» »அந்த மாதிரியான மசாஜ் சென்டரெல்லாம் இங்கதான் இருக்குதாம்...!

அந்த மாதிரியான மசாஜ் சென்டரெல்லாம் இங்கதான் இருக்குதாம்...!

Written By:

அமைதியாக இருந்து ஆளையே விழுங்குவதில் மனஅழுத்தம் முக்கியமானது. தற்போதைய அவரச சூழ்நிலையில் அனைவருக்கும் மன அழுத்தமானது ஏதோ ஒரு பாகம் போலவே உடனிருக்கிறது. அதிலும் அதிகப்படியான வேலைப்பளு, வேகமான வாழ்க்கை மற்றும் உறவுகளில் பிரச்சனை போன்றவற்றால் மன அழுத்தமானது அதிகரிக்கிறது. உடல் சோர்வாகவும், வலியுடனும் இருந்தால் அதில் இருந்து விடுபட அனைவரும் மேற்கொள்ளும் ஒருமுறை தான் மசாஜ். வாரத்திற்கு ஒரு முறை உடலுக்கு மசாஜ் செய்து குளித்தால், உடல் வலி குறைவதோடு, உடல் நன்கு புத்துணர்ச்சியுடன் இருக்கும். அதுமட்டுமா, உடலுக்கு ஆயில் மசாஜ் செய்வதால் இரத்த ஓட்டம் அதிகரித்து, ரிலாக்ஸாக இருக்கும். அதிலும், அனுபவம் வாய்ந்த மிருதுவான கையில் ஆயில் மசாஜ் செய்தால் எப்படி இருக்கும். அட ஏங்க பாஸ், மாசாஜ், கிசாஜ்ன்னு சொல்லி சூடேத்துரிங்க... நம்ம ஊருல நல்ல மசாஜ் சென்டருக்கு எங்க போறது... இததானே நினைக்குறீங்க. வாரம் ஒரு முறை இல்லாவிட்டாலும், நேரம் கிடைக்கையில், அல்லது விடுமுறை பயணமாக நாம் செல்லும் சுற்றுலாவை இதற்கு ஏற்றவாறு மாற்றிக் கொண்டு ஜம்முன்னு ஒரு மசாஜ் செஞ்சுட்டு வரலாம். என்ன ரெடியா..??

மலையாள மசாஜ்

மலையாள மசாஜ்


என்னடா இது, தலைப்பே ஒரு தினுசா இருக்குன்னு நினைக்காதீங்க... இந்தியாவுல சுற்றுலாவைத் தவிர்த்து மசாஜ்க்கும் பெயர்பெற்ற கேரளத்துல இருக்குற பிரசிதிபெற்ற மசாஜ் சென்டருக்குதான் இப்ப போக போறோம். கேரளான்னாலே மசாஜ் தான். அதுல பிரசிதிபெற்ற மசாஜ் சென்டரா... ஆமாங்க, கேரளாவுல பரவலா மசாஜ் மையங்கள் இருந்தாலும், இதுக்குன்னே தனித்துவமான மசாஜ்கள் கேரளாவுல இரண்டு இடத்துலதான் இருக்கு. அந்த பகுதிக்கு எப்படி போறதுன்னு பார்க்கலாம் வாங்க.

Dvellakat

எங்கிருந்து எப்படிச் செல்வது ?

எங்கிருந்து எப்படிச் செல்வது ?


கேரள மாநிலத்துல புகழ்பெற்ற இரண்டு மசாஜ் பகுதிகள் என்றால் அது கொல்லத்திலும், கோவளத்திலும் தான் இருக்கு. இது இரண்டுமே அருகருகில் உள்ள சுற்றுலாத் தலங்களும் கூட. சரி, நம் ஊருல இருந்து எப்படி இந்தப் பகுதிகளுக்கு ஈசியா போய்ட்டு வரலாம்ன்னு பார்க்கலாம்.

