Search
  • Follow NativePlanet
Share
» »அமானுஷ்யங்கள் நிறைந்த இந்த ஏரிக்கு 6 மணிக்கு மேல போயிடாதீங்க..!

அமானுஷ்யங்கள் நிறைந்த இந்த ஏரிக்கு 6 மணிக்கு மேல போயிடாதீங்க..!

அமானுஷ்யங்கள் நிறைந்த ஏரிக்கு சென்றால், அங்கே உங்கள் அருகில் இதுவரைக் காணாத ஓர் மர்ம மான உருவம் நின்றால் எப்படி இருக்கும். அத்தகைய மர்மங்கள் நிறைந்த ஏரிக்கு பயணம் செய்யலாமா ?

சுற்றுலாத் தலங்களைப் பற்றி கேள்விப்படுகையில் நன்றாகத்தான் இருக்கும். ஆனால் அத்தலத்திற்கு சென்று பார்க்கையில் பல வினோதங்களும், மர்மங்களும், சில சமயங்களில் வெறுமையாகவும் இருக்கும். ஆனால், ஒரு சில சுற்றுலாத் தலங்களைப் பற்றி செவிவாயிலாகக் கேட்டாலே போதும், இதயத்துடிப்பில் ஒருவித பயம் தொற்றிவிடுகிறது. நாம் கேள்விப்பட்ட தலத்திற்குச் சென்றுதான் அந்த பயத்தை உணர வேண்டும் என அவசியம் இல்லை. அதற்கு ஈடான பிற எங்கு சென்றாலும் இந்த பயம் கலந்த திக்திக்கான நிமிடமும் நம்முடன் ஒட்டிக் கொள்ளும். அதுவும் அமானுஷ்யம் நிறைந்த தலத்திற்கு திகீல் சுற்றுலா சென்றால், அங்கே உங்களின் அருகில் இதுவரைக் காணாத முகம், அடையாலம் காண முடியாத அந்த உருவம், நிசப்த அமைதியில் திடீரென தோன்றும் அச்சத்தம்... எப்படி இருக்கும்... அந்தமாதிரியான அமானுஷ்யம் நிறைந்த ஏரிக்கு ஓர் சவால் சுற்றுலா சென்று வரலாம் வாங்க...

அமானுஷ்ய ஏரி

அமானுஷ்ய ஏரி


சுற்றிலும் நிலத்தால் சூழப்பட்டுள்ள நீர்த்ததேக்கம் ஏரி ஆகும். இதில், நல்ல நீரும் தேங்கும், சில வற்றில் ஊர் கரிவுகளும் தேங்கும். நீர்வளத்தைக் காக்க சில ஏரிகள் செயற்கையாகவே உருவாக்கப்படுகின்றன. இதெல்லாம் ஏரிகள் குறித்து. பெரும்பாலும், ஏரியைச் சுற்றிலும், மரங்கள், பசுமைக் காடுகள், அல்லது நிலப் பரப்பை நாம் கண்டிருப்போம். என்றாவது ஒரு நாள் ஏரியில் மாலை நேர நடைபயணத்தின் போது அல்லது ஏரிக்கரையோரம் வாகனத்தில் சென்றுகொண்டிருக்கையில் திடீரென ஓர் உருவம் உங்கள் கண்முன் தோன்றி மறைவதை பார்த்துள்ளீர்களா ? அல்லது உங்கள் அருகில் நிற்பதைப் போன்று உணர்ந்துள்ளீர்களா ?. அப்படிப்பட்ட அனுபவத்தைப் பெற வேண்டும் என்றால் உடனே மைசூரில் அமைந்துள்ள குக்கரஹல்லி ஏரிக்கு பயணம் செய்யுங்க.

Nikkul

குக்கரஹல்லி ஏரி

குக்கரஹல்லி ஏரி


மைசூர் மாவட்டம், ராமவிலாஸ் சாலையில் சுமார் 3.5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது குக்கரஹல்லி ஏரி. மைசூர் நகரின் மைய பகுதியில் அமைந்துள்ள இந்த ஏரி அமைந்துள்ள இடத்திலேயே இத்தகைய அமானுஷ்யமான மர்மச் சம்பவங்கள் அன்றாடம் அரங்கேறுகிறது.

