ளார். அதற்கு ஆதாரமாக இன்றும் அங்கே தேவ கன்னிகள் வாழ்ந்து வருவது ஆச்சரியமளிக்கிறது.

வட இந்தியாவிலிருந்து தொடங்கி பல்லாயிரம் கிலோ மீட்டர் அளவில் பரந்துவிரிந்து தமிழ்நாட்டின் வழியாக கேரளா வரை அமைந்துள்ளது மேற்குத் தொடர்ச்சி மலை. 18 சித்தர்களும் சங்கம் அமைத்து வாழ்ந்த மலை எனவும், தென் இந்தியாவின் கைலாய மலை எனவும் போற்றப்படும் சதுரகிரி மலை இம்மலைத் தொடரின் ஒரு பகுதியில் தான் அமைந்துள்ளது. இதனுடன் இணைந்து கேரளா எல்லை வரை நீண்டு தெய்வீக ஆற்றலுடன் விளங்கும் ஒரு மலைப் பகுதியில் தான் முன்னொரு காலத்தில் கடவுள் குடிகொண்டுள்ளார். அதற்கு ஆதாரமாக இன்றும் அங்கே தேவ கன்னிகள் வாழ்ந்து வருவது ஆச்சரியமளிக்கக் கூடிய விசயமே. வாருங்கள், இந்த மர்மக் குகையை நோக்கி பயணிப்போம்.

இயற்கை கொடுத்த வரம்

இயற்கை கொடுத்த வரம்


இயற்கை கொடுத்த வரம் என்றால் அது தேனிமாவட்டம். சுற்றிலும் கண்ணுக்கெட்டிய தொலைவில் பச்சை பசேலென இயற்கை விரித்திருக்கும் பச்சை பாய்களை பார்த்து கொண்டே செல்லும் பொழுது ஆர்ப்பரித்து ஓடும் பெரியார் அணைப்பகுதியிலிருந்து வரும் ஆறும் அதை கடந்து செல்லும் பொழுது விரிந்திருக்கும் திராட்சை தோட்டங்களும் பூலோகின் சொர்க்கம் என்றால் மிகையாகாது.

Mprabaharan

வற்றாத சுருளி அருவி

வற்றாத சுருளி அருவி


மதுரையில் இருந்து தேனி வழியாக சுமார் 70 கிலோ மீட்டர் தொலைவில் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதில் அமைந்துள்ளது சுருளி மலை. ஆண்டு முழுதுமே நீர் வற்றாமல் கொட்டிக் கொண்டிருக்கும் சுருளி அருவி தென்னிந்தியா அளவில் மிகவும் பிரசிதிபெற்றது. இவ்வளவு நீர் எங்கிருந்து உற்பத்தியாகிறது என்பது இன்று வரை யாரும் கண்டறியாத மர்மம் தான்.

கைலாயக் குகை

கைலாயக் குகை


கொட்டும் அருவியின் ஒரு சில மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கைலாச நாதர் குகை உள்ளது. சித்தர்களும், தவமுனிவர்களும் ரிஷிகளும் சதுரகிரி மலையில் இறைவனை நோக்கி தவம் புரிய அதனைக் கண்டு மனம் மகிழ்ந்த சிவபெருமான் தவம் செய்த சித்தர்களுக்கும், ரிசிகளுக்கும் தேவ லோக வாழ்வைக் கொடுத்தருளிய இடம் இது தான்.

Michael Costa

குகை வரலாறு

குகை வரலாறு


எம்பெருமான் ஈசனின் இறை அருள் நிறைந்த கைலாயத்தில் இமயகிரி சித்தர் சிவபெருமானை தினமும் நேரில் பூஜித்து வந்தார். அவர் மீது சிவபெருமானும் அளவுகடந்த மரியாதை கொண்டிருந்தார். ஒரு காலத்தில் துர்வாச மகரிஷி, கண்ணுவ மகரிஷி முதலான ரிஷிகள் சதுரகிரி மலை அடிவாரத்தில் தபோவனம் என்னும் மாவூற்றில் யாகங்கள் வளர்த்து இறைவனை நோக்கித் தவம் செய்தார்கள். அதனை கண்டு சிவபெருமான் தவம் செய்த ரிஷிகளுக்கு தேவ லோக வாழ்வைக் கொடுத்து தாமும் மகா லிங்க உருவெடுத்து அங்கேயே அமர்ந்தார். அது இன்றளவும் சதுரகிரி மலை மூலவராகிய மகாலிங்கமாக வழிபடப் படுகிறது.

Michael Costa

கைலாசநாதர் குகை

கைலாசநாதர் குகை


அப்போது அங்கிருந்த ரிஷி, முனிவர்கள், சித்தர்கள் அனைவரும் இறைவன் சிவபெருமானே இந்தப் குகைக்குள் நுழைந்தமையால் இந்தப் குகைக்கு "கைலாசப் புடவு" என்ற பெயரை சூட்டுகின்றனர். புடவு என்றால் குகை என்னும் பொருள்படும். அன்று முதல் இந்தப் புடவு என்ற கைலாச புடவு, கைலாசநாதர் குகை என்ற பெயருடன் விளங்குகின்றது.