Dabóczyné Gyenei Ágnes

கோயம்புத்தூர் - கொல்லம்

கோயம்புத்தூர் - கொல்லம்


கோயம்புத்தூரில் இருந்து கொல்லம் சுமார் 335 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. கோவை மக்கள் கேரளாவுக்கு போறது ஒன்னும் புதுசு இல்ல. இருந்தாலும், இந்த வழியில கோவளம் போனீங்கன்னா உங்களது பயணம் எளிமையானதாகவும், அதேசமயம், நல்ல சுற்றுலாவாகவும் இருக்கும். சுற்றுலாவுடன் சூட்டத் தனிக்க யாருக்குதான் பிடிக்காது. சரி வாங்க, தொடர்ந்து பயணிப்போம்.

kallerna

கோவை - கொச்சி

கோவை - கொச்சி


கோவையில் இருந்து சுமார் 190 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கொச்சி. பயணத்தில் கொஞ்சம் ஓய்வெடுக்க விரும்புவோர் தவறாமல் கொச்சியில் சின்ன சுற்றுலா செல்லாம். கொச்சிக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொள்ளும் எந்த ஒரு பயணியும் ஏமாற்றத்துடன் திரும்பாத வகையில் இங்கு வரலாற்றுத் தலங்கள், ஆன்மீக மையங்கள், அருங்காட்சியகங்கள், குழந்தைகள் பூங்கா நிறைந்துள்ளன. இயற்கை ரசிகர்களின் தேடுதலுக்கும் இங்கு கண்கவர் விருந்துகள் காத்திருக்கின்றன. காட்டுயிர் சரணாலயங்களும், பூங்காக்களும் பலவிதமான தாவரங்கள் மற்றும் உயிரினங்களுடன் கொச்சிக்கு அருகில் அமைந்துள்ளன. அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியின் கண்கொள்ளா அழகை பார்த்து ரசிப்பது முற்றிலும் ஒரு பரவசமூட்டும் அனுபவம் தான்.

Vivekobey

கொச்சி - கொல்லம்

கொச்சி - கொல்லம்


கொச்சியில் சுற்றுலாவை முடித்துவிட்டு பயணத்தை துவங்கினால் அடுத்த ஒரு சில மணியிலேயே கொல்லத்தை அடைந்து விடலாம். அப்புரம் என்னங்க, வந்தததே மசாஜுக்கு தானே. கொல்லம் பகுதி முழுக்க தாய் மசாஜ், ஆயுர்வேத மசாஜ், அக்குபிரஷர் மசாஜ், ஸ்வீடிஸ் மசாஜ், அரோமாதெரபி மசாஜ், பாலி மசாஜ், லோமி லோமி மசாஜ், ஆயில் மசாஜ், களரி மசாஜ் என வகை வகையா மசாஜ் இருக்கு. இதுல களரி என்பது கேரளாவில் மல்யுத்த பயிற்சியின் போது செய்யப்படும் ஒருவித கலையாகும். இந்த களரியை மையமாகக் கொண்டு செய்யப்படும் மசாஜில், குப்புற படுக்க வைத்து, மூலிகை எண்ணெய்களை கொண்டு, பாதங்களுக்கு நன்கு மசாஜ் செய்யப்படும். இதனால் உடல் நன்கு வளையும் தன்மையைப் பெறுவதோடு, மன அழுத்தம் நீங்கி, உடல் நன்கு சுறுசுறுப்புடனும் இருக்கும்.

kallerna

கன்னியாகுமரி - கொல்லம்

கன்னியாகுமரி - கொல்லம்


கன்னியாகுமரியில் இருந்து கொல்லம் சுமார் 164 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. கொளச்சல் வழியா 87 கிலோ மீட்டர் பயணித்தாலே மசாஜ்க்கு புகழ்பெற்ற கோவளத்தை எளிதில் அடையலாம். அங்கிருந்து கொல்லத்தையும் விரைவில் அடையும் வகையில் பேருந்து வசதிகளும், இதர வாகன வசதிகளும் உள்ளது. இருப்பினும், கன்னியாகுமரியில் இருந்து இருசக்கர வாகன பயணம் சிறந்ததாகத்னே இருக்கும்.