Pratheepps

பயம் காட்டும் மாலை நேரம்

பயம் காட்டும் மாலை நேரம்


சூரியன் மறையும் அந்தி மாலைப் பொழுதில் மிகப் பெரிய நீர்நிலைகளின் ஓரத்தில் நின்று மிளிரும் மேகத்தையும், சூரியனையும் பிரதிபளிக்கும் நீருடன் கலந்து பார்ப்பது அருமையான காட்சியாக இருக்கும். இதற்காகவே, சுற்றுலாப் பயணிகள் கடற்கரை உள்ள பகுதிகளுக்கு காலை அல்லது மாலை நேரத்தில் பயணம் செய்வர். சிற்றுலா செல்ல விரும்புவோர் பிரபலமான ஏரிகளைத் தேடி பயணிப்பர். ஆனால், இந்த ஏரியோ சூரியன் மறைவுக்குப் பின், அதாவது சுமார் 6 மணிக்கு மேல் அமானுஷ்யங்கள் நடமாடும் பகுதியாகவே மாறிவிடுகிறது. அந்த நேரத்தில் ஏரிக்கரையின் ஓரத்தில் நடப்பவர்கள் பல திடுக்கிடும் சம்பவங்களை உணர்ந்துள்ளனர். இன்னும் சிலர் இப்பகுதியில் வாகனத்தில் சென்று கொண்டிருக்கையிலேயே பலமுறை முழுமையற்ற உருவம் கடந்து செல்வதாக பயத்துடன் கலந்த கதை கூறுகின்றனர்.

Anandvaidya

நீங்க போகனுமா ?

நீங்க போகனுமா ?


இந்த பேய், பிசாசு, அமானுஷ்யம் இதெல்லாம் இருக்குதா ? இல்ல வெறும் கட்டுக் கதைகளா என நம்முடன் இருக்கும் பலர், ஏன் இதைப் படித்துக் கொண்டிருக்கும் நீங்களே கொஞ்சம் யோசிச்சுக் கொண்டுதான் இருப்பீங்க. அப்படி இங்க உன்மையிலேயே அமானுஷ்யமான சம்பவங்கள் நிகழுதா என்னன்னு பார்க்க விரும்புனீங்கன்னா மாலை 6 மணிக்கு மேல ஜாலியா இந்த ஏரிக்கரை பக்கம் சின்னதா ஓர் சிற்றுலா போய் பாத்துட்டுதான் வாங்களேன்.

Ravinder M A

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?


மைசூருக்கு மையத்தில் அமைந்துள்ளது குக்கரஹல்லி ஏரி. மைசூர் பல்கலைக் கழகத்தில் இருந்தும், ரங்கயானா ஆலயத்தில் இருந்தும், அத்துடன் மத்திய உணவு மற்றும் ஆராய்ச்சி நிறுவனதில் இருந்தும் எளிதில் இப்பகுதியை அடையலாம். இதனருகே உள்ள நாட்டார் கலை அருங்காட்சியம் மிகவும் பிரசிதிபெற்றது.

Manvendra Bhangui

நாட்டார் கலை அருங்காட்சியம்

நாட்டார் கலை அருங்காட்சியம்


மைசூர் செல்லும் சுற்றுலாப் பயணிகள் தவறாமல் காண வேண்டிய இடங்களில் ஒன்று நாட்டார் கலை அருங்காட்சியம். மைசூரில் ஜயலட்சுமி விலாஸ் என்று அழைக்கப்படும் புராதன மாளிகையில் இது அமைந்துள்ளது. 1968 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட இந்த அருங்காட்சியகத்தில் 6500 நாட்டார் கலை சம்பந்தப்பட்ட கலைப் பொருட்களும், கருவிகளும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அது மட்டுமன்றி இந்த அருங்காட்சியகத்தில் நடனம், நாடம், இசை போன்ற கலை வடிவங்களோடு தொடர்புடைய இதர கலைப்பொருட்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. சுற்றுலாப் பயணிகள் இந்த மியூசியத்தை திங்கள் முதல் சனிக்கிழமை வரை 10 மணியிலிருந்து 5 மணி வரை கண்டு ரசிக்கலாம்.

Ezhuttukari

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X