Kārlis Dambrāns

குகைக்குள் நுழைந்த சிறுவன்

குகைக்குள் நுழைந்த சிறுவன்


ஒரு காலத்தில் கோவில் விழா நேரத்தில் சிறுவன் ஒருவன் குகையில் மறைந்துள்ள கிருஷ்ண பகவானின் புல்லாங் குழலைக் கண்டு பிடிக்க குகைக்குள் நுழைந்தான். சில நேரத்திற்குப் பிறகு வெளியே வந்த சிறுவன் கூறுகையில், குகையின் உள்ளே பெரிய அரங்கமும், அங்கே சில சித்தர்களும், தேவ கன்னிகளும் இருந்ததாக தெரிவித்துள்ளான்.

Ian Armstrong

கண்ணகி கோவில்

கண்ணகி கோவில்


சுருளி மலை அருவியிலிருந்து மேற்கே சில கிலோ மீட்டர் தொலைவில் கேரள, தமிழ்நாடு எல்லையில் அமைந்துள்ளது கண்ணகி கோவில். மதுரையை எரித்த கண்ணகி தலைவிரி கோலமாக நடந்து வந்து இந்த அருவியில் நீராடி புஷ்பக விமானம் ஏறிச் சென்றதாக புராணம். மேலும், இங்கு தோண்டி எடுக்கப்பட்ட கண்ணகி சிலை மற்றும் கல்வெட்டுக்கள் மூலமாக இன்னும் பல தகவல்களை அறிந்து ஆராய்ச்சியாளர்களே வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.

Prasadbatti

ஒரு இடத்தில் இத்தனை குகைகளா ?

ஒரு இடத்தில் இத்தனை குகைகளா ?


சுருளி மலையைச் சுற்றி சுமார் 225 குகைகள் உள்ளதாக கூறப்படுகிறது. இவற்றில் ரிஷிகள், தேவர்கள், சித்த புருஷர்கள் ஆகியோர் தவமிருந்துள்ளனர். இவற்றில் விபூதி குகை, சர்ப்ப குகை, கிருஷ்ணன் குகை, கன்னிமார் குகை என முக்கியமான குகைகள் பொதுமக்களின் பார்வையில் தென்படக்கூடியது. பிற குகைகள் அடர் வனத்திற்கு உள்ளே, யாரும் காணாத படி அமைந்துள்ளது.

Sibyperiyar

சுருளி வேலப்பர்

சுருளி வேலப்பர்


சுருளி அருவியில் அமைந்துள்ள பிரசிதிபெற்ற தலங்களில் ஒன்று சுருளி வேலப்பர் கோவில். ஆடிப்பூரம், வைகாசி விசாகம், பங்குனி உத்திரம் என விழாக்கள் அதிகம் இருந்தாலும், தைப்பூசத் திருநாள் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. அந்த நாளில் காவடி எடுத்து, பால் குடம் ஏந்தி வழிபட்டால், நினைத்த காரியம் அனைத்தையும் நிறைவேற்றித் தருவார் சுருளி வேலப்பர் என்கின்றனர்.

Dr.Harikrishna Sharma

சிறப்பு

சிறப்பு


குகைக்குள்ள இருந்தபடியே அருள்பாலிக்கும் முருகன் உள்ள இத்தலத்தில் குகையில் உள்ள ஈர மணல் காய்ந்த உடன் விபூதி தோன்றுகிறது. அதுமட்டுமின்றி இத்தலத்தின் அருகே உள்ள ஓடை நீரில் விழுந்த இலை கல்லாக மாறுவதும், மாமரத்தின் அடியில் இருந்து வற்றாத ஊற்று நீர் பொங்கி வழிவதும் என இன்னும் ஏராளமான மர்ம நிகழ்வுகளும் நடக்கிறது.

Ssriram mt

திருவிழா

திருவிழா

சித்திரைத் திருநாள், ஆடிப் பெருக்கு, தைப்பூசம், அம்மாவாசை, பங்குனி என முருகனுக்கு உகந்த இந்த நாட்களில் விமர்சையாக விழா கொண்டாடப்படுகிறது. பிற நாட்களில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் இக்கோவிலின் நடை திறந்த நிலையில் உள்ளது.

CNRNair

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?


சென்னையில் இருந்து விழுப்புரம், திண்டுக்கல் வழியாக தேனியை அடைந்து சுருளிமலைக்கு செல்லலாம். ரயில் பயணத்தைக் காட்டிலும் இருசக்கர, அல்லது காரில் சுருளியை அடைவது சிறந்த சுற்றுலாவாகவும் அமையும். சுற்றியுள்ள அருவிகளும், பசுமைக் காடுகளும், ஆன்மீகத் தலமும் இப்பயணத்தை இன்னும் மேன்மையடையச் செய்யும்.

edward garfred

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X