Rajeev Nair

மதுரை - கொல்லம்

மதுரை - கொல்லம்


மதுரையில் இருந்து 256 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கொல்லத்தை அடைய திருவில்லிபுத்தூர், குற்றாலம் வழியாக மலைப் பிரதேசமான தென்மலாவுக்கு செல்ல வேண்டும். இயற்கையின் மொத்த குத்தகையாய் இருக்கும் தென்மலை அவசியம் காண வேண்டிய சுற்றுலா தலமாகும். தென்மலையில், சாகசம், ஓய்வு, கலாச்சாரம் என்று மூன்றுவிதமான மண்டலங்கள் இருக்கின்றன. இந்த மூன்று மண்டலங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதும். இதைத்தவிர பாலருவி என்ற அழகிய நீர்வீழ்ச்சியும் இருக்கிறது. மான்கள் புனர்வாழ்வு மையம் இருக்கிறது. சுற்றுலா பயணிகள், மான்களை தங்களின் வனத்திலேயே பார்த்து மகிழலாம். இந்த உலகத்தின் தொடர்பிலிருந்து சில நாட்கள் விடுபடவேண்டுமென்றால் காட்டுக்குள் இதற்காகவே மரவீடுகள் இருக்கின்றன. இதை அனைத்தையும் சுற்று ரசித்துவிட்டு கேரள மாநிலம் புனலூர் வழியாக கோட்டரகரா கடந்து கொல்லத்தை அடைந்துவிடலாம்.

சென்னை - கொல்லம்

சென்னை - கொல்லம்


சென்னைல் இருந்து கொல்லம் செல்ல திட்டமிட்டால் மதுரை வழியாக அல்லாமல் திருச்சி, திண்டுக்கல் வழியாக பயணிப்பது சிறந்தது. திண்டுக்கல் வரை சமவெளிப் பகுதியாக வாகன நெரிசல் நிறைந்ததாக இருந்தாலும், அடுத்து வரும் மேற்குத் தொடர் மலையை ஒட்டிய கொடைக்கானல், கம்பம், குமுளி அடுத்தடுத்து வரும் குட்டிகன்னம் மலைப் பிரதேசங்கள் சுறுலாத் தலங்கள் நிறைந்த பகுதியாகும். கோடை வெளியில் இருந்து தப்பிக்கத் திட்டமிடுலோர் இந்த மலைப் பாதையில் தாராளமாக பயணிக்கலாம். வளைந்து நெளிந்த சாலைகள், பசுமை நிறைந்த மரங்கள், காட்டு விலங்குகளின் நடமாட்டம் என இச்சாலை முழுக்க உங்களது மனதில் இயற்கையின் மீதான ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தும். கேரளாவின் மலை அடிவாரத்தில் இருந்து சுமார் 90 கிலோ மீட்டர் பயணத்தில் கொல்லத்தையும், 153 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோவளத்தையும் அடையலாம். நம்ம ஊருல வெளுத்து வாங்கும் வெளியில் இருந்து தப்பித்து, ஏறியுள்ள உடல் சூட்டைத் தனிக்க கேரளாவுல கோவளத்தையும், கொல்லத்தையும் தவிர்த்து இன்னும் பல பகுதிகளில் மசாஜ் மையங்கள் இருந்தாலும், இங்கு இருக்குற அந்த ஸ்பெசாலிட்டி வேறெங்கும் கிடைக்காதுங்க. அடுத்தமுறை இந்தப் பகுதிகளுக்கு சுற்றுலாவோ அல்லது தொழில் ரீதியாகவோ சென்றால் தவறாமல் இங்குள்ள மசாஜ் மையங்களுக்கும் போய்ட்டு ஜமாய்ச்சுட்டு வாங்களேன்.

